Saturday, April 11, 2009

அரிதாரம் கலைத்து அரசியலுக்கு வந்த

Habib Ur. Rahman

dateSat, Apr 11, 2009 at 10:28 AM
subjectஅரிதாரம் கலைத்து அரசியலுக்கு வந்த அல்லாஹ்வின்மீது சத்...

தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவுபோல் இயங்கிவந்த த.மு.மு.க., அரசியல் அதிகாரத்தை அலங்கரிக்கும் நோக்கில், மனிதநேய மக்கள்கட்சி எனும் அரசியல் அரிதாரம் பூசினார்கள். அப்போது, த.மு.மு.க. வழக்கம்போல சமுதாய அமைப்பாக இருக்கும் அரசியலில் ஈடுபடாது. மனிதநேய மக்கள்கட்சி தேர்தலில் போட்டியிடும், த.மு.மு.க. வில் பொறுப்பில் உள்ளவர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் பொறுப்புக்கு வரமுடியாது என்றெல்லாம் கூறி, த.மு.மு.க நிர்வாகிகள் சிலரை புதிய கட்சிக்கு தத்து கொடுத்தார்கள்.

இந்நிலையில், மலைபோல் நம்பியிருந்த தி.மு.க. நட்டாற்றில் விட்டவுடன், நேற்றுவரை மோடியின் சகோதரி என்று வசைமாரி பொழிந்துகொண்டிருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு முயற்சித்து அங்கும் கதவு சாத்தப்பட்டு இறுதியாக, புதிய தமிழகம் மற்றும் சரத்குமாருடன் பலமான கூட்டணி[?] அமைத்து மூன்று தொகுதியில் ம.ம.க. போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக,

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவெனில், அரசியலில் போட்டியிடாத சமுதாய அமைப்பான த.மு.மு.க.வின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அரசியலில் போட்டியிடுவது எப்படி? ஒன்று த.மு.மு.க.வில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ம.ம.க.வில் சேர்ந்தபின் போட்டியிட்டால் இத்தகைய கேள்வி எழாது. ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்றுசொல்லும் ஒரு அமைப்பின் தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட த.மு.மு.க.வின் பைலா இடம் தருகிறதா என்பதை பாருங்கள்;


விதி : 2 கொள்கை மற்றும் நோக்கம்

பிரிவு 3: (அ) நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்பு கூட்டுறவு சங்க அமைப்புகள் ஆகிய எந்தத் தேர்தல்களிலும் கழகம் போட்டியிடாது.

*அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் போட்டியிடுவது எப்படி? விளக்குவார்களா?
விதி : 25 தேர்தல்

பிரிவு : 6 கழகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். தலைமை நிர்வாகக் குழுவினால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கும் இது பெருந்தும்.

மேற்கண்ட விதியின்படி, அரசியல் கட்சியான ம.ம.க. வில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் சகோதரர் ஜவாகிருல்லாஹ், மற்றும் சகோதரர் ஹைதர் அலி ஆகிய இருவரின் பதவிகளும் தானாகவே த.மு.மு.க.வில் காலாவதியாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

மேலும், சரத்குமார் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள். சரத்குமார் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்று சரத்குமார் அறிவிக்காத நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் ஆதரிப்பது எப்படி என்பதையும் ம.ம.க. விளக்கவேண்டும்.

இறுதியாக, கலைஞரிடம் தொங்கி, ஜெயாவிடம் கெஞ்சி கடைசியில் தங்களைப்போலவே அடித்தளம் இல்லா இரு கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்ததுக்கு பதிலாக, முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தாத தி.மு.க, அண்ணா தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் [விஜயகாந்த் நிறுத்தியிருக்கும் இரு முஸ்லீம் வேட்பாளர்கள் மற்றும் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூர் தவிர்த்து ] தனித்து போட்டி என்று என்று அறிவித்திருந்தால் கவுரவமாக இருந்திருக்கும். .