Wednesday, April 1, 2009

சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு.......

சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு புலம்பியுள்ளார்…


முஸ்லிம் லீக் எப்படி அனைத்து முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் படுத்தவில்லையோ அதைபோல் ஆர்எஸ்எஸ் அனைத்து இந்துகளையும் பிரதிநிதித்துவம் கூடிய அமைப்பு அல்ல.

இவர் என்ன சொல்ல வருகிறார். முஸ்லிம் லீக் என்ன ஆர்எஸ்எஸ் போல் மக்களை அழிக்கும் அல்லது உயிரை எடுக்கும் கொள்கையும் கோட்பாடுமா கொண்டுள்ளது. முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் அதற்கான இயக்கத்திற்கு தலைவர் இவர்? அரசியலில் சமுதாயத்திற்கு உயர்ந்த பங்கு வேண்டும் என்று ஒவ்வொரு திராவிட கட்சிகளiன் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு கடைசி நேரத்தில் நம்மை சாதுரியமாக கழற்றி விட்டு விட்டர்களே என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என்று புத்திசுவாதினம் அடைந்தது போல் புலம்புகிறார். முஸ்லிம் லீக் என்ற ஓர் இயக்கம் தான் அனைத்து தரப்பு மக்களiன் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏதோ கோவை நிவாரண நிதி உலகம் முழுவதும் சேகரித்து குளiர் காய்ந்தவர்கள், பங்கீடுவதில் சண்டை பிடித்து தமிழகம், இந்தியா என்று தொடர்ச்சியாக சமுதாய பெயரில் இயக்கம் தொடங்கி சுகங்களை அனுபவத்து வருகிறார்கள். இப்போது மனிதநேயம் இல்லை என்று யாரோ தூக்கத்தில் சொன்னதை உடனே அதற்கு ஒரு கட்சி ஆரம்பித்து எங்களுக்கு 6 தொகுதி வேண்டும் என்று ஒப்பாரி வைத்து விட்டு, நாங்கள் தன்மான (அ)சிங்கம் ஒரு தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசியாக 2 தொகுதி என்று நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தை மாற்றி கொண்டு அலைபவர்களா? நம் சமுதாயத்தின் தன்மானத்தை காப்பற்ற போகிறார்கள். பல ஆண்டு காலம் முஸ்லிம் மக்களுக்கு பல தியாகங்களை செய்த முஸ்லிம் லீக்கை ஒரு மதவெறிப்பிடித்த அமைப்போடு ஒப்பிட்டு பேச எப்படி இவருக்கு சாத்தியம் ஆகிறது என்றால் நிவாரண நிதியில் அல்லாஹுவை மறந்து சண்டை போட்டு கொண்டு தனிதனியாக சமுதாயத்தின் பெயரில் கட்சி,கழக, இயக்கம் ஆரம்பித்த கூட்டம் தானே இவர்கள். இவர்களiன் சுயநலத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள். இவர்களுக்கு வேண்டும் பதவியும், பந்தாவும் தான் சமுதாய பற்றி அக்கறை என்பது இல்லை.

இவர்களுக்கு சமுதாயம் தான் பதில் சொல்ல வேண்டும். மறுமையில் அல்லாஹுவிடம் அவர்களுக்கு சரியான பாடம் அல்லாஹு கற்பிப்பான்.

-தோப்புத்துறை நூர்தீன்