Thursday, April 29, 2010

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஹெச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ., கோரிக்கை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹெச் அப்துல் பாஸித் பேசியபோது ,

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில்ஏராளமான பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்துறையில் ஓய்வூதியம் பெற 20 ஆண்டு கள் பணிபுரிய வேண்டும், குடும்ப வருமானம் ரூபாய் இருபதாயித்திற்கும் மேல் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட ஆறு விதிகள் இருப்பதால், இத்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

பத்திரிகையாளராக இருந்து அவர்கள் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் முதல்வர் கலைஞர் பத்திரிகை நண்பர்களின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்துவிட்டு, கேரளாவில் வழங்குவதைப்போன்று ஓய்வு பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எந்த நிபந்தனையுமின்றி மாதம் குறைந்த அளவு ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.

திருவல்லிக்கேணி பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் 300 மாணவர்களுக்கு கோடைகால மார்க்க கல்வி பயிற்சி வகுப்பு

திருவல்லிக்கேணி பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் 300 மாணவர்களுக்கு கோடைகால மார்க்க கல்வி பயிற்சி வகுப்பு
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு


சென்னை, ஏப்.29:

நூருஸ்ஸன்னா இஸ்லாமிய ஒருங் கிணைப்பு சார்பில் சென்னை திருவல்லிக் கேணி கிருஷ்ணாம் பேட்டை பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் கடந்த 24.4.10 சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கோடை கால பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ். எம். கனி சிஷ்தி நூரி தலைமை தாங்கினார், பக்கீர் லெப்பை மஸ்ஜித் செயலாளர் தாஜ் எம்.எஸ். காஜா, மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மௌலவி கே.எஸ். ஷாஹ{ல் ஹமீது பையாஜி வரவேற்புரையாற்றினார். ஹாபிள் முஹம்மது ஷாஹ் கிராஅத் ஓதினார்.

புதூர் இ. கராமத்துல்லா கோடை கால பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேக், பேனா ஆகியவற்றை வழங்கினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், சென்னை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை செய லாளர் வி.எஸ். அன்வர் பாதுஷா ஹஜ்ரத் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மௌ லவி இஸ்ஹாக் பிலாலி நன்றி கூறினார்.

விழாவில், மௌலவி எம்.ஏ. ரஹ்மத்துல்லா, மௌலவி முஹ்யித்தீன், மௌலவி காஜா முஹ்யித்தீன், மௌலவி ஆஷிக், முத்தலிப், முஹம் மது கமால், ஷாஹ{ல் ஹமீது, அப்துல் வாஹித், அன்சாரி, பிலால், அப்துல் சமது, முஹம்மது சமது மற்றும் ஏராளமான மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு 35 நாட்கள் (25.4.2010 முதல் 30.5.2010 வரை) நடை பெறும். இதில், சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, ஐஸ்ஹவுஸ் மீர்சாஹிப் பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுவர்.

முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பேச்சு


ராமநாதபுரம், ஏப்.29-

ராமநாதபுரம் மாவட் டம் வாணி கிராமத்தில் 28-4-2010 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு வாணி கிளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் யூ. லியாகத் அலி தலைமை ஏற்றார். வாணி ஜமாஅத் தலைவர் எ. செய்யது அபு தாஹீர், மலேசியா எ. சவுக்கத் அலி, பொருளா ளர் இ. அப்துல் கரீம் முன்னிலை வகித்தனர்.

வாணி பள்ளிவாசல் பேஷ் இமாம் முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதி னார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான எம்.எஸ். ஏ. ஷாஜஹான் கொடியேற்றி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது.

சுதந்திர இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய இஸ்லாமியர் களின் அரசியல் இயக்க மாக செயல்பட்டு வருகி றது. இந்திய அரசியல் சாசனத்தில் வழங் கப்பட்டுள்ள இஸ்லாமியர் களின் உரிமைகளை ஆட்சி யாளர்களாலும், மதவாத சக்தியாலும் பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் அதை எதிர்த்து இன்றளவு குரல் கொடுத்து வந்து கொண்டிருக்கிறது

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இஸ் லாமியர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமான மசோதாக்கள் வரும் போதெல்லாம், அதை எதிர்த்து குரல் கொடுத்து நம்முடைய தனித் தன்மையை பாதுகாத்து வரக்கூடிய இயக்கம். இந்த இயக்கம் நூறாண்டு வர லாற்றைப் பெற்றிருக்கும் இயக்கமாகும். இன்று இந்த இயக்கத்தின் கொடி ஏற்றி வைத்து தங்களை இயக் கத்தில் இணைத்துக் கொண்ட பொது மக்கள் ஒரு வரலாற்றுப் பாதையில் தங்களை இணைத்துக் கொண்ட பாக்கியம் பெற் றவர்களாக ஆகிறார்கள்.

அல்லாஹ்வுடைய நாமத்தையும், நபிகளாரின் வாழ்க்கை நெறியையும் பாதுகாத்து நடைபோட் டுக் கெண்டிருக்கும் இயக் கத்தில் தங்களை இணைத் துக் கொண்டது அல் லாஹ்வின் அன்பிற்குரிய வர்களாகவும் ஆகிக் கொண்டார்கள். உங்களு டைய பணி தொடர்ந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிப் பாதையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எம்.எஸ்.எ. ஷாஜஹான் குறிப்பிட் டார்.

செயலாளர் உபை துல்லா, மலேசியா முஹம் மது ஈசா, உப தலைவர் எம். ஜமால் முஹம்மது, பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ் அப்துல் அஜீஸ், மலேசியா வாணி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அமீர் அம்சா, மாவட்ட துணைச் செய லாளர் லியாகத் அலி, மாவட்ட துணைச் செய லாளர் அப்துல் ஹமீது, நகரப் பொருளாளர் ஆர். முஹம்மது யாகூப் ஆகி யோரும் ஜமா அத்தார் களும், பொது மக்களும் கலந்து கொண்ட னர். பி.ஏ. ஹாஜா நஜீமுதீன் நன்றி கூறினார்.

Tuesday, April 27, 2010

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள் மற்றும் மருத்துவ முகாம்கலெக்டர் தலைமையில் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள் மற்றும் மருத்துவ முகாம்கலெக்டர் தலைமையில் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்

வேலூர், ஏப். 26-
வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதி யிலிருந்து ரூ. 5லட்சத்தில் ஸ்கேன் கருவிகள், மருந் துப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாம் நடை பெற்றது.
வேலூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்வத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம், சார் பனாமேடு, ஆஸ்ரம் பள்ளி யில் நடை பெற்றது.
சிறப்பு சுகாதார முகாமை வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசு கையில் குறிப்பிட்டதா வது:

சுகாதாரம் காக்கப்படு வதுடன் குடிநீர் பிரச் சினை தீர்க்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் கூறிய படி பணிகளை நிறைவேறி வருகிறேன்.

வேலூர் எம்.பி., நிதியிலி ருந்து ரூ. 5லட்சம் செலவில் ஸ்கேன் கருவிகளும், மருந் துகள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்டு இந்த மருத் துவ முகாம் நடைபெறு கிறது.
சுகாதாரப் பணிகளுக் காக தொடர்ந்து இந்த மருத்துவ முகாம்கள் தொகுதி முழுவதும் நடை பெறும்.

குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு தமிழக அரசின் ஒத் துழைப்போடு மாவட்ட ஆட்சித் தலைவர் முயற்சி யில் பணிகள் முடுக்கி விடப்படும்.

இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் செ.ராஜேந்திரன் பேசுகை யில், இந்த மருத்துவ முகாம் சார்பாக ரூ. மூன்றரை லட்சம் செலவில் இரண்டு ஸ்கேன் கருவிகள் வாங்கப்பட்டு,அலுவலக பொருட்கள், மருந்துகள் வாங்க ரூ. 1 லட்சமும், முகாமை நடத்த ரூ. 50 ஆயிரமும் என மொத்தம் ரூ. 5 லட்சம் செலவிடப் படுகிறது. இது போல நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 27 ஆயிரம் மக்கள் பயன் பெற்று உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மழை குறைவானாலும் 5 வருடங்களாக பாலாற்றில் போகாததாலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள் ளது. இதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரு. ஆறரை கோடி குடிநீர்ப் பிரச்சினைக்காக செல விடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்காக ரூ. 20 லட்சம் தற்பொது ஒதுக் கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில்அல மேலு மங்காபுரம், நவ்லாக் ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு ஸ்கேன்களையும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் தலா ரூ. 6000 வீதம் 43 பயனாளி களுக்குமாக மொத்தம் 4 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய்க்கான காசோலை கள் வழங்கப்பட்டன.

விழாவில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் சி.ஞான சேகரன், முன்னாள் எம்.பி. முகம்மதுசகி, மாநகராட்சி துணை மேயர் தி.ஆ.முகம் மது சாதிக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பு மருத்துவ முகாம், பல்வேறு துறை மருத்துவர் ஆலோசனை, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, ஸ்கேன், இ.சி.ஜி, பல்துறை விழிப் புணர்வு கண்காட்சி, கலைஞர் காப்பீட்டுத் திட்ட பரிந்துரை, நம் பிக்கை மைய ஆலோசனை நடைபெற்ற இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆகியோர் பார்வை யிட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி முகாம் நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டத்தில் 27 பிரைமரிகளுக்கு அங்கீகார சான்றிதழ்

திருவள்ளுர் மாவட்டத்தில் 27 பிரைமரிகளுக்கு அங்கீகார சான்றிதழ்
மே 23ம் தேதி மாவட்ட தேர்தல் நடைபெறுகிறது
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழ்நாட்டில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அனைத்து இடங்களிலும் பிரைமரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 65 பிரைமரிகள் இம்மாவட்டத் தில் 50 பிரைமரிகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 27 பிரைமரிகளுக்கு உள்ள உறுப்பினர் படிவங்களும் அதற்குரிய மாநிலத் தலைமைக்கான ஈவுத் தொகைகளும் வழங்கப்பட்டு அங்கீகாரச் சான்றி தழ்கள் பெறப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் மேலும் 15 பிரைமரிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. மொத்தம் 65 பிரைமரிகள் இம்மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளன.
சான்றிதழ்கள் வழங்கப்பட்ட 27 பிரைமரிகள் விவரம் வருமாறு:
1) ஊத்துக்கோட்டை தலைவராக அன்வர் பாஷா, செயலாளராக டி.கமருதீன், பொருளாளராக இம்ரான், துணைத் தலைவராக முகமது தீன், துணைச் செயலா ளராக ஆர்.ஹனீபா, அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் - மொய்தீன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் சான்பாஷா, மகளிர் லீக் ஷகீலா.
2) மாநெல்லூர் -தலைவராக எ.நஜீர் உசேன், செயலாளராக ஏ. சலாபுதீன், பொருளாளராக அப்துல் முனாப், துணைத் தலைவராக எஸ்.ஏ. ஷேக் ஹயாத், துணைச் செயலாளராக டி. அபுசாலிஹ், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் ஏ. மக்ப+ல், முஸ்லிம் மாணவர் பேரவை ஏ. சம்சுதீன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் நூர்தீன், மகளிர் லீக் எச். மும்தாஜ்.
3)பாலவாக்கம் - தலைவராக பி. ஜாபர், செயலாள ராக சலாவுதீன், பொருளாளராக கரிமுல்லாகாதர், துணைத் தலைவராக பி. அப்துல்லா பாஷா, துணைச் செயலாளராக நூர்தீன், அணிகளின் அமைப்பாளர் கள் முஸ்லிம் இளைஞர் லீக் டி. ஏ. அமான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் ஏ. சம்சுதீன், மகளிர் லீக் ஏ. மஹ்மூதா.
4) ஆரணி தலைவராக எஸ். முகமது ஷரீப், செயலாளராக என். அன்சர், பொருளாளராக நைனா முஹமது, துணைத் தலைவராக ஜே. அப்துல் ரகுமான், துணைச் செயலாளராக எம். கௌஸ் பாஷா, அணிகளின் அமைப்பாளர்கள் - முஸ்லிம் இளைஞர் லீக் எஸ். மொய்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை மூஸா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் எஸ். தீன் முகம்மது, மகளிர் லீக் ஜுபைதாபீ.
5) ஆரம்பாக்கம் தலைவராக பி.ஜே. மஸ்தான், செயலாளராக எம். மஸ்தான், பொருளாளராக எம்.எச். சித்தீக், துணைத் தலைவராக எம். காலேஷா, துணைச் செயலாளராக எம்.தமீன், அணிகளின் அமைப்பாளர் கள் - முஸ்லிம் இளைஞர் லீக் ஏ. முகமத் சாலிஹ், சுதந்திர தொழிலாளர் ய+னியன் எம். சர்தார் பாஷா, மகளிர் லீக் கபுர் நிஷா.
6) பெரிய ஈக்காடு தலைவராக எஸ்.கே. அஜீஸ், செயலாளராக சிராஜுதீன், பொருளாளராக அப்துஸ் ஸலாம், துணைத் தலைவராக பி. சிக்கந்தர், துணைச் செயலாளராக அக்பர், அணிகளின் அமைப்பாளர்கள் . முஸ்லிம் இளைஞர் லீக் துராப், முஸ்லிம் மாணவர் பேரவை குலாப், சுதந்திர தொழிலாளர் ய+னியன் கவுஸ், மகளிர் லீக் அன்ஸரி.
7) பெரிய பாளையம் தலைவராக முகமது ஷரீப், செயலாளராக நஸீர், பொருளாளராக ஷேக் தாவ+த், துணைத் தலைவராக ஹயாத் பாஷா, துணைச் செயலாளராக பிலால், அணிகளின் அமைப்பாளராக முஸ்லிம் இளைஞர் லீக் அய்ய+ப்கான், முஸ்லிம் மாணவர் பேரவை முகமது அலி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அப்துல் சலாம், மகளிர் லீக் மரியம் பீ.
8) எடப்பாளையம் தலைவராக தமீன் அன்சாரி, செயலாளராக இ.கே.உமர்., பொருளாளராக ஒய். அஸ்லம், துணைத் தலைவராக ஏ. சுலைமான், துணைச் செயலாளராக பி.கே. முஹம்மது, அணிகளின் அமைப்பாளராக முஸ்லிம் இளைஞர் லீக் எஸ்.எப். ஹாஜா மொய்தீன்.
9) பத்தியால்பேட்டை தலைவராக கே.ஜலால் பாஷா, செயலாளராக எம். ஷாஜஹான், பொருளா ளர் என். கரிமுல்லா, துணைத் தலைவர்கள் ஏ. சர்தார், காதர் உசேன். துணைச் செயலாளர்கன் முனவ்வர் பாய், அப்துல் அஜீஸ் கான், அணிகளின் அமைப்பாளர் கள் - முஸ்லிம் இளைஞர் லீக் ஐ. அமீன், முஸ்லிம் மாணவர் பேரவை - ஜாபர், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமானுல்லா, மகளிர் லீக் ஆபிஸா பேகம்.
10) காவாங்கரை ( புழல்) தலைவராக கே. முகமது காசிம், செயலாளராக எஸ். செய்யது அப்துல் லாஹ், பொருளாளராக ஹிதாயத் துல்லாஹ், துணைத் தலைவர்கள் முஹம்மது ஜிப்ரில், எம். சையது இப்ராகிம் ஷா, துணைச் செயலாளர்கள் சுஐப் ஷரீப், அப்துல் கரீம், அணிகளின் அமைப்பாளராக - சுதந்திர தொழிலாளர் ய+னியன் ஏ.ஆர். அப்துல் சத்தார் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் உசேன் மைதீன்.
11) கண்டோன்மென்ட் தலைவராக கே. இப்ரா கீம், செயலாளராக எம்.எஸ். முஹம்மது யாசின், பொருளாளராக ஏ. அப்துல் பாரூக், துணைத் தலைவர்கள் முகம்மது அலி, ஜமால் முஹம்மது, துணைச் செயலாளர்கள் ஜே. முகமது எஹ்யா, ஏ. ரஹ்மத்துல்லா கான். மற்றும் மாவட்ட பிரதிநிதி ஏ. அப்துல்லா ஹஜரத்.
12) ப+ந்தமல்லி தலைவராக ஏ.எம். முஹம்மது ரஜாக், செயலாளராக எம். சேட்டு, பொருளாளர் அல்லாபக்ஷ், துணைத் தலைவராக ஆதம் ஷா, துணைச் செயலாளராக கலித் அலி மற்றும் மாவட்ட பிரதிநிதியாக சான்பாஷா.
13) மணவாள நகர் தலைவராக ஷேக் முஹம்மது, செயலாளராக எம்.ஐ. ரசீது அஹமது, பொருளா ளராக சாதிக் பாஷா, துணைத் தலைவர்கள் ஜே. காதர் மொய்தீன், ஏ. ஹிதாயத்துல்லா, துணைச் செயலா ளர்கள் தாஹிர் ஷரீப், ஏ,ஆர். ரபி, அணிகளின் அமைப் பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் கௌலியான் , முஸ்லிம் மாணவர் பேரவை எஸ். சதாம் உசேன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் சம்ஷீர், மகளிர் லீக் சுரையா பேகம்.
14) கிரகம்ப+ண்டி தலைவராக சலாம், செயலாளராக ஹயாத் பாஷா, பொருளாளராக அப்துல் ஆதம், துணைத் தலைவராக முகமது கவுஸ், துணைச் செயலாளராக அப்துல் ஜப்பார், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் ய+னுஸ், முஸ்லிம் மாணவர் பேரவை அபுபக்கர், சுதந்திர தொழிலாளர் ய+னியன் ணேக் பக்ஷ், மகளர் அணி குல்னார்பீ.
15) நெல்வாய் தலைவராக எஸ். அன்வர் பாய், செயலாளராக எம். காதர் பாஷா, பொருளாளராக நஜீர், துணைத் தலைவராக எம். அல்லாபக்ஷ், துணைச் செயலாளர் ஏ.அப்துல் கரீம், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் தஸ்தகீர், முஸ்லிம் மாணவர் பேரவை அப்துல் மஜீத், சுதந்திர தொழிலாளர் ய+னியன் கலீல் பாஷா, மகளிர் லீக் ஈமலத்பீ.
16) சின்ன ஈக்காடு தலைவராக ஆர். சுல்தான், செயலாளராக இ. அப்துல், பொருளாளராக எஸ்.ரஷீத், துணைத் தலைவராக ஹாஜி சுலைமான், துணைச் செயலாளராக அப்துல் கரீம், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் எஸ். காதர் பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை எம். உசேன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் மஸ்தான், மகளிர் லீக் ஏ. பீமா.
17) பெரிய குப்பம் தலைவராக ஷபியுல் ரஹ்மான், செயலாளராக அப்துல் ரஹ்மான், பொருளாளராக ஷாஜஹான் பாஷா, துணைத் தலைவராக வி.எம். ஆதம் பாஷா, துணைச் செயலாராக அலீம் பாஷா, அணிகளின் அமைப்பாளராக முஸ்லிம் இளைஞர் லீக் அஜீம்பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை முஹம்மது ஜுனைத், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அப்துல் கரீம்.
18) நம்பாக்கம் தலைவராக சாப்ஜான், செயலாளர் முனாப், பொருளாளராக டில்லிபாஷா, துணைத் தலைவர்கள் பாஷா, எம். மௌலா, துணைச் செயலாளராக அப்துல் பாஷா, அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் ரபி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் எம். பாஷா,
19) முஸ்லிம் நகர் தலைவராக பி.ஜே. முஸ்தபா, செயலாளராக டி.ஜே. அல்லாபகஷ், பொருளாளராக நூர்தீன், துணைத் தலைவர்கள் - ஹாஜி. கே. அல்லாபக்ஸ், கே. கலிலுல்லா, சி.ஆர். காதர், கே. லத்தீப், துணைச் செயலாளர்கள் பி.பாபு, பி. காசிம், சி. ரசூல், பி.பாபு,அணிகளின் அமைப்பாளர்கள் - முஸ்லிம் இளைஞர் லீக் மூஸாநபி, முஸ்லிம் மாணவர் பேரவை பி. பாதுஷா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் பி. அமீர், மகளிர் லீக் கம்ருன்னிஷா மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பி. கார் பாஷா.
20) கனகம்மாசத்திரம் தலைவராகஷேக் காதர் மொய்தீன், செயலாளராக எஸ். சமதானி, பொருளா ளர், எஸ்.கே. முஹம்மது ரபி, துணைத் தலைவராக வெல்டிஹ் பாஷா, எச். சையத் அக்பர் பாஷா, காதர் உசேன், துணைச் செயலாளர்கள் டி.கே. முகமது நபி, சையத் அப்துல் காதர், நூர்பாஷா, அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் மௌலான நூருல் ஹயாத் அன்சாரி, முஸ்லிம் மாணவர் பேரவை கே. இப்ராகீம், சுதத்திர தொழிலாளர் ய+னியன் சித்தீக்.
21) புதுமாவிலங்கை தலைவராக ஷேக் காதர்பாய், செயலாளராக எச். ஹயாத் பாஷா, பொருளாளராக இஸ்மாயில், துணைத் தலைவராக பஷீர், துணைச் செயலாளராக கலீல், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் கவுஸ், முஸ்லிம் மாணவர் பேரவை ஷபி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அஷ்வாக், மகளிர் லீக் பரிதா.
22) பேரம்பாக்கம் தலைவராக எஸ். யு. தமீன்,
செயலாளராக ஆர். சையத் காதர், பொருளாளராக எம். சம்சுதீன், துணைத் தலைவர்கள் ஸலாம் பாபு, அலாவுதின், துணைச் செயலாளராக சுலைமான், தமீம் அன்சாரி, அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் சம்சுதீன் .
23) சிங்கிலிமேடு தலைவராக சம்சுதீன், செயலாளராக ஏ. அபுபக்கர், பொருளாளராக தாஜுதீன், துணைத் தலைவராக ஏ. முஹம்மது இஸ்மாயில், துணைச் செயலாளராக உதுமான் அலியார், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் தமீம் அன்சாரி, முஸ்லிம் மாணவர் பேரவை ஏ. மொய்தீன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் ஜெய்னுல் ஆபிதீன், மகளிர் லீக் அன்சர் பீ.
24) சூரப்பட்டு ( சண்முகபுரம்) தலைவராக எம்.ஏ. அப்துல் லத்தீப், செயலாளராக பி.ஏ. அப+ ஹ{ரைரா, பொருளாளராக கே.எஸ். சாகுல் அமீது, துணைத் தலைவர்கள் எம். முகமது உசேன், சி.உஸ்மான். துணைச் செயலாளர்கள் பி.ஏ. சாகுல் ஹமீது, முஹம்மது தமீம், அணி களின் அமைப்பாளர்கள் - முஸ்லிம் இளைஞர் லீக் ஏ.ஜே. தமீம் அன்சாரி, முஸ்லிம் மாணவர் பேரவை ரிஸ்வான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் பி. காதர் பாஷா, மகளிர் லீக் நஸீரா பேகம்.
25) ஏரிகுப்பம் தலைவராக டி. ஹமீது, செயலாளராக டி. ஹபீப், பொருளாளராக எம்.கனி, துணைத் தலைவர்கள் கே. அன்வர் தீன், டி. ரசூல்., துணைச் செயலாளர்கள் பி. கப+ர்,ஒய். நஷீர், அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் எம். ஷாகித், முஸ்லிம் மாணவர் பேரவை எம். அக்பர்.
26) செங்குன்றம் தலைவராக ஏ. முஹம்மது இஸ்மாயில், செயலாளராக அல்ஹாபிழ் டி.எம்.எச். அப்துல் காதர், பொருளாளராக ஹாஜி டி. மூசா, துணைத் தலைவராக இ.எம். யாகூப், துணைச் செயலாளராக மாபு பாஷா,
27) திருநின்றவூர் தலைவராக எஸ். முஹைதீன் அப்துல் காதில், செயலாளராக எம். முகமது அப்துல் காதர், பொருளாளராக முஜிபுர் ரஹ்மான், துணைத் தலைவர்கள் ஏ.ஆர் ஜபருல்லா, ஹாஜி ஏ. அப்துல் ரஹ்மான், துணைச் செயலாளர்கள் ஏ. முகமது ரபீக், எம். முகமது அலி, அணிகளின் அமைப்பாளர்கள் முஸ்லிம் இளைஞர் லீக் எம். காஜா மொய்தீன், முஸ்லிம் மாணவர் பேரவை எம். முகமது இப்ராஹீம் , சுதந்திர தொழிலாளர் ய+னியன் தமிம் பாஷா, மகளிர் லீக் மரியம் பேகம்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாள ராக மாநிலத் தலைமையால் நியமிக்கப்பட்ட மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுத்தீன் அனைத்து ஊர்களிலும் சுற்றுப் பயணம் மேற் கொண்டு தேர்தல்களை நடத்தி வருகிறார்.
மாவட்ட தலைவர் ஏ.கே. செய்யது இப்ராஹீம் , மாவட்ட செயலாளர் காயல் அகமது சாலிஹ், பொருளாளர் குலாம் மைதீன் ஹாஜியார், மாவட் இளைஞர் அணி அமைப்பாளர் ரஹ்மத்துல்லா, மகளிர் அணி அமைப்பாளர் சுரையா பேகம், வர்த்தகர் அணி அமைப்பாளர் மீஞ்சூர் சிக்கந்தர், கொள்கை பரப்புச் செயலாளர் பாடி. முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச்சிறப்பான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் வருகிற மே மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூரில் நடை பெற உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.

ஆலிம் பெருமக்கள் ஆங்கிலம் கற்று இஸ்லாத்தின் பெருமைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும்

ஆலிம் பெருமக்கள் ஆங்கிலம் கற்று இஸ்லாத்தின் பெருமைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும்

எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்


சென்னை, ஏப். 27-

ஆலிம் பெருமக்கள் ஆங்கிலம் கற்று இஸ்லாத் தின் பெருமைகளை உல கெங்கும் பரப்ப வேண்டும் என எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார்.

சீதக்காதி அறக் கட்டளை சென்னை வண்டலூரில் உள்ள கீழக் கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி இணைந்து தென் மாநில மத்ரஸா ஆசிரியர் களுக்கு ஆங்கிலப் பயிற்சி நடைபெற்றது. அதன் நிறைவு விழா கிரஸண்ட் பள்ளியில் நடைபெற்றது.

பயிற்சி பெற்றவர்க ளுக்கு சான்று வழங்கி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது-

சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வுக்காக கல்வி ஸ்தாபனங்கள் அமைத்து பல்வேறு அறச் செயல்கள் செய்து வரக்கூடிய சமுதா யப் புரவலர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் நிறுவனங்களின் ஒன்றான கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் அரபி ஆசிரியர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி முகாம் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வ தில் பெருமகிழ்ச்சியடை கிறேன்.

ஒரு சமுதாயம் முன்னே றுவதற்கு கல்வி வளர்ச்சி ஒன்றுதான் ஏதுவாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப் பாக இஸ்லாமிய மார்க்க கல்வி அறிவு பெற்றிருக்கக் கூடிய உலமாக்கள் ஆங்கில அறிவை அதிகமாக பெறு வதில் பலதரப்பு மக்களுக் கும் கருத்துக்களை எடுத்து இயம்புவதற்கு ஏதுவாக இருக்க முடியும்.

ஒரு கால கட்டத்தில் சுதந்திர வேட்கையின் காரணமாக ஆங்கிலேயர் களின் அடிமைத்தனத்தில் இருக்கிறோமே என்ற காரணத்தால் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று அறிவிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. உலமா பெரு மக்கள் ஹராம் என்று சொன்னது ஒரு மொழிக்கு எதிரானது அல்ல. ஆங்கி லேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த காரணத்தால் அவர்கள் மீதிருந்த வெறுப்பை வெளிக்காட்டு வதற்காக இந்த அறி விப்பை வெளியிட்டார் கள்.

பலதரப்பட்ட மொழி களை அறிந்து கொள்வதில் உலகில் பல பாடங்களை படித்து அறிவை வளர்ப் பதில் இஸ்லாம் எங்கும் எதிலும் தடை விதிப்ப தில்லை. மாறாக அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில் பறந்து விரிந்திருக் கும் உலகத்தில் நீங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். என்னு டைய ஆற்றலை உற்று நோக்குங்கள் என்று பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

ஹஹராம்| என்ற ஆங் கிலத்தைத்தான் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு உலமாக்கள் பயின்று உல கின் பல்வேறு நாடுக ளுக்குச் சென்று விளக்கிச் சொல்வதற்காக இந்த கல்லூரியில் அரபி ஆசிரி யர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொண்டி ருக்கிறார்கள்.

இங்கே உரையாற்றுகிற அமெரிக்க தூதரக அதி காரி இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளையும், இஸ்லாம் காட்டுகிற அமைதி மற்றும் சகோ தரத்துவத் தன்மைகளை யும் சுட்டிக் காட்டினார். இஸ்லாம் அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதிப்பது மாத்திரமல்ல. அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய எதனை யும் துணிந்து எதிர்க்கக் கூடிய துணிவு கொண்டது. இதனைத் தொடர்ந்துதான் இன்றைக்கு உலகளாவிய அளவில் மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய தீவிரவாதத்தை இஸ்லாம் கடுமையாக எதிர்ப்பதை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை கள் மூலமாகவும் இஸ்லா மிய மார்க்க அறிஞர்கள் பேச்சுக்கள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடி கிறது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு நான் சொல்லிக் கொள்வேன். இஸ்லாம் அமைதியை போதிப்பது மாத்திரமல்ல. அமைதியை தன் பேரி லேயே கொண்டிருக்கக் கூடிய மகத்துவத்தையும் பார்க்க வேண்டும். உலகில் அமைதியையும், சாந்தியை யும் தன் பேரில் கொண் டுள்ள இஸ்லாம், யாரா வது தீவிரவாதத்தை கையி லெடுத்துக் கொண்டு எந்த நாட்டில் செயல்படுத்தி னாலும் அவர்கள் மனித இனத்திற்கு முற்றிலும் விரோதமானவர்கள் என பகிரெங்கப்படுத்துகிறது.

இப்படிப்பட்ட மார்க் கத்தை ஊடகத்துறையில் உள்ள சிலர் முஸ்லிம் தீவிர வாதிகள் என செய்தி போடுவது வேதனையளிக் கிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எனவே, பயங்கரவாதத்தை குறிப் பிடும்போது, இந்து தீவிர வாதம் என்றோ, முஸ்லிம் தீவிரவாதம் என்றோ சொல்லிக் காட்டுவது ஏற்க முடியாத ஒன்று.

மதநல்லிணக்கத்தை மனித நேயத்தை உலகிற்கு எடுத்தியம்புவதில் இஸ்லாம் காட்டும் அணுகு முறை அனைவருக்குமே முன் மாதிரியானது. உலகத் தில் பிறந்த ஆண் பெண் அனைவரும் மனித குலத்து மாண்புடையவர்கள். வேறுபடுத்தி பிரிக்க முடி யாதவர்கள். அனைவரும் உற்ற உறவினர்கள் என்ற சகோதரத்துவத்தை இஸ்லாம் ஸ்திரத்தன்மை யுடன் நிலைநாட்டியிருக் கும் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் உலகின் பல்வேறு நாடுக ளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இஸ் லாத்தை தழுவுகின்ற காட் சியை காண்கின்றோம்.

இஸ்லாத்தின் விழுமிய கருத்துக்களை உலகெங் கும் பரப்புவதற்கு ஆங்கில மொழி அறிவு உலமாக்க ளுக்கு அவசியம் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக சீதக்காதி அறக்கட்டளை யும், அமெரிக்கத் தூதரக மும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி பாராட்டத் தக்கது. அதனை சிரமேற் கொண்டு நடத்திக் காட் டிய சென்னை வண்ட லூரில் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினர் பாராட் டுக்குரியவர்கள்.

இதுபோன்ற பணிகள் தொடர்ந்து நடத்திட மற்ற கல்வி நிறுவனங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வேண்டு கிறேன்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

ஆயங்குடியில் மீலாது விழா முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்

ஆயங்குடியில் மீலாது விழா முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்


ஆயங்குடி, ஏப். 27-

கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார் பில் மீலாது விழா மற்றும் முஸ்லிம் லீக் பொதுக்கூட் டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஹாஜி.ஏ.ஹெச். முஹம்மது ஹனீஃப் தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி.ஜலாலுத்தீன்,நகர துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது ஷரீஃப்,ஹாஜி எம்.ஐ.அப்துல் வதூது, இளைஞரணி செயலாளர் ஹாரூன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஜமா அத்துல் உலமா தலைவர் மௌலவி முஹம்மது மன்சூர் துவக்கவுரையாற் றினார். நகர பொருளாளர் ஹாஜி.முஹம்மது இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை யின் ஒருங்கிணைப்பாளரு மான எம்.அப்துல் ரஹ் மான், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.மாவட்டத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அப் துல் கஃப்பார், அபுதாபி மண்டல காயிதே மில்லத் பேரவைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் முஹம்மது அஃப்ஜல், பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷீத் ஜான்,மாவட்ட இளைஞரணி கடலூர் முஸ்தஃபா,லால்பேட்டை நகரத் தலைவர் ஹாஜி கே .ஏ.முஹம்மது, துணைச் செயலாளர் முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தீன் நன்றி கூறினார்.

நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

சென்னை அரசியல் பயிலரங்கத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேச்சு


சென்னை, ஏப்.27-

சென்னை நேர்மை அரசியல் பயற்சிக் கல்லூரி சார்பில் அரசியல் தலைமைப் பண்பு மேம் பாட்டுப் பயிற்சி வகுப்பு சென்னை எழும்ப+ர் ஐ.சி.எஸ்.ஏ. சென்டரில் 24-4-2010 அன்று நடை பெற்றது. தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பொறியாளர் எஸ்.எம். அரசு, மனித உரிமை சட்ட ஆலோசகர் நபீஸ் அஹமது, பேராசி ரியர் ஜேம்ஸ் உள்ளிட் டோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். சிறப்பு விருந் தினராக பங்கேற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசியபோது குறிப்பிட்டதாவது-

இந்திய அரசியலமைப் புச் சட்டம், ஜனநாயகம், தேர்தல் முறை உள்ளிட்ட தலைப்புக்களில் இளை ஞர்களுக்கு பயிற்சியளிப் பது, அதிலும் நேர்மையான அரசியல் நெறிமுறைகளை கற்றுக் கொடுப்பது பாராட்டுக்குரிய விசயமா கும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சேர்ந்த என்னையும் இங்கு அழைத் திருப்பது ஏதோ ஒரு வகையில் பொருத்தம் என்றே கருதுகிறேன். இந் திய அரசியலமைப்பு சட் டத்தை உருவாக்கிய டாக் டர் அம்பேத்கரை அன்று டெல்லி மேலவைக்கு அனுப்ப மகாராஷ்டிர காங்கிரஸ் மறுத்துவிட் டது. மேற்கு வங்க முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர் அம் பேத்கரை தேர்வு செய்து இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் உருவாக காரணமாக இருந்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

சட்ட அவையில் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப், கேடி.எம். அஹமது, இப்ராஹீம் சாஹிப் உள் ளிட்ட முஸ்லிம் லீக் தலை வர்கள் இடம் பெற்று நம் நாட்டின் அடித்தளம் உருவாவதற்கு முக்கிய பணிகளாற்றி இருக்கின் றனர். இன்று செம் மொழி மாநாடு நடைபெற இருக் கின்றது. 1948-ம் ஆண்டே இலக்கண, இலக் கிய வளமும், தொன்மை யும் நிறைந்த தமிழ் மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாக தகுதி உடை யது என அரசியல் நிர்ணய சபையில் முழங் கியவர் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத். அச் சபையில் தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் இருந்த போதிலும் யாரும் தமிழுக்காக பேசவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை..

நேர்மை அரசியல் பயிற்சி வகுப்பு நடத்துவது இக் காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. லஞ்ச லாவண்ணியத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றுவ தென்று இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இப்படியே சென்றால் என்னவாகும்? லஞ்சம் கொடாதோராக வும், வாங்காதவராகவும் நாம் இருக்க முடியுமா? என்பதும் மிகப் பெரிய சவால். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். எந்த ஒரு விசயமும் உச்சத்திற்கு சென்று விட்டு கீழே தான் வர வேண்டும். அதேபோல் லஞ்சமும் அடியோடு அழியும் நிலை வரத்தான் செய்யும். சிறு கூட்டமாக இன்று புறப்பட்டிருக்கக் கூடிய நேர்மை அரசியல் பயிற்சி மாணவர்களும், லஞ்சம் கொடாதோர் இயக்கத்தினரும் துணி வோடு பணிகளாற்றி வருவது பாராட்டுக்குரியது. எங்கள் தலைவர் காயிதெ மில்லத் முதல் இன்றைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வரை நேர்மை யான அரசியலுக்கு எடுத் துக்காட்டாக திகழ்ந்து எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

முஸ்லிம் லீக் சார்பி லும், இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயக நடைமுறை, தேர்தல் விதிமுறைகள் மற்றும் எம்.பி.ஏ. போன்ற படிப்பு படித்த மாணவர் கள் தொழில்ரீதியாக பாராளுமன்ற - சட்டமன்ற தொகுதிகளின் முன்னேற் றத்திற்கு ஆய்வு செய்து பணியாற்றும் முறை குறித்தும் இங்கு வகுப்பு நடத்தப்பட்டது. இவ் வகுப்புகள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பிலும் நடத்தினால் மிகவும் பய னுள்ளதாக இருக்கும். அதற்காக முயற்சி மேற் கொள்வோம்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேசினார்.

காயல் பட்டினத்திற்கு ரூ. 30 கோடி கடையநல்லூருக்கு 21.40 கோடி

காயல் பட்டினத்திற்கு ரூ. 30 கோடி கடையநல்லூருக்கு 21.40 கோடி

ரூ.1,800 கோடியில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி


சென்னை, ஏப்.27:

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 1,800 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டே பணிகள் தொடங்கும் என்றும், ரூ. 168 கோடியில் திருவண் ணாமலை, கோவில் பட்டி, காயல் பட்டினம், கடைய நல்லூர் ஆகிய நகராட்சி களில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள் ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேர வையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை, நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை மீதான விவாதத் துக்கு பதில் அளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக் களை வெளியிட்டார்:

ரூ. 1,800 கோடியில் வேலூர் கூட்டுக் குடிநீர்

வேலூர் மாவட்டத்தி லுள்ள வேலூர் மாநக ராட்சி, 6 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 64 வழியோர குடியிருப்பு களுக்கு காவேரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட் டத்துக்காக விரிவான அறிக்கையை ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரி யம் தயாரித்தது.


விரிவான கலந்தாய்வுக் குப் பின்னர், நாளொன் றுக்கு 270 மில்லியன் லிட் டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்கு ரூ.1,500 கோடி வரை நிதி உதவி அளிக்க, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் இசைவு அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திட் டப் பணிகள் மேற்கொள் ளப்படும்.

ரூ. 168 கோடியில் நான்கு நகராட்சிகளில் குடிநீர்

திருவண்ணாமலை நகராட்சிக்கு சாத்தனூர் அணையை நீராதாரமாகக் கொண்டு, ரூ.36.66 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்துடன் புதிய குடி நீர் திட்டம் செயல் படுத் தப்படும்.

கடையநல்லூர் நகராட் சிக்கான புதிய குடிநீர் மேம் பாட்டுத் திட்டம், 2008 -2009ம் ஆண்டில் அறிவிக் கப்பட்டது. இந்த திட்டத் துக்கான ஆய்வுப் பணிகள் முடிந்தது. ரூ.21.40 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக் கப்பட்டு, ஜெர்மன் மேம் பாட்டு வங்கி நிதி ஆதாரத் துடன் செயல்படுத்தப் படும்.

காயல்பட்டினம் நகராட்சி

கோவில்பட்டி நகராட் சிக்கு ரூ.80 கோடி மதிப் பீட்டிலும், காயல்பட்டி னம் நகராட்சிக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டம் செயல் படுத்த விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.

இத்திட்டங்களுக்கான நிதி ஆதாரம் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நிதி ஆதா ரம் இறுதி செய்யப் பட்ட வுடன் இத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல்வேறு நகராட்சி களில் புதிய குடிநீர் திட் டங்கள் இந்த ஆண்டே தொடங்குவதற்கு முடி வெடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் கலைஞருக்கும், தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்புக் கள் வெளியிட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம் முஹம்மது அப+பக்கர் நன்றி தெரி வித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் ரூ.1,800 கோடி மதிப்பீட் டில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்தற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மிக முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கு நன்றி

இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் திருச் செந்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ் ணனை சந்தித்து காயல் பட்டினம் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு முழு முயற்சி மேற்கொண்ட தற்கு நன்றி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டமுஸ்லிம் லீக்; துணைத் தலைவர் கவிஞர் வீரை அப்தர் ரஹ்மான் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் கானகத்து மீரான் முன்னிலையில் 25.4.10 ரஹ்மத் ஜூம்ஆ பள்ளி வாசலில் மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீகின் செயலாளரும் மாநில மாணவர் அணி அமைப்பாளருமான, எல்;.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது

கல்லிடைக்குரிச்சி என்றதும் தமிழ் ஆசான் டி.எம்.பீர்முஹம்மது சாகிப் அவர்களும், அவர்களின் மாணவராகத் திகழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவணசமுத்திரம்; எம்.எம். பீர் முஹம்மது அவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் மற்றொருவர் சொல்லின் செல்வராகவும் திகழ்ந்தார்கள்.

1950 களில் கல்லிடைக்குரிச்சி ஆசான் டி.எம்.பீ.அவர்கள் அண்டை நாடான இலங்கையில் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக, தமிழர்களின் உரிமைக்குரலாகத் தம் இளமை வாழ்வை இலங்கையில் அமைத்துக் கொண்டார்கள்.அவர்களது படையின் தலைவராக இருந்தவர் தான் முன்னாள் இலங்கை அமைச்சர் தொண்டமான் ஆவார்கள். டி.எம்.பீ.அவர்களைத் தேடி அங்கே பல்வேறு பதவிகள் வந்தன. அவைகளிலெல்லாம் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை.

பின்னர் தாயகம் திரும்பி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணியையும் இஷா அத்துல் இஸ்லாம் சபையின், தாவா பணியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி,மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் தேனி கம்பம் பகுதிகளிலும் மிக நேர்த்தியாக 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செய்தார்கள்.

அவர்கள் எழுதிய இன்பத்தமிழும்-இனிய இஸ்லாமும், நாற்பெரும் இமாம்கள்,கௌது நாயகம் போன்ற நூற்களும், பல்வேறு கட்டுரைகளும் அவர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.அவை கலைஞர் அரசால் நாட்டுடமையாக்கப்படவேண்டுமென செம் மொழி மாநாடு நடைபெற உள்ள இந்தப் பொழுதில், திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பாக முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம்.

டி.எம்.பீ.அவர்கள் காலம்வரை அம்பை மற்றும் கல்லிடைக்குரிச்சி வட்டாரத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட இவ்வூர் பிமைரி முஸ்லிம் லீக், தம் முன்னிலை மீட்சியைப் பெற வேண்டுமென்ற ஆவலில் தான் இந்த ஊருக்கு நாங்கள் வந்துள்ளோம். அது நிச்சயம் நடக்கும். இன்ஷா அல்லாஹ்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழகத்தில் நம் தலைவருமான பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் தலைசிறந்த கல்லுரிப் பேராசிரியராகப் பணியாற்றி, பல்லாயிரம் மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியதோடு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் தாயுள்ளத்தோடு பெற்றுக் கொடுத்தவர். காலமெல்லாம் சமுதாயம் என்றே சற்றிச்சுழன்று வருபவர்கள் அவர்கள்.அது போல இன்று இளைய சமுதாயத்தைச் சேர்ந்த செயலாற்றல் கொண்ட காயல் பட்டணம் அபுபக்கர் அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அப்தல் ரஹ்மான் அவர்கள் மிக உயர்ந்த பதவியை உதறிவிட்டு இன்று முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினராக அரிய பணி செய்து வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ள கலீலுர் ரஹ்மானும் ஆம்ப+ர் அப்துல் பாஸித்தும். இன்னும் எண்ணிலடங்கா உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மிகச் சிறப்பாக முஸ்லிம் லீகில் மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். மாநில முஸ்லிம் லீகில் செயலாளர்களாக மற்றும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் அவரவர் தம் பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள்.

உங்கள் பக்கத்தில் நெல்லை மாவட்டம் முதலியார்பட்டி ஊராட்சியின் தலைவராக முஸ்லிம் லீக் இயக்கத்தைச் சேர்ந்த பஸ்லுர் ரஹ்மான் இருக்கிறார்.அவரது தலைமையிலான அந்த ஊராட்சி,தமிழகத்தில் தலை நிறந்த நிர்வாகத்துக்கு முன் மாதிரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் லீகால் அவருக்குப் பெருமை அவர் போன்ற தொண்டர்களைப் பெற்றதனால் முஸ்லிம் லீகிற்குப் பெருமை.இது போன்று தான் திருநெல்வேலி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புக்களில் முஸ்லிம் லீகின் தொண்டர்கள் உழைத்து வருகிறார்கள். இது முஸ்லிம் லீகின் தொண்டாகள் வரலாறு. ஆகவே சுட்டிக்காட்டுகிறோம்.

சிறுபான்மை சமதாயமாம் இஸ்லாமிய மாணவர்கள் உயர் கல்வி கல்வி பெற மாவட்ட முஸ்லிம் லீக் தொடர்ந்து உதவி வருகிறது.அது இன்னும் இந்த ஜமாஅத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வட்டியில்லாத கடன் கொடுத்து உதவவும்,மருந்து மாத்தி;ரை வாங்க வழியில்லாத ஏழை எளிய மக்களுக்காக மாதம் தோரும் உதவித் தொகை கொடுக்கவும்,பைத்துல் மால்கள் துவக்க விரும்பினால் அதையும் செய்து தர தயாராக இருக்கிறோம். 10 ஆம்வகுப்பு தேறிய அல்லது தவறிய 18 வயது நிறைவு பெற்ற இளைஞர்கள் படிப்பதற்கு வழியில்லாமல், அல்லது குடும்பத்தை காப்பாற்ற வெளி நாடு சென்று தான் உழைப்பு செய்ய வேண்டு மென்கிற நிலையிருந்தால் அப்படிப்பட்ட இளைஞர்களை எலக்ட்ரீசியன் அல்லது பிளம்பிங் படிப்பு தெரிந்தவர்களாக உருவாக்கிட குற்றாலம் சீனா தானா ஹைடெக் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 மாதம் பயிற்சி கொடுக்கிறோம். அது முடிந்தவுடன் தாயகத்திலோ அல்லது வெளி நாடு களிலோ வேலை வாய்ப்ப பெற முடியும். இந்த வாய்ப்பை இந்த ஜமாஅத பயன் படுத்திக் கொள்ளலாம்.

இவை தான் இந்த சமுதாயத்துக்கு தற்போது நம் மாவட்டத்தில் அவசியம் என்று நினைக்கிறோம். ஆகவே அன்பு மிக கொண்டு முஸ்லிம் லீகை அரவணைத்து ஆதரவு தாரீர்; என்று கேட்க,உரிமையோடு அழைப்பு செய்ய வந்துள்ளோம். ஒவ்வொருவரையும் இங்கே குடும்பத்துடன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக இணைப்போம்.இவ்வாறு எல்.கே.எஸ். மீரான் முகைதீன் பேசினார்.

முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டத்தில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் சேக் மன்சூர் மிஸ்பாகி,அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் மில்லத் காஜா முகைதீன்,எஸ். ஆர்.சாகுல் ஹமீது,ஒய்.முகைதீன்,ஏ.முகைதீன் பிச்சை,பீ.காதர் முகைதீன்,கேஅப்துல் காதர்,கே.முகைதீன் பிச்சை, அப்துல் காதர்,அப்துல்லா அல்லா பிச்சை உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.

Saturday, April 24, 2010

நாடறிந்த நாவலர் 'மறுமலர்ச்சி' ஏ.எம். யூசுப் சாஹிப் நினைவு நாள்

நாடறிந்த நாவலர் 'மறுமலர்ச்சி' ஏ.எம். யூசுப் சாஹிப் நினைவு நாள்

http://www.vkalathur.com/article-amyousuf.php


நாட்டுக்கு அவர் மறுமலர்ச்சி ஆசிரியர்! முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு அவர் முன்னோடித் தலைவர். சமுதாயத்திற்கு அவர் நாடறிந்த நாவலர்!

ஆனால், எனக்கு?

நாவலர் அவர்கள் என் ஆசிரியர். என் ஆசிரியர் அண்ணன்!
~இனி யாரை நான் ஆசிரியர் என்று இதயம் நிறைய - வாய் நிறைய அழைக்க முடியும்?| என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அண்ணன் அவர்களுடன் ஓராண்டா? ஈராண்டா? சற்றொப்ப 38 ஆண்டுகள் அவருடன் உரையாடியிருக்கிறேன். அவருடன் நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். பேசி வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் லீக் என்னும் பேரியக்கப் பணியில் பயணத்தில் அவருடன் தொடர்ந்து பயணித்திருக்கிறேன்.

கல்வித் துறையில் நான் பேராசிரியர் என்னும் பதவி வகித்தவன் என்றாலும், என் இலட்சியப் பணியில் நாவலர் அவர்களே என் ஆசானாகத் திகழ்ந் தார்கள்!

அந்த ஆசான் திலகம் இன்று நம்மிடை யில் இல்லை!

சமுதாயம் பற்றி என்னைச் சிந்திக்க செய்த சிந்தனையாளர்!

சமுதாயத்திற்குத் தொண்டு செய்வது போன்ற சிறப்பு வேறெதிலும் இல்லை என்று வழிகாட்டிய சமுதாயப் பெருந் தொண்டர்!

சமுதாயத்தின் உயர்வுக்கும் நாட்டின் பெருமைக்கும் முஸ்லிம் லீக் மூலம் பணியாற்றுவது போன்ற சிறப்பு வேறெதிலும் இல்லை என்று உணர்த்திய முஸ்லிம் லீக் தலைவர்.
எழுத்திலும் பேச்சிலும் சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்வது போன்றதொரு ஆன்மீகத் திருப்தி தரும் பணி வேறெதுவும் இல்லை என்று விளங்கச் செய்த வீரமிகுந்த விவேகி!
முஸ்லிம் பத்திரிகையாளருள் 42 ஆண்டுகள் வார இதழ் நடத்தி வெற்றி வாகை சூடிய தலைசிறந்த எழுத்துலகச் சிற்பி!

அரசியல்வாதியாக இருந்து கொண்டே ஆன்மீக பலத்தை வளப்படுத்திய தோடு, பல அரிய புதினங்களை உருவாக்கிய மேதை!

என் ஆருயிர் ஆசிரியர் அண்ணன் ஏ.எம். ய+சுப் சாஹிப் அவர்கள் இன்று இல்லை. ஜெனரல் பஜார் சுபரஸ்தானில் நல்லடக்கமாகிவிட்டார்!

ஆம். அவர் சென்றுவிட்டார்! அவர் நமக்கு முந்திவிட்டார்! அண்ணன் அவர்களே!
நீங்கள் எல்லாவற்றிலும் முந்தியவராகவே இருந்தீர்கள்! இறுதிப் பயணத்திலும் நீங்களே முந்திவிட்டீர்கள். நாங்கள் பிந்தியவர்கள்! ஆனால் ஒன்று.

உங்களால் உருவாக்கப்பட்டுள்ளவர்கள் ஒவ்வொருவம் ஒரு நாவலர் ய+சுப் ஆகத் திகழச் செய்து உங்களின் பேராசையை ப+ர்த்தி செய்து வர பிந்தியிருக்கிறோம்!

முஸ்லிம் லீக் என்றும் இருந்தாக வேண்டும்!

முஸ்லிம் லீகில் எல்லோரும் இருந்தாக வேண்டும்!

முஸ்லிமானால் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும்! என்று நீங்கள் முழங்கியது இன்று எங்கள் இதயங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!
அந்த ஒலியை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்ய சூளுரைக்கிறோம்!

~என் ஆருயிர் ஆசிரியர் அவர்களே உங்களை இழந்த பிறகு சிராஜூல் மில்லத் உயிரனைய தோழர். இன்று பாதியாகிவிட்டேன்| என்று வேதனையில் மூழ்கிவிட்டார்.
பல்லாயிரம் பேர் சேர்ந்தேனும் அந்தப் பாதியாக முயற்சி செய்வோம்!
அண்ணன் அவர்களே! நீங்கள் ஒரு சகாப்ததம்தான்! ஆனால், பல சகாப்தங்கள் தொடர்வதற்கு நீங்களே சான்றாக நின்றீர்கள்!
இனி இங்கே உங்களை சந்திக்க முடியாது!

ஆனால், இறையருளால் சுவனபதியில் ரூ சுந்தர ஒளியில் ஒருநாள் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்! அந்தச் சந்திப்பு வரையிலும், தாங்கள் செய்த சேவையை எல்லாம் சிந்திப்போம்! செயல்படுவோம்! யா அல்லாஹ்! என் அண்ணனை உன் அருள் ஒளியில் நனைத்து விடுவாயாக!

தலைவர் பேராசிரியர் தாருல் குர்ஆன் பத்திரிகையில் எழுதிய இரங்கல் வரிகளிலிருந்து சில பகுதிகள்.

(ஏப்ரல் 23 நாவலர் ஏ.எம். யூசுப் நினைவு நாள்)

http://www.vkalathur.com/article-amyousuf.php

Thursday, April 22, 2010

உன் கரங்களில் தவழ்ந்தது!

உன் கரங்களில் தவழ்ந்தது!


அன்புத் தம்பிக்கு,

இறைவனின் சாந்தி நம் அனைவரின்மீதும் இலங்கட்டுமாக!

தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அகவை அறுபத்தி இரண்டு.

மார்ச்சுத் திங்கள் பத்தாம் நாள், நெல்லைச் சீமையின் மேலப்பாளையம் நகரம் ஒருங்கிணைந்து ஒலித்த தக்பீர் முழக்கத்தால் புண்ணியமும் கண்ணியமும் நிறைந்து காட்சி தந்தது.

மாலை நேரத்து மகிழும் பொழுதில் பிறைக் கொடி பிடித்து மறைவேதம் நிறைவாய் தொடங்க, இறைநாதம் இதமாய் இலங்க, பேரணி புறப்பட்டபோது, உன்னோடு நானும் பயணித்தேன். எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக் கொடி. பச்சை வண்ணம் மட்டுமே நகரில் காட்சி தந்தது. தக்பீர் முழக்கம் மாத்திரமே நமக்காக சாட்சி சொன்னது. எழுப்பிய கோஷங்கள் எவ்வளவு மாண்புடையது? யார் மனதும் புண்படாமல், மாற்றாரையும் பண்பட வைத்த வார்த்தைப் பிரயோகம். பார்த்தவரெல்லாம் பாராட்டும் விதத்தில் நீ காட்டிய கண்ணியமும் ஊட்டிய உணர்வும் அமைந்திருந்ததை மறக்க முடியாது. ~ஊர்வலம்| என்றால் இஃதல்லவா ஊர்வலம்!| என்று கண்டுகளித்தார்க்கு மேலே எழுந்த புருவங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர இரண்டு மணி நேரம் ஆனது. ஆம்! அவ்வளவு நேரம் எடுத்தது பிறைக்கொடி ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைவதற்கு.

மஃரிப் நேரம் மாநாட்டு அரங்கை நீ அடைந்ததும் தொழுதுவிட்டு அமர்ந்தாய் அகமகிழ்வுடன்.

மாநாட்டுத் துவக்கவுரையில் நமது தலைவர் பேராசிரியர் அவர்கள் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் வரலாற்றுப் பெருமைகளை அடுக்கடுக்காய்த் தந்து, அதன் தோற்றத்தின் தொடக்கத்தை விவரித்தார். பலரின் கருத்துரைகளுக்குப் பின் மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்கள் அழகாய், அற்புத உரையாற்றி அமர்ந்தார். ~~இவ்விழா தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்|| எனச் சொன்னார். மாநில அமைச்சர் மாண்புமிகு மைதீன்கான் அவர்களும் அப்படித்தான். சமுதாயச் சீராளர்களுக்கு விருதுகள் தரப்பட்டு, நிறைவாக தலைவர் பேராசிரியர் விழாவில் பேருரையாற்ற மாநாடு மகிழ்வோடு நடந்தேறியது. முழு பொறுப்புகளையும் செவ்வனே செயல்படுத்திய மாநாட்டுக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றோர் ஒழுக்க மாண்போடு கூடியிருந்த அந்த காட்சியை அரசியல் உலகில் வேறு எங்கு காண முடியும்? அதே நாளில் தொலைக்காட்சி செய்திகளும், மறுநாளில் செய்தித்தாள் தகவல்களும் தெளிவாக உணர்த்தின. இவையெல்லாம் நம் சீர்மிகு தலைவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளாலும் நீ நடைமுறைப்படுத்திய செயல்முறைகளாலும் கிடைக்கப் பெற்றவை.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில்தான் நம்முடைய ~பிறைமேடை| இதழ் வெளியிடப்பட்டது. முதல் இதழ் உன் கரங்களில் தவழ்ந்தபோது நீ மகிழ்ச்சிப் பெருக்கோடு படிக்கத் தொடங்கியதையும் பார்த்து நெகிழ்ந்து போனேன். தாய்ச்சபை முஸ்லிம் லீகின் செய்திகள் சமுதாயத்தின் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் வகையிலும், எல்லா இடங்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலும், ஒரு வாரம் அல்லது இரு வாரம் என்கிற அளவில் கால அவகாசம் போதுமானதாகக் கொண்டது என்ற வகையிலும் இதுபோன்ற ஓர் இதழ் நமக்கு எப்போது கிடைக்கப் பெறும் என்று நீ கொண்டிருந்த எதிர்பார்ப்பிற்குக் கிடைத்த தீர்வு அல்லவா இது? உன் மகிழ்வுக்கு அர்த்தம் உண்டுதான்.

அதே நேரத்தில் ~பிறை மேடை| இதழை பரவலாக்க வேண்டிய கடமையும் உனக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது. சென்ற இதழில் நான் குறிப்பிட்டதைப்போல மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், கல்விக் கூடங்கள், கடைவீதிகள் என்பதோடு வீடுகள் தோறும் இந்த இதழ் போய்ச் சேர வேண்டும் என்பதில் நீ கவனமும் ஆர்வமும் செலுத்தி ஆவன செய்ய வேண்டிய பொறுப்பு உனக்கிருக்கிறது. உன்னுடைய முயற்சியில்தான் ~பிறை மேடை| இன்னும் அதிகப் பக்கங்களைக் கொண்டதாகவும், மிக விரைவில் வார இதழாகவும் ஏற்றம் பெற வேண்டும்.

¤ ~பிறை மேடை| நமது முஸ்லிம் லீக் பதிப்பக வெளியீடு.

¤ பதிப்பகம் நமது பேரியக்கத்தின் வெளிப்பாடு.

¤ பேரியக்கம் நமது சமூக வாழ்க்கையின் கோட்பாடு.

¤ சமூக வாழ்க்கையே நமது குறிக்கோளின் நேர்கோடு.

துணிவுடன் பணிகள் செய். கனிவுடன் கடமையாற்று.

தொடர்ந்து உன்னோடு பயணிக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,

எம். அப்துல் ரஹ்மான்

நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப்

நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப்

நாட்டுக்கு அவர் மறுமலர்ச்சி ஆசிரியர்! முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு அவர் முன்னோடித் தலைவர். சமுதாயத்திற்கு அவர் நாடறிந்த நாவலர்!

ஆனால், எனக்கு?

நாவலர் அவர்கள் என் ஆசிரியர். என் ஆசிரியர் அண்ணன்!

~இனி யாரை நான் ஆசிரியர் என்று இதயம் நிறைய ரூ வாய் நிறைய அழைக்க முடியும்?| என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அண்ணன் அவர்களுடன் ஓராண்டா? ஈராண்டா? சற்றொப்ப 38 ஆண்டுகள் அவருடன் உரையாடியிருக்கிறேன். அவருடன் நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். பேசி வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன். எல்லாவற் றுக்கும் மேலாக முஸ்லிம் லீக் என்னும் பேரியக்கப் பணியில் பயணத்தில் அவருடன் தொடர்ந்து பயணித்திருக் கிறேன்.

கல்வித் துறையில் நான் பேராசிரியர் என்னும் பதவி வகித்தவன் என்றாலும், என் இலட்சியப் பணியில் நாவலர் அவர்களே என் ஆசானாகத் திகழ்ந் தார்கள்!

அந்த ஆசான் திலகம் இன்று நம்மிடை யில் இல்லை!

சமுதாயம் பற்றி என்னைச் சிந்திக்க செய்த சிந்தனையாளர்!

சமுதாயத்திற்குத் தொண்டு செய்வது போன்ற சிறப்பு வேறெதிலும் இல்லை என்று வழிகாட்டிய சமுதாயப் பெருந் தொண்டர்!

சமுதாயத்தின் உயர்வுக்கும் நாட்டின் பெருமைக்கும் முஸ்லிம் லீக் மூலம் பணியாற்றுவது போன்ற சிறப்பு வேறெதி லும் இல்லை என்று உணர்த்திய முஸ்லிம் லீக் தலைவர்.

எழுத்திலும் பேச்சிலும் சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்வது போன்றதொரு ஆன்மீகத் திருப்தி தரும் பணி வேறெதுவும் இல்லை என்று விளங்கச் செய்த வீரமிகுந்த விவேகி!

முஸ்லிம் பத்திரிகையாளருள் 42 ஆண்டுகள் வார இதழ் நடத்தி வெற்றி வாகை சூடிய தலைசிறந்த எழுத்துலகச் சிற்பி!

அரசியல்வாதியாக இருந்து கொண்டே ஆன்மீக பலத்தை வளப்படுத்திய தோடு, பல அரிய புதினங்களை உருவாக்கிய மேதை!

என் ஆருயிர் ஆசிரியர் அண்ணன் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்கள் இன்று இல்லை.

ஜெனரல் பஜார் சுபரஸ்தானில் நல்லடக்கமாகிவிட்டார்!

ஆம். அவர் சென்றுவிட்டார்! அவர் நமக்கு முந்திவிட்டார்! அண்ணன் அவர்களே!

நீங்கள் எல்லாவற்றிலும் முந்தியவராகவே இருந்தீர்கள்! இறுதிப் பயணத்திலும் நீங்களே முந்திவிட்டீர்கள். நாங்கள் பிந்தியவர்கள்! ஆனால் ஒன்று.

உங்களால் உருவாக்கப்பட்டுள்ளவர்கள் ஒவ்வொருவம் ஒரு நாவலர் ய+சுப் ஆகத் திகழச் செய்து உங்களின் பேராசையை பூர்த்தி செய்து வர பிந்தியிருக்கிறோம்!

முஸ்லிம் லீக் என்றும் இருந்தாக வேண்டும்!

முஸ்லிம் லீகில் எல்லோரும் இருந்தாக வேண்டும்!

முஸ்லிமானால் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும்! என்று நீங்கள் முழங்கியது இன்று எங்கள் இதயங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!

அந்த ஒலியை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்ய சூளுரைக்கிறோம்!

~என் ஆருயிர் ஆசிரியர் அவர்களே உங்களை இழந்த பிறகு சிராஜூல் மில்லத் உயிரனைய தோழர். இன்று பாதியாகிவிட்டேன்| என்று வேதனையில் மூழ்கிவிட்டார்.

பல்லாயிரம் பேர் சேர்ந்தேனும் அந்தப் பாதியாக முயற்சி செய்வோம்!

அண்ணன் அவர்களே! நீங்கள் ஒரு சகாப்ததம்தான்! ஆனால், பல சகாப்தங்கள் தொடர்வதற்கு நீங்களே சான்றாக நின்றீர்கள்!

இனி இங்கே உங்களை சந்திக்க முடியாது!

ஆனால், இறையருளால் சுவனபதியில் ரூ சுந்தர ஒளியில் ஒருநாள் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்!

அந்தச் சந்திப்பு வரையிலும், தாங்கள் செய்த சேவையை எல்லாம் சிந்திப்போம்! செயல்படுவோம்!

யா அல்லாஹ்! என் அண்ணனை உன் அருள் ஒளியில் நனைத்து விடுவாயாக!

ரூ தலைவர் பேராசிரியர் தாருல் குர்ஆன் பத்திரிகையில் எழுதிய இரங்கல் வரிகளிலிருந்து சில பகுதிகள்.

(ஏப்ரல் 23 நாவலர் யூசுப் சாஹிப் நினைவு நாள்)



( பிறைமேடை ஏப்ர‌ல் 16 30 இத‌ழிலிருந்து )

அன்புத் தம்பி

அன்புத் தம்பிக்கு,

இறைவனின் சாந்தி அனைவரின்மீது இலங்கட்டுமாக!

நம் சமூகத்தின் மாண்புகளை நம் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர்கள் மாறா பொலிவுடன் மானுட உலகிற்கு வழங்கிச் சென்றார்கள் என்பது மட்டுமல்ல@ வாழ்ந்தும் காட்டினார்கள் என்பதுதான் சரித்திரம்.

இது ஏப்ரல் மாதம். நினைவில் நிழலாடும் சிந்தனைகளை இம்மாதம் வெளிக் கொண்டு வருவதை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இம்மாதத்தில்தான் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத், நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் ஆகியோர் கண் மூடிய நாட்கள் உள்ளன. இவர்கள் வாழ்ந்து காட்டிய வல்லமை நிறைந்த உறுதிப்பாடு, எந்த சந்தர்ப்பத்திலும் நிலை குலையாத கம்பீரம், விரும்பி ஏற்றுக் கொண்ட ஏழ்மை, வீரதீரமிக்க போர்க்குணம், சமூகத்திற்கு வழங்கிய சீரான எழுச்சி உரைகள் இவைகளெல்லாம் எல்லா தலைமுறையினருக்கும் கிடைக்கப் பெற்ற பொக்கிஷங்கள். நமது உள்ளங்களில் உரமேற்றி, எண்ணங்களில் எழுச்சிய+ட்டி எழுதிய எழுத்துக்களும், பேசிய பேச்சுக்களும், காலமெல்லாம் பின்பற்றத்தக்க நேரிய வழிமுறைகள்.

மேன்மையான கருத்துக்களை மாண்போடு தருவதி லும் வன்முறையற்ற நிலைகளை நன்முறையோடு நிலை நிறுத்துவதிலும் நம் தாய்ச் சபைத் தலைவர்கள் நமக்குச் சிறந்த முன்னோடிகளாய்த் திகழ்கிறார்கள்.

இறை அச்சம் குறையாமல் மறைவழி வாழ்ந்து மாற்றாருக்கும் மாண்பாளராய்த் திகழ்ந்தவர் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள்.

சந்தனத் தமிழ் கொண்டு சிந்தனைச் சிறகுகள் விரித்து சமூக நல்லிணக்கத் தூதராய்த் திகழ்ந்தவர் சிராஜூல் மில்லத் அப்துல் ஸமத் சாகிப் அவர்கள்.

எவருக்கும் அஞ்சாத துணிவு கொண்டவராய், உள்ளத்தில் எழும் எண்ண அலைகளை அப்படியே வெளிக் கொணரும் ஆற்றல் மிக்கவராய்த் திகழ்ந்தவர், நாடறிந்த நாவலர் ய+சுப் சாஹிப் அவர்கள்.

இவர்களெல்லாம் நம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் வரலாற்று நாயகர்கள். இந்த சமுதாயத்திற்காகத் தங்களை உருக்கிக் கொண்டு வாழ்ந்தவர்கள். மற்றவர்களை நல்வழியில் உருவாக்கிப் பார்க்க அரும்பாடுபட்டவர்கள்.

வல்ல இறைவனின் அருட்பாக்கியங்களைப் பெற்று வாழும் நம்மில் ஒவ்வொருவரும் தாம், மனைவி, மக்கள், குடும்பம் என்ற குறுகிய சொந்த வளையத்திலிருந்து சற்று அகன்று, சமுதாயம் என்கிற உணர்வோடு வாழ்வது இன்றியமையாதது என்பதனை நினைவ+ட்டுகிற வாழ்வு முறையை நம்முடைய மறைந்த தலைவர்களின் வரலாற்றிலிருந்து பாடமாகப் பெறுவோம். ஏற்கெனவே இவ்வழி நின்று வாழ்ந்து வரும் நம்மவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி, சுயநல வாழ்வுக்குக் கொஞ்சமும் இடம் தராமல், மனித நேயத்தை வளர்த்து, மதநல்லிணக்கத்தைக் காத்து, சமூக வாழ்க்கையே தங்களின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள் நம் தாய்ச் சபைத் தலைவர்கள். அவர்களின் வழியொட்டிய தொண்டர்களாக, நேரிய பாதை வகுத்து, சீரிய தலைமையில் நமது தாய்ச்சபை முஸ்லிம் லீகில் தொடர்ந்து தொண்டாற்றுவோம்!

சமூக எழுச்சியை வெளிக் கொணர்வோம்!

ஒன்றுபட்டு உறுதியோடு உழைப்போம்!

அன்புடன்,

எம். அப்துல் ரஹ்மான் ஏம்.ஏ. எம்.பி.
ஆசிரிய‌ர்
பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ்
வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்

( பிறைமேடை ஏப்ர‌ல் 16 30 இத‌ழிலிருந்து )

நரேந்திர மோடியின் இரத்த வெறி அம்பலம்

நரேந்திர மோடியின் இரத்த வெறி அம்பலம்

(பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர் களுக்கு அறிமுகம் தேவையில்லை )

ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை யினருக்கு ஆதரவாகவும் இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராகவும் கருத்தியல் ரீதியான யுத்தத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத் திற்கு எதிராக அரங்கேற்றப்படும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலராக திகழ்வது டன் எந்த ஒரு பிரச்சினையையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அது தொடர்பான விமர்சனங்களை எளிய முறை யில் வெளியிடுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2002ரூல் குஜராத்தில் அரங் கேற்றப்பட்ட முஸ்லிம் இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளி யாக கருதப்படும் முதலமைச்சர் நரேந்திர மோடி சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்ல நேர்ந்தது குறித்தும் குஜராத் முஸ்லிம் படுகொலை சம்பவத்தில் அவர் தண்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் ~பிறை மேடை|க்காக அ.மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் தொகுத்தளித்துள்ளோம்.)

2002ரூல் குஜராத்தில் மேற்கொள் ளப்பட்ட கொடூரமான தாக்குதல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆளாகி பதில் சொல்லும் நிலை முதலமைச்சர் மோடிக்கு நேர்ந்துள்ளது மிகவும் அவமானகரமானது. இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் இத் தகைய அவமானத்தை சந்திக்க வில்லை.

நமது நாட்டில் நடைபெற்ற பல கலவரங்களுக்கும் 2002ரூல் குஜராத் தில் நடந்த மதக் கலவரத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. உதாரணமாக நாடு பிரிவினையின் போது 1947ரூல் நடைபெற்ற இந்து ரூ முஸ்லிம் கலவரத்தின்போது அப்போதைய அரசு அக்கலவரத்தை கட்டுப்படுத்த உயிர், உடைமை, சேதத்தை தடுக்க பெரிதும் முயற்சி எடுத்தது. கலவரக்காரர்களை ஒடுக்கி அரசு எடுத்த முயற்சிகளையும் தாண்டி அப்போது பலர் பலியாக நேர்ந்தது.

ஆனால், 2002ரூல் குஜராத்தில் அரங்கேறிய படுகொலைகள் முற்றி லும் அரசு ஆதாரவுடன் காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன் நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சி யானது.

ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் வீடு திரும்பாத நிலை உள்ளது. இந்த கொடூரங்கள், படுகொலைகள் அனைத்தும் முதல்வர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஆசியு டனும் ஆதரவுடனும் நடந்தது மிகவும் வேதனைப்படக்கூடியது.

ஒரு அரசாங்கமானது குடிமக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டும். ஏதேனும் கலவரம் அல்லது வன்முறையினால் அழிவுகள் ஏற்பட்டால் குற்றவாளிகளை தண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவர்களை நல்ல முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டியது ஒரு அரசாங் கத்தின் கடமை.

அந்த கடமைகளில் எது ஒன்றை யுமே மோடியின் அரசாங்கம் செய்யா ததன் விளைவே சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒரு மாநிலத் தின் முதலமைச்சர் சென்று பதில் சொல்ல வேண்டிய அவலம் முதன் முதலாக நேர்ந்துள் ளது.

குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் குறித்து மனித உரிமை போராளிகளும் சமூக நல்லிணக்கத் துக்காக பாடுபடக்கூடியவர்களும் பேசும் பொழுதெல்லாம் குஜராத் அரசாங்கத்தின் குற்றங்களை ரூ குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் போதெல்லாம் உடனடியாக நரேந்திர மோடி ~குஜராத் அஸ்மிதா| என்று பேசத் தொடங்கிவிடுகிறார்.

அதாவது குஜராத்தின் கௌரவத் துக்கு இழுக்கு தேடுகிறார்கள். குஜராத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

~குஜராத் மக்கள் எல்லோரையும் காட்டுமிராண்டிகள் போன்று சித்தரிக் கிறார்கள்| என்று சொல்லி, அதையும் பிரச்சாரம் செய்து தனக்கு ஆதரவாக வாக்கு வங்கியை உருவாக்க முயற் சிக்கும் செயலை செய்து கொண் டிருக்கிறார். ஆனால், உண்மையில் குஜராத்தின் கௌரவம் மோடியினால் தான் களங்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மாநிலத்துக்கும் இதுவரை வரலாற்றில் ஏற்படாத சில அவமானங்களுக்கு முதல்வர் மோடி காரணமாக இருந்துள்ளார்.

அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள்.

ஒன்று : சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்லியது. இரண்டு அவர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல விசா கேட்டபோது அவர் முதலமைச்சாராக இருந்தும்கூட அங்குள்ள மக்களின் மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த நாடுக ளுக்கு செல்ல விசா வழங்கப்படாதது. இத் தகைய ஒரு அவமானம் வேறு எந்த ஒரு முதலமைச்சருக்கும் ஏற்பட வில்லை. இது முதல்வருக்கு நேர்ந்த அவமானம் என்பதைவிட குஜராத் மாநிலத்திற்கு ஏற்பட்ட அவமான மாகத்தான் கருதவேண்டும்.

இந்த அவமானத்துக்கு முழு பொறுப்பையும் நரேந்திர மோடி ஏற்க வேண்டும்.

உண்மையில் அவர் குஜராத்திற்கு கௌரவம் சேர்க்க விரும்பினால், குஜராத் மாநிலத்திற்கு அவமானம் சேர்த்ததற்காக அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

2002ரூன் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) போன்ற நிறுவ னங்களும், உச்சநீதிமன்றமும் கடுமை யாக கண்டித்துள்ளது.

கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித்ததுடன் கலவரத்தில் அரசாங் கத்தின் பங்கேற்பை உறுதி செய் துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள் ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளன.

2004ரூல் உச்சநீதிமன்றத்தில் நீதியர சர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமி ஆகியோர் அளித்த தீர்ப் பில் ~ரோம் எரிந்து கொண்டிருக் கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு| மோடியை ஒப்பிட்டார் கள்.

கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு ~குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும்| என்று நீதிபதிகள் குறிப்பிட் டார்கள். அப்படி சொன்னது மட்டுமல் லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது என கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.

அதுமாத்திரமல்ல@ குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்து கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப் பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சவ்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்ப வைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சி களை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி யதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக் கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகர மான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றா கும்.

இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.

கோத்ரா பிணங்களைக் காட்டி மதக் கலவரங்களை தூண்டினார்!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியான 56 உடல்களை அரசு நடை முறை வழக்கத்திற்கு மாறாக குஜராத் தலைநகருக்கு வரவழைத்து ஊர்வல மாக எடுத்துச் சென்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமாக இருந்தார்.

அன்று இரவே காவல்துறை உள் ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் இரண்டு நாட்களுக்கு கலவரங் கள் நடக்கும். அதை கண்டுகொள் ளாதீர்கள்@ தடுக்காதீர்கள் என பகிரங்கமாக கூறியதாக 2002ரூலேயே சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்து கின்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் ~மினிட்| நடைமுறை பின்பற்றப்படாதது மனித உரிமை அமைப்புகளில் சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக உள்ளது.

தெகல்கா பத்திரிகை

வெளிப்படுத்திய உண்மைகள்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்ற வாளிகளை பேட்டி எடுத்து வெளி யிட்டது. அதில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிப்பட்டன.

முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள் ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

கலவரம் நடந்த பகுதிகள் சிலவற் றிற்கு நேரடியாக சென்று குற்ற வாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள் ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளை கண்டித்த நீதிபதி களை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20ரூக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் ~நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும்| என தெரிவித்தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திரமாக உள்ளான்.

தனக்கு எதிராக சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கிய நேரத்தில் அதிலிருந்து தப் பிக்க இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை பயங் கரவாதிகளாக ரூ தன்னை கொல்ல வந்தவர்களாக சித்தரித்து அவர்களை ~என்கவுண்டர்| மூலம் படுகொலை செய்தார். அது தொடர்பாக விசாரணைகள் இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட 3 பேரும் அப்பாவிகள் என்பதும் மோடி திட்டமிட்டே அவர் களை படுகொலை செய்ய தூண்டி யதும் தெரிய வந்தது.

இப்படி அடுக்கடுக்கான குற்றங் களை புரிந்த மோடியை பா.ஜ.க.வினர் பாராட்டுவது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

மோடி உண்மையிலேயே குஜராத் தின் அஸ்மிதாவை விரும்பக்கூடிய வராக குஜராத்தின் கவுரவத்தை மதிக்கக்கூடியவராக இருந்தால் அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். அதில்தான் குஜராத் தின் கௌரவம் உள்ளது|| என்று

அ. மார்க்ஸ் தெரிவித்தார்.

சந்திப்பு : அபு அஸ்மா.


ந‌ன்றி :

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.ஏ. அவ‌ர்க‌ளை ஆசிரிய‌ராக‌க் கொண்டு வெளிவ‌ரும் பிறைமேடை மாத‌மிருமுறை ஏப்ர‌ல் 16 30 இத‌ழிலிருந்து

பிறைமேடை இத‌ழை அமீர‌க‌த்தில் பெற‌ தொட‌ர்பு கொள்வீர்
050 51 96433

E mail : muduvaihidayath@gmail.com

ஈரோட்டு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்

ஈரோட்டு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்
தலைவர் பேராசிரியர் - மாநில பொதுச் செயலாளர் பங்கேற்பு


http://www.muslimleaguetn.com/


ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பிறைமேடை ஆசிரியரும் வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹம்ஸா, மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீக்குர் ரஹ்மான் ஆகியோருக்கு ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா தலைமை யில் மாவட்ட செயலாளர், ஜே.எம். ஹஸன் பாபு, மாவட்டப் பொரு ளாளர் யு.எஸ். ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட, நகர, பிரைமரிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர்.
திருமண விழா
முன்னாள் மாவட்ட தலைவர் மர்ஹ{ம் கே.எஸ். காதர் சாஹிப் இல்லத் திருமணத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். திருமண அரங்கில் தமிழ் நாடு மாநில அறிவுரை கழக உறுப்பின ரான நீதியரசர் .சித்தீக் அனைவரையும் வர வேற்றார். ஈரோட்டிற்கும் முஸ்லீம் லீகிற்குமுள்ள தொடர்புகளையும், முன்னோடிகள் செய்த சிறப்பான தொண்டினை யும் நினைவு கூர்ந்து, முஸ்லீம் லீக்கில் சேருவதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி அனைவரையும் முஸ்லீம் லீக்கில் சேர பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்தார்.
இந் நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர் வாகிகள் பங்கேற்றனர்.
கல்வி நிகழ்ச்சி
ஈரோடு நுமுஆ அப்துல் கனி மதரஸா இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் மாநிலத் தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ. ஏம். அப+பக்கர், நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைவர் யு.சிக்கந்தர் தலைமையில் திருநகர் பள்ளி முத்தவல்லி ஹசன் அலி செயலாளர் மு.மு. ஷாகுல் ஹமீது முன்னிலை யில் நடைபெற்றது. பள்ளி யின் தாளாளர் தாஜ் முகை தீன் தலைவர்களைப் பாராட்டி கல்வி நிலையங் கள் எதிர்கொள்ளும் நிலை மைகளைப் பற்றி கூறினார். வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நாடாளு மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ் மான் உரையாற்றினார்.
கொடியேற்று
விழாக்கள்
புதியதாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள புதிய பிரை மரி காசி பாளையம், விவே கானந்தா நகரில் நகரத் தலைவர் அலாவுதீன் சேட் தலைமையில் நகர நிர்வாகி களின் முன்னிலையில் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் கொடியேற்றினார். மகளிர் அணியின் உறுப்பி னர்களிடம் கலந்துரை யாடினார்.
சூரம்பட்டி பிரைமரி, சங்கு நகரில் நகரத் தலைவர் நூர் முகம்மது சேட் தலை மையில் நகர நிர்வாகிகள் முன்னிலையில் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் கொடியேற்றினார். இளைஞர் அணி, மாணவர் அணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் கலந்துரையாடி னார்.
பெரிய சேமூர், பிரைமரி கனிராவுத்தர் குளத்தில் பிரைமரித் தலைவர், ஹாஜி. தஸ்லீம் நகர நிர்வாகிகள் மற்றும் செய லாளர் சேட்டு மாவட்ட பிரதிநிதி வசியுல்லா முன் னிலையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கொடியேற்றினர்.
அனைத்து நிகழ்ச்சிக ளிலும் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் நாடாளுமன்ற உறுப்பினர், எம். அப்துல் ரஹ்மான், மாவட்டத்தலைவர். ஏ.ஆர். கலீபுல்லா, மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீக்குர் ரஹ்மான், மாவட்டச் செயலாளர் ஜே.எம். ஹஸன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான், துணைச் செயலர் அப்துல் ஜப்பார், ஈரோடு நகரச் செயலாளர் அக்பர் அலி மஹல்லா ஜமாஅத் அமைப்பாளர் பாரூக் ஈரோடு நகரத் துணைத் தலைவர், துணைச் செய லாளர் முனாப் மற்றும் ரபீக் மற்றும் திருப்ப+ர் மாவட்டத்தலைவர் பி.எஸ். ஹம்ஸா, தாஜ், மாநகரத் தலைவர் சிக்கந்தர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பஜ்லுர் ரஹ்மான், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் ஆரிப், சுதந்திரத் தொழிலாளர் அணி அமைப்பாளர் சுபான் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஈரோடு மாவட்ட ஊழியர்கள் கூட்டம்
ஈரோடு மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா தலைமையில் மாவட்ட தலைமை நிலை யத்தில் நடை பெற்றது. நடைபெற உள்ள பிரைமரி கள் தேர்தல் குறித்து மாவட்ட தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா ஜே.எம். ஹஸன் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹாஜி தாஜ் மொஹிதீன், மௌலவி அப்துல் ரஹ்மான் காஸிமி, ஈரோடு இக்பால் மாவட்ட மாநகர தேர்தல் அதிகாரி மௌலவி உமர் பாரூக் தாவ+தி ஆகியோர் எடுத்து ரைத்தனர்.
உறுப்பினர் சேர்ப்பு, பிரைமரி தேர்தல்கள் குறித்து மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன், பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை யாற்றினர்.
மாவட்ட, மாநகர மற்றும் பிரைமரிகளின் நிர் வாகிகளின் இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மாண வர் அணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு எஜூகேஷனல் கருத்தரங்கம்
ஈரோடு எஜூகேஷனல் அகாடமி சார்பில் அகா டமி அலுவலகத்தில் அதன் தலைவர் கே.கே.எஸ். கே. ரபீக் தலைமையில் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு பொருளா தாரம் மற்றும் அரசியல் நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. எஜூ கேஷனல் அகாடமி செய லாளர் டாக்டர் அபுல் ஹஸன் வரவேற்புரையாற்றி னார். இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழ் மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றி னர்.
பொருளாளர் ஆடிட் டர் அய்ய+ப் நன்றி கூறினார் அகாடமி குழுவினர்கள் ஷமீம், ய+சுப்தீன், ஜாபர் சாதிக் ஹாஜி ஹைதர் அலி ஈரோடு மாவட்ட தலைவர் ஹாஜி ஏ.ஆர். கலீபுல்லா செயலாளர் ஹஸன் பாபு பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான், மாநில பிரதிநிதி அப்துல் ரஹ்மான் காஸிமி, பாரூக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஜப்பார், ஈரோடு மாநரக செயலாளர் அக்பர் அலி, மற்றும் மாவட்ட, மாநகர, பிரைமரிகளின் நிர்வாகி களும் இஸ்லாமிய பெரு மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு

தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு


http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1207



தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு


திண்டுக்கல், ஏப்.21-

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 17-4-2010 சனிக்கிழமையன்று வந்து இறங்கிய மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் நகர புதிய நிர்வாகிகள் தேர் தலை முடித்து விட்டு பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரையும், தேனி மாவட்ட முஸ்லிம்லீகின் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட் டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளாளர் எஸ். இமாம், துணைச் செய லாளர் ஆர்.எம். அப்துல் நசீர், பெரியகுளம் நகரத் தலைவர் எம். ஜான்பா, செயலாளர் யு.எம்.எஸ். நிஜாத் ரகுமான், பொரு ளாளர் யு.எம். முத்து மீரா ஷா, பி.பி. சுல்தான், சாதிக், அசன் முஹம்மது ஆகி யோர் தேனி மாவட் டத்திற்கு அழைத்து வந்த னர்.

தேனி மாவட்ட எல்லையான காட்ரோட் டில் கெங்குவார்பட்டி பிரைமரி நிர்வாகிகள் வரவேற்று தேவதானப்பட் டியில் நடந்த முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். எம். அப்துல் ரஹ்மான் தக்பீர் முழங்க கொடி யேற்றி வைத்து அருகி லுள்ள ஜமாஅத் மண்டபத் தில் மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளா ளர் எஸ். இமாம் மற்றும் நகர நிர்வாகிகள் எம். அப்துல் லத்தீப் சிஷ்தி, எம்.எஸ். மீரா மைதீன், எம். அப்துல் பாசித், ஏ. அப்துல் சமது, எம். அப்துல் காதர், என். முஹம்மது அனிபா, ஜமால் மைதீன், ஆர்.எம். அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கரும், நாடா ளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசும் போது,

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் தலை மையில் இருந்து தொடர்ந்து வந்த தலை வர்கள் எல்லாம் எளிமை யாகவும், ஷரீஅத்தை முன் னிறுத்தி சகோதர சமுதாயத்துடன் இணக்கமாக வும், யாருடைய மனதை யும் புண்படுத்தாது மேடை களில் பேசியும், சந்திப்புகள் என்று வரும் போது அரசு அலுவலகங்கள் ஆனாலும், காவல் துறை ஆனாலும அமைச்சர்கள் என யாரை சந்தித்தாலும் கண்ணியம் பேணும் இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என குறிப்பிட்டார்.

மேலும், குறிப்பாக இளைஞர்கள் வெளிச்சம் கண்டு ஓடி விழும் விட்டில் ப+ச்சிகளைப் போல் இல்லாமல் சுதந்திரம் பெற்று தந்து, சுதந்திரத் திற்கு பின்னரும் கண்ணி யம், அமைதி, ஆர்ப்பரிப்பு இன்றி கட்டுப்பாட்டுடன் அமைதி வழியில் அறப் பணி ஆற்றி செயல்பட்டு வரும் பேரியக்கம் முஸ்லிம் லீக் என்பதை இளைஞர்களுக்கு எடுத் துக் கூறி, வழி தவறி ஆர்ப்பாட்டம், போர்ப் பாட்டம் என வாழ்க்கை யும், சக்தியையும் வீணடிக் காமல் ஷரீஅத்துடன் ஒன்றி செயல்படும் பேரி யக்கம் முஸ்லிம் லீகை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத் தலைநகரான தேனியில் ஜனாப் டெக்ஸ் டைல்ஸ் அருகில் கொடி யேற்று விழாவிற்கு நகர நிர்வாகிகள் வரவேற்றனர். மதுரை சாலைகள் எல் லாம் பச்சிளம் பிறைக் கொடி பறக்க நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றினார். தலைவர் எஸ். முஹம்மது கனி வரவேற் புரையாற்ற தேசி நகரச் செயலாளர் கே. ஜவஹர் தீன், தேனி மற்றும் பழனி செட்டிப்பட்டி நிர்வாகிகள் முன்னிலையில் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றி பேசும் போது, வேலூர் தொகுதியிலிருந்து நான் நாடாளுமன்றம் சென் றாலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி யாக நான் செயல்படுவேன்.

தமிழக அரசு ஆனா லும், மத்திய அரசானாலும் என்னால் இயன்ற பணி களை செய்து தருவேன் என குறிப்பிட்டார்.

சூறாவளி சுற்றுப்பயண மாக அடுத்து சீலையம் பட்டியிலும் கொடியேற்றி நிர்வாகிகள் நயினார், அப்துல் ஜப்பார், மாலிக் மற்றும் ஜமாஅத்தார் களையு சந்தித்தார். பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் அருகில் பேராசிரியர் ஹிதாயத் துல்லா, அப்துல் கரீம், ஜமாஅத்தார்களின் கூட் டத்துடன் பிறைக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கம்பம் நகர் புதுப்பள்ளி வாசல் நகரத் தலைவர் ஐ.எம். ஷரீப், செயலாளர் சுரபி, ஐ. முஹம்மது ஷரீப், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட நிர்வாகி கள் அப்துல் அஜீஸ், முஹம்மது இப்ராஹீம், எம்.கே. அப்துல் ரஜாக், இளைஞர் அணி சம்சுல் ஹ{தா, மிர்சா இஸ்மாயில், சலீம், அஜ்மல், ராஜிக், சேட், அமானுல்லா, ஷாஜ ஹான், வர்த்தக அணி ஷேக் ஒலி உட்பட ஜமாஅத் தார்களின் தக்பீர் முழக் கத்துடன் பிறைக் கொடியை ஏற்றிவிட்டு தொடர்ச்சியாக சுங்கம் தெரு, தாத்தப்பன் குளம் ஆகிய இடங்களிலும் பிறைக்கொடி ஏற்றினார் கள்.

நிறைவாக மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் கே.ஏ. அப்துல் ரவ+ப் அவர்களை தலைவராக கொண்ட கம்பம் இஸ்லாமிய சாலிஹீன் அறக்கட்டளை யின் சார்பாக நாடாளு மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், தமிழக அரசின் ஹகோட்டை அமீர்| விருது பெற்ற திண்டுக்கல் தோல் வணிகர் ஏ. மைதீன், சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வரும், காலஞ்சென்ற மூத்த முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. பாஷாவின் மகளு மான டாக்டர் தஸ்ரின் ஜஹான் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஏற்புரை நிகழ்த்திட, அறக்கட்டளையால் பாராட்டுப் பத்திரமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 11.30 மணிக்கு தொடர் நிகழ்வு கள் நிறைவு பெற்றது.

ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சூறாவளி சுற்றுப் பயணமாக முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டது சமு தாய நெஞ்சங்களில் மகிழ் வும், இயக்கத்தினரிடையே எழுச்சியையும் ஏற்படுத்தி யது.

Wednesday, April 21, 2010

Speech by Abdul Rahman (Vellore MP) at Parliament on 20/04/10

Speech by Abdul Rahman (Vellore MP) at Parliament on 20/04/10

Assalamualaikum Warah.....

Pls check out the link given:

Part 1 - http://www.youtube.com/watch?v=QkgNUNaVicU
Part 2 - http://www.youtube.com/watch?v=vqurTG78yMM


This contains the Parliament speech of Abdul Rahman (Vellore MP) regarding Ministry of External Affairs.

Main Highlighted Points spoke by MP in Parliament are:

Discussion and Voting on the demand for grant under the control of the Ministry of External Affairs 2010-11.

Briefly discussed about the problems faced by Indians in United Arab Emirates.
Describing about Missions by Indian Embassy Authorities all over the world.
Inauguration and Brief Report on ICWC by the Consul General of India in Dubai (UAE).
Briefly mentioned about “The Consul General of India” of Dubai (UAE).
Request for ICWC to be inaugurated all over the world.
Announcement of Hon’ble Prime Minister regarding the Voting Rights for NRIs.
Request for a welfare scheme for repatriated Indians to be inaugurated by the Govt. of India.
Request for special assistance for Sri Lankan Tamils to the Foreign Ministry.
Request for increase of Hajj Quota in future to Shri.SM Krishna (Minister of External Affairs).

Conclusion by requesting to accept the demands by Ministry of External Affairs.


Thanking You


Kind Regards,

Siddiq Ahmed Abdul Rahman
+91 95000 73786
siddiqar@yahoo.com


Assalamu allaikum brothers,

I am happy that Mr. Abdul Rahman MP spoke in the parliament.
He did not touch on the inclusion of muslime living in gulf countries to be included in 2011 census in which I pointed out in my write up in minority welfare. You may send him a copy of my article so in he may take up the issue in future. Good day

AP,Mohamed Ali

Tuesday, April 20, 2010

முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஷரீஅத் விளக்க மாநாடு

கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு விருத்தாசலம் நவாப் பள்ளிவாசலில் நடந் தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். விருத்தாசலம் முத்தவல்லி நவாப் ஜாமிஆ மஸ்ஜித் அப்துல் மஜீது, டவுன் ஜீம்ஆ மஸ்ஜித் சையது முகம்மது, ஷேக்கவுஸ்மியான், அப்துல் ஹமீது, சத்தார்பாஷா, சையது இப்ராஹீம், முகம்மது ஜவ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமா அத்துல் கடலூர் மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் வரவேற்றார். விருத்தாசலம் நகர செய லாளர் முகம்மது சாலிஹ், இஸ்மாயில் நாஜி, முகம்மது இஸ்ஹாக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரை யாற்றினார்.

திண்டுக்கல் ïசுபிய்யா அரபிக்கல்லூரி கலீல் அகமது மாநில துணைத் தலைவர் சலாஹீத்தீனும், மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதிர், சதீதுத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாநாட்டில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய முறைப்படி...
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
*சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலமாக முஸ்லிம்களின் உருது பள்ளிகளில் தாய் மொழியான உருதை விருப்ப பாடமாக்கப்படும் போது 2-ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன் கருதி உருது பள்ளியில் உருது மொழியை கட்டாய பாட மாக்கப்பட வேண்டும்.

*ஆடு, மாடுகளை இஸ்லா மிய முறைப்படி நேரடியாக அறுப்பதை தொடர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


*புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் புனி ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றிட, அவர்களுக்கு சட்டங்களை தெளிவாக்கி, கடமை முழுமை பெற விமானத்திற்கு ஒரு ஆலிமை வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்.

வரதட்சனை வாங்காமல்...

*விருத்தாசலம் பகுதிகளில் பெண்கள் கலைக்கல்லூரி நிறுவ வேண்டும்.

*கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் சுமூகமாக பேசி உறவை தொடர வேண்டும். முடியாத பட்சத்தில் கணவன் ஒரே ஒரு தலாக்கை மட்டும் பயன்படுத்தி கணவன்- மனைவி உறவை முறித்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 3 தலாக் விடுவது அல்லாவின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே இஸ்லாமியர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.

*அல்லாவின் கட்டளைக்கு ஏற்ப வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

அரசுக்கு நன்றி

*சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமண பதிவு சட்டத்தில், பள்ளிவாசலில் பதிவு செய்யப் படும் பதிவு நகலை சிறிய மாற்றத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு இம்மா நாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

முடிவில் பொருளாளர் அப்துர்ரஜ்ஜாக் நன்றி கூறினார்.

http://lalpetexpress.blogspot.com/2010/04/blog-post_1551.html
--
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://lalpetexpress.blogspot.com/

வெளியுறவுத்துறை அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. யின் பேச்சு

வெளியுறவுத்துறை அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. யின் பேச்சு

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1200

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலை தெளிவாகத் தெரியும். அவர்கள் என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கின்றனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களில் மிகுதமானோர் கல்விகற்காத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாங்கித் தரும் ஏஜென்டுகளில் மற்றும் அந்நாட்டின் வேலை தரும் நிறுவனங்ளால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் அவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் சரிவர உதவியும் ஓத்துழைப்பும் கிடைப்பதில்லை. இந்திய தூதரகத்தினர் பல உதவிகள் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு தேவையான அளவில் அதிகாரிகள் பணியில் இல்லை. மிக குறைந்த அளவில் இரண்டு அல்லது நான்கு என்ற அளவில் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போதுமான உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைப்பதில்லை.

இந்திய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பணியாளர்களுக்காக இந்திய மக்கள் நலக்குழு ( INDIAN COMMUNITY WELFARE COMMITTEE ) என்ற பெயரில் நலக்குழுவை அமைத்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதுபோல மற்ற நாடுகளிலும் அமைத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகுக்க வேண்டும். அது அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் நிலையை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நாடாளுமன்றக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசின் தகவலின் அடிப்படையில் இந்திய அரசால் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ரூபாய் 500 போடி அறிவிக்கப்பட்டு, ரூபாய் 90 கோடி ஒதுக்கப்பட்டும் வெறும் ரூபாய் 63 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருப்பது கவலைக்குறிய விசயமாகும். மாண்புமிகு வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணன் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதுபோல சிங்கப்ப+ர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சொந்த மொழியில் புகார் அளித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதை வரும் தேர்தலிருந்தே நடைமுறைபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹஜ் பயணத்துக்காக தமிழகத்துக்கு 3000துக்கு சற்று கூடுதலான இடங்கள் மட்டுமே ஓதுக்கப்பட்டுள்ளது. நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வேலூர் தொகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேல் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் உள்ளனர். எனவே தமிழகத்துக்கு ஹஜ் பயண இடஓதுக்கீட்டை இரண்டு மடங்கு அதிகரிக்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மக்களவையில் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.

ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தமிழக-அரபகத் தொடர்புகள்

தளபதி ஏ.ஷ ஃபிகுர் ரஹ்மான்

வருகின்ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக சிறப்பாக நடைபெறும் வகை யில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அம் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி இலக் கியங்களுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்பு களை நினைவுகூர்ந்து பதிவு செய் யும் பணியை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின் றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2, 3 தேதிகளில் தஞ்சை அதிராம்பட்டினத் தில் நடைபெற்ற இஸ் லாமிய தமிழ் இலக்கியக்கழக இலக்கியப் பெருவிழாவும், அங்கு வெளியிடப்பட்ட ஆய்வு மலரும் அமைந்துள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மார்க்க அணி செயலாளர் ஏ. ஷபீகுர் ரஹ்மான் தமிழகத் திற்கும் - அரபகத்திற்கும் இடையே யான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், தமிழ் மொழியின் மீது தாய்ச்சபை தலைவர்கள் கொண்டிருந்த பற்று குறித்தும் ஆய்வு கட்டுரை வாசித்தார்.
அக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் வரு மாறு-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்க தகுதியான மொழி தமிழே என்பதை வலியுறுத்தி அரசியல் நிர்ணய சபையிலே ஆற்றிய உரை அனைவரும் அறிந்ததே.
நம் தாய் மொழியான தமிழ் மொழி அருள்மிகு நகரங்களிலும் பிரகாசிக் கிறது. இஸ்லாமிய மார்க்கத் தின் புனித கடமைகளாக திகழும் புனித ஹஜ்ஜில் உலக முழுவதிலுமிருந்து வருகை தந்த 30 லட்சத்திற் கும் மேற்பட்டோர் மத்தியில் தமிழ் மொழியை கேட்டு இன்புறும் வாய்ப்பு ஆண்டு தோறும் கிடைக்கிறது. அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்யும் போது தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, புருணை போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசும் சன்மார்க்க சீலர்கள் தாய்மொழியாம் இன்பத் தமிழில் உரத்த குரலில் இறைவனிடம் பிரார்த்திக் கொண்டிருக்கும் அழகிய காட்சியை காண முடிகிறது.
கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், இஸ்லா மிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாள ராக திகழ்ந்த சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் ஹஜ் மேற் கொண்டிருந்த போது தமிழக ஹாஜிகள் மத்தியில் தமிழிலேயே அழகிய சொற் பொழிவு நிகழ்த்தினார். அந்த ஹஜ்ஜில் பங் கேற்ற இசை முரசு நாகூர் ஹனீபா இறைவ னிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. என்ற பாடலை இனிய தமிழில் உரத்த குரலில் பாடி அரபி களையும் ஆச்சரியப்படுத்தி னார். 1977 ஹஜ்ஜின் போது தமிழக பொறுப்பாளராக பணியாற்றிய சங்கைமிகு செய்யது அப்துல் ரஹ் மான் ஹாஸிம் சில்லி அரபகத்தில் ஜித்தா துறைமுகத்தில் அழ கிய தமிழில் பேசி உரையாடி யதை காண முடிந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கலந்து கொண்டு அரபு - தமிழ் அகராதியை வெளியிட்டு சிறப்பித்துள் ளார்.
தமிழ் மொழி மீது அரபு மக்கள் நேசம் கொண்டுள் ளனர். தமிழ் பேசும் சகோ தரர்கள் பணியாற்றும் அரேபிய நிறுவனங்களின் பிரமுகர்கள் தமிழை ஆர்வ முடன் கற்றுக் கொண்டிருக் கின்றனர். அரபகத்திலி ருந்து முஹம் மது அஹமது என்ற நண்பர் லால் பேட்டை வந்திருந்தார். சென்னையி லிருந்து லால் பேட்டை வரும் வழியில் வழியெங்கும் அவர் கண்ட தமிழக மக்கள் - விவசாய பெருமக்கள் இடுப் பில் வௌ;ளை வேட்டியும், தோளில் வௌ;ளை துண் டும் அணிந்து சாலைகளில் நடமாடுவதை கண்டு இஃராம் உடைகளை போல் அணிந் துள்ளார்களே என்று ஆச்ச ரியப்பட்டார்.
தமிழகமும் - அரபகமும் உடை அணி முறையிலும் தொடர்பிருப்பது ஆச்சரிய மான ஒன்றுதான்.

Sunday, April 18, 2010

புனித கஃபாவை நோக்கி ...!

புனித கஃபாவை நோக்கி ...!

தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான்
மாநில மார்க்க அணி செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்



உலகெங்கும் வாழும் ஒரு நூறு கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நாள்தோறும் எந்த புனித கஃபத்துல்லாஹ் ஷரீபை நோக்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுகிறார்களோ அநத புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றியும், புனித ஹஜ்ஜைப் பற்றியும் எழுதுவ திலும் பெரும் மகிழ்வடைகி றேன். அல்ஹம்துலில்லாஹ்...
புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றி நிறைய வரலாறுகளும், செய்தி களும் இருந்தாலும் வல்ல அல்லா ஹுத்தஆலா உலகை படைப் பதற்கு முன்னரே கஃபத்துல் லாஹ் ஷரீபை படைத்தான் என்றும், மலக்குமார்களால் கட்டப்பட்டது என்றும் சரி யான சரித்திரங்கள் சொல்லிக் காட்டு கிறது.
மூலப்பிதா - முதல் மனிதப் புனிதர் நபி ஆதம் அலை ஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்டது. அதன்பிறகு நபி நூஹ் (அலை) அவர்களாலும் கட்டப்பட்டது என்ற நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் தியாகச்சீலர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனிதமிகு கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப் பட்டது.
நபி இப்ராஹீம் கலீலுல் லாஹ் (அலை) அவர்களால் புனித கஃபத்துல்லாஹ் கட்டப்பட்ட செய்தியை திருக்குர்ஆன் ஷரீபின் மூலம் வல்ல அல்லாஹுத்த ஆலா நமக்கு தெரிவிக் கிறான்.
நபி இப்ராஹீம் (அலை) அவர் களாலும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களாலும் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப்பட்டு வல்ல அல்லா ஹுத்த ஆலா இடத்தில் யா அல்லாஹ் உன் கட்டளையை ஏற்று புனித கஃபத்துல்லாஹு ஷரீபை கட்டி பூர்த்தியாக்கி யுள்ளோம். இதை நீ, ஏற்றுக் கொள்வாயாக. அங்கீகரிப் பாயாக என பிரார்த்தித்துள் ளார்கள்.
வல்ல அல்லாஹுத்த ஆலா நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நோக்கி நீங்கள் ஹஜ்ஜுக்கு அழைப்பு கொடுங் கள் என்று கூறினான்.
அந்த அன்பான - தியாக மான அழைப்பை நோக்கித்தான் உலகெங் கும் வாழும் கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்தினர் புனித ஹஜ்ஜுக்காக புறப் படுகிறார்கள்.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வன் நிஃமத
லக்கவல் முல்க் லா ஷரீக்க லக்
எனும் உச்சாடனத்தை முழங்கி இறையச்சத்துடன் கஃபத் துல்லாஹ் ஷரீபை காணப் போகிறோம் என்ற ஆனந்தப் பெருக்குடன் புறப் படுகிறார்கள்.
புனித ஹஜ்ருல் நிய்யத் செய்தவர்களாக - புனித உம்ராவை நிய்யத் செய்தவர் களாக - இஹ்ராம் உடை அணிந்தவர்களாக வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது வணங்கி யவர்களாக புனித மக்கா நோக்கி புறப்படும் ஒவ்வொரு ஹாஜியிடமும் ஒரு வகையான இறையச்சத்தையும் தக்வா எனும் பரிசுத்த நிலை யையும் காண முடிகிறது.
புனித ஹஜ்ஜுக்காக இஹ்ராமை அணிந்து லப்பைக் எனும் உச்சாட னத்தை முழங்கி கஃபத்துல்லாஹ் ஷரீபை கண்ணால் பார்த்து மகிழ்ந்து, இரு கரமும் உயர்த்தி உள்ளத் தூய்மையுடன் உள்ளம் உருக துஆச் செய்து மகிழ்கிறோம்.
புனித ஹஜ்ருல் அஸ்வத் கல் முன்னே நமது கரம் உயர்த்தி துஆச் செய்து தவாஃபை துவக்குகிறோம்.
ஏழு சுற்று - புனித கஃபத் துல்லாஹ் ஷரீபை துஆச் செய்து மகிழ்கிறோம். தவாஃபின் 7 சுற்றும் பூர்த்தி பெற்ற பிறகு மகாமே இப்ராஹீம் முன்பே 2 ரகஅத் தொழுது துஆ செய்து மகிழ் கிறோம். புனித ஜம் ஜம் நீர் அருந்தி ஆனந்தம் அடை கிறோம்.
ஸஃபா மர்வா மலைக்குன் றுக்கிடையே ஸயீ செய் கிறோம். தொங்கோட்டம் ஓடுகிறோம். ஹஜ்ஜின் கேந்திரங்களான புனித மக்கா, புனித மினா, புனித அரஃபா, புனித முஜ்தலிபா இந்த இடங்களிலும் அமல் செய்து மகிழ்கிறோம்.
துல் ஹஜ்ஜு மாதம் பிறை 8, 9, 10, 11, 12, 13 இந்த புனித நாட்களில் புனித ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி ஒவ்வொரு ஹாஜியும் பூரிப் படைகிறார்கள். பிறை 8-வது நாளில் மினாவில் தங்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும், துஆ செய்வதிலும் ஈடு பட்டு பாவங்களை போக்கி பரிசுத்தம் அடைவதற்கு ஹாஜிகள் தயாராகிவிடுகிறார் கள்.
துல்ஹஜ் பிறை 9-வது நாளில் புனித அரஃபா பெருவெளியில் தங்கி வல்ல அல்லாஹுத்தஆலாவை தொழுது வணங்கி - அழுது அழுது - தான் செய்து விட்ட பாவங்களையும், குறைகளை யும் சொல்லி - சொல்லி அழுது அல்லாஹுத்த ஆலா இடத்தில் முறையிடுகிறார்கள். பிறை 9-வது நாள் லுஹர் தொழுகை நேரத் திலிருந்து இரவு வரை துஆ செய்து கொண்டிருக் கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை காணும் போதே கண்ணுக்கு குளிர்ச்சி யாகவும கல்புக்கு மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது.
புனித அரஃபாவிலிருந்து புறப் பட்டு இரவில் முஜ்தலி பாவில் தங்கி வல்ல அல்லாஹ்வை தொழுது துஆ செய்கிறோம்.
பிறை 10-வது நாள் காலையில் பஜ்ர் தொழுகை யினை நிறைவேற்றி மினாவுக்கு மீண்டும் திரும்புகிறோம். மினாவில் ஷைத்தானை கல்லெறிவதற்கு முஜ்தலிபா வில் பொறுக்கிய கல்லை 10-வது நாள் காலையில் ஜும்ரத்துல் அக்பா எனும் பெரிய ஷைத்தானுக்கு பிஸ் மில்லாஹ் அல்லாஹு அக்பர் என முழங்கி கல்லெறிகிறோம்.
குர்பானி கொடுத்து மொட்டை யடித்து அல்லது தலைமுடியை குறைத்துக் கொள்கிறோம். பெண்கள் தலைமுடியின் ஒரு சிறு பகுதியை குறைத்துக் கொள் வார்கள். குளித்து புத்தாடை அணிந்து ஆனந்த பெருக்குடன் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் சென்று தவாபு செய்து மகிழ் கிறார்கள்-ஸயீயை நிறைவேற் றுகிறார்கள்.
மீண்டும் மினாவுக்கு சென்று பிறை 11, 12, 13 வரை தங்கி மூன்று ஷைத்தான் களுக்கும் கல்லெறிகிறார்கள். மீண்டும் மினாவிலிருந்து மக்கா வந்து புனித மக்காவில் வாழும் கால மெல்லாம் தவாபு செய்து தொழுது வணங்குவார்கள்.
புனித ஹஜ்ஜு பூர்த்திப் பெற்று தாயகம் திரும்புகிறோம்.
வள்ளல் நபிகள் பெருமா னார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களிடத்தில் அருமை சஹாபாக்கள் புனித ஹஜ்ஜைப் பற்றி விளக்கங்கள் கேட் டார்கள். வினாக்கள் கேட்டார் கள்.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜைப் பற்றி கேட்ட சஹாபாக்களுக்கும் உலகம் முடிகின்ற வரையிலுள்ள கோடானு கோடி முஸ்லிம் களுக்கும் பதிலாக - விளக்க மாக உங்களின் ஹஜ்ஜில் என்னை பின் பற்றுங்கள்.
புனித ஹஜ்ஜின் கிரியை களில் நான் எப்படி செய்கிறேனோ அப்படி நீங்களும் செய்யுங்கள் என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
நம் அனைவரின் ஹஜ்ஜும் வள்ளல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர் களின் ஹஜ்ஜைப் போன்று புனிதம் பெற்றதாக திகழ கருணை யுள்ள ரஹ்மான் அருள்புரிவானாக.
உலகெங்குமிருந்தும் புனித ஹஜ்&க்காக வரும் லட்சக் கணக்கான ஹாஜிகள் ஹஜ் ஜுக்கு முன்போ அல்லது ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்போ மாண்புமிகு மதீனா வுக்கு சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பள்ளி யில் தொழுது-
வள்ளல் நபிகள் பெரு மானார் ரசூலே கறீம் அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லி சொல்லி மகிழ்வ டைவார்கள்.
நம் அனைவர்களுக்கும் புனித ஹஜ், புனித உம்ரா, பாக்கியங்களை அல்லாஹ் வழங்குவானாக.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்கள் தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழும் பாக்கியங்களை வழங்கி அருள்புரிவானாக.

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வ‌ருகை

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வ‌ருகை

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவ‌ர்க‌ள் 09.04.2010 வெள்ளிக்கிழ‌மை அதிகாலை துபாய் வ‌ருகை புரிந்துள்ளார்க‌ள். க‌ட‌ந்த‌ ஆறு மாதத்திற்கு முன்ன‌ர் துபாய் வ‌ருகை புரிந்த‌ போது அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையினால் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார். மௌலானாவின் புத‌ல்வர்க‌ள் துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். சுமார் இர‌ண்டு மாத‌ம் அவ‌ர்க‌ள் துபாயில் இருப்பார்க‌ள்.
அத‌ன் புகைப்ப‌ட‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்பு இதோ :


ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்
இராம‌நாத‌புர‌ம் ஜில்லா பார்த்திப‌னூர் ப‌ர‌ளையில் 1944ம் ஆண்டு பிற‌ந்தார். ஆர‌ம்ப‌க் க‌ல்வி ப‌யின்று 1957 ஆம் ஆண்டு ஈஸ‌ந‌த்த‌ம் ம‌த‌ர‌ஸாவில் ம‌வ்ல‌வி ஆலிம் ப‌ட்ட‌ம் பெற‌ க‌ல்வி க‌ற்க‌ ஆர‌ம்பித்தார். வேலூர் அஃலா ஹ‌ஜ்ர‌த்திட‌ம் நேர‌டியாக‌ கல்வி ப‌யின்ற‌ மீரா ஹுசேன் ஹ‌ஜ்ர‌த்திட‌ம் நான்கு ஜும்ராக்க‌ள் க‌ல்வி ப‌யின்றார்.
1961 ஆம் ஆண்டு லால்பேட்டை அர‌பிக் க‌ல்லூரியில் 3 ஆண்டுக‌ள் க‌ல்வி ப‌யின்று 1964 ஆம் ஆண்டு ம‌வ்ல‌வி ஆலிம் ப‌ட்ட‌ம் பெற்றார். அமானி ஹ‌ஜ்ர‌த்திட‌ன் ந‌ன்கு பேச‌க் கூடிய‌வ‌ர், அர‌சிய‌ல் செய்திக‌ளை சேக‌ரித்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர், செய்தி தொட‌ர்பாள‌ர். அமானி ஹ‌ஜ்ர‌த் க‌ர‌ங்க‌ளாலேயே ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்.
1958 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் லீக் ப‌ற்றி அர‌பிக் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளிட‌ம் பேச‌க் கூடிய‌வ‌ர். 1964 ஆம் ஆண்டிலிருந்து ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் ந‌ன்கு ப‌ழ‌கிய‌வ‌ர். 1990 ஆம் ஆண்டு ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக்கின் துணைத்த‌லைவ‌ராக‌ க‌மாலுத்தீன் ஹாஜியரால் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்.
ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ஹாஜி எஸ். க‌மாலுத்தீன் அவ‌ர்க‌ள் வ‌ஃபாத்தான‌தைய‌டுத்து 05.01.2007 ந் தேதி ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ராக‌ பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொஹிதீன் எம்.பி. அவ‌ர்க‌ளால் அறிவிக்க‌ப்ப‌ட்டார். 29.01.2007 ஆம் தேதி ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் பொதுக்குழு பேராசிரிய‌ர் அறிவிப்பை அங்கீக‌ரித்து தலைவ‌ராக‌ தேர்ந்தெடுத்த‌து.
1980 ஆம் வ‌ருட‌ம் ம‌றைநேச‌ன் என்ற‌ மாத‌ந்திர‌ ப‌த்திரிக்கையை ஆர‌ம்பித்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ந‌ட‌த்தி வ‌ந்தார். மாமேதை ம‌வ்லானா அபுல்ஹ‌ஸ‌ன் அலி ந‌த்வியின் க‌ருத்துக்க‌ளை ப‌த்திரிக்கையில் எழுதி வ‌ந்தார். ஜும் ஆ ப‌யான்க‌ளிலும் மாமேதைய்ன் க‌ருத்துக்க‌ளையே அழ‌காக‌ பிர‌திப‌லித்து உரை நிக‌ழ்த்துவார்.
முஸ்லிம் லீக் ப‌ற்றியே பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகிறார். நீண்ட‌ கால‌மாக‌ முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திலேயே இருந்து வ‌ருகிறார்.

தொடர்ந்து முழங்குங்கள்

தொடர்ந்து முழங்குங்கள்
-திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com

“முஸ்லிம் லீக்”
பேரியக்கம்
தொடங்கியவர் பெயரில்
ஓர் பேரவை – அது யு.ஏ.இ
காயிதே மில்லத் பேரவை !

தாய்ச் சபையின்
அறுபத்து இரண்டாம் ஆண்டு
தொடக்க விழா
தாயகம் கடந்து
யு.ஏ.இ. துபையில் !

முஸ்லிம் லீக் – இது
கொடிகள் உயர்வதற்காக
பாடுபடும் கட்சியல்ல – நாட்டின்
குடிகள் உயர்வதற்கு
பாடுபடும் கட்சி

மந்திரங்கள் முழங்க
தொடங்கப்பட்ட கட்சிகளுண்டு,
இது – நாட்டின்
சுதந்திரத்திற்காக முழங்கிய
கட்சி இது !

இந்திய
சுதந்திரத்திற்கு பாடுபட்ட
முஸ்லிம்
அன்னியனாய் பார்க்கப்பட்ட போது,
உரிமைகளை வென்றெடுக்க – இந்திய
யூனியன் முஸ்லிம் லீக்
ஆரம்பிக்கப்பட்டது !

“இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு”
முழங்கினார் உறுதியோடு
கவ்மின் காவலர்
காயிதே மில்லத்

இது
சலுகைகளை கேட்கும்
சமுதாயமல்ல
உரிமைகளை கேட்கும்
சமுதாயம்
உணர்வோடு ஒலித்த தலைவர்
நமது
அப்துஸ்ஸமது.

”பொது சிவில் சட்டம்”
ஐநூறுக்கும் மேற்பட்டோர்
அங்கு (பாராளுமன்றத்தில்)
அமைதியாக இருந்த போது
ஐயமற எடுத்து வைத்தார் ஒருவர்

“ஷரீஅத் சட்டம் தான்
சரியான சட்டம்
உயிரினும் மேலான
உயர்வான சட்டம்” – அவர்தான்
நெஞ்சம் துவளா
குலாம் மஹ்மூத் பனாத்வாலா !

“தீன் இஸ்லாம்
தமிழகத்திற்கு வந்த மதமல்ல – அது
தமிழகத்தின் சொந்த மதம் “
ஆதாரங்களோடு நிரூபித்த,
பேராசிரியர் காதர் மொய்தீன்

நாடாளுமன்றத்தில்
நம் உரிமைகளுக்கு
குரல் கொடுத்தும் – பிறை மேடையில்
சமூக பெருமைகளை
எடுத்து வைத்தும் வரும்
அப்துர் ரஹ்மான். எம்.பி !

நான்
பொய் சொல்லவில்லை,
உங்கள் எண்ணிக்கை
குறைவுதான் !
உண்மையை சொல்கிறேன்
உங்கள் பணி எனக்கு
மனநிறைவுதான் !

திராவிட முன்னேற்ற கழகத்துடன்
இணைந்து,
தீனோரின் முன்னேற்றத்திற்காக
பாடுபடும் நீங்கள்

சமூக உரிமைகளுக்கு
தொடர்ந்து முழங்குங்கள்
உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும்
உறுதுணையாய் இருப்போம் நாங்கள் !

( 25.03.2010 வியாழக்கிழமை துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை )

Presently he is working in Qatar

Saturday, April 17, 2010

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

( இக்பால் ராஜா )

உத்தேசித் தபத்து லட்சம்

உருவாகும் உறுப்பி னர்கள்

மத்தாப்பாய் ஒளிசிந் தாமல்

மணிவிளக்காய் பிரகா சிப்போம் !

வித்தாகும் தலைமு றைக்கும்

வித்தகர்நம் முனீருல் மில்லத்

அத்தாட்சி வழங்கும் வண்ணம்

அறிவார்ந்த பணிதொ டர்வோம் !



’தரவரிசை இதழ்க ளுக்கு

தகுந்தவாறு இடம்அ மைக்க

அறமுரசு மணிச்சுடர்’ ராய் !

அடிச்சுவடு அமைந்த பாங்கு

திரண்டசமு தாயத் தில்நம்

தானைத்தலைவர் சிராஜுல் மில்லத்

அரவணைத்த நேர்த்தி கண்டு

அதிசயத்து வியந்தோம் தோழா !



’வீடுவீடாய் மணிச்சுடர்’ ரை

வழங்குகின்ற முகவர் மூலம்

வீடுசென்று விநியோ கித்தும்

வீறுகொண்டு வலிமை சேர்க்க

கூடுகின்ற பெரும்கூட் டங்கள்

கூவிவிற்க வழிவ குப்போம் !

ஏடுதந்த சிராஜுல் மில்லத்

எப்படிநாம் மறப்போம் தோழா ?



தாய்சபைக்கு காயிதெ மில்லத்

தலைமைஏற்ற மகத்து வத்தை

வாய்மணக்க சிராஜுல் மில்லத்

வழிமொழிந்து சொல்லக் கேட்டோம் !

வாய்மையுடன் முனீருல் மில்லத்

வழிநடத்தும் தலைமை எண்ணி

வாய்ப்பினிலே மணிச்சுடர்’ ரை

வம்சத்தில் வளர்போம் தோழா !





( மணிச்சுடர் 15/16 மார்ச் 2010 நாளிதழிலிருந்து )

திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல், பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல், பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்



திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல்; பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, கடந்த இரு வாரங்களாக திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மாநில மாணவர் பேரவை அமைப்பாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர்கள் கவிஞர் வீரை அப்துர் ரஹ்மான், கானகத்து மீரான். வீரை இமாம் சேக்மீரான்மௌலானா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதா,; மில்லத் காஜா முகைதீன், அம்பை வட்டார முஸ்லிம் லீக் செயலாளர் அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் சிந்தா புகாரி உள்ளிட்ட குழுவினர் பள்ளி வாசல்கள் தோரும் சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலச் செவல் ஊர் ஷாபி ஜூம் ஆ பள்ளி வாசலில் 17.4.10 ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் நடந்த கூட்டத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் பேசியதாவது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் தாயுள்ளம் கொண்டது.ஆகவே தான் தாய்ச்சபை என்றழைக்கப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்கள்.தம் குடும்பத்தை முன்னேற்றி, சமூகத்தை உயர்த்திட, பாரம்பரியமான வழக்கப்படி உள்ள ஜமாஅத்துக்களுடைய பெருமையையும் நிலை நாட்ட உழைத்துக் கொணடிருக்கும் தன்னலமற்ற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.

ஜமாஅத்துக்கள் சிறப்பாகச் செயல்படும்;போதுதான் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்ப்புக்களை மிக இயல்பாக வழங்கி, யாவரும் இணக்கத்துடன் வாழ வழிவகைகளை பல நூறு வருடங்களாக தொன்று தொட்டு செய்து வருபவை ஜமாத்துக்கள் தான். மற்ற இயக்கங்களைவிட முஸ்லிம் லீக்,இயக்கம், இந்த வலிமையான ஜமாஅத் அமைப்பு பட்டுப் பொய்விடக்கூடாது என்பதிலே மிகக்கவனமாக இருந்து வருகிறது.

முஹல்லா ஜமாஅத்துக்களின் பெருமையை பாதுகாக்கிற அளவில் ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடத்தும் தகுதியும், அம்மாநாட்டின் வாயிலாக உலமா நல வாரியம் கலைஞர் அரசில் அமைத்துத் தந்த பெருமையும் முஸ்லிம் லீகிற்கு உண்டு என்பதை நாம் யாரும் அறிவோம்.

பள்ளி வாசல்களின் அடக்கவிடங்களை, மைய வாடிகளை ஊருக்கு தூரமாக அப்போதிருந்த அரசுகள் தள்ளிவிட முயன்ற போது, பள்ளி வாசலும் கபருஸ்தானும் அருகருகே தான் அமைய வேண்டும். அதன் மூலமாக எந்தக்கேடும் வந்து விடாது என்று, மைய வாடிகளை காயிதே மில்லத் அவர்கள் காலம் தொட்டு பாது காத்தத் தந்தது முஸ்லிம் லீக் இயக்கம் தான்.

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மகத்தான காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது.1944 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை மூலமாக பல்லாயிரம் பேர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றிடும் வகையில் அரும் பணியாற்றும் சபைக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.

பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உருவாகிட அடியெடுத்துக் கொடுத்ததோடு, ஆரம்பம் செய்யவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதும் முஸ்லிம் லீக் இயக்கம்தான்.

தற்போதும் இரு பெரும் சமுதாய நலக்காரியங்களை கையிலெடுத்துக் கொண்டே இங்கும் வந்துள்ளோம். உங்களுடைய ஊரில் குடும்பப் பொருளாதார நிலையின் காரணமாக, யாராவது ஒரு மாணவர் வேலைக்குச் சென்றுதான் தமது குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்கிற நிலை இருக்குமானால், அந்த மாணவரை எங்களிடம் தாருங்கள்.

நாங்கள் அத்தைகைய மாணவரை குற்றாலம் சீனா தானா ஹைடெக் டெக்னிகல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து 5 மாத காலம் எலக்ட்ரீசியன் படிப்பு பற்றிய அடிப்படைகளை புரிய வைக்கிறோம்,அம்மாணவர் தமது டிரைனிங் பீரியடு முடிந்த பின்னர் துபாய் போன்ற நாடுகளிலோ, அல்லது உள் நாட்டிலோ வேலை வாய்ப்பு பெற்றிட தயார் படுத்துகிறோம்.எங்கள் மூலமாக எண்ணற்ற இளைஞர்கள் இன்று துபாய் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புப் பலன் பெற்றுள்ளார்கள்.இன்று அவர்களது குடும்பங்களே முஸ்லிம் லீகை வாழ்த்தி நிற்கிறது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியவராகவோ தவறியவராகவோ அல்லது பிளஸ் 2 படித்தவராகவோ இருந்தால் பரவாயில்லை. இதன் மூலமாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிற மகத்தான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேல்படிப்பு படிக்க ஆசைப்படுபவராக இருந்தால் தயக்கமில்லாமல் சொல்லுங்கள்;. அதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

அடுத்ததாக முஸ்லிம் லீக் சார்பாக நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் துவக்கம் செய்ய இருக்கிறோம்.அதன் மூலமாக நமது சமுதாயத்தில் எழ்மை துரத்தப்படும் என்று நம்புகிறோம்;. இங்குள்ள ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள் ஒரு நிதியை சேகரம் செய்துவைத்தால் அதற்குப் பக்க பலமாக நாங்களும் உங்களுடன் வந்து வட்டியில்லாக்கடன், மருந்து மாத்திரை வாங்க வழியில்லாமல் அல்லாடுபவர்களுக்காக மாதம் தோரும் நிதியதவி, ஏழைக் குமருகளுக்கு திருமண நிதியதவி போன்ற அல்லாஹ்விற்குப் பிடித்தமான பணிகளை செய்து தர இருக்கிறோம்

.இதற்கெல்லாம் நமது தாய்ச்சபையின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை அல்ஹாஜ் சீனா தானா செய்யது ஆப்துல் காதர் அவர்களுடைய ஒத்துழைப்ப மிக நன்றிக்குரியது.ஆகவே இளைஞர்களே அணிவகுத்து வாருங்கள். மாணவச் செல்வங்களே இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய ஊருக்கும் எங்களுக்கும் இணைப்பாக, கிராம அளவிலோ அல்லது நகர அளவிலோ முஸ்லிம் லீகின் அடிப்படை அமைப்பாகிய பிரைமரி முஸ்லிம் லீகை ஏற்படுத்துங்கள். அத்தகைய பிரைமரி முஸ்லிம் லீக், சிபாரிசு செய்யும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கும் போது எங்களுக்கு எவ்விதமான குழப்பங்களும் சிரமமும் வராது. ஜமாத் நிர்வாகிகள், நகர ,கிராம அளவிலான முஸ்லிம் லீக் நிர்வாகிகள் இதற்கான பணிகளில் சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.

கூட்ட முடிவில் த.மு.மு.க. மேலச் செவல் முன்னாள் துணைத் தலைவர் எஸ் நெய்னா முஹம்மது தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டார்.

Sunday, April 11, 2010

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ளுக்கு ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ வாங்க‌ க‌ட‌ன் வ‌ழ‌ங்கும் திட்ட‌ம்

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1145
இத்திட்ட‌த்தின் கீழ் இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் ஆட்டோ பெற்று, சுய‌ தொழில் தொட‌ங்கிட‌ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ள் மூல‌ம் ஆட்டோ க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. இத்திட்ட‌ம் த‌னி ந‌ப‌ர் க‌ட‌ன் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறைக‌ள் அடிப்ப‌டையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத்திட்ட‌ம் 'தாட்கோ' வ‌ங்கி மூல‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

1. இத்திட்ட‌த்தில் ப‌ய‌ன்பெறுப‌வ‌ர் இஸ்லாமிய‌ இளைஞ‌ராக இருக்க‌ வேண்டும்.
2. ப‌ய‌னாளி ஆட்டோ வாக‌ன‌ம் ஓட்டுவ‌த‌ற்கான‌ உரிம‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். இவ‌ர‌து குடும்ப‌ ஆண்டு வ‌ருமான‌ம் ந‌க‌ர‌மாயின் ரூ. 54,500/‍ ம‌ற்றும் கிராம‌ப் ப‌குதியாயின் ரூ. 39,500/‍க்கு மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்.
3. ப‌ய‌னாளிக‌ள் ஒவ்வொருவ‌ரும் ரூ. 800/ தொகையை ப‌ங்கு மூல‌த‌ன‌மாக‌ ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌த்திற்கு அளிக்க‌ வேண்டும்.
4. ப‌ய‌னாளிக‌ள் ஒவ்வொருவ‌ரும் இர‌ண்டு ஆட்டோ ஓட்டுந‌ரின் பிணைய‌ம் ம‌ற்றும் சொத்து ஜாமீன் அளிக்க‌ வேண்டும். சொத்து ஜாமீன் அளிக்க‌ இய‌லாத‌வ‌ர்க‌ள், கூடுத‌லாக‌ குடும்ப‌த்தில் வ‌ருமான‌ம் ஈடுப‌வ‌ரின் பிணைய‌ம் ம‌ற்றும் ஆட்டோ க‌ட‌ன் தொகையில் 10 ச‌த‌வீத‌ம் தாட்கோ வ‌ங்கியில் வைப்பு நிதியாக‌ செலுத்த‌ வேண்டும். இத்தொகைக்கு 7 ச‌த‌வீத‌ வ‌ட்டி தாட்கோ வ‌ங்கி அளிக்கிற‌து. த‌வ‌ணை த‌வ‌றினால் வைப்பு நிதி ஈடுக‌ட்ட‌ப்ப‌டும்.
5. ஆட்டோ க‌ட‌ன் தொகையில் 5 ச‌த‌வீத‌த் தொகையை ப‌ய‌னாளிக‌ள் ப‌ங்கு தொகையாக‌ செலுத்த‌ வேண்டும்.
6. ஆட்டோ தொழில் கூட்டுற‌வு ச‌ங்க‌ம், உறுப்பின‌ர் ம‌ற்றும் ப‌ய‌னாளிக‌ளிட‌மிருந்து பிர‌தி மாத‌ த‌வ‌ணை தொகையை தின‌ந்தோறும் வ‌சூலித்து தாட்கோ வ‌ங்கியில் செலுத்த‌ ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.
7. ஆட்டோ தொழிற் கூட்டுற‌வு ச‌ங்க‌ம், தொழில் ம‌ற்றும் வ‌ணிக‌ துறையின் க‌ட்டுப்பாட்டில் செய‌ல்ப‌டும். தொழிற் ம‌ற்றும் வ‌ணிக‌த்துறையின் க‌ண்காணிப்பாள‌ர், இச்ச‌ங்க‌த்தின் சிற‌ப்பு அலுவ‌ல‌ராக‌ செய‌ல்ப‌டுவ‌ர்.
ம‌னுதார‌ர் இணைக்க‌ வேண்டிய‌ சான்றுக‌ள் :
1. சாதி சான்றித‌ழ்
2. வ‌ருமான‌ச் சான்றித‌ழ்
3. குடும்ப‌ அட்டை
4. இருப்பிட‌ சான்று
5. ஓட்டுந‌ர் உரிம‌ம்
அணுக‌ வேண்டிய‌ முக‌வ‌ரி :
1. அனைத்து மாவ‌ட்ட‌ பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ற்றும் சிறுபான்மையின‌ர் ந‌ல‌ அலுவ‌ல‌ர்
2. மேலாள‌ர், த‌மிழ்நாடு தொழில் கூட்டுற‌வு வ‌ங்கி
3. பொது மேலாள‌ர், மாவ‌ட்ட‌ தொழில் மைய‌ம்
துறைத் த‌லைமை :
மேலாண்மை இய‌க்குந‌ர்
த‌மிழ்நாடு சிறுபான்மையின‌ர் பொருளாதார‌ மேம்பாட்டுக் க‌ழ‌க‌ம்
807 அண்ணா சாலை, 5 வ‌து த‌ள‌ம்
சென்னை 600 002
தொலைபேசி : 044 28514846
த‌க‌வ‌ல் உத‌வி : ஈரோடு மாவ‌ட்ட‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌து இக்பால் அவ‌ர்க‌ள் தொகுத்து வ‌ழ‌ங்கியுள்ள‌ த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் 2009 திலிருந்து

Thursday, April 8, 2010

அன்பு சமுதாய சகோதரர்களுக்கு,

அன்பு சமுதாய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)
கடந்த மாதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் சாஹிப் அவர்களை துபாயில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்களுடன் 5 நாட்கள் கலந்துரையாடல்களிலும் பல சமுதாய கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

அவர்களுடன் இருந்த நேரங்களில் அரசியல் மற்றும் சமுதாயரீதியான என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் அருமையான முறையில் விடையளித்தார்.இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னவேன்றல் இப்படி பெற்ற சமுதாய தலைவர் கிடைத்தது முஸ்லிம் லீக் மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் தான்.
இந்த சிறப்புமிக்க தலைவரை சந்திக்கும் வாய்பை எற்படுத்தி தந்த அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் குத்தலாம் லியாக்கத் அண்ணன் , பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹம்ம‌து தாஹா ,பொருளாள‌ர் கீழ‌க்க‌ரை ஹமீதுர் ரஹ்மான், ஊட‌க‌த்துறை செய‌லால‌ர் முதுவை ஹிதாயத் , செய‌லாள‌ர் ( உறுப்பின‌ர் சேர்க்கை ) கீழை ஹ‌மீது யாசின் மற்றும் அனைத்து முஸ்லிம் லீக் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த நல்ல தலைமையை பயன்படுத்தி நாம் அனைவரும் அரசியல் ரீதியாக ஒன்று படவேண்டுமே தவிர ,தவறான தகவல்களை நம்பி ஏமாறாமல் இருக்க வென்றும் இதன் மூலம் அணைத்து சமுதாய நலன் கொண்ட சகோதரர்களுக்கும் அன்புடன்
தெரிவித்து கொள்கிறேன்.

என்றும் அன்புடன் ....
துபைலிருந்து
ஷா .ரியாஸ் அஹ்மத் மரைக்காய‌ர்
பரங்கிபேட்டை