ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..(தேர்தல் ஜுரம் பகுதி-3)
சுலைமான் பாய்: என்ன காக்கா மம கட்சி இப்போ 4வது அணிதொடங்கி உள்ளதமே!
ஆடுதுறை காக்கா: ஆமா பாய்! நானும் பார்த்தேன், தினமலரை தினமலம் என்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான பத்திரிகை, தினமலரை எந்த ஒரு இஸ்லாமியனும் வாங்க கூடாது என்று சொன்ன தமுமுக இப்போது மம கட்சியாக மாறிய பின் தினமலர் மட்டும் தான் இவர்களை பற்றி செய்தி போடுகிறது என்ற நன்றி கடனில் தினமலர் கட்டிங்கேயே எடுத்து தமுமுக வெப்ஸைட்டில் போடுகிறார்கள் இப்போ?
சுலைமான் பாய்: நானும் தினமலர் படித்தேன் அதில் தமுமுக அமைப்பு மம கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது என்று செய்தி போட்டுள்ளார்களே அப்போ தமுமுக அமைப்பு இப்ப இல்லையா காக்கா?
ஆடுதுறை காக்கா: தமுமுக அமைப்பு விதி 2- கொள்கை மற்றும் நோக்க விதிப்படி அரசியலில் எந்த தேர்தல்களiலும் பங்கு கொள்ள கூடாது. அத்துடன் தேர்தல் விதிகளiல் படி தமுமுக அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள் அதாவது தமுமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும்.
சுலைமான் பாய்: அப்ப தமுமுக அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பு தலைவர் பொது செயலாளர் தேர்தலில் போட்டி போடுகிறார்களே, தமுமுக அமைப்பு தேர்தல் விதியின் படி தலைவர், பொது செயலாளர் பொறுப்பு தானாகவே ரத்தாகிவிடுமா?
ஆடுதுறை காக்கா: இந்த விதியை கருத்தில் கொண்டு தான் மம கட்சிக்கு தனிபொது செயலாளர் என்று அறிவித்தார்கள் அவருக்கு அன்று தொப்பி மாற்றி விட்டதோடு சரி அவரை எதுவும் கண்டு கொள்வதில்லை பாய், தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு பதவி ஆசை விடுமா என்ன? வாரிய பதவியும் போய்விட்டதே உடனே வெட்கமில்லாமல் தலைவரும், பொது செயலாளரும் தேர்தலில் நிற்கிறோம் என்று அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள் மம கட்சியின் பொது செயலாளர் சமது இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை பாவம் சமது. ஒருவேளை இந்த தேர்தலில் சும்ம போட்டி போடுவோம் நாம் நிச்சயம் வெற்றி பெற போவதில்லை. ஒருவேளை அடிமட்டத்தில் உள்ள ஒரு உஷாரான தொண்டனான கண்மணி அல்லது சொந்தம் தமுமுக அமைப்பு விதி கொள்கை பற்றி கேட்டால் நாம் நம்ம தான் தேர்தலில் போட்டி போட்டோம் எந்த பதவியும் தான் வரவில்லையே என்று சொல்லி எப்போதும் போல் மழுப்பல் பதில் தான் இவர்களiடமிருந்து வரும்.
சுலைமான் பாய்: என்ன காக்கா தமுமுக அமைப்பு விதி கூட்டுறவு சங்க பதவியில் கூட இருக்க கூடாது என்று சொல்லுது ஆனால் இத்தனை நாள் எப்படி தமுமுக பொது செயலாளர் வாரிய அரசு பதவியை வகித்தார்
ஆடுதுறை காக்கா: உங்களுக்கு எனக்கும் தான் இயக்க விதிகளiன் முழுமை தெரியும் அப்பாவி கண்மணிகளுக்கும், சொந்தங்களுக்கும் அடிப்படை விதி கொள்கை மற்ற எழவுகள் எல்லாம் தெரியாது மாநில நிர்வாகிகள் சொல்வது தான் சட்டம் விதி எல்லாம் இதை யார் கேட்பது கேட்டால் மறுநாள் தமுமுக பக்கம் தலை வைத்து படுக்க முடியாது
சுலைமான் பாய்: அப்ப தமுமுக நிர்வாகிகளுக்கு பதவி தான் முக்கியம் சமுதாய கவலை இல்லை என்று சொல்லுங்கள் காக்கா!
ஆடுதுறை காக்கா: என்ன பாய்! இதை நான் தான் சொல்லனுமா இது உலகம் அறிந்த உண்மை தானே, கோடி கணக்கில் பணம் சேர்த்து வங்கி இருப்பு பட்டியலை திமுக, அதிமுக என்று காட்டி வருகிறர்களே இந்த பணம் எல்லாம் அவர்களiன் குடும்ப சொத்தா என்ன? இல்லை பட்டான் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தா? எல்லாம் நம்மை போன்றவர்களiடம் வசுல் வேட்டையில் கிடைத்த தொகை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கிறோம் என்று இவர்களiன் தொப்பையை நிரப்பி கொண்டார்கள்.
சுலைமான் பாய்: இவர்கள் எப்படி காக்கா சமுதாயத்திற்கு பலனை கொண்டு வர போகிறார்கள். வெட்கம் மானம் கேட்டவர்கள். பதவிக்கு இப்படி அலைகிறார்களே ஆனால் தன்மானம் என்று வேறு வரட்டு பேசுகளை பாருங்களேன்.
ஆடுதுறை காக்கா: அரசியேலே வேண்டாம், ஒரு சில சீட் வாங்கி தேர்தலில் வெற்றி பெற்று நம் சமுதாயத்திற்கு எந்த பலனும் வராது என்று வேதம் ஒதியவர் தான் இந்த தமுமுக தலைவர், பதவியே விரும்பதவர்கள் இவர்கள் ஆனால் சமுதாய கவலை இப்போது திடீர் என்று வந்துவிட்டது. ஏகத்துவம் பேசினார்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த பணத்தில் பங்கு பிரிப்பதில் வம்பு செய்து கொண்டார்கள், நிவார நிதி சேகரித்தார்கள் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை, இப்படியே மக்களை ஒருநிலையில் வழி தவற செய்து தங்கள் சுயநலத்தில் தான் பெரிய அக்கறையுடன் நடத்து கொண்டு வருகிறார்கள். இரண்டு சீட் கொடுத்தால் திமுகவிற்கு நல்ல சிறப்பான சான்றிதழ் கொடுப்பார்கள். ராமதாஸ் மதுவிலக்கு பேசியபோது இந்த தமுமுக மூச்சு விடவில்லை. காரணம் வாரிய பதவியை தக்கவைத்து கொள்ள திமுகவிற்கு ஜால்ரா அடித்து கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுகிறார்கள் ஒரு முஸ்லிம் கூட திமுக நிறுத்தவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். எத்தனை நாள் சிகப்பு விளக்கு காரியில் பவனிவந்த சமயத்தில் இது எல்லாம் தெரியாமல் போய்விட்டது
சுலைமான் பாய்: காக்கா நீங்கள் எல்லாம் தௌiவாக சொல்லுகிறீங்க ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம், தினமலர் செய்தியின் படி தமுமுக இப்போது இல்லை மம கட்சியாக மாறி விட்டது என்றால் தமுமுக இல்லை இப்போது மம கட்சி மட்டும் தான் சொல்ல வருகிறீங்களா?
ஆடுதுறை காக்கா: அப்படி தான் பாய், தமுமுக விதிப்படி அரசியல் பொது பதவியில் இருக்க கூடாது. மம கட்சி என்றால் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் அல்லவா?
-ஆடுதுறையான்