Friday, April 3, 2009

ஆடுதுறை காகாவும், சுலைமானும்...

சுலைமான் பாய்: த‌மிழக அரசியலின் போக்கை இன்று(4/4/2009) மாற்றியமைக்கும் என ம.ம.க.வின் உயர்நிலை குழு ஒரு வாரம இரவு பகல் சமுதாயத்திற்காக கண்விழித்து பேசி பேசி ஓரு வ்ழியா சமுதாய தன்மானம் காக்க இன்னைக்கு அறிவிப்பு வ்ந்துட்டு காகா !

ஆடுதுறை காகா: அப்படியா பாய்! தமிழக அரசியல் தலைவ்ர்களூக்கு ஆபத்துன்னு சொல்லுங்க!

சுலைமான் பாய்:ஆமா காகா ! 6+1 என்ற வீராப்பு அறிக்கை போய் 2+1 கதையாகி, சொந்தங்களே !
(இடைமறித்து ஆடுதுறை காகா)

ஆடுதுறை காகா:என்ன அது சொந்தங்களேவா?

சுலைமான் பாய்: கொஞ்சம் இருங்க காகா! விசயத்து வ‌ருரத்துகுள்ள! அதுவா நம்ம ஊர் திராவிட கட்சி தொண்டர்களை "உடன்பிறப்புகளே!" "ரத்தத்தின் ரத்தமே!" சொல்லுரமாரி நம்ம ம.ம.க தொண்டர்களை சொந்தங்களே ! என்று புது டாயலாக் சொல்லி பாசத்தை கொட்டுராங்க காகா! சரி விசயத்துக்கு வ்ரேன்.

எங்கே விட்டேன் ம்மஆ..2+1 கதையாகி 28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை (எந்த திங்கட்கிழமை ???? )அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி சொந்தங்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள் என்ப‌து அறிக்கை மேல் அறிக்கை வந்து வெளியாகி கொண்டே இருந்த‌து.

ஆடுதுறை காகா: இன்று (28.03.09) தான் தி.மு.க‌ கூட்டாணி ப‌ங்கீடு முடிந்து அறிவிப்பு வ‌ந்துடே பாய்?

சுலைமான் பாய்:தி.மு.க‌ க‌டைசி வ்ரை ஒன்றும் சொல்ல‌வில்லை என்ற‌ க‌டுப்பில் அ.தி.மு.க‌ / காங்கிர‌சஸ் என்று ம.ம.க தூது புறாக்க‌ள் அனுப்ப தொட‌ங்கிடுச்சி!
ஆடுதுறை காகா:அப்புற‌ம்மென்ன‌ ஆச்சி!

சுலைமான் பாய்:சுலைமான் பாய்:தொடர்ந்து ம.ம.க.வின் உயர்நிலை குழு ஒரு வாரம இரவு பகல் யோசித்து போர் அடிக்க‌வே ம.ம.க.வின் உயர்நிலை குழு த‌மிழக அரசியலை விட்டுவிட்டு கேரளா ப‌க்கம் போயிட்டாங்க‌! அத‌ற்கு பிற‌கு

இப்ப‌த்தான் 40+5 என்ற‌ க‌ண‌க்கில் அறிவிப்பு வ‌ர‌ போகுது இன்னைக்கு..

ஆடுதுறை காகா:அப்ப‌ 40 தொகுதியை ம‌.ம‌.க‌ கைப்ப‌ற்றி த‌மிழக அரசியல் த‌லைவர்களை எல்லாம் நாடு கட‌த்த‌ வேண்டும் என்று நாடாளும‌ன்ற‌த்தில் தீர்மான‌ம் கொண்டு வ‌ந்துடுவாங்க‌!
சுலைமான் பாய்: காகா இதுதான் ஆடுதுறை குஷ்ம்பா????

‍‍-ஆடுதுறையான்!

qmfuae@gmail.com