Thursday, April 9, 2009

முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

இன்றைய அரசியல் பிரிவுகளுக்கிடைய லீக் ஏணி சின்னத்தில் போட்டி போட்டால் நிச்சியம் எதிர்மறையாக போய்விடும். காரணம் அடிமட்ட மக்கள் ஏணி சின்னம் அவ்வளவு தெரியாது எனவே கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டி போடுவது தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.
லீக் போட்டி போடும் தொகுதில் 15 முதல் 20 சதவீதம் தான் முஸ்லிம்கள் உள்ளனர், 60 சதவீதம் சகோதர சமுதாய இந்து மக்களும், 20 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். தன்மானம் பேசி திரிபவர்களiன் விமர்சனத்திற்காக நாம் நமது வெற்றி வாய்ப்பை இழக்க கூடாது. இவர்கள் அரசியலில் இப்போது தான் குழந்தை பருவத்தில் உள்ளார்கள். அதனால் தான் சிறுபிள்ளை தனமாகவே அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்து 60 வருட கட்சி நடத்தும் முஸ்லிம் லீக் தனிசின்னத்தில் போட்டி போடவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களiன் வாதம் எந்த அளவிற்கு தவறானது என்பது நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும் இன்றைய கால கட்டத்திற்கு சரியாக வாரது. தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் உள்ளனர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் இல்லை.

நம்மிடம் உள்ள கயவர்கள் போட்ட வழக்கும் எந்த எதிர்ப்பும் கொடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பும் லீக் கட்சிக்கு சார்பாகவே தான் வந்தது. எனவே இந்த தனிசின்னம் என்ற பேச்சு பிறகு சட்டசபை தேர்தல் போது வெள்ளோட்டம் பார்க்கலாம். பல பரிட்சை பார்க்க இதுவல்ல நேரம். ஏணிசின்னம் வேண்டுமானல் கேரளாவில் நன்றாக தெரியும் இங்கு தமிழகத்தில் அப்படி அல்ல. எனவே ஏணி சின்னம் என்று போட்டி போட்டால் அது சுயேச்சை வேட்பாளர் என மக்களுக்கு தோன்றும், இதை பிரபலப்படுத்துவது என்பது வெகு சிரமம். எனவே உதய சு>ரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட தொண்டர்களiன் கவலை.

--ஆடுதுறையான்