Thursday, January 29, 2009

மும்பை தாக்குதல் சம்பவம்: குற்றவாளிகளை தண்டிப்பது உலக மக்களின் தார்மிகக் கடமை- மத்திய அமைச்சர் இ.அகமது

மும்பை தாக்குதல் சம்பவம்: குற்றவாளிகளை தண்டிப்பது உலக மக்களின் தார்மிகக் கடமை- மத்திய அமைச்சர் இ.அகமது

அலிகார் (உத்தரப் பிரதேசம்), ஜன. 27: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது சர்வதேச சமுதாயத்தின் தார்மிகக் கடமை என்று மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது வலியுறுத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக உள்ள அகமது, அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பேசியது:

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உலகில் எந்த நாடும் அடைக்கலம் தராது; தரக்கூடாது. மும்பையில் மனிதாபிமானத்துக்கு எதிராக நடந்த தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டே தீரவேண்டும். இது சர்வதேச சமுதாயத்தின் தார்மிகக் கடமை.

அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாமியத்தை கடைபிடிப்போர் இதை ஏற்றுக்கொள்வர். அப்பாவி மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்காது.

இஸ்லாம் சமுதாயத்தினர் மீதான நற்பெயரைக் கெடுக்க நாட்டில் சில பிரிவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அரசியல் லாபத்துக்காக அவர்கள் இதைச் செய்கின்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கை அவர்கள் உணரவேண்டும். போராடிய சுதந்திரத்தை பாதுகாப்பதில் முஸ்லிம்களுக்கும் பங்கு உண்டு என்றார்.

http://www.dinamani.com/news.asp?ID=DNH20090127121118&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls+%2D+No+Title&Title=Headlines

Monday, January 26, 2009

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு: ஜமாஅத்துகளிடம் எதிர்பார்க்கப்படும் விபரங்கள்!



ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள - தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தரப்பட வேண்டிய விபரங்கள் குறித்து தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-

ஜனவரி 31இல் சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் செயல்திட்டங்கள் வகுப்பதற்காக, பள்ளி வாசல், ஜமாஅத் அமைப்புகளும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை அனுப்பித் தர வேண்டுகிறோம்.

1. பள்ளிவாசல்களை கட்டுவதற்கு விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விவரங்கள்.

2. கபரஸ்தான் இல்லாத இடங்களுக்கு கபரஸ்தான் வசதி வேண்டி மனு செய்யப்பட்டும் கிடைக்காத விபரங்கள்.

3. கபரஸ்தான்களுக்கு பட்டா கிடைக்காத விபரம்

4. புதுப்பிக்கப்பட வேண்டிய மிகவும் பழுதடைந்த, வசதி வாய்ப்பற்ற பள்ளிவாசல்கள் விவரங்கள்.

5. இமாம்கள், முஅத்தீன்கள் இல்லாத பள்ளிவாசல்கள், விவரங்கள்.

6. மதரஸா இல்லாத ஊர்களின் விவரம்.

7. பள்ளிவாசல் நிர்வாகங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள விவரங்கள்.

8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வஃக்பு சொத்துக்கள் பற்றிய விவரங்கள்

9. வஃக்பு வாரிய தலைமையால் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்களின் விவரங்கள்.

தகவல் அனுப்பித் தரவேண்டிய முகவரி:-
மஹல்லா ஜமாஅத் மாநாடு வரவேற்புக்குழு,
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம்,
காயிதெ மில்லத் மன்ஸில்,
36, மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை - 1.
செல் : 9840622809, ஃ, 9790740787
போன் :, 25218786, ஃபேக்ஸ் : 044-25217786

இவ்வாறு அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

பிப்.1இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!



தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றிகிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸவாவுத்தீன் அய்ய+ப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,

தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

Thursday, January 22, 2009

முஹ‌ல்லா ஜ‌மாஅத் அவ‌சிய‌ம் குறித்து வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில் உரை

முஹ‌ல்லா ஜ‌மாஅத் அவ‌சிய‌ம் குறித்து வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில் உரை

த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம் வ‌ழ‌ங்கும் பிறைமேடை நிக‌ழ்ச்சி வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில் வார‌ந்தோறும் வெள்ளிக்கிழ‌மை இர‌வு 11 ம‌ணி முத‌ல் 11.30 ம‌ணி வ‌ரை ஒளிப‌ர‌ப்பாகிற‌து.
23.01.2009 வெள்ளிக்கிழ‌மை நிக‌ழ்ச்சியில் இந்திய‌ன் யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ மார்க்க‌ அணி செய‌லாள‌ர் த‌ள‌ப‌தி ஷ‌பீகுர் ர‌ஹ்மான் ம‌ன்ப‌ஈ ( 9787280133 ), மாநில‌ ஆலிம் அணி அமைப்பாள‌ர் மௌல‌வி என். ஹாமித் ப‌க்ரி ( 9840626306 ) ஆகியோர் முஹ‌ல்லா ஜ‌மாஅத்தின் அவ‌சிய‌ம் குறித்து உரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

இந்நிக‌ழ்ச்சி குறித்து த‌ங்க‌ள‌து த‌ங்க‌ள‌து க‌ருத்துக்க‌ளை எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம்
காயிதெ மில்ல‌த் ம‌ன்ஸில்
36 ம‌ரைக்காய‌ர் லெப்பை தெரு
ம‌ண்ண‌டி
சென்னை 600 001

மின்ன‌ஞ்ச‌ல் : info@muslimleaguetn.com
www.muslimleaguetn.com

முகவை தென்மண்டல மாநாட்டில் சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் அணிவகுக்க ஏற்பாடுகள்! களைகட்டுகிறது முகவை!!

முகவை தென்மண்டல மாநாட்டில் சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் அணிவகுக்க ஏற்பாடுகள்! களைகட்டுகிறது முகவை!!



வரும் ஜனவரி 24, சனிக்கிழமை இராமநாதபுரத்தில் நடைபெறும் தென்மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் லீக் தொண்டர்கள் இராமநாதபுரத்திற்கு வருகை தரவள்ளனர். மாநாட்டின் சிறப்பம்சமாக, சீருடையணிந்த பிறைக்கொடி வீரர்கள் சிங்க நடையில் அணிவகுக்கின்றனர்.

தென்மண்டல மாநாடு:
இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இராமநாதபுரத்தில் நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில், பெரியகுளம் தியாகி அப்துல் ரஹ்மான் நினைவு மேடையில் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகல் 11.30 மணிக்கு அதே மேடையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. முகவை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ்.சவுக்கத் அலி தலைமையில், மாவட்ட துணைத்தலைவர்கள் வரிசை முஹம்மது, ஏ.பி.சீனி அலியார், ஏ.கமருஜ்ஜமான் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், மாநில செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், கவிஞர் நாகூர் ஜபருல்லா, நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், ஆலிம்கள் அணி அமைப்பாளர் மௌலானா ஹாமித் பக்ரீ ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

பிறைக்கொடி பேரணி:
பிற்பகல் 3 மணிக்கு இராமநாதபுரம் சின்னக்கடை பாசிப்பட்டறை தெரு கே.கே.எஸ்.ஏ.பஜ்ருதீன் நினைவு திடலிலிருந்து சீருடையணிந்த முஸ்லிம் லீக் வீரர்களின் மாபெரும் பிறைக்கொடி பேரணி நடைபெறுகிறது. மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் ஏ.அப்துல் ரவூஃப் துவக்கி வைக்கும் இப்பேரணிக்கு நெல்லை மாவட்ட செயலாளர் டி.இ.செய்யது முகம்மது தலைமை ஏற்கிறார். ஒன்பது மாவட்டங்களின் பொருளாளர்களும், முகவை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், எம்.எஸ்.எஃப். அமைப்பாளர் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைக்கின்றனர்.

மாநாடு நிறைவு விழா:
மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் அமைந்துள்ள எம்.எஸ்.அப்துர்ரஹீம் நுழைவு வாயிலில், பனைக்குளம் முபாரக் ஆலிம் நினைவு மேடையில் மாநாடு நிறைவு விழா நடைபெறுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமை ஏற்கிறார்.

தென்மண்டல 9 மாவட்டங்களின் தலைவர்களும் கவுரவ புரவலர்கள் மெஜஸ்டிக் கரீம் காக்கா, எஸ்.எம்.சேக் நூர்தீன், சித்தார்கோட்டை தஸ்தகீர், மாநில துணைத் தலைவர் எஸ்.கோதர் முகைதீன் (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தென்மண்டல மாநாடு மேலிட பார்வையாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் வரவேற்று பேசுகிறார்.

மாநில தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி.ஜீவகிரிதரன் மற்றும் தென் மண்டல மாவட்டங்களின் செயலாளர்கள் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

சிறப்புரை:
கேரள மாநில முஸ்லிம் லீக் தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ரண்டதாணீ எம்.எல்.ஏ., தமிழக அமைச்சர்கள் சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஹஸன் அலி, முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், எச்.அப்துல் பாஸித், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், பவானி இராஜேந்திரன் எம்.பி., காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் துபை எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

இம்மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம் லீக் தொண்டர்கள் இராமநாதபுரம் வருகை தருகின்றனர். பிறைக்கொடி தோரணங்கள், அலங்கார பதாதைகளால் இராமநாதபுரம் களைகட்டியுள்ளது.

இம்மாநாடு தென்மாவட்டங்களின் முஸ்லிம் லீகில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, January 18, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம்

அரவக்குறிச்சி, ஜன. 17: கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் எம்.ஏ.மஹபூப்அலி தலைமை வகித்தார்.

அவசரக் கூட்டம் குறித்து அரவக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.ஏ.கலிலூர் ரகுமான் பேசினார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட தலைவர் டி.எம்.எ. முபாரக்பாஷா உலவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், மறைந்த தேசிய தலைவர் முஜாஹிதே மில்லத் ஜிஎம் பனாத்வாலா சாகிப் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஜன. 31 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு எல்லா பள்ளிவாசல் முத்தவல்லி மற்றும் உலமா பெருமக்கள், பொது நல அமைப்பு பொறுப்பாளர்கள், பைத்துல்மால் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தின் சார்பில் அழைப்பு விடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மௌவி அப்துல்ரஹ்மான், எ.ஏ.அப்துல் ஜமது, கலிலூர்ரகுமான், அப்துல்கபூர், கே.எம்.முகமது சரீப், இப்ராஹீம், கே.ஏ.ஷாகுல்அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, January 10, 2009

நெல்லை வரும் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், செயலாளருக்கு உற்சாக வரவேற்பு: மாவட்டக் கூட்டத்தில் முடிவு!

நெல்லை வரும் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், செயலாளருக்கு உற்சாக வரவேற்பு: மாவட்டக் கூட்டத்தில் முடிவு!

http://www.muslimleaguetn.com/news.asp?id=516


நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் 03.01.09 அன்று மாவட்ட அலுவலக வளாகத்தில் அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா தலைமையில் நடந்தது.

மாவட்ட துணைத் தலைவர்கள் பாம்புக்கோயில் ஹாஜி வி.ஏ. செய்யதுபட்டாணி, கடையநல்லூர் ஏ.இ. அப்துல் காதர், ஏர்வாடி பீர்முகம்மது, நெல்லை பேட்டை வீ.ம.திவான் மைதீன், ரவணசமுத்திரம் ஆர்.எம். ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், புளியங்குடி ஜப்பான் கே. உதுமான், கடையநல்லூர் முகம்மது அலி, பாம்புக் கோவில் வி.ஏ.எஸ். செய்யது இப்றாஹீம், கவிஞர் வீரை ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ஷிப்லி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர் ஆகியோர் பேசினார்கள்.

சமீபத்தில் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் முன்னிலையில் இந்திய தேசிய லீகிலிருந்து விலகி தாய்ச்சபையில் இணைந்த மேலப்பாளையம் ஜே. ஷாகுல் ஹமீதுக்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பை மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.எஸ். துராப்ஷா பொதுக்குழு வில் அறிவித்தார் அதை பொதுக் குழு அங்கீகரித்தது.

மேலும், வருகிற 18ந் தேதி ஞாயிறு திருநெல்வேலி மாவட்டம் வருகை தரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது,தேசிய பொதுச் செயலாளரும் தமிழ் நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., ஆகியோருக்கு தென்காசி ரயில் நிலையத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்று காலை 10.மணிக்கு தென்காசி அல்ஹிதாயா பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவன புதிய கட்டிட திறப்புவிழா நடைபெறுகிறது, கட்டிடத்தை திறந்து வைத்து தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

அன்று மாலை 6.மணிக்கு கடையநல்லூர் நகர முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது, இரவு 7 மணிக்கு புளியங்குடி மேலத் தைக்கா திடலில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர், தேசிய பொதுச்செயலாளர், மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்டம் முழுவதிலிருந்து திரளாக கலந்துகொள்வது என்றும். ராமநாதபுரத்தில் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் தென்மண்டல முஸ்லிம் லீக் மாநாட்டில் நெல்லை மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முதலியார்பட்டி எம். பஸ்லுர் ரஹ்மான், வி.கே.புரம், கானகத்தி மீரான், கடையநல்லூர் எஸ்.எ. ஹைதர் அலி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹிம் ஆலிம், திருநெல்வேலி நகர தலைவர் பி.எஸ். காதர் மஸ்தான், செயலாளர் எம்.ஏ. முகம்மது இப்ராகீம், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், கடையநல்லூர் நகர தலைவர் இ.ஏ. முகம்மது காசிம், வீரவநல்லூர் நகரச் செயலாளர் அ.ஷேகு ஒலி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்டச் செயலாளர் செய்யது முகம்மது நன்றிகூற, வீரவநல்லூர் ஷேக் மீறான் ஆலிம் துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: படுகொலைக் களமாகும் பலஸ்தீனம்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=514

மன்சூரா அபு அம்ரா அமைதியாக தன் வீட்டினிலே உறங்கிக் கொண்டிருந்த 18-வயது இளம் பெண்- மருத்துவமனை கட்டிலில் உடலெங்கும் காயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவளுடைய 17-வயது சகோதரன் எஹியா உயிரற்ற பிணமாக கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டான்.

உம்மு மஹ்மூது தஸ்பி 47 வயதான தாய்-தன் குழந்தையுடன் இரவு முழுவதும் வெட்ட வெளியில், கொட்டும் மழையில் தவித்து நின்றாள். காலையில் தன் வீடு முழுவதும் சிதறிக் கிடந்த சன்னல் கண்ணாடித் துண்டுகளை பெருக்கித் தள்ளுகிறாள்.

உரூத்- பள்ளி மாணவி குப்பைக் குவியலாய் கிடக்கும் தன் வீட்டின் இடிபாடுகளில் தன் புத்தகப்பையைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.

டிசம்பர் மாதத்தின் பனிக்கால பண்டிகை கொண்டாட்டங்களில் உலகமே திளைத்திருக்கிறது. ஹகிறிஸ்துமஸ் தாத்தா|-வின் பரிசு மழை தேவலோகத் திலிருந்து பொழியாதா என உலக மக்கள் ஆர்வத்துடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், பாலஸ்தீனக் குழந்தைகள் எந்த நேரம் வானத்திலிருந்து போர் விமானங்கள் அள்ளி இறைக்கும் குண்டுகள் வந்து தம் வீட்டை சாம்பல் மேடாக்கு மோ என்ற அச்சத்துடன், இரவு முழுவதும் அந்த கறுப்பு வானத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஏவல் நாய் இஸ்ரேல் டிசம்பர் 28ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரை போர் விமானங்கள், ஏவுகனைகள் மூலம் தாக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1000 இலக்குகளை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், மிகத் துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஜி.பி.எஸ். வசதி படைத்த விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இஸ்ரேலின் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், என்ற பாரபட்சமின்றி, இரவிலே வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் வீட்டைவிட்டு ஓடவேண்டும். இல்லையெனில் வீட்டோடு சமாதியாக்கப்படுவார்கள் என்ற நிலையில் காசா நகர மக்கள், எந்த நேரத்தில் ஏவுகனை தன் வீட்டின் மீது பாயுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். தங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மாற்று இடமும் இல்லை என்பதால் வெளியேறவும் முடியாத நிலை.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் ஜபாலியா அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். புத்தாண்டு தினத்தன்று அவருடைய குடியிருப்பையும் திட்டமிட்டு தாக்கின. இஸ்ரேல் ஏவுகனைகள். இதில் ரய்யான் தன் மனைவி, குழந்தைகளோடு கொல்லப்பட்டார். காசா நகரின் பாராளுமன்ற கட்டிடம், இராணுவ நிலைகள், போலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. காசா நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வழிகள் முழுவதும் தகர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் கேடுகெட்ட இனப்படுகொலையை தட்டிக்கேட்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்மையில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹஹஅனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்|| என அறிவுரை கூறியுள்ளது. இந்த அறிக்கை-பாலஸ்தீன குழந்தைகள் பயிலும் கல்விக் கூடங்களின் மீது விழும் ஏவுகனைகளை தடுத்து நிறுத்துமா?

காசா நகரில் வருங்கால பாலஸ்தீன சந்ததிகளே இல்லாதொழிந்திடும் ஈனச் சதியில் இஸ்ரேல் இறங் கியுள்ளது. இளம் குழந்தைகள் பயிலும் நர்சரிகள், பள்ளி கள் மேல் குண்டுகள் வீசப்படுவது அங்கே மிகவும் சகஜம். இது குறித்து ஹஹமனித உரிமை|| முழக்கமிடும் அமெரிக்காவோ அதன் துதிபாடிகளான மேற்கத்திய நாடுகளோ ய+னிசெப் நிறுவனமோ இதுவரை வாய் திறந்ததில்லை. காசா நகர குழந்தைகள் உலகின் மற்ற குழந்தைகள் பெற்றுள்ள ஹஹவாழும் உரிமை|| இல்லாதவர்களாகவே உள்ளனர். காசா நகர குழந்தைகள் பிறக்கும்போதே ஹஹமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக|| பிறக்கின்றனர். என்றைக்கு மரண தண்டனையை இஸ்ரேல் நிறை வேற்றுமோ? என ஏவுகனைத் தாக்குதலை எதிர்பார்த்தே வாழ்கின்றனர், வளர்கின்றனர்.

இவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போல என்ஜினியர் ஆகவேண்டும், டாக்டர் ஆக வேண்டும், பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கிடையாது உயிரோடு வாழவேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை! ஈத் பெருநாளிலே தனக்கு அப்பா நல்ல சட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும்,, பரிசுப் பொருள் வாங்கித் தரவேண்டும் என பாலஸ்தீனக் குழந்தை ஆசைப்படுவதில்லை அந்த பெருநாளிலாவது நம் மேல் ஏவுகணைகள் பாயாமல் இருக்க வேண்டுமே என்றுதான் பிரார்த்திக்கின்றது.

இஸ்ரேலின் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக் கிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அங்கே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் முக்கிய அரசியல் வாதிகள் ஒன்று கூடி முடிவெடுத்தது தான் இப்போது நடந்து கொண்டிருக்கு காசா நகரத்தின் மீதான தாக்குதல் என சொல்லப்படுகிறது. கதிமா கட்சியின் தலைவியும், இஸ்ரேல் வெளிவிவகாரத் துறை அமைச்சருமான டிசிப்பி லிவினி மற்றும் லேபர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான எஹ{த் பராக் ஆகிய இருவரின் தேர்தல் சதித்திட்டம் தான் இந்த தாக்குதல். ஊழல் புகாரில் சிக்கியுள்ள இஸ் ரேல் பிரதமர் எஹ{த் ஒல்மர்ட் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மக்கள் மத்தியில் தன் செல் வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டி இத் தாக்குதலுக்கு அனுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இஸ்ரேலை ஆளும் அரசியல்வாதிகள் பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து தங்களின் தேச பக்தியை தம் நாட்டு மக்களிடம் நிரூபிப்பது வழக்கம். இம்முறை நடக்கும், தாக்குதலும் இந்த ஈனத்தனமான அரசியல் வாதிகளின் செய்கைதான் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

தன் ஏவல் நாய் இஸ்ரேல் நடத்தும் இந்த கொடூரமான, நியாயமற்ற, காட்டு மிராண்டி தாக்குதலை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகனைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா இத்தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஈராக் மீதான போர், இஸ்ரேலுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் என பல்வேறு நடவடிக்கைகளால், அரபு நாடுகளில் ஜார்ஜ் புஷ் தன் செல்வாக்கை தொலைத்து விட்டார்.

புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாரக் ஒபாமா இதிலிருந்து மாறுபட்டிருப்பார் என அரபு நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. ஹஹஇந்த நேரத்தில் ஒபாமாவின் மௌனம் அவர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அர்த்தமளிக்கும்|| என்கிறார் ஹகான்ப் பிளிக்ட்ஸ் போரம்| என்ற அமைப்பைச் சேர்ந்த பால் வுட்வேர்ட். இவருடைய இந்த அமைப்பு ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அமைப்பு களைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் தவறான கணிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாகும். கெய்ரோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முஸ்தபா அல் சயீத் கூறுகையில் ஹஹஒபாமாவைச் சுற்றி உள்ள நபர்கள் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் எந்த நிலையிலும் அவர்கள் இஸ்ரேலின் கருத்துக்கு மாற்று சொல்ல துணிய மாட் டார்கள்|| எனக் கூறுகிறார். தற்போது பாரக் ஒபாமா தன் வெளி விவகார கொள்கையை தீர்மானிக்கும் குழுவில் ஹிலாரி கிளின்டனை அமைச்சராகவும், ராஹ்ம் இம்மானுவேலை முதன்மை செயலாளராகவும் தெரிவு செய்திருப்பதை சுட்டிக் காட்டியே இதைக் கூறுகிறார்.

வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும் வீரம் விளைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் தம் வேறுபாடுகளை புறம்தள்ளி ஒன்றுபட்டு எழுந்து நின்றால் உலகமே அவர்களின் பின்னால் நிற்கும். சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவிற்கும் அதன் அடியாட்களுக்கும் முடிவு கட்டும் பயங்கரவாதம்-மனித குல நாகரிகத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை எதிர்த்து மனித நேய போராட்டத்தில் நாமும் கரம் இணைப்போம். பாலஸ்தீனம் காக்க குரல் கொடுப்போம். ஒரு நாடும், இனமும் அழியாமல் காப்போம். பாலஸ்தீன பாலகர்களின் உயிர் காப்போம்.

-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

Thursday, January 8, 2009

முஸ்லிம் லீக்கின் பிறைமேடை நிக‌ழ்ச்சி வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில்

முஸ்லிம் லீக்கின் பிறைமேடை நிக‌ழ்ச்சி வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில்

த‌மிழ்நாடு மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌ம் வ‌ழ‌ங்கும் பிறைமேடை நிக‌ழ்ச்சி வ‌ச‌ந்த் தொலைக்காட்சியில் வார‌ந்தோறும் வெள்ளி இர‌வு 11 ம‌ணி முத‌ல் 11.30 ம‌ணி வ‌ரை ஒளிப‌ர‌ப்பாகிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ விரும்புவோர் 94869 90045 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

மின்ன‌ஞ்ச‌ல் : info@muslimleaguetn.com

Saturday, January 3, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பிரச்சாரக் குழு! பேராசிரியர் தகவல்!!

திருமங்கலம் இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பிரச்சாரக் குழு! பேராசிரியர் தகவல்!!

http://www.muslimleaguetn.com/news.asp

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரம் செய்வதற்காக தமிழக முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் பாசித், கலீலுர் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் பிரச்சாரக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுசெயலாளர் காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம், லீகின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் காயல்பட்டினத்தில் டிசம்பர் 27ல் நடந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளர் காதர் மொய்தீன் எம்.பி. தலைமை வகித்தார்.

ஷபீகுர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். தவ்ஹீத், முத்துவாப்பா ஆகியோர் அரபி கீதம் பாடினர். தலைமை நிலைய செயலாளர் முஹம்மது அப+பக்கர் வரவேற்றார். மாநில பொருளாளர் செய்யது அகமது, கலீலூர் ரஹ்மான் எம்.எல்.ஏ., அப்துல் பாசித் எம்.எல்.ஏ., மாநில செயலாளர்கள் காயல் மகப+ப், அப+பக்கர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வாவு நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காதர் மொய்தீன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்காக உழைக்க, எம்.எல்.ஏ.,க்களான அப்துல் பாசித், கலீலூர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய தேர் தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக வெற்றியில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் சோனியா ஆலோசனையில் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மேலும் தொடர ஜனநாயக சமயசார்பற்ற சமூக நீதிக்காக பாடுபடும் கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம்.

தமிழகத்தில் கலைஞர் தலைமையில் கூட்டணி அமைத்து அவரது வெற்றிக்காக பாடுபடுவோம். முஸ்லிம் லீகில் மாணவர்கள், இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தேச பற்றை வலியுறுத்த ரத்ததான முகாம் நடத்துகிறோம். மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலில் நாட்டிற்காக தியாகம் செய்த தியாக செம்மல்கள் ஆத்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடத்தினோம்.

தமிழக அரசு ப+ரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவர ஆரம்ப திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசு சார்பில் சாராய கடைகள் திறக்கப்படாது. இரவு நேர விற்பனை ஒரு மணிநேரம் குறைந்தது ஆகியவற்றை வரவேற்கிறோம். மேலும் பள்ளிகள் அருகில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும். ப+ரண மதுவிலக்கை விரைவில் அமுல்படுத்த வேண்டும்.

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. இந்திய அரசின் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. தீவிர வாதம் மனித சமுதாயத்திற்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., கலீலூர் ரஹ்மான் எம்.எல். ஏ., பொருளாளர் வடக்கு கோட்டையார், மாநில செயலாளர் காயல் மகப+ப் மற்றும் பலர் உடனிருந்தனர்.

திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம்

திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம்

விழுப்புர‌ம் அருகேயுள்ள‌ திருக்கோவிலூரில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அர‌சிய‌ல் விள‌க்க‌ பொதுக்கூட்ட‌ம் 04.01.2009 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை 5 ம‌ணிய‌ள‌வில் ஈத்கா மைதான‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

ந‌க‌ர‌ த‌லைவ‌ர் கே.ஆத‌ம் கான் த‌லைமை தாங்குகிறார். ஒன்றிய‌ செய‌லாள‌ர் சுப‌ஹான் பேக் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.ந‌க‌ர‌ துணைத்த‌லைவ‌ர் ஜ‌ம்ஷீர் பாஷா, ஓய்வு பெற்ற‌ காவ‌ல்துறைக் க‌ண்காணிப்பாள‌ர் எம். முஹ‌ம்ம‌து ஈசா, முத்த‌வ‌ல்லி சைய‌த் முஹைத்தீன், ஆல‌ம்ஷா, ஷேக் காத‌ர் உள்ளிட்டோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.

அக‌ர‌ம், குறிஞ்சிப்ப‌ட்டு உள்ளிட்ட‌ இட‌ங்க‌ளில் பிறைக்கொடியினை இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌த் தலைவ‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. ஏற்றி வைத்து சிற‌ப்புப் பேருரை நிக‌ழ்த்துகிறார்.

மாநில‌ பொதுச்செய‌லாள‌ர் டாக்ட‌ர் ஹ‌க்கீம் சைய‌த் ச‌த்தார், மாநில‌ மார்க்க‌ அணிச் செய‌லாள‌ர் த‌ள‌ப‌தி மௌல‌வி ஷ‌பீகுர் ர‌ஹ்மான் ம‌ன்ப‌யீ, விழுப்புர‌ம் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் டாக்ட‌ர் ஏ. இக்பால் பாஷா, மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஏ. அன்வ‌‌ர் பாஷா உள்ளிட்டோர் சிற‌ப்புரை நிகழ்த்துகின்ற‌ன‌ர்.

விழுப்புர‌ம் தெற்கு ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ்.சிவ‌ராஜ், எஸ். கார்த்திகேய‌ன், முன்னாள் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஆதி ச‌ங்க‌ர், திமுக‌ பிர‌முக‌ர்க‌ள் த‌ங்க‌ம், செல்வ‌ராஜ், பேரூராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ர் ஆண்டாள், பேரூராட்சி ம‌ன்ற‌ துணைத்த‌லைவ‌ர் ஜானி பாஷா, எம்.எஸ்.கே. அக்ப‌ர், ர‌ஹிமான் கான், குத்தூஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

முஸ்லிம் லீக் செய்திக‌ளை ப‌டிக்க‌

http://www.muslimleaguetn.com/