dateWed, Apr 8, 2009 at 8:41 PM
subjectஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம் (8/4/2009@7.30pm IST)-Hot News From MMK
"அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு. யாருடன் கூட்டணி என்று நாளை இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்." Source: TMMK web site
ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம்
சுலைமான் பாய்: இத்தனைநாள் முறைமுக ஆலோசனை நடத்தி திராவிட கட்சிகள் கதவை மூடிவிட்டதால், ஒருவழியாக மனிதநேய மக்கள் கட்சி திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு வந்துட்டு காக்கா
ஆடுதுறை காக்கா: சந்தோசம் அப்ப 40 தொகுதியிலும் நீங்கள் சொன்ன மாதிரியே மமக போட்டி போட போறாங்க என்று சொல்லங்க பாய்? ததஜ வேறு எதிர் போட்டி போட்டு மக்களுக்கு தமுமுக(மமக) சமுதாயத்திற்கு செய்த துரோகங்களை வெளiக்காட்டுவோம் என்று பொதுக்குழு தீர்மானம் வேறு போட்டு இருக்கே?
சுலைமான் பாய்: நம்மை விட ததஜ-க்கு தான் தமுமுக பற்றி நல்ல தெரியும், அவர்கள் எப்படி எல்லாம் காசு பன்னுறாங்க என்று, எல்லாம் பங்காளi சண்டை தான் பாய், நீங்க, நான் தான் தேவையில்லாமல் கஷ்டப்படுறோம். அவர்களுக்கு என்ன அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன். இதில் இவர்கள் என்ன விதிவிலக்கா?
ஆடுதுறை காக்கா: பாவம் தமுமுக பொது செயலாளருக்கு வாரிய பதவியை கடைசி வரை விட மனசு இல்ல, திமுக கொடுத்த ஒரு சீட்டை வாங்கி இருக்கலாம் என்று தலைவருடன் "டு" போட்டுவிட்டார், அத்துடன் சிகப்பு விளக்கு காரில் பவணிவருவது போகுதே என்ற டென்சன் வேறு ஆகிவிட்டார் பாய்.
சுலைமான் பாய்@ தன்மானம் காக்க வேண்டும் இல்லவா? சிகப்பு விளக்கு தானே மீண்டும் கிடைக்கும் 40 எம்.பி கிடைத்தும், பொது செயலாளரை அமைச்சராக ஆகிவிட்டால் போகுது.
ஆடுதுறை காக்கா: முஸ்லிம் இரண்டு எம்.பி கிடைக்க வேண்டியதை இவர்கள் போட்ட வரட்டு சண்டையால் ஒன்று என்ற நிலையாகி விட்டது. திமுக பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
சுலைமான் பாய்: தமுமுக தலைவர் தான் முன்பு கொடுத்த பேட்டியில் பெரிய கட்சி கொடுக்கும் ஒரு சில சீட்டால் சமுதாயத்திற்கு எந்த பலன் இfல்லை என்று தௌiவாக சொல்லி இருக்கிறார் அல்லவா?
ஆடுதுறை காக்கா: ஆமா பாய் அவர் வரும் முன் காக்கும் தலைவர், இப்ப நடப்பதை அப்பவே சொல்லிவிட்டார்.
சுலைமான் பாய்: காக்கா நவீன முறையில் குறி சொல்ல பேராசிரியருக்கு சான்ஸ் இருக்குக்குனு சொல்லுங்க
ஆடுதுறை காக்கா: நம்மவர்களiல் படித்த முட்டாள்கள் நிறைய இருப்பதால், இவர்களுக்கு அரசியல் செய்ய நிறைய வாய்ப்பாக போய்விட்டது.
சுலைமான் பாய்: சரி சொன்னீங்க காக்கா, நம்ம பிள்ளைகளுக்கு இவர்கள் தான் கொம்பு சீவி விட்டுவிடுகிறார்கள், கடைசியில் பாதிப்பது நம் சமுதாயம் தான்.
ஆடுதுறை காக்கா: சரியா சொன்னீங்க, இப்பவது நம் சமுதாய மக்கள் அல்லாஹுHக்கு பயந்து இவர்களை போன்றவர்களுக்கு கொடி பிடிக்காமல் இருந்தால் சரி
சுலைமான் : நாம் தான் சமுதாய இளைஞர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும்.
-ஆடுதுறையான்