Saturday, April 11, 2009

வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு



வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.

தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.

முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.

அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.

அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.