ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.