Thursday, August 26, 2010

நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்



நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்

நடப்பு நாடாளுமன்றத்தில் முப்பது முஸ்லிம் எம்.பி.,க்கள் இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பவர்கள் ஆவர். பொதுவாக நாட்டிலுள்ள எல்லா எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி Member of Parliament Local Development Fund (MPLADS) Fund ( MQLADS) என்று அழைக்கப்படுகிறது.

2009-10ம் நிதியாண்டில் நாட்டிலுள்ள முஸ்லிம் எம்.பி.க்களின் 30 லோக்சபா தொகுதிகளுக்காக மட்டும் 67கோடி ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11.3கோடி ரூபாய் மட்டுமே அதாவது 16.89 சதவீத தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவர அமைச்சகம், கொள்கை வகுப்பதற்கான அமைச் சகம் ஆகியவையே தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி, அது செலவிடப்படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் பெற்றவை ஆகும். இந்த அமைச்சகங்களில் கிடைக்கக் கூடிய புள்ளி விவரங்களின் அடிப்டையிலேயே இந்த விவரங்களை தருகிறேன்.

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுள்ள எல்லா எம்.பி.க்களும் ஆண்டுதோறும் தத்தமது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை கூறக்கூடிய அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஒரு எம்.பி.யின் ஆலோசனையின் பேரில் ஒரு தொகுதிக்கு அதிக பட்சம் இரண்டு கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் செலவிடலாம். இந்த திட்டம் 1993-ஆம் ஆண்டு ஒவ்வொரு எம்.பி.க்கும் ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம் என்ற முடிவுடன் தொடங்கப் பட்டது. பின்னர் இது 1994-95ம் நிதியாண்டு முதல் 1997-98ம் நிதியாண்டுவரை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தப் பட்டது. 1998-99ம் நிதியாண்டு முதல் இந்த நிதி இரண்டு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமுதாய கட்டமைப்பு பணிகள், குடிநீர் வழிக்கான ஏற்பாடுகள், பொது சுகாதாரம், சாலை அமைத்தல் முதலிய பணிகளுக்கும் கூட இந்த நிதி எம்.பி.யின் அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட வேண்டும். இவை மட்டுமல்ல-வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, ஆழிப்பேரலை முதலியவற்றில் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களை நீக்கி நிவாரணம் தரவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு ஹஹமில்லியன் டாலர்|| கேள்வி எழுகிறது. நம்முடைய எம்.பி.க்களுக்கு அவரவர்களுடைய தொகுதிகளில் மேற்கண்ட இனங்களில் இந்த நிதியைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா?-என்பதுதான் அந்தக் கேள்வி. ஏனென்றால், முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனையோ உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் உள்ளூர் நிர்வாகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதியும் பல இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து ஒவ்வொரு எம்.பி.யினுடைய செயல்பாடுகள் குறித்து கவனித்தபோது 30 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் (இவர்கள் எல்லாக் கட்சியையும் சேர்ந்தவர்கள்) ஒன்பதுபேர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு ரூபாயைக் கூடச் செலவிடவில்லை என்பது தெரியவருகிறது (2009-2010). இவர்களில் கடந்த மூன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பெரும் ஈடுபாடுகாட்டிப் பெயரும் புகழும் பெற்ற ஒருவரும் அடக்கம் என்பதுதான் வேதனை.

எனினும், நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையிலே இந்த விஷயத்தில் ஒருவர் நனிசிறந்த நாடாளு மன்ற உறுப்பினராக விளங்குகிறார், தம்முடைய தொகுதிக்காக அரசு ஒதுக்கிய மூன்று கோடி ரூபாயில் அதிகபட்சமாக 2.40 கோடி ரூபாயைத் தொகுதியின் நலத்திட்டப் பணிகளுக்காகச் செலவிடப் பரிந்து ரைத்துள்ளார், அதற்கேற்ப இதுவரை 2.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 1.75 கோடி ரூபாய் (அதாவது 58.33 சதவீத) செலவில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.75 கோடி ரூபாய் அடுத்தடுத்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந் துரைப்படி செலவிடப் படுவதற்காக மாவட்ட நிர்வாகத்தில் ஆயத்தமாக உள்ளது, இந்த வகையில் இன்று இவரே நாட்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்-முதன்மையாகத் திகழ்பவர்- (The best Performer of all 30 Muslim MPs ) என்றெல்லாம் கூறினால், அவர் யார்? என்று அறிய ஆர்வம் கொள்வது அனைவருக்கும் இயல்பே.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சகோதரர்களே! உங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்! அவர்தாம் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இனம் காட்டிய இன்முகச் சகோதரர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள்!
-ஏம்பல் தஜம்முல் முகம்மது

திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்



திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்
சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்றனர்

திருநெல்வேலி, ஆக.26‍

திருநெல்வேலி மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், நெல்லை ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி ஆகியவை இணைந்து இஃப்தார் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தின. இதில் சமுதாயப் பிரமுகர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு ஜும்ஆ பள்ளியில் நடை பெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகரும், ஷிபா மருத்துவமனை அதிபரு மான டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ். கோதர் முகைதீன், மாவட்ட துணைத் தலை வர் வி.எஸ். டி. சம்சுல் ஆலம், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி, முஸ்லிம் அனாதை நிலைய செய லாளர் எம். கே.எம். கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா வரவேற்றுப் பேசினார். மாநில அமைப் புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில மாணவர் அணியின் அமைப்பாளரும், மாவட் டச் செயலாளருமான எல். கே.எஸ். மீரான் முகைதீன், மேலப்பாளையம் உஸ்மா னியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லானா பி.ஏ. ஹாஜா மொய்தீன் ஹஸ ரத், எஸ்.எம்.எஸ். ஹபீப் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நெல்லை லாட்ஜ் அச துல்லா, கோஸ் கனி, கலீல், எம்.கே.எம். முஹம்மது நாசர், அப்துல் கரீம், மஹபூப் அலி, மாவட்டச்செயலாளர் கடையநல்லூர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்ட அமைப்புச் செயலாளர் கவிஞர் வீரை ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர் எம்.சி., அம்பை அமா னுல்லா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான சமுதாயப் பிரமுகர்கள் பல நூற்றுக்கணக்கான ஜமா அத்தார்கள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திருநெல் வேலி சுற்று வட்டார பிரை மரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை சந்திப்பு ஜும்ஆ பள்ளி இமாம் முஹம்மது இப்ரா ஹீம் ஹஸரத் கிராஅத் ஓதினார். பள்ளிவாசல் செயலாளர் வரிசைமைதீன் நன்றி கூறினார்.

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி


http://muslimleaguetn.com

http://mudukulathur.com



தமிழக அரசு இயற்றியுள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பாடத வகையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை விரை வில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசு வட்டாரத்தின் இந்த தகவலானது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு முதல்வர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசின் மற்றொரு ரமளான் பரிசாக அமைந்துள்ளதாக முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி தெரிவித் துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாய பதிவு செய்யப்பட வேண் டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாய பதிவு சட்டத்தை கொண்டு வந்தது.

இதற்கான சட்ட முன் வடிவு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தாக்கல் செய் யப்பட்டு 2009 ஜூலை 29ம் தேதி விவாதத்திற்கு வந்தது. சட்ட முன்வடிவில் தெரி விக்கப்பட்டிருந்த விவரங் கள் முஸ்லிம்களின் தனி யார் சட்டத்திற்கு மாற்ற மாக அமைந்திருந்ததுடன் ஷரீஅத் சட்டத்திற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்ப தாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கருத்து தெரி வித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொடர் முயற்சிகள்

அதன் அடிப்படையில், இந்த சட்ட முன்வடிவு அறி முகப்படுத்தப்பட்டபோதே இந்திய யூனிய‌ன் முஸ்லிம் லீக் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
மேலும், இது தொடர் பாக ஆலோசனைக் கூட் டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட் டில் 2009 ஜூலை 7ம் தேதி தமிழ்சாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தலை மையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னி லையில் முஸ்லிம் சமுதா யத்தின் அனைத்து அமைப் புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகை யில் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் தமிழக அரசின் இந்த சட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய அரசை கேட்டு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஜூலை 21ம் தேதி சட்டமுன்வடிவு குறித்த விவாதத்தில் பங் கேற்று பேசிய அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி ஹெச். அப்துல் பாசித் ஆகி யோர் வெட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்தனர்.

தமிழக சடட அமைச்சர் துரை முருகன் இந்த சட் டத்தின் மூலமாக முஸ்லிம் களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்று உறு தியளித்ததுடன் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய இரண்டு வருட காலம் அவகாசம் அளிக் கப்படும் என்றும் உறுதிய ளித்திருந்தார். இதனடிப் படையில் வெட்டுத் தீர்மா னங்கள் திரும்பப் பெறப் பட்டன.
இந்த சட்டம் தொடர் பாக முஸ்லிம் சமுதாயத் தில் குறிப்பாக மார்க்க அறிஞர்கள் மத்தியில் ஏற் பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தீர்மானங்கள் வாயிலாகவும் அரசுக்கு தெரிவித்து வந்தது.

முதல்வர் கலைஞர் அறிவிப்பு

கடந்த 2010 பிப்ரவரி 3ம் தேதி பேரறிஞர் அண்ணா வின் நினைவு தினத்தை யொட்டி செய்தியாளர் களுக்கு முதல்வர் கலைஞர் பேட்டியளித்தார்.

அப்போது, தமிழக அரசின் திருமண பதிவு சட்டம் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு எழுந் துள்ள சந்தேகங்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி யினை மணிச்சுடர் நிருபர் ஹமீது முதல்வர் கலைஞரி டம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் கலைஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதாக வும் இந்த சட்டத்தால் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு பாதிப்பு இருக் கிறதா என்பது குறித்து சிறுபான்மை சமுதாய அமைப்புகளின் தலைவர் களுடன் கலந்து ஆலோ சனை நடத்த உள்ளேன் என்று அறிவித்தார்.

அதன்படி, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் சிறுபான்மை சமூக அமைப்புகளின் தலைவர் களை அழைத்து இச்சட் டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள்-பிரதிநிதிகள் பலமுறை கூடி இச்சட்டத் தில் செய்யவேண்டிய திருத் தங்கள் குறித்து முன்வரைவு ஒன்றினை தயார் செய்து அரசு துறைக்கு அனுப்பினர்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.கலீலுர்ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித் ஆகியோர் சட்டத்துறை அமைச்சருடனும் பதிவுத் துறை அதிகாரிகளுடனும் இச்சட்ட திருத்தம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன்விளைவாக தமி ழக அரசின் திருமண கட் டாய பதிவு சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதற் கான அரசாணை இன்னும் ஓரிருநாளில் வெளியாகும் என்றும் அரசு வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
மற்றொரு ரமளான் பரிசு

முதல்வர் கலைஞர் தலைமையில் 5வது முறையாக தி.மு.க. அரசு ஆட்சி யமைத்ததும் முஸ்லிம் களின் நீண்ட நாள் கோரிக் கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்வர் கலைஞர் அறிவித்தார். அப்போது அது ரமளான் மாதமாக இருந்ததால் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அளித்த ரமளான் பரிசாக அதனை முஸ்லிம்கள் ஏற்று போற்றி மகிழ்ந்தனர்.

தற்போது, சிறு பான்மை முஸ்லிம் சமுதா யத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகை யில் தமிழக அரசின் திருமண கட்டாய பதிவு சட்டத்தில் உரிய திருத் தங்கள் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்படக் கூடிய நிலையும் இந்த ரமளான் மாதத்தில் உருவாகியுள்ள தால் முதல்வர் கலைஞரின் மற்றொரு ரமளான் பரிசாக முஸ்லிம்கள் இதனை கருதுகின்றனர்

முஸ்லிம் லீக் தொடர் முயற்சிக்கு வெற்றி

தமிழக அரசின் திருமண கட்டாய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்திய உடனேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது

முஸ்லிம் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.

தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை சந்தித்து முறையிட்டது.

தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த தாய்ச்சபை தொய்வின்றி தனது கடமையைச் செய்தது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணை முதல்வரை கடந்த 23-ம் தேதி சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினார்.

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., கடந்த இரண்டு மூன்று தினங் களாக தமிழக உள்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
இவைகளின் பலனாக தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப் பிக்கப்படுகிறது.

ஆரவாரம் - ஆர்ப்பாட்டமற்ற அமைதி வழியில் காரியம் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Thursday, August 19, 2010

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடுகளை அறுக்க முஸ்லிம் லீக் எதிர்ப்பு

மின்சார அதிர்ச்சி கொடுத்து ஆடு, மாடு அறுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அமைப்பான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில துணை அமைப்பாளரும், காயிதெ மில்லத் உடல் உழைப்பு தொழி லாளர் நலச்சங்க செயலாளருமான மௌலவி ஏ.ராஜா ஹுசைன் தாவூதி தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாநகராட்சி சார்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி மதுரைஅனுப்பானடியில் கடந்த வாரம் திறக் கப்பட்டுள்ளது. இங்கு ஆடுகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து அது மயங்கிய பின் ஆடுகள் அறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதனையறிந்து மதுரை ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள், 50 உலமாக்கள் நேரடியாக சென்று மாநகராட்சியின் அனுமதி பெற்று நேரில் பார்வையிட்டு செய்முறை விளக்கம் பெற்றனர்.
மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட ஆடு வாயில் நுரை தள்ளி மயங்கியது. அதை அறுத்தபோது அதிலிருந்த இரத்தம் வெளிவரவில்லை.

இதுபோன்று அறுக்கக் கூடாது எனவும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள முறைபடியே அறுக்க வேண்டும் எனவும் அவர்கள் அனைவரும் மதுரை மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.

Monday, August 16, 2010

பலஸ்தீனம் மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் ……வெ ஜீவகிரிதரன்

பலஸ்தீனம் மனித இரத்தம் குடிக்கும் எண்ணெய் கிணறுகள் ……வெ ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/

http://mudukulathur.com/?p=719


சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.

இவர்கள் இத்தாலி, அயர்லாந்து, கனடா, கிரேக்கம், துனிசியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, டென்மார்க், சைப்ரஸ், லெபனான் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள். பல்வேறு சமூக தளங்களிலிருந்து வந்தவர்கள். பல்வேறு பணிகளில் உள்ளவர்கள். 2008ம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக 17 நாடுகளைச் சேர்ந்த 44 ஆர்வலர்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் படகில் ஏறி காஸாவுக்குள்நுழைந்தனர்.

இதுபோல ஏறத்தாழ 10 முறைக்கும் மேலாக இவர்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்தனர். பலமுறை இஸ்ராயீல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாயினர். கடைசியாக கடந்த மே மாதம் இவர்களின் படகுகள்மீது இஸ்ராயீல் ராணுவம் தொடுத்த மிருகத்தனமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களெல்லாம் பலஸ்தீன பஃதா இயக்கத்தினரோ அல்லது காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினரோ அல்லது ஆயுதம் தரித்த வீரர்களோ அல்ல. மாணவர்கள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தரித்திருந்தது ‘மனித நேயம்’ என்ற ஆயுதம் மட்டுமே. இவர்களின் மீதான கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவிலே இஸ்ராயீலின் கோர முகம் வெளிப்பட்டு பல்வேறு நாடுகளும் தம் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இத்துணை கண்டனங்கள், எதிர்ப்புகள், அனைத்தையும் மீறி இன்றளவும் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் இஸ்ரேல் அடைத்தே வைத்துள்ளது. குறிப்பாக காஸாவின் கடல் பகுதி முழுக்க இஸ்ராயீல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதற்கென்ன காரணம்? ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலா? அல்லது ஹாமாஸ் அமைப்பு காஸாவிலே மிகுந்த செல்வாக்கோடு இருப்பதாலா? ஹாமாஸ் 2006ரூம் வருடம்தான் காஸா தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. ஆனால், காஸா முற்றுகைக்கான காரணம் 1999லேயே தொடங்கிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?
காஸா மீனவர்கள்

நாம் காஸாவைப் பற்றிய தகவலில் சற்று பின்னோக்கி செல்வோம். காசா கடல் பகுதியில் காஸா மீனவர்கள் சுமார் 3000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய, நடுத்தர, பெரிய படகுகள் என சுமார் 700 படகுகள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஐ.நா.வின் கடல் சார் பொரு ளாதார சட்டம் பிரிவு 5ன்படி ஒரு நாட்டின் கரையிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதி கடல்சார் சிறப்பு பொருளாதார பகுதியாக கருதப்பட்டு அந்த நாடு அந்த பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அனுபவிக்கலாம் எனக் கூறுகிறது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தின்படி பலஸ்தீனம் காசாவின் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவு வரையிலான பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. 1978க்கு முன்பு சினாய் கடற்கரை பகுதி வரையி லான சுமார் 75,000 சதுர கி.மீ. பரப்பளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பலஸ்தீன மீனவர்கள் இதன் மூலம் வெறும் 600 சதுர கி.மீட்டருக்குள் முடக்கப்பட்டனர். 1994ம் வருடம் பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாஸர் அரபாத்தும் அன்றைய இஸ்ராயீல் பிரதமர் இட்ஜக் ரபினும் காசாஜெரிக்கோ ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி காசா கடல் பகுதியில் 20 கடல் மைல்கள் தொலைவு வரை மீன் பிடித்துக் கொள்ளலாம் எனவும் எகிப்து இஸ்ராயீல் கடல் எல்லைப் பகுதிகளில் பலஸ்தீன மீனவர்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

காஸாவின் எண்ணெய் வளம்

இந்நிலையில் 1999ம் வருடம் இங்கிலாந்தைச் சேர்ந்த பி.ஜி. குரூப் என்ற பெட்ரோலிய கம்பெனி ஒன்று காஸா கடல் பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்தது. கடற்கரையிலிருந்து ஏறக்குறைய 10 முதல் 15 கடல் மைல் தொலைவு வரை இந்த எண்ணெய்ப் படுகைகள் பரந்து விரிந்து கிடப்பதையும் இதிலிருந்து சுமார் 1.3 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதையும் கண்டறிந்தது. இதன் மதிப்பு சுமார் 400 கோடி டாலர்களாகும். இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் இதைவிட பல மடங்கு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், காஸா பகுதி இன்னொரு துபையாக மாற வாய்ப்புள்ளதையும் வெளிப்படுத்தியது. இந்த எண்ணெய் வளம் பலஸ்தீனத்தின் 10 வருட மின்சார தேவையை நிறைவேற்றுவதோடு, ஏற்றுமதி செய்யும் வகையில் ஏராளமாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டதும், யாசர் அரபாத் அந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி கடலுக்கடியில் குழாய்களை பதித்து எரிவாயு காஸாவுக்குள் கொண்டுவரப்பட்டு மின்சார உற்பத்தியை துவக்குவது எனவும், உபரி எரிவாயுவை ஏற்றுமதி செய்வது எனவும் திட்டமிடப்பட்டது.

எரிவாயுதிட்டம்

27.09.2000 அன்று எரிவாயு எடுக்கும் திட்டம் காஸாவின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்கள் தாண்டி கடலிலே யாசர் அரபாத் அவர்களால் தொடங்கியும் வைக்கப்பட்டது. இந்த எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்பது குறித்து பி.ஜி. குரூப் நிறுவனம் அணுகியபோது, பலஸ்தீனத்திலிருந்து எரிவாயுவை வாங்கத் தமக்கு விருப்பமில்லை எனக் கூறி இஸ்ராயில் மறுத்துவிட்டது. எனவே அந்நிறுவனம் எகிப்துடன் பேசி முடிவு செய்து அதன்படி கடலுக் கடியில் குழாய்கள் அமைத்து, அதன் வழியாக எரிவாயுவை எகிப்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து இஸ்ரே லுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்தது. ஆனால், இஸ்ராயீல் அதற்கும் உடன்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்த விவகா ரத்தில் தலையிட்டு பி.ஜி. குரூப் நிறுவனம் இஸ்ரேலுக்கு நேரடியாக எரிவாயுவை அனுப்ப நிர்பந்தித்தார். அதற்கான பேச்சு வார்த்தை இஸ்ராயீ லுடன் நடத்த வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்தார். அதன்படி அந்நிறுவனம் இஸ்ரேலில் தன் அலுவலகத்தை திறந்தது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. கடைசிவரையிலும் இஸ்ரேல் இழுத்தடிக்கவே பி.ஜி. குரூப் நிறுவனம் தன் இஸ்ரேல் அலுவலகத்தை மூடிவிட்டது. பேச்சு வார்த்தையையும் நிறுத்திக் கொண்டது.
திட்டமிட்ட கலவரம்
இந்த சமயத்தில்தான் ஏரியல் ஷரோன் காட்சிக்கு வருகிறார். பாலஸ்தீனத்திடமிருந்து எரிபொருள் வாங்க முடியாது என சபதமிடுகிறார். 28.09.2000 அன்று ‘டெம்பிள் மவுண்ட்’ என்ற இடத்துக்கு யாசர் அரபாத் அவர்களின் எச்சரிக்கையையும் மீறிச் செல்கிறார். இந்துத்துவ மத வெறியாளர்களின் ரத யாத்திரை போல திட்டமிட்ட கலவரங்களை விதைக்கிறார். படுகொலைகள் அரங்கேறுகின்றன. நாடு முழுவதும் கலவரம். இதன் பலனாக 2001 பிப்ரவரியில் இஸ்ராயில் பிரதமராக ஷரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே காஸா முற்றுகை ஆரம்பமா னது. அத்தியாவசிய பொருட்களை காஸாவுக்குள் கொண்டு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் காஸா மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது இஸ்ராயீல் கடற்படையின் கப்பல்கள் ஆறு கடல் மைல் தொலைவிலேயே மீன் பிடி படகுகளைத் தாக்கின. கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கிகளின் தாக்குதல்கள். 15 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்த னர். இந்த தாக்குதலுக்கு ஹாமாஸ் அமைப்போ அல்லது இஸ்ரேலின் பாதுகாப்போ காரணமல்ல. காஸா கடல் பகுதியில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய் வளம்தான் காரணம்.

எண்ணெய் திருட்டு
இதுதவிர காசாவின் வடக்கு கடல் பகுதியில் இஸ்ராயில் ஒரு எண்ணெய் கிணற்றுக்கான தளம் அமைத்துள்ளது. உயர் தொழில்நுட்பம் மூலம் 10,000 அடி முதல் 15,000 அடி வரை பூமிக்குள் சாய்வாக துளையிட்டு காஸாவின் எண்ணெய் வளத்தை திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுப்பதுதான் அதன் திட்டம். குவைத் இது போலவே தன் நாட்டு எண்ணெய் வளங்களை திருடுவதாக ஈராக் புகார் கூறியது நாம் அறிந்ததே.
சர்வதேச நெருக்கடி
காசாவுக்கான உணவு, மருந்து பொருட்களின் விநியோகத்தை நிறுத்தியது, மீனவர்களைப் படுகொலை செய்தது போன்ற இஸ்ராயீலின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் வெளிப்பட்டன. பன்னாட்டு நெருக்குதல் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் தன்னுடைய தூதராக கேதரின் பெர்ட்டினி அவர்களை காசாவுக்கு அனுப்பி வைத்தார். அங்குள்ள மனிதாபிமான தேவைகளை ஆய்வு செய்ய பணிக்கப்பட்டார். 2002ரூம் வருடம் ஆகஸ்ட் மாதம் காசாவுக்கு வந்து ஆய்வு செய்த கேதரின் பெர்ட்டினி விரிவான அறிக்கையையும் தன் பரிந்துரைகளையும் ஐ.நா. பொதுச் செயலரிடம் சமர்ப்பித்தார். அந்த பரிந்துரைகளில், காஸா மீனவர்கள் 12 கடல் மைல் எல்லை வரையிலாவது மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், 3 கடல் மைல் தொலைவை கடக்கும்போதே மீனவர்களை இஸ்ராயீல் கடற்படை தாக்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. சர்வதேச நெருக்கடி காரணமாக இஸ்ராயீல் காஸா மீதான தன் பிடியை விலக்கிக் கொள்வதாக 12.09.2005ல் அறிவித்திருந்தது. ஆனால், வான்வழி, தரைவழி, கடல் வழி என காஸாவின் அத்தனை வழிகளையும் இஸ்ரேல் அடைத்துக் கொண்டு நின்றது. ஆதிக்கம் செலுத்தியது.
ஹமாஸ் வெற்றியும் ராணுவ ஊடுறுவலும்
25.1.2006ல் காஸா சட்டமன்ற தேர்தல். மொத்தம் 132 இடங்களில் 76 இடங்களை கைப்பற்றிய ஹமாஸ் இயக்கம் காஸாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உடனே இஸ்ராயீலும், அமெரிக்காவும் ஹமாஸ் இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கம்’ என பிரகடனப்படுத்தின. காஸாவின் அனத்து எல்லைகளையும் இஸ்ரேல் இராணுவம் மூடிவிட்டது. காசாவுக்குள் உணவு மருந்து பொருட்கள் எதுவுமே நுழைய முடியாமல் போனது. காஸா நகர மக்கள் பசி, பஞ்சம், பட்டினியாலும், நோய்களாலும் நூற்றுக்கணக்கில் மாண்டனர்.
மீண்டும் 2008ரூல் இஸ்ராயீல் பி.ஜி. குரூப் எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதே வருடம் ஜூன் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் தன் இராணுவ துருப்புகளை காசாவுக்குள் ரகசியமாக ஊடுருவ உத்தரவிட்டார். 19.06.08ல் இஸ்ராயீலுக்கும் ஹமாஸுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. உணவு, மருந்து பொருட்கள் ஒரு நாளைக்கு 900 டிரக்குகள் காசா நகருக்குள் சென்று கொண்டிருந்த நிலை மாறி 70 டிரக்குகள் மட்டுமே சென்று கொண்டிருந்த நேரம் அது. இந்த ஒப்பந்தம் மூலம் மீண்டும் பழைய நிலை திரும்பும் என எதிர்பார்த்த ஹமாஸ் இயக் கத்துக்கு பலத்த ஏமாற்றம். 70 டிரக்குகள் வெறும் 90 டிரக்குகளாக உயர்ந்ததுதான் பலன். எனவே பழையபடி சுரங்கப் பாதை மூலமே அத்தியாவசிய பொருட்களை காஸா நகருக்குள் கொண்டு வர ஹமாஸ் இயக்கம் முடிவு செய்தது. இஸ்ராயீல் ராணுவம் இந்த சுரங்க பாதையை தேடுவதாகக்கூறி 6 பலஸ்தீனர்களை படுகொலை செய்தது. 5.11.2008ல் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. உடனே ஹமாஸ் பதில் தாக்குதல் தொடுத்தது. 5 வார காலத்தில் சுமார் 237 ராக்கெட்டுகளை இஸ்ராயீல்மீது ஏவியது ஹமாஸ். காஸாவுக்குள்ளான இஸ்ராயீலின் ஊடுருவலுக்கு இந்த தாக்குதல்கள் நியாயம் கற்பித்துவிட்டன.
எகிப்து நீதிமன்றம்
இந்த நிலையில் இஸ்ரேல் எகிப்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. சுமார் 15 வருட காலத்திற்கு 1.7 மில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவை இஸ்ராயீலுக்கு விற்க 2005ல் எகிப்து ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் எகிப்து பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாததால் சட்டப்படி செல்லாது என எகிப்து நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரணை செய்து வந்த எகிப்து நீதிமன்றம் 18.11.2008ல் இந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவித்துவிட்டது. எகிப்து எரிவாயுவை வாங்கும் இஸ்ரேலின் திட்டம் நின்று போனதால் எவ்வாறேனும் காஸாவின் எரிவாயு வளத்தை அடைந்தே தீரவேண்டும் என இஸ்ரேல் முடிவு செய்தது. எகிப்து நீதிமன்ற தீர்ப்பு வெளியான அன்றே இஸ்ராயீலின் கப்பற்படை கப்பல்கள் தாக்குதலைத் தொடங்கின காஸா ஜெரிக்கோ ஒப்பந்தபடி 20 கடல் மைல் தொலைவு வரை காஸா மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்றிருந்தாலும் 7 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண் டிருந்த காஸா மீனவர்கள் மீது குண்டு மழை பொழிந்தது. மீன்பிடி படகுகள் நாசமாக்கப்பட்டன. மீனவர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டனர்.

ஆபரேஷன் கேஸ்ட் லீட்
கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ‘‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’’ என்ற பெயரில் காஸா நகரத்தின் மீதே கடுமையான தாக்குதலை 27.12.08ல் தொடங்கியது. காஸா முழுவதும் குண்டு மழை பொழிந்தது. மீண்டும் சர்வதேச சமூகம் இஸ்ராயீலை கண்டித்தது. நெருக்கடிக்குள்ளான இஸ்ரேல் வேறு வழியின்றி 18.1.09ல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. ‘ஆபரேஷன் கேஸ்ட் லீட்’ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனாலும், காஸாவின் கடல் பகுதியை தன் ஆதிக்கத்திலேயே இஸ்ரேல் வைத்துள்ளது. 24.1.09ல் காசா கடற்கரையில் நடை பயின்று கொண்டிருந்த ஒரு தந்தையும் மகளும் இஸ்ராயீல் கப்பற் படையால் சுடப்பட்டனர். கடற்கரைக்குக்கூட யாரும் வரமுடியாத நிலையை இஸ்ராயீல் ருவாக்கியது. இறுதி யாக 14.02.09 அன்று காஸா கடல் பகுதி முழுமையாக தடை செய் யப்பட்ட பகுதியாக இஸ்ராயீல் அறிவித்து விட்டது.
ஒரு நாட்டின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் தொலைவு வரை ‘கடல் சார் சிறப்பு பொருளாதார மண்டலம்’ என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள அனைத்து இயற்கை பொருளாதார வளங்களையும் அந்த நாடு யாருடைய தலையீடுமின்றி அனுபவிக்கலாம் என ஐ.நா.வின் ‘கடல் சார் பொருளாதார சட்டம்’ கூறுகிறது. காசாவின் கடற் கரையிலிருந்து 10 முதல் 15 கடல் மைல் தொலைவுக்குள்ளாகவே எண்ணெய் படுகைகளும் அதில் இயற்கை எரிவாயு ஏராளமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஸா இன்னொரு துபை என்ற அளவிலே மாற்றம் பெறுவதற்கு இந்த எண்ணெய் வளம் உதவும். இந்த இயற்கை வளத்தை திருடுவதற் காகத்தான் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலையும், முற்றுகையையும் தொடர்கிறது. உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக பல ஆயிரம் மக்களை படுகொலை செய்து பழக்கப்பட்டது அமெரிக்கா. அதன் ஏவல் நாய் இஸ்ராயீலும் அதே வழியில்...

Thursday, August 12, 2010

உணர்வில் தெளிவு - ஈமானில் உறுதி|| - பிறைமேடை தலையங்கம் : ஆகஸ்ட் 1-16

உணர்வில் தெளிவு - ஈமானில் உறுதி|| - பிறைமேடை தலையங்கம் : ஆகஸ்ட் 1-16

அன்புத் தம்பிக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!
நெடிய சரிதையின் தொடர்ச்சி@

ஆம்@ நம் பேரியக்கமாம் முஸ்லிம் லீக் புதுப் பொலிவோடும் வலிவோடும் சிறந்து விளங்க அவ்வப்போது சில மாற்றங்கள் தேவைதான். இம்மாற்றங்களும் ஆங்காங்கே நிர்வாகிகள் அமையப் பெறுவதில் காணுகிறபோது ஒரு வகையான உற்சாகம். இந்த உற்சாகமும் உத்வேகமும் நம் எல்லோர் மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.
தமிழ்நாடு முழுவதும் பிரைமரி, நகர தேர்தல்கள் முடிவுற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்களும் நடைபெற்று இன்னும் ஒரு சில மாவட்டங்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்ற நிலையில் இருக்கிறோம். தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் அனுபவமிக்க வழிகாட்டுதலில் நமது இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் பொதுச் செயலாளர் அப+பக்கர் அவர்களும், தலைமை நிலையத்தின் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ஆங்காங்கே மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர். அதற்கு முன்னரே அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் கிராம, நகர, மாநகர வார்டு கிளை பிரைமரி தேர்தல்கள் செவ்வனே நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வரும் நம் தாய்ச்சபையில் இந்த முறை ஒரு புதிய பரிணாம மாற்றம் இருப்பதை யாரும் மறுக்கவியலாது.

வயதின் மோச்சத்தால் உடல் நலிவு கண்டவர்கள் இளையவர்களுக்கு வழி தந்திருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையிலும் உணர்வால் குறை காணப்பட இயலாதவர்கள். அந்தந்த பகுதிகளில் சமுதாய மக்களின் பார்வையில் மரியாதை கொண்டவர்கள்@ மூத்தவர்கள். இவர்களை தாய்ச்சபை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கச் செய்வது என்பது மரியாதைக் குறைவை ஏற்படுத்திவிடும் என்று நினைத்துதான் பல பகுதிகளில் நிர்வாகிகள் மாற்றம் காணாது தொடர்ந்து வந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அண்மையில் நடைபெற்று முடிந்த நிர்வாகத் தேர்தல் மூலம் இளைஞர்களை முன்னிறுத்தியிருப்பதைப் பல நகரங்களிலும், பல மாவட்டங்களிலும் காண முடிகிறது. வயதில் மூத்த முன்னாள் நிர்வாகிகள் பலர் இன்றைய நிர்வாகத்திலும் கௌரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தாய்ச்சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்தக்கூடிய வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்நிலையில் நாம் நினைத்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமற்போனதே என்றுகூட நம்மில் சிலர் ஆங்காங்கே நினைக்கலாம். ஜனநாயகப் பார்வையில் இந்த நினைப்பு சகஜமான ஒன்று. இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், நிர்வாகிகளாகத் தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று எண்ணிய சிலர்கூட மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமலும் போனதுண்டு. எது எப்படியானாலும், தாய்ச்சபை முஸ்லிம் லீக் வளர வேண்டும்@ அது வளர்ந்தால் நாம் வாழ முடியும்@ அதில்தான் நம்முடைய சமூக வாழ்வும், அரசியல் அந்தஸ்தும், மரியாதைக்குரிய தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்களுக்கு மாறுபட்ட எந்த எண்ணமும் ஏற்படாது. காலம் காலமாகத் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நமக்கு ஊட்டிய உணர்வு என்பது சுயநலத்திற்கும் சுய கவுரவ கண்ணோட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. அந்த உணர்வில் தெளிவாக இருப்பவர்கள் நடக்கவிருக்கிற தேர்தல்களிலும் விருப்பு வெறுப்பு என்று பாகுபடுத்தாமலும் இனிப்பு, துவர்ப்பு என்று வேறுபடுத்தாமலும் தாய்ச்சபை வளர்ச்சி ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்றும், இதனை இழிவுபடுத்தி கீழான விமர்சனம் செய்வோருக்கு முன்னால் நெஞ்சு நிமிர்ந்து நேரிய நெறிமுறை தவறா உண்மை முஸ்லிம் என்றும் பறைசாற்ற பிறைக் கொடி நெஞ்சே!
உன் சீரிய பணி தொடரட்டும்,
உன் நேரிய வழி பரவட்டும்@

தலைமைக்குக் கட்டுப்படும் தீன் நெறி உன்னில் என்றும் மிளிரட்டும்.

- எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
ஆசிரியர்

Saturday, August 7, 2010

முனீரே மில்லத் பேராசிரியர் பெருந்தகை..............

முனீரே மில்லத் பேராசிரியர் பெருந்தகை
K.M. காதர் முகையதீன் M.A., EX M.P.
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

கோவை செந்தமிழ் மாநாட்டு தங்களின் பேருரை வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
தமிழகத்தில் முஸ்லிம் சிறு குழந்தைகள் பள்ளிவாசலில் நடைபெறும் குர்ஆன் மதரஸாவில் படிப்பதற்காக அரபுத்தமிழில் துஃகபத்துல் அத்பால், என்ற சிறுநூல் கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷாவால் இயற்றப்பட்டதாகும்.

சிம்னு ஸுப்யான் என்ற அரபுத்தமிழ் கிதாபு எல்லா குர்ஆன் மதரஸாக்களிலும் குழந்தைகள் படிக்கின்றன. ரபாத் மாநாட்டுக்கு சிராஜுல் மில்லத் அப்துல் சமது அண்ணன் செல்கின்ற பொழுது காயிதே மில்லத் அவர்கள் சிம்னு ஸுப்யானைத்தான் விடுத்தனுப்பினார்கள். சமது அண்ணன் அவர்கள் சவூதி மன்னரிடம் விடுத்து தமிழக முஸ்லிம்கள் ஷரீஅத்தை தெரிந்து கொள்ள தமிழ் மொழியை அரபி லிபியில் எழுதியிருப்பதை எடுத்துச் சொல்லி மன்னரின் பாராட்டை பெற்றார்கள் அதுவும் அரபுத் தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.

துஃகுபத்துஸ் ஸமதிய்யா பீஃலிஸானில் அரபிய்யா என்ற அரபி அரபுத்தமிழ் அகராதி 1913 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் முஹம்மது இபுறாஹிம் ஆலிம் அவர்கள் எழுதி பார்த்திபனூர் முஹம்மது ஹனீபா ஆலிம் அவர்களால் வெளியிடப்பட்டதாகும். பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி மதரஸாவின் முதல்வர் அப்துல் ஜப்பார் ஹஜரத் அவர்களும் பேராசிரியர் அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் அவர்களும் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். எல்லா உலமாக்களிடமும் அந்த அகராதி இருந்து வருகின்றன. இதுவரை யாரும் அரபி மொழிக்கு அரபுத்தமிழில் அகராதி வெளியிடவில்லை. இந்த கிதாபும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டும்.

ஜவாஹிருல் மஸாயில் என்ற நூல் (தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள் போன்ற மாஸாயில்கள்) வீரசோளம் நைனா முகம்மது ஹஜரத் அவர்களால் 1906 ம் ஆண்டு அரபுத்தமிழில் வெளியிடப்பட்டதாகும். இந்த நூலும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம் பெற வேண்டும்.

உலமாக்கள் பலரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்த குறிப்புகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

P.K.N.அப்துல் காதிர் ஆலிம்
மதுரை மவ்லானா
கேம்ப் : துபாய்
04 ஆகஸ்ட் 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது,

2009 10 ஆம் ஆண்டில் முன்பதிவுள்ள ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் 9.84 லட்சம் பேர் சலுகை கட்டணத்தில் பயணம் செய்துள்ளனர்.

சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கழிப்பறை வசதியுடன்கூடிய பிரத்யேக ரயில் பெட்டிகளை ரயில்வே தயாரித்து வருகிறது.

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகள் நடைமேடையில் ஏறி, இறங்கவும், நடைமேடை மாறுவதற்கும் வசதியாக நடைமேடையின் இரு புறமும் சரிவுப்பாதை உள்ளது என்றார்.

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு 8 மாத பாஸ்போர்ட்

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு 8 மாத பாஸ்போர்ட்
முதல் பாஸ்போர்ட் சென்னையில் 15 நாளில் வழங்கப்பட்டது


சென்னை, ஆக.4-
காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது.
வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது.
சமீபத்தில் சவ+தி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது
இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாம லேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங் கும்படி அனைத்து பிராந் திய பாஸ்போர்ட் அதி காரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு இது தொடர்பாக இரண்டு முறை கூடி ஆலோசித்த பின் இந்த முடிவுக்கு வந்து ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்குவதை விரைவுபடுத்த காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே 15 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப் பதாக இந்திய ஹஜ் கமிட்டியைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
இந்த மாதிரி 8 மாதம் செல்லத்தக்க தற்காலிக பாஸ்போர்ட்டை பெறும் ஹஜ் பயணிகள் அந்த பாஸ்போர்ட்டை நிரந்தர பாஸ்போர்ட்டாக மாற்ற வேண்டும் என்று விண் ணப்பித்தால் காவல் நிரூபண சான்றிதழ் உள் பட அனைத்து விதி முறை களையும் பின்பற்றி நிரந்தர பாஸ்போர்ட் வழங்கப் படும் என்று அந்த அதி காரி கூறினார்
ஏற்கனவே, ஹஜ் பய ணத்திற்காக பாஸ் போர்ட் விண்ணப்பித்து காவல் துறை நிரூபண சான்றிதழ் போன்ற வற்றிற்காக ஜூன் 20-ம் தேதி வரை நிலுவை யில் உள்ள விண்ணப்பத் தாரர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப் படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங் களுக்கு அனுப்பப்பட்டி ருக்கும் சுற்றறிக்கையில் மேற்கொண்டு கூறப்பட் டிருப்பதாவது-
ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்..
தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.
புதிய திட்டப்படி காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லாமலேயே அதை விண்ணப்பித்த 15 நாளில் சென்னை பிராந் திய பாஸ்போர்ட் அலுவ லகம் 8 மாதங்கள் செல்லத் தக்க ஒரு பாஸ்போர்ட்டை சென்னையில் ஒரு ஹஜ் பயணிக்கு வழங்கியிருப் பதாக துணை பாஸ் போர்ட் அதிகாரி கே.எஸ். தவ்லத் தமீம் அறிவித்தார்.

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது நாடாளுமன்றத்தில் எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது நாடாளுமன்றத்தில் எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை

குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.
நாடாளுமன்ற மக்கள வையில் 377-வது விதியின் கீழ் அவசர மற்றும் அவ சிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மீது வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியபோது குறிப்பிட்ட தாவது-
சிறுபான்மை மாண வர்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப் பதாக ஆங்கிலப் நாளிதழ் களில் இன்று விரிவான செய்திகள் வெளி வந்துள் ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட முஸ்லிம் மாணவர் கள் குறைந்த பட்சத் தொகை இருப்பில் இல்லா மல் (ஜீரோ பேலன்ஸ்) கணக்கு தொடங்க முடி யாது என மறுக்கப்பட்டுள் ளதாகவும் இவர்களில் மிக அதிகம் பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி 2005-ல் வெளியிட்ட அறி விப்பின்படி எந்த வங்கி யிலும் சிறுபான்மை சமு தாய மாணவர்கள் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் வங்கி கணக்கு திறக்க அனுமதி மறுக்க கூடாது என தெளிவாக அறிவித்தி ருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை மீறி, பல வங்கி களில் கணக்கு தொடங்க தடுப்பதாக தெரிய வருகி றது.
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, 2007-2008-ம் நிதியாண்டில் வங்கி கணக்கு தொடங்கப் பட்டது 84 சதவீதமாக இருந்தது என்றும், ஆனால் 2008-09-ல் அது வெறும் 4 சதவீதம் தான் என்றும் சொல்கிறது. 2009-ம் ஆண்டு சிறு பான்மை மாணவர்கள் 4 விழுக்காடு மட்டும்தான் வங்கிக் கணக்கு தொடங் கியுள்ளனர் என்பது வேதனைக் குரியதாகும்.
எனவே, அரசு இதுவிஷயத்தில் உடனடி யாக கவனம் செலுத்தி இந்த ரிசர்வ் வங்கியின் அறிவுரை களை அமல்படுத்தி சிறு பான்மை மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாண வர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லாமல் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் (ஜீரோ பாலன்ஸ்) வங்கி கணக்கு தொடங்க வாய்ப் பளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

Friday, August 6, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பிரைமரிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பிரைமரிகள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர் சேர்ப்பு மற்றும் பிரைமரி அமைப்புப் பணி நாடு தழுவிய அளவில் நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் இப் பணி முடுக்கிவிடப்பட்டு அனைத்து மாவட்ட தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 37 பிரைமரிகள் அமைக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை நிலையத்தில் இருந்து அங்கீகாரச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் வந்தவாசி டி.எம். பீர்முஹம்மது, மாவட்டச் செயலாளர் இ. முஹம்மது அலி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஏ.டபுள்ய+. அப்துல் காதர் ஷரீப், திருவண்ணாமலை நகர் மன்ற உறுப்பினர் மாலிக் பாஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஏ. முஹம்மது ஹனீப், நகர இளைஞரணி அமைப்பாளர் கே. அஸ்ரப், நகரப் பொருளாளர் பி. ஷாஜஹான், வந்தவாசி நகரச் செயலாளர் நசீர், வந்தவாசி இளைஞர் அணி அமைப்பாளர் வாஹித் ஆகியோர் இச் சான்றுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் இச் சான்றுகளை வழங்கினர்.
இந்த ஆண்டு புனித ரமளான் நோன்பு முடிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பிரைமரிகள் விவரம் வருமாறு-
திருவண்ணாமலை நகரம்
தலைவர் பி.எஸ். முஹம்மத் பஷீர், செயலாளர் ஜெ. ஹனிப் சாஹிப், பொருளாளர் பி. ஷாஜஹான், துணைத்தலைவர்கள் கே.எஸ். ஹமீது பாஷா, ஏ. இல்யாஸ், இ. மாலிக்பாஷா, அப்துல் முத்தலீப், துணைச்செயலாளர்கள் பி. ஜாஹிர் உசேன், ஹெச். நஜீர் பாஷா, ஏ. அக்பர் பாஷா, எஸ்.ஹெச். முஹம்மத் ஹனீப், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எம். பாரூக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஹெச். முஹம்மது பஹிம், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எம், அக்பர், மகளிர் லீக் அமைப்பாளர் எம். தமிஸின்னிசா.
செங்கம்
தலைவர் பிலால் பாபா ஜான், செயலாளர் டி.கே. அப்துல் சுபான், பொருளாளர் ஆர். அப்துல் ரஜாக், துணைத்தலைவர்கள் எம். ஜப்பார் கான், ஏ. பாபு, பி. அப்துல் சத்தார், டி. ஷேக் முஹம்மத், ஹெச். கஜினி கான், துணைச்செயலாளர்கள் ஏ. பாபு, ஜெ. நவாப், ஏ. சாபு, சி. முபாரக், ஸர்தார் கலிபதுல்லா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எஸ். பாபு, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் கலிமுல்லாகான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் அத்தாவுல்லாகான், மகளிர் லீக் அமைப்பாளர் பர்ஹானா பேகம்.
ஆரணி
தலைவர் கே. பக்ருதீன், செயலாளர் திலாவர் அலிகான், பொருளாளர் பி. சபிர் ஹ{சேன், துணைத்தலைவர்கள் டி. அப்துல் சுபான், கே. தஸ்தகீர் ஷெரீப், துணைச்செயலாளர்கள் ஏ. காசிம் சாஹிப், எஸ். அப்துல் மாலிக், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் முபாரக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் சல்மான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் பி. ஷஃபி, மகளிர் லீக் அமைப்பாளர் ஷகீலா.
எஸ்.வி. நகர்
தலைவர் ஏ,பி, அல்லாபக்ஷ், செயலாளர் பி. ஜாக் பாஷா, பொருளாளர் வி. அஜீஸ்கான், துணைத் தலைவர் எம்.இஸ்மாயில், துணைச்செயலாளர் பி.முபாரக் , முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஏ. நூருல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஜி. ஷாபுதீன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஆர். சலாவுத்தீன், மகளிர் லீக் அமைப்பாளர் குல்சார் பேகம்.
பைய+ர்
தலைவர் ஏ. குல்சார் பாஷா, செயலாளர் கே. மஸ்தான், பொருளாளர் ஹெச். நஃபி, துணைத்தலைவர் ஏ. ஜியாவுத்தீன், துணைச்செயலாளர் ஹெச். நஃபி,முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஹெச். ஷஃபி, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் சையது ஷபீர் பாஷா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எஸ். நூருல்லா, மகளிர் லீக் அமைப்பாளர் ஜி. சுரியா.
இரும்பேடு
தலைவர் ஏ. முன்னா சாஹிப், செயலாளர் சையத் ரஃபி, பொருளாளர் எஸ். அக்பர் பாஷா, துணைத்தலைவர் பாஷா சாஹிப், துணைச் செயலாளர் சத்தார், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எஸ். கலிம்பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் கே. முஹம்மது கலிம், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் காதர் கான், மகளிர் லீக் அமைப்பாளர் ஏ. ஷாயாதி.
தௌ;ளார்
தலைவர் எம். ஜான்பாஷா, செயலாளர் பியாறு, பொருளாளர் எஸ். நஜீர் உசேன், துணைத்தலைவர்கள் ஏ. அலி, கே. அத்தாவுல்லா, துணைச்செயலாளர்கள் உஸ்மான், கே. அப்துல் ரஷீத், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஜெ. பாருக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஜெ. ஷாகுல், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் பி. சான் பாஷா, மகளிர் லீக் அமைப்பாளர் ஏ. ஷாஜான்பி.
நல்லூர்
தலைவர் இ. பஷீர் சாயபு, செயலாளர் சுபான், பொருளாளர் ஜெ. மன்சுர்பாஷா, துணைத் தலைவர் ஏ. ரஜாக் சாயபு , துணைச்செயலாளர் இ. கூடு சாயபு, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எம்.ஏ. உசேன் ஷரீப், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் கே. ஜானி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஜெ. ரஹீம், மகளிர் லீக் அமைப்பாளர் ஏ.ஷரிபா பேகம்.
மழுவங்கரை
தலைவர் பி. சாதிக் பாஷா, செயலாளர் எஸ். உபயதுல்லா, பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர்கள் ஏ. அல்லாபக்ஷ், எஸ். ரஹமத்துல்லா, துணைச்செயலாளர்கள் பி. ரஃபி சாயபு, சையத் உமர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஏ.கலீல், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் என். ஜியாவுதீன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் பி. ஜாஹிர் உசேன், மகளிர் லீக் அமைப்பாளர் ஏ. ஜமுனா.
நெற்குணம்
தலைவர் சையத் கஹீம், செயலாளர் முஹம்மது ஜக்ரி, பொருளாளர் சையத் அக்பர், துணைத்தலைவர் காதர் ஷரீப், துணைச்செயலாளர் இஸ்மாயில், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் கே. ஷபியுல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் இம்ரான்கான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் சையத் கௌலி, மகளிர் லீக் அமைப்பாளர் எம். கைரூன்பி.
குண்ணகம்ப+ண்டி
தலைவர் பி. மீராஷா, செயலாளர் ஏ. சையத் இமாம், பொருளாளர் எம். பஷீர் அஹ்மத், துணைத்தலைவர் சோட்டாபாய், துணைச் செயலாளர் பாரூக் அஹ்மத், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் மஸ்தான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் பத்துல், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் அபுணி (எ) காதர்கான், மகளிர் லீக் அமைப்பாளர் தாசூன்பி.
கூழமந்தல்
தலைவர் ஏ. உமர்பேக், செயலாளர் ஆர் முஹம்மது பாஷா, பொருளாளர் பி. லால்பேக், துணைத்தலைவர்கள் அகமது அலி, கே. ஆமித், துணைச்செயலாளர்கள் எம். ஷமீம், இ. மாபாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஜாவித், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஆர். சதாம், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் டி. பாபு, மகளிர் லீக் அமைப்பாளர் ரெஹானா.
களம்ப+ர்
தலைவர் ஜெ. மஸ்தான், செயலாளர் முஹம்மத் அலி, பொருளாளர் எஸ். ஹிதாயத்துல்லா, துணைத் தலைவர்கள் என். உம்மர், ஹெச். சாயபுபாபு, துணைச் செயலாளர்கள் எஸ். அலிம்பாஷா, எஸ். பாரூக் கான், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எம். முஹம்மது இஸ்மாயில், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எஸ். ஆர். பி. சவுகத் அலி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் யாசின் , மகளிர் லீக் அமைப்பாளர் எம். சாய்ரா பானு.
மங்களம் மாமண்டுர்
தலைவர் என். அலாவுதீன், செயலாளர் பி.எஸ். பாரூக், பொருளாளர் ய+. சுல்தான், துணைத் தலைவர்கள் கே.பி. அப்துல் ஹக்கீம், எஸ். அலாவுதீன், துணைச் செயலாளர்கள் ஆர்.சேட்டு, கே.பஷீர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் பி. ஷாஜஹான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் கே. கௌஸ், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஏ. சௌகத் பாஷா, மகளிர் லீக் அமைப்பாளர் ஏ. ஷாயினா பேகம்.
வினாயகபுரம்
தலைவர் எம். கென் செய்து, செயலாளர் வி.ஏ. அமீன் பாஷா, பொருளாளர் வி. எஸ். அபுசாலிக், துணைத் தலைவர்கள் இ. ஜமால் பாஷா, ஏ. ஆஜா ஷெரீப், துணைச் செயலாளர்கள் ஏ. அஜ்மீர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் கலேஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் அன்வர் பாஷா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் தாவித் , மகளிர் லீக் அமைப்பாளர் ஆசா பிவி.
தாழம்பள்ளம்
தலைவர் ஏ. பிஸ்மில்லா, செயலாளர் ஏ. அப்துல் அஜீஸ், பொருளாளர் எஸ். ஜெய்னுலாப்தீன், துணைத்தலைவர்கள் எஸ். அமானுல்லா, எம். அமீத் பாஷா , துணைச்செயலாளர்கள் ஏ, முபாரக், எஸ். சலீம், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஏ. அசேன்பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஆர் ராஜா பாஷா,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் பி. அப்துல் ரஹ்மான், மகளிர் லீக் அமைப்பாளர் பி. பரிதாபேகம்.
போளூர்
தலைவர் எம். முனீர் சாஹிப், செயலாளர் ஐ. முஹம்மது ரஃபி, பொருளாளர் ஏ. அமீன், துணைத் தலைவர்கள் முஹம்மது இசாக், துணைச்செயலாளர் ஹ{மாய+ன் கபீர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் இ. நூருல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஏ. முஹம்மது அலி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் முஹம்மது உசேன், மகளிர் லீக் அமைப்பாளர் தாஜின்பி.
வி.புதூர்
தலைவர் ஏ. காதர் பாஷா, செயலாளர் எஸ். ஹாஜா , பொருளாளர் எல். சாதிக் பாஷா, துணைத் தலைவர்கள் ஏ.எஸ். சான்பாஷா, ஆர். ஜமாலுதீன், துணைச் செயலாளர்கள் என்.பாபு, கே. சான்பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் என். அன்வர் பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஏ. யாசிர், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எஸ். அப்துல் ரஜாக், மகளிர் லீக் அமைப்பாளர் பி. ஷகிலாபீ.
செய்யார்
தலைவர் எஸ்.பி. ஹனீப் பாஷா, செயலாளர் எஸ்.பி. சையத் உசேன், பொருளாளர் டி.ஜியாவுத்கான், துணைத் தலைவர்கள் சி. அப்துல்லாஜி,அய்ய+ப்கான் துணைச் செயலாளர்கள் ஆர். சௌகத் அலிகான், இ. நாசர்கான்,முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் பி. நூர் அஹமத், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எஸ். ய+. சையத் உஸ்மான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஏ. இப்றாஹிம், மகளிர் லீக் அமைப்பாளர் எஸ்.என். ஹசீனாபேகம்.
வந்தவாசி
தலைவர் கே.எம்.ஏ. கமாலுதீன், செயலாளர் ஏ. நஜீர் அஹ்மத், பொருளாளர் டி.ஏ.கே. அப்துல் காதர், துணைத்தலைவர்கள் எம். ஹாலிது, ஏ.எம். எஸ். ஹபிபுல்லா, பி. ஹாஜாமொய்தீன், எம். முஹம்மது இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் எம். காதர் அலி, ஏ. சாதிக் பாஷா, ஏ.ஆர். ஜாகிர் உசேன், ஏ. சித்தீக் பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் டி. அப்துல் வாஹித், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஜெ. மன்சூர் அலி,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எஸ். மொய்தீன், மகளிர் லீக் அமைப்பாளர் ஜரினா பர்வின்.
வேட்டவலம்
தலைவர் ஏ. ஜாகிர் உசேன், செயலாளர் ஜெ. கிலாசிக் பாபு, பொருளாளர் ஆர். ஷபிகான், துணைத்தலைவர் எம். அய்ய+ப் கான், துணைச்செயலாளர் ஏ. அப்துல் சுக்கூர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எஸ்.எப். அன்வர் பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் பி. முபாரக், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எம். முபாரக், மகளிர் லீக் அமைப்பாளர் ஜெ. ஷம்ஷாத்.
ஆவ+ர்
தலைவர் ஜெ. அன்வர் பாஷா, செயலாளர் எஸ். கலீல், பொருளாளர் எம்.ஏ. ஷபியுல்லா, துணைத்தலைவர் எஸ். மக்ப+ல் , துணைச்செயலாளர் ஏ.ஜி. ரிஸ்வான், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஏ. ஷாஜஹான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஷாநவாஸ்,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எஸ்.எல். நவாஸ், மகளிர் லீக் அமைப்பாளர் எஸ். மும்தாஜ்.
கீழ்பென்னாத்தூர்
தலைவர் ஹெச். மதார்ஷா, செயலாளர் எஸ். ஷர்புதீன், பொருளாளர் ஜி. சமியுல்லா, துணைத் தலைவர்கள் டி.ஆர். சோட்டபா, எஸ். நஜீர், துணைச் செயலாளர்கள் பிரோஸ்கான், பி. பாபுலால், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஆர் தஸ்தகீர், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் பி. ஷாகுல் ஹமீத், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எம். முஸ்தபா, மகளிர் லீக் அமைப்பாளர் தாஜீன்.
ஆனந்தல்
தலைவர் ஆர். முஜீர் பாஷா, செயலாளர் ஒய். ஹனீப், பொருளாளர் ஏ. ஜான்பாஷா, துணைத் தலைவர் ஆர். ஹைதர்கான், துணைச் செயலாளர் வி. காதர், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஆர். அப்துல் கலீல், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எஸ்- சுல்தான்,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஒய். முஹம்மது அலி, மகளிர் லீக் அமைப்பாளர் த. ஷானினா.
கடம்பை
தலைவர் எஸ்.கே. மாலிக் பாஷா, செயலாளர் ரசூல் குலாம், பொருளாளர் இனாயத்துல்லா, துணைத்தலைவர்கள் ஏ. முஹம்மது அலி, இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் எம். கலில், அன்வர் பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் கே. அமீர், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எஸ்.ஏ. நன்னேபா, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் இ. ரபீக், மகளிர் லீக் அமைப்பாளர் காலிமா.
எரும்ப+ண்டி
தலைவர் ஜான்பாஷா, செயலாளர் ஜெ. காதர், பொருளாளர் ஏ. மதார், துணைத்தலைவர்கள் ஏ. காசிம், சௌகத், துணைச்செயலாளர்கள் கே. அசேன்பாஷா, ஏ. அப்துல்லா பாஷா,முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் வி. ஜமால், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஆர். மாலிக்,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் கே. ஹிதாயத்துல்லா, மகளிர் லீக் அமைப்பாளர் முஷ்ரத்பி.
செம்மியமங்கலம்
தலைவர் டி. அல்லாபக்ஷ், செயலாளர் காதர், பொருளாளர் எல். முபாரக், துணைத்தலைவர் ஆர். பகதூர், துணைச்செயலாளர் எம். இஸ்மாயில், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எம். சுலைமான், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் பி. லியாகத் அலி,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஏ. ஜாகீர் உசேன், மகளிர் லீக் அமைப்பாளர் எம். ஷாமிராபி.
கண்ணமங்கலம்
தலைவர் கே.எம். ஷஹாபுத்தீன், செயலாளர் கே.எல். அல்லாபக்ஹ், பொருளாளர் எம். இஸ்மாயில், துணைத் தலைவர்கள் முனாப், முனிh@ அஹமத், துணைச் செயலாளர்கள் அப்தூ@ ரஹ்மான் கே.எம். ஹயாத் பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் வசீம் அஹமத், ,சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் சமியுல்லா, மகளிர் லீக் அமைப்பாளர் பாத்திமா.
டி.வேளுர்
தலைவர் கே. நவாப்ஜான், செயலாளர் ஆh. பக்கீh@ பாஷா, பொருளாளர் பி. சான்பாஷா, துணைத் தலைவர்கள் பி. ரஹமத்துல்லா, எம். இஷாக் துணைச் செயலாளர்கள் என். தாஜுதீன், ஆர்.ஹாஜி பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஜெ. சம்சுதீன், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஆர்.பாபு, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஏ.சர்தார், மகளிர் லீக் அமைப்பாளர் கைருன்னிஸா.
தானிப்பாடி
தலைவர் பி. அஹமத் பாஷா, செயலாளர் ஏ.எல். அஸ்லம் பாஷா, பொருளாளர் பி. கமால் பாஷா, துணைத்தலைவர்கள் கே. பாபுனி, பி. காதா@ உசேன் முனாப் பி. அலாவுதீன் துணைச்செயலாளர்கள் ஹயாத் பாஷா, சேட்டு குடுபா ஷேக் உசேன்
முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் நிஜாம்@, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஹபீப், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ரஹ்மான், மகளிர் லீக் அமைப்பாளர் பரீதா,
ரெட்டியார் பாளையம்
தலைவர் ஜானி பாஷா, செயலாளர் முபாரக் பாஷா, பொருளாளர் அஹமத் பாஷா, துணைத் தலைவர்கள் ஏ. அன்வா@ பாஷா ஜப்பாh@ பாரூக் கே.மாலிக் , துணைச் செயலாளர்கள்@ காதா@ அலி சனாவுல்லா சாதிக், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் முபாரக் பாஷா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் உசேன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் அக்பா@ பாஷா, மகளிர் லீக் அமைப்பாளர் பஷீரா
நாராயணகுப்பம்
தலைவர் அப்துல் அஜீஸ், செயலாளர் அஜீஸ் கான், பொருளாளர் ஷேக் ஹசன், துணைத்தலைவர்கள் ஷாஜஹான் நவாப்ஜான் ஷேக் ஜப்பாh@ அப்துல்காதா@ பாஷா, துணைச்செயலாளர்கள் அபதுல் கலாம் ஷேக்ஜான் பாஷா ராஜீகான் ஏ. நஜீh@, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் அப்துல் காதா@, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ரபீக், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் முஹம்மது அலி, மகளிர் லீக் அமைப்பாளர் சல்மா,
சைதாப்பேட்டை
தலைவர் முஸ்தபா, செயலாளர் ஷேக் பாஷா, பொருளாளர் பஷீர், துணைத் தலைவர்கள் தஸ்தகீர், ஷேக் காதர் முஹம்மது காசிம், துணைச்செயலாளர்கள் ஷேக் காதர்பாஷா, ஷேக் பாபாஜான் சையது அமீர் முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் அமானுல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் குலாப் ஜான், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் ஷேக் காசிம், மகளிர் லீக் அமைப்பாளர் பீபிஜான்,
திருவடத்தனூர்
தலைவர் அமானுல்லா, செயலாளர் கே.ஷேக் அமீர், பொருளாளர் ஏ. ஷேக் முபாரக், துணைத் தலைவர்கள் இஸ்மாயில், அப்துல் சலாம் கே.மூஸா, எல்.அன்வர், துணைச் செயலாளர்கள் ஜியாவுல் ஹக் அஜீஜுல்லா ஜி. மூஸா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் ஷேக் ஜாவித், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஷேக் உசேன், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் அஹமத் பாஷா, மகளிர் லீக் அமைப்பாளர் எம். கம்ரூன்பீ.
தண்டராம்பட்டு
தலைவர் பி. கலீல், செயலாளர் எஸ். சமியுல்லா, பொருளாளர் முஸம்மது நிஸாh@, துணைத் தலைவர்கள் அப்துல் மஜீத் சாதுல்லா ஜான் பாஷா, துணைச் செயலாளர்கள் சிக்கந்தா@ ஹெச். இஸ்மாயில் எம்.என். பிரோஜ், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் எஸ். உபேதுல்லா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எம்.என். பாரூக், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் எம். ஷபீர் கான், மகளிர் லீக் அமைப்பாளர் குல்ஷாத் பானு,
சாத்தனூர்
தலைவர் முஜிபுh@ ரஹ்மான், செயலாளர் ஏ. முனாப், பொருளாளர் சலாம் பாஷா, துணைத்தலைவர்கள் சுபான், சாதார், அப்துல் சுக்கூர், கே.நஜீர் துணைச் செயலாளர்கள் அக்பர், ஜான் பாஷா, ரிஸ்வான் பாஷா, முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் கே. சலாம், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் தஸ்தகீர், சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் பாபு, மகளிர் லீக் அமைப்பாளர் ஜபீனா.
தரடாப்பட்டு
தலைவர் ஷவுகத் அலி, செயலாளர் சலாம்பாஷா, பொருளாளர் கே.பஜுலுல்லா, துணைத்தலைவர்கள் ஆஷிம் இனாயத்துல்லா சையத் ஜம்மன், பாபு, துணைச் செய லாளர்கள் ஜமாலுதீன் சலாம் அலாவுதீன், முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பாளர் சித்தீக், முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் ஷேக் முத்தலி, சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் கௌஸ்ஜான், மகளிர் லீக் அமைப்பாளர் நசீமா.

உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

உர்தூ மொழி எந்தச் சூழ் நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் தலைவர்கள் கோரிக்கை எழுப்பினர்.
இன்று நாடாளுமன்ற த்தில் ஜீரோ அவர்| என்ற நேரமில்லா நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் உர்தூ மொழி பற்றிய பிரச் சினையை எழுப்பினார்.
உர்தூ மொழி பல வழிகளி லும் புறக்கணிக்கப்படுவதாக வும், உர்தூ பத்திரிகைகளில் விளம்பரம் அளிப்பதிலும் கூட பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உர்தூ முஸ்லிம்கள் பேசும் மொழி என்பதால் இந்த புறக்கணிப்பு நடைபெறுவதாகவும் குறிப் பிட்டார்.
உர்தூ ஒரு இனிமையான மொழி அதை புறக்கணித்து விட்டு சரித்திரத்தை எழுத முடி யாது. தொடர்ந்து உர்தூ மொழி புறக்கணிக்கப்பட் டால் போராட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்துர் ரஹ்மான் பேச்சு
இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது- உர்தூ இந் நாட்டின் தேசிய மொழி. இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த மொழி. உர்தூ இந் நாட்டின் கலாச்சார சின்னம். எல்லா வகையிலும் அம் மொழி முக்கியப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு முலாயம்சிங் அவர் கள் உர்தூ மொழி பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். அவரது கூற்று 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உர்தூ மொழிக்கான அனைத்து முக்கியத்துவத்தை யும் இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆஸாத், மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, பாரதீய ஜனதா கட்சியின் சத்ருகன் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட் டோரும் உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரணாப் முகர்ஜி பதில்
அவை முன்னவரும், மத்திய நிதித்துறை அமைச்சருமான பிரணாப் முகர்ஜி இதற்கு பதில் அளித்து பேசுகையில், எந்த நிலையிலும் உர்தூ மொழி புறக்கணிக்க முடியாத ஒன்று. மூத்த மொழிகளில் ஒன்று. அரசின் விளம்பரங்கள் உர்தூ பத்திரிகை களுக்கு வழங்கப்பட வில்லை என்று தெரிய வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்ப தற்குத் தயாராக இருக்கி றோம்.
உர்தூ மொழி மதித்துப் போற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது புகழாரம்

புதுடெல்லி, ஆக.5-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது முஹம் மதலி ஷிஹாப் தங்ஙள், சமூக நல்லிணக்கத்துக்கும் - மதச்சார்பற்ற ஒற்றுமைக் கும் பாடுபட்டவர் என்று அவரது தபால் தலை வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய ரயில்வே துறை இணைய மைச்சரும், இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத்தலைவருமான இ.அஹமுது புகழாரம் சூட்டி னார்.

தபால் தலை வெளியீடு
சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙளின் தபால் தலை வெளியீட்டு விழா புதுடெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடை பெற்றது. தபால் தலையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்திய இ. அஹமது கூறியதாவது-

மறைந்த தலைவர் செய்யது முஹம் மதலி அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் நினைவு தபால் தலையை வெளியிட முடிவெடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் எனது சார்பாகவும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பாகவும் இதயங் கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

எப்போதெல்லாம் நான் பிரதமரை சந்திக்கின் றேனோ அப்போதெல் லாம் அவர் ஷிஹாப் தங் ஙள் அவர்களுக்கு அவரது நல்வாழ்த்துக்களையும், பெருமதிப்பையும் தெரி வித்துக் கொள்ளும்படி கூறுவார். அவரது இந்த பெருந்தன்மைக்கு நன்றி கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங் களது மறைந்த தலைவரின் பால் சோனியாகாந்தி கொண்டிருந்த பற்றிற்கும், பரிவிற்கும் நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இ.ய+. முஸ்லிம் லீக் -
காங்கிரஸ் உறவு

மறைந்த தங்ஙள் சாஹிப் அன்னை சோனியா காந்தியை சந்தித்த போது அவர் காங்கிரசுக்கும், முஸ்லிம் லீகுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடித்து வருகிறது என்றும், அதை அவரது மாமியார் இந்திரா காந்தியும் தங்ஙள் அவர் களின் மாமனார் செய்யது அப்துர் ரஹ்மான் பாபாக்கி தங்ஙள் ஆகியோ ரும் தொடங்கி வைத்தார் கள் என்றும் அதனை நான் எதிர்காலத்தில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண் டும் என்று கூறியதையும் நான் இங்கு நினைவுகூரு கிறேன்.

ஷிஹாப் தங்ஙள் அவர் கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தின் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1936 மே மாதம் 4-ம் தேதி மலப்புரத்தில் பிறந்த தங்ஙள் பானக்காடு சையத் அஹமது ப+க் கோயா தங்ஙள் அவர்க ளின் மூத்த மகனாவார்.
முஸ்லிம் லீகின்

ஒப்பற்றத் தலைவர்

தங்ஙள் சாஹிப் உயர்நிலைக் கல்வியையும், ஆரம்ப மதக் கல்வியையும் முடித்த பிறகு எகிப்து சென்று அங்கே அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத் தில் அரபி மொழியில் மேற்பட்டப்படிப்பை முடித்தார். 1975-ல் அவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கேரள மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். அந்த பொறுப்பில் 2009-ல் அவர் மறையும்வரை இருந்தார். தங்ஙள் சாஹிப் கேரளா வில் முஸ்லிம் சமூகத்தில் ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.

நூற்றுக்கணக்கான மஹல்லாக்களில் காஜி யாக இருந்திருக்கிறார். கேரளாவிலும் மற்ற தென் னிந்திய பகுதிகளிலும் ஏராளமான கல்வி, சமூக இவற்றின் கலாச்சார நிறுவ னங்களின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் அவரி டம் வாழ்த்துக்களையும், வழிகாட்டல்களையும் பெறுவதற்கு ஏராளமான பேர் கூடும் யாத்ரீகர்கள் ஸ்தலம்போல் அவர் வீடு விளங்கியது.

கல்வி வளர்ச்சிக்கு
பாடுபட்டவர்

மலபார் பகுதியில் பின் தங்கிய ஊர்களில் தரமான கல்வியை வழங்குவதற்கு அவர் பல கல்வி நிறுவனங் களை ஏற்படுத்தினார்.

அவரது மறைவால் கேரளா ஒரு உன்னதமான பெருமகனை இழந்து விட்டது. தங்ஙள் சாஹிப் வளைகுடா நாடுகளிலும் பிரபலமடைந்திருந்தார். அரபு நாடுகளின் அரச குடும்பத்தினருடனும், மற்ற தலைவர்களுடனும் அவர் நேரடி தொடர்பு வைத்திருந்தார். இந்திய - அரபு நாடுகளின் உறவுக்கு அவர் ஒரு நல்லெண்த் தூதராக விளங்கினார்.
அவர் சமூக நல்லிணக் கம், மதச்சார்பற்ற ஒற் றுமை ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட்டார். அனைத்து வகையான வன்முறைகளையும் கைவிட வேண்டும் என்று மக்களை அவர் வற்புறுத் தினார்.

மத நல்லிணக்கத்துக்கு
உழைத்தவர்

1992-ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, அவர் மக்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். அவரது அழைப்பு கேரளாவில் அதிசயத்தை ஏற்படுத்தி யது. இந் நிகழ்வு ஷிஹாப் தங்ஙளுக்கு மக்கள் மத்தி யில் உள்ள செல்வாக்கை காட்டுகிறது.

அவருடன் அரசியல் ரீதியில் கருத்து மாறு பாடுகள் கொண்டிருந்தவர் கள்கூட அவரிடம் மதிப்பு காட்டினார்கள். தங்ஙள் சாஹிப் 2009 ஆகஸ்டு 1-ம் தேதி மறைந்து விட்டார். அப்போது அவரது இல்லத்திற்கு சாரிசாரியாக இறுதி மரியாதை செலுத்த வந்த மக்கள் கூட்டம் அவர் மீது கொண்டிருந்த பாசம், நேசம், நன்மதிப்பு ஆகிய வற்றை உணர்த்தியது.
இந்த தேசத்தின் மிக உன்னதமான தலைவர் களில் ஒருவராக அவரை வரலாறு அங்கீகரித்து நினைவ+ட்டுகிறது. அல்லாஹ் அவர்களின் நற் செயல்களை அங்கீகரித்து நல்லடியார்கள் கூட்டத் தில் சேர்த்தருள்வானாக.

இவ்வாறு இ.அஹமது குறிப்பிட்டார்.

Thursday, August 5, 2010

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

http://muslimleaguetn.com/news.asp

நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புலம் பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்கள் தொடர்பான எனிமி பிராபர்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது நிறுத்தப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தா னுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்தபோது தங்கள் சொத்துக்களை அப்படி அப்படியே விட்டுச் சென் றனர். அந்த சொத்துக்களை புலம் பெயர்ந்தோரின் வாரிசுகள் மற்றும் உறவி னர்கள் அனுபவித்து வந் தனர். இந்த சொத்துக் களில் பல அறக்கட்டளை களாகவும், முஸ்லிம்களின் நலனுக்கு பயன்படக் கூடியதாகவும் இருந்து வந் துள்ளன.
எனிமி பிராபர்டீஸ் பில்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்கள் விட்டுச் சென்ற இந்த சொத்துக் களை அரசே கையகப் படுத்த வகை செய்யும் மசோதா நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருந் தது. இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் உச்சநீதி மன்றம் உள்ளிட்ட இந்தி யாவின் எந்த ஒரு நீதி மன்றமும் இந்த விவகாரத் தில் தலையிட முடியாது என்றும், எந்த விசாரணையு மின்றி அரசே இதை கையகப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில் என்ற இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டால் பஞ்சாப், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தென் னகத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்படு வர் என்பதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் ஆலோசனை
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டம் நாடாளு மன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான்கான் இல்லத்தில் நேற்று மாலை (ஆக‌ஸ்ட் 3-ம் தேதி) நடைபெற்றது. பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங் களவை துணைத் தலைவர் ரஹ்மான்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது, மத்திய மரபுசாரா எரி சக்தித் துறை அமைச்சர் பருக் அப்துல்லா, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச் சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 26 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில்| என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா தேவையற்ற சர்ச் சைகளையும், விளைவு களையும் உருவாக்கும். புலம் பெயர்ந் தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை எனிமி பிராப்பரிட்டீஸ் என அழைக்கப்படுவது தேவையற்றது.
இதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்கவில்லை என்றும் எனவே, இதனை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமர் உத்தரவு
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக் கைகளை கவனமாகக் கேட்ட பிரதமர் உடனடி யாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு எனிமி பிராப் பரிட்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த கேட்டுக் கொண் டார்.
பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப் படுவது நிறுத்தப்பட்டது. இது நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் ஒட்டுமொதத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
உங்களுடன் ….

உண்மை சொல்வோம் ! நன்மை செய்வோம் ! என்ற லட்சியத்துடன் கடந்த 21 ஆண்டு காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ் ‘மணிச்சுடர்’
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்கள் தினத்தாள் முயற்சியை துவங்கியபோது அவர் முன் இருந்த கனவுகள் மணிச்சுடரின் தொடர் வரவால் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்திடம் உண்மை நடப்புகள் உடனுக்குடன் சென்றடைய வேண்டுமென்ற உயரிய நோக்கம் ‘மணிச்சுடர்’ மூலம் நிறைவேறி வருகிறது.
அதில் இடம் பெறும் செய்திகள் அன்றாடம் முஸ்லிம் லீக் இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன.
எத்தனையோ இதழ்கள் வெளிவரும் இக்காலக் கட்டத்தில் எதிலும் வெளிவராத பல செய்திகள் மணிச்சுடரில் மட்டுமே இடம் பெறுகிறது இதன் தனிச் சிறப்பு.
நல்ல செய்திகளை நாள்தோறும் தரும் ‘மணிச்சுடர்’ சமுதாயத்தின் மனசாட்சியாக மலர்கிறது. இதற்கு ஒத்துழைப்பும் உதவியும் பெருகுகிறது என்பதை காட்டும் வகையில் அனைவரின் ஆதரவும் தேவை.
ஒவ்வொரு ஆண்டும் ‘மணிச்சுடர்’ ரமளான் சிறப்பு மலர் வெளியிடப்பட்டு அது அனைவராலும் ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ரமளான் சிறப்பு மலர் இதுவரை வெளியான மலர்களில் முத்திரை பதிக்கும் மலராக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையால் வெளியிடப்படவுள்ளது.
இம்மலருக்கு சமுதாய பெருந்தகைகளின் ஊக்கமும், சிந்தனை யாளர்களின் ஆக்கமும் தேவை என்பதோடு வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் அவசியத் தேவை.
மலர் முன்கூட்டியே வெளிவர அவை உரிய காலத்தில் கிடைக்கப் பெற வேண்டும். இதற்கு உங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள
பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன்
ஆசிரியர் – ’மணிச்சுடர்’ நாளிதழ்

இம்மலரில் தங்களது ஆக்கங்களும் இடம் பெற விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை
காயிதே மில்லத் மன்ஸில்
36 மரைக்காயர் லெப்பை தெரு
சென்னை 600 001
போன் : 044 2521 8786 / 25217890 / 2524 7863
ஃபேக்ஸ் : 044 – 2521 7786
செல் : 944 3839 401 / 996 281 5495 / 98 407 52313
மின்னஞ்சல் : info@muslimleaguetn.com
www.muslimleaguetn.com


விளம்பரக் கட்டணங்களை அமீரகத்தில் செலுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
முதுவை ஹிதாயத் :
050 51 96 433
muduvaihidayath@gmail.com
லால்பேட்டை அப்துல் ரஹ்மான், அபுதாபி
050 282 1852

Tuesday, August 3, 2010

காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !

காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=330

அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !


நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து….

தொகுத்தவர் : மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது ( 99410 86586 )


sadayan sabu
dateWed, Aug 4, 2010 at 11:03 AM


அஸ்ஸலாமு அலைக்கும்

சிறுபான்மை கல்வி நிலையங்களாக கடந்த 1998 ல் இருந்து நம் சமுதாயத்திற்கும். மாற்று மத சமுதாயத்தினருக்கும் கல்விச்சேவை செய்து வரும் இரு கல்லூரிகளை மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது மறந்து விட்டார் போல் தெரிகிறது.

சுல்தானா அப்துலலாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி - கூத்தாநலலூர்

ராபியம்மாள் அஹமது மைதீன் மகளிர் கல்லூரி - திருவாரூர்

இரு கல்வி நிறுவனங்களும் கூத்தாநல்லூர்காரர்களால் நடத்தப் படுகிறது

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென் னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது.
இக்கூட்டத்தில் பங் கேற்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள், அனைத்து மாநில தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் சென்னை வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு ஏற் பாடுகளை இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைமை யகம் செய்ள்ளது.
தேசிய செயற்குழு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்ப+ரிலுள்ள ஃபைஜ் மஹாலில் நடைபெறு கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணை அமைச் சருமான இ.அஹமது தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விளக்க உரை யாற்றுகிறார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நடவடிக் கைகளை தேசிய அளவில் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்த சட்டத் திருத்தங்கள் செய்வது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இளைஞர் அணி மாநாடு
அரசியல் விழிப்புணர் வுடன் இளைஞர்களை ஒருமுகப்படுத்தவும், தீவிரவாதத்தின் வலையில் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வீழ்ந்து விடா மல் பொதுநலப் பணியாற் றவும் உரிய வழிகாட்டு தலைச் செய்ய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணி மாநாட்டை தேசிய அள வில் நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட உள்ளன.
நிர்வாகிகள் வருகை
தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் இ.அஹமது நேற்று (ஜூலை30) மாலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார்.
தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, தேசிய செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் ஆகியோரும் சென்னை வந்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களி லிருந்தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் செய லாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:
கர்நாடக மாநிலத்திலி ருந்து எம்.எஸ். இனாம் தார், மஹாராஷ்ரா மாநிலத் திலிருந்து சமீம் சாதிக், மேற்கு வங்காளத்திலிருந்து சலீம் மக்கர், ஆந்திர மாநி லத்திலிருந்து காலித் ஜிபைரி, ஆஸம் மொய்னு தீன், உத்திரபிர தேசத்தி லிருந்து கவுசர் ஹயாத் கான், முக்தர் ராணா, ஜார்கண்ட் மாநிலத்திலி ருந்து அம்ஜத் அலி, உத்தி ரகாண்ட்டிலிருந்து காஃலிப் ஹசன், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து முஹம்மது திலீர் கான், கேரளத்திலிருந்து ஹாமித் அலி சாம்நாட், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அம்ஜத் அலி, அட்வகேட் எம்.கே. ஹபீப் ஆகியோர் சென்னை வருகை தந்துள்ளனர், இன்னும் பல்வேறு மாநி லத்திலிருந்து வருகை தர உள்ளனர். கேரள மாநில நிர்வாகிகள் அனைவரும் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகை தருகின்றனர்.
வரவேற்பு ஏற்பாடுகள்
செயற்குழுவிற்கு வருகை தரும் தேசிய நிர்வாகி களையும், அனைத்து மாநில தலைவர்களையும் வரவேற்று உபசரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வழிகாட்டுதலில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் இப்பணிகளை ஒருங் கிணைத்து வருகிறார்.
மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பா ளர்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மீனம் பாக்கம் விமான நிலை யத்தில் இருந்தும், சென்னை சென்ட்ரல், எழும்ப+ர் ரயில் நிலைய பகுதிகளிலிருந்தும், அண்ணாசாலை உள் ளிட்ட முக்கிய இடங்களி லிருந்தும் பச்சிளம் பிறைக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரவேற்பு பதாகைகளும் வைக்கப்படுகின்றன.
இப்பணிகளில் வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் ஈடுபட் டுள்ளன.
முஸ்லிம் மாணவர் பேரவை
வரவேற்பு பணிகளை முஸ்லிம் மாணவர் பேரவையை சேர்ந்த டி.கே. ஷா நவாஷ், வி.ஏ. செய்யது பட்டாணி , வி. ஏ. செய்யது அபுதாஹிர், அப்துல் ரஹிம், இஸ்ஸத் மக்கி, அபுல் காசிம், எம்.அன்வர் உசேன், முஹம்மது உஸ்மான், ஏ.கே. முஹம் மது ரபி, அப்துல் ஹக், இம்ரான் கான், எம்.எஸ். காதர் உள்ளிட்டோர் சிறப்புற செய்து வருகின் றனர்.

Monday, August 2, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட தீர்மானங்கள்

கல்வி, வேலைவாய்ப் பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்கத் திருத் தங்களுடன் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் முஸ்லிம் களுக்கு உரிய பிரதிநிதித்து வம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள பைஸ் மஹாலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேசிய பொது செயலாளர் பேராசி ரியர் கேஎம். காதர் மொகி தீன், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசியச் செயலா ளர்கள் குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், பொதுச் செயலாளர் பி.கே. குஞ் ஞாலிக்குட்டி உள்ளிட்ட அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர்.


இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு-


சமூக ஒற்றுமை காப்போம்


1. இந்தியாவின் மதச்சார் பற்ற ஜனநாயக கட்ட மைப்பு சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க திட்டமிடும் தீய சக்திகளின் வலையில் வீழ்ந்து விட வேண்டாம் என்று அனைத்து இந்தியர்களை யும், குறிப்பாக இந்திய முஸ்லிம்களையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொள்கிறது.


பல்வேறு நம்பிக்கை களை கடைப்பிடிக்கும் மக்கள் சமாதான சகவாழ் வுடன் வாழ்ந்து கொண்டி ருப்பதை மதத்தின் பெய ரால் பல்வேறு வன்முறை களின் மூலமாகவும், அபா யகரமான கொள்கைகள் மூலமும் வெறுப்பையும், துவே ஷத்தையும் ஏற்ப டுத்த பயங்கரவாத அமைப் புகளின் எடுபிடிகளாக செயல்படுபவர்களின் பயங்கர முயற்சிகளுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


சிறுபான்மையினர் மற்றும் நம் சமூகத்தின் நலிந்த பிரிவினர் எதிர் கொள்ளும் பிரச்சினை களை ஜனநாயக வழியில் தீர்வு மேற்கொள்ள வேண் டும் என்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கிறது. உள் நோக்கத்துடன் செயல் பட்டு கொடுமையான குற் றங்கள் மற்றும் வன்முறை யில்


சமுதாயத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்


2. 1948-ம் ஆண்டு இந்திய முஸ்லிம் சமுதாயத் தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஸ்தாபனத் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் மற்றும் இஸ்லாமிய அறி ஞர்களும் வழிகாட்டியபடி மதச்சார்பற்ற ஜனநாயக நோக்கங்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்ற நம்பிக்கையுடன் உறுதி கொண்டுள்ளது.


கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், அனுதாபி யும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களும், முஸ்லிம் சமுதாயத்திற்கு களங் கத்தை ஏற்படுத்தும் வகை யில் நடந்து கொள்ளும் விஷமத்தனம் மற்றும் அபாயகரமான தூண்டு தலுக்கு பலியாகி விடாமல் விழிப்புடன் இருக்குமாறு சமூகத்துக்கு பிரச்சாரம் செய்யவும் சமுதாய ஒற் றுமை மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க இந்த செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக்கு கண்டனம்


3. சிறுபான்மையினர் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது பாசிச சக்திகள் கட்ட விழ்த்து விட்ட வன்முறை மற்றும் பயங்கரவாத தாக் குதல்களுக்கு இந்த கூட்டம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறது.


குஜராத் போன்ற மாநி லங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் கொடுமை களினால் சிறுபான்மை யினர் துன்பங்களையும், துயரங்களையும் அனுப விக்க வேண்டிய திருப்பதை தொடர்ந்து நாங்கள் வன் மையாக கண்டிக்கிறோம்.


சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச சக்திகள் நடத்தும் குற்றங்களுக்கு எதிராக பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்தியப் புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு பாராட்டுதலையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான் மையினருக்கு எதிராக பாசிச சக்திகள் நடத்தும் வன் முறைகளை தடுக்க அரசு அனைத்து நடவ டிக்கை களையும் உறுதி யுடன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


தமிழக அரசுக்கு பாராட்டு
4. சிறுபான்மையின சமுதாயத்தின் நன்மைக் காக மத்திய அரசு கொங்ணடு வந்துள் சமூக நலத் திட்டங்களை வலு வாக அமல்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த இந்த கூட்டம் கேட்டுக்கொள் கிறது.


சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட சமுதா யத்தின் சமூக மற்றும் கல்வி நிலையில் உள்ள இடர்ப் பாடுகளை போக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயற்குழு பாராட்டுகிறது.


கேரள அரசின் அலட்சியம்


5. சிறுபான்மையினருக் காக மத்திய அரசின் நலத் திட்டங்கள் கேரள மாநி லத்தில் இன்று நடை முறைப் படுத்தவில்லை என்று சுட்டிக் காட்டுவ தோடு . கேரள மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத் தினருக்கான நலத் திட்டங் களை நடை முறைப் படுத் துவதில் கேரள அரசு தவறி விட் டது என்பதையும் இக் கூட்டம் வலியுறுத்தி கூறு கிறது.


மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களின் பரிதாப நிலை


6. மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினரின் பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசு சிறுபான் மையினரின் முன்னேற்றத் திற்கான நீதியரசர் ராஜேந் தர் சச்சார் கமிட்டி பரிந் துரைகளை உறுதியுடன் நடைமுறைப் படுத்த அந்த மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண் டும் என இச் செயற் குழு கேட்டுக் கொள்கிறது.


தேசத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்


7. இஸ்லாத்தின் அடிப் படை கொள்கைகளின் அசைக்க முடியாத நம் பிக்கையுடனும், சகிப்புத் தன்மை, அமைதி, மதநல்லி ணக்கம், ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகிய வற்றை மனதில் கொண்டும் இந்தியாவில் மற்ற சமூகங் களுடன் ஒருங்கிணைந்து செய லாற்றவும், மதச் சார்பற்ற இந்திய ஜனநாய கத்தின் உறுதியை காப் பாற்ற உழைக்கவும் இந்திய முஸ்லிம்களை இச் செயற் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஒத்துழைப்பு


8. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக தொடர்வதில் பெருமை கொள்ளும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையை தயக்கமின்றி ஆதரிப்பதையும், பாசிச சங்பரிவார் அமைப்புகள் மற்றும் காலாவதியான கொள்கைகளை கொண்ட கம்யூனிஸ்டுகள் ஆகியவற் றுக்கு எதிராக மத்திய அரசு போராடுவதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தனது ஆதரவை நல்கும் என இச் செயற்குழு உறுதி ஏற் கிறது.


பன்முகத்தன்மை கொண்ட இந்த நாட்டில் சமூக நீதி மற் றும் கவுரவ மான வாழ்க்கையை முஸ்லிம்கள் அடைய தொடர்ந்து போராட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வற்புறுத்துகிறது.


வறுமை ஒழிப்புத் திட்டத்தை முன்னிலைப்படுத்துங்கள்


9. உறுதியான பொரு ளாதார பாதையில் தேசம் முன்னேற ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் போற்றத் தக்க நடவடிக்கைகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


அதேநேரத்தில் வளர்ச்சியின் பலன்கள் மிகவும் ஏழையாக உள்ள வர்களுக்கு போய்சேர வேண்டும். 30 சதவீதத் திற்கு அதிகமான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழே துன்பப் பட்டுக் கொண்டிருக்கி றார்கள். மேலும், கிராமப் புறங்களில் வேலையில் லாத் திண்டாட்டம் அதிக மாக உள்ளது.


வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களிலும் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பன் முகவேளாண்மை, தொழில் மற்றும் வர்த்தகத் திட்டம் போன்றவை முனைப்புடன் செயல் படுத்தப்பட வேண் டும் என்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.


விலைவாசியை குறைக்க நடவடிக்கை


10. ஏழைகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வருமானம் கொண்டவர்க ளுக்கும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை கொள்கிறது.


போதிய பயனை கொடுக்கும் வகையில் பொது விநியோகத் திட் டம் நிறைவேற்றப்பட வேண்டும். சட்டப்பூர்வ மான உணவு தானிய விநி யோகம் பலப்படுத்த வேண் டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஒழுங்கு படுத்தும் வகையில் சந்தையை அரசுகள் கட் டுப்படுத்தவது அவசியம் என்பதை இச் செயற்குழு சு.ட்டிக் காட்டுகிறது.


ராஜேந்திர சச்சார் கமிஷன் பரிந்துரைகள்


11. நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந் துரைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டுகிறது.


முஸ்லிம் மாணவர் களுக்கு பொருளாதார உதவிகள், 15 அம்சத் திட்ட நிறைவேற்றம், சிறு பான்மை கல்வி நிறுவனங் களுக்கு நன்மைகள் ஆகி யவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும்.


ஆனால், இன்னும் நிறைய செய்ய வேண்டி யுள்ளன. சமூக நல்லிணக் கம், மத நல்லிணக்கம் மற்றும் சமூக அமைதியை எவ்வளவு விலை கொடுத் தும் நிலை நிறுத்த வேண் டும். சிறுபான்மை சமூகத் தினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்கும் படி மத்திய அரசு வழி காட்ட வேண் டும்.


ஏற்க னவே உறுதிய ளித்த சமூக வாய்ப்புகள் ஆணையம் இன்னமும் அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறு பான்மை நலத்துறை சிறப் பாக தனது கடமைகளை நிறைவேற்றும் வகையில் போதிய அதிகாரம் வழங் கப்பட மத்திய அரசை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்து கிறது.


வஃக்பு வாரிய நிர் வாகம், ஹஜ் பயண நிர் வாகம் ஆகியவற்றை முறைப்படுத்த தேவை யான நடவடிக்கைகளை எடுக் கும்படி அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இச் செயற்குழு வேண்டு கோள் விடுக்கிறது.


குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி


12. கல்வி உறுதிச் சட்டத்தின் கீழ் குழந்தை களுக்கு இலவச கல்விக் கான உரிமையை அமல் படுத்த போதிய நடவடிக் கைகள் எடுக்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது.


முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிக்கூடங்களை திறக்க போதிய திட்டங்கள் தீட் டப்படவேண்டும். முஸ்லிம் இளைஞர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட் டம் வழங்கியுள்ள சிறு பான்மையினர்களுக் கான கல்வி உரிமைகளை உள் நோக்கத்தோடு தவறாக வழிகாட்டப்பட்ட சிலர் தடுக்க முயல்வதை எப்பாடு பட்டாவது தடுக்க வேண் டும் என இச் செயற்குழு வலியுறுத்துகிறது.


நாடாளுமன்ற - சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம்


13. பாராளுமன்றத்திலும் , மாநில சட்டமன்றங்களி லும் முஸ்லிம்களுக்கு உள்ள குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவலை தெரிவிக்கிறது.


தேசத்திலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகை 13 சதவீதமாக இருக்கின்ற போது மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித் துவம் 5.5 சதவீதமாகவே உள்ளது. அதேபோன்று மாநில சட்டப் பேரவை களிலும் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறiவாக உள்ளது. நமது ஜனநாயக ஆட்சி முறை ஆரோக்கியமாக செயல்பட நாடாளுமன்றத் திலும், மாநில சட்டமன் றங்களிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு போதிய பிரதிநிதித் துவம் கிடைக்க தக்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயற்குழு வலியு றுத்துகிறது.


ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள்


14. கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைக்க வழி செய்யும் வகையில் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் தக்க திருத்தங்களுடன் மிக விரைவாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இச்செயற்குழு வலி யுறுத்தி கேட்டுக் கொள் கிறது.


மேற்கண்டவாறு தீர் மாங்கள் நிறைவேற்றப்பட் டன.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூறினார்.

Sunday, August 1, 2010

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு


http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=603&cat=32