Friday, July 30, 2010

கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம் ! சிறைத்துறை அமைச்சர் உறுதி !!

கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம் ! சிறைத்துறை அமைச்சர் உறுதி !!
முஸ்லிம் லீக்கின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு !!!

சென்னை : கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதி அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் அகில உலக ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை சிறையில் உள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனையடுத்து அக்குடும்பத்தாரின் கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி. யாக இருந்த திருமிகு ஷியாம் சுந்தர் அவர்களை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார்.

( தற்பொழுது ஷியாம் சுந்தர் அவர்கள் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார் )

சிறைத்துறை அமைச்சர் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வீணாக ஆர்ப்பாட்டம், போராட்டம் ஏதும் நடத்தாமல் முறையாக அணுகி சிறைக்கைதிகளின் கோரிக்கையினை அன்போடும், தகுந்த முறையிலும் உரிய இடத்தில் சேர்க்கும் முறை வரவேற்கத்தக்கது என்றார்

அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.யின் ப‌ணிக‌ளைப் பாராட்டும் தி ஹிந்து நாளித‌ழ் மூத்த‌ உத‌வி ஆசிரிய‌ர்

அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.யின் ப‌ணிக‌ளைப் பாராட்டும் தி ஹிந்து நாளித‌ழ் மூத்த‌ உத‌வி ஆசிரிய‌ர்

syedmuthahar@thehindu.co.in
dateFri, Jul 30, 2010 at 5:32 PM

Dear Hidayath Sahib, Assalamu Alaikum.

I happened to hear the speeches made by Mr. Abdul Rahman, MP, in the Lok Sabh on a few occsion live in the Lok Sabha TV. He has done extremely well in presenting his points on the given subject as an experienced Parliamentarian. Kindly request your friends to view the Lok Sabha TV whenever the Parliament session is in progress.
Vassalam.

Syed Muthahar / Sr. Assistant Editor / The Hindu / Tiruchi.




AbdulSubhan AbdulRaguf (ADNOC MKT)
dateFri, Jul 30, 2010 at 5:22 PM

Assalamu Alaikum.
Dear Brothers,

Whoever raises the question, they have to use their wisdom. Whatever capacity Br. Abdul Rahman MP holds, he uses its maximum objectivity to envisage the message of the whole community in the Parliament which hitherto other muslim MPs of various parties were not doing at any number of times. Air-India Express budget airlines from Abu Dhabi/Dubai to Tiruchirappalli/Chennai contributed to the public due to the strenuous efforts of IUML gulf members and enlightened the issue in the parliament by Bro. Khader Moideen, Ex-MP.

I request the brothers to give positive comments instead of raising negative questions and ridiculing the integrity of the beloved Br. Abdul Rahman, MP.

Wassalam,

A.S. Abdul Rauf ., M.A. (Pub. Admin.)
Gas &Sulphur Division
Marketing & Refining Directorate
Abu Dhabi National Oil Company (ADNOC)
P.O. Box 898, ABU DHABI – U.A.E
TEL : 00971-2-6023983 (Direct)

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அதிராம்பட்டி னத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். மேலும் அவர் கூறியதா வது:

வரலாற்று சிறப்புமிக்க அதிராம்பட்டினத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சுதந்திரத்திற்குப் பிறகு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் 3 லட்சியத்திற்காக தோற்று வித்தார்கள்.

பல்வேறு மொழி, இனம் என வேறுபாடுகள் நிறைந்த இந்நாட்டில் தேசிய ஒற்றுமைக்காகவும், ஒருமைபாட்டிற்காகவும் பாடுபடுதல், சமய நல்லிணக்கம், கலாச்சாரத் தன்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் லீகை தோற்றுவித்தார்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் பல் லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குழப்ப மான சூழ்நிலையில் காயிதெ மில்லத் அவர்கள் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்.
சுதந்திரத்திற்குப்பின் காயிதெ மில்லத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது இந் தியா-சீனா போர் ஏற்பட்டி ருந்தது. அப்போது அவர் தனது உரையில்,
இந்திய நாட்டிற்காக எனது மகனை போருக்கு அனுப்ப தயாராக இருக்கி றேன் என்று கூறினார். இது இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை நிரூபிப்பதாக இருந்தது.
கஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை முஸ்லிம் லீகின் நிலைப்பாடு தெளி வாக உள்ளது. கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடி யாத ஒரு பகுதி என்பது முஸ்லிம் லீகின் நிலைப்பா டாகும் என்று குறிப்பிட் டார். மேலும் முஸ்லிம் லீக் தேசிய ஒருமைப்பாட்டை தொடர்ந்து காத்து வருகி றது. இ.அஹமது அவர்கள் முஸ்லிம் லீகின் நிலைப் பாட்டை பற்றி ஐ.நா.சபை யில் உரையாற்றியபோது, இந்திய முஸ்லிம்கள் 1400 வருடங்களாக இஸ் லாத்தை பின்பற்றி வரு கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவிற்குள் இஸ்லாம் வந்தது. எனவே, இங்கிருக் கும் முஸ்லிம்கள் இந்திய நாட்டின் மைந்தர்களாவர் என்று கூறினார்.
மேலும், இ. அஹமது அவர்கள் கடந்தமுறை வெளியுறவுத்துறை அமைச் சராக இருந்தபோது, முஸ்லிம் லீகின் தலைவர்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபட்டு தொடர்ந்து ஒருமைப்பாட்டை காத்து வருகின்றனர்.
சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்கம்- இது முஸ்லிம் லீகின் இரண்டா வது குறிக்கோளாகும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மக்களை அமைதிப்படுத்தியது.
மீனாட்சிபுரத்தில் தாழ்த் தப்பட்ட மக்கள் இஸ்லாத் தால் கவரப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை பயன்படுத்தி இந்துத்துவா அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் அந்த சூழ் நிலையில் முஸ்லிம்களை அமைதிப்படுத்தி சமய நல்லிணக்கம் காத்தது.
அதேபோல, டிசம்பர் 6 சங்பரிவாரால் பாபர் மஸ் ஜித் இடிக்கப்பட்ட போதும் இந்தியா முழுவ தும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட னர். ஆனால், முஸ்லிம் லீக் வலுவாக உள்ள கேரளா மற்றும் தமிழகதில் இந்த கலவரம் அமைதிப்படுத் தப்பட்டது. இந்த மாநிலங் களில் முஸ்லிம்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற் படாமல் காக்கப்பட்டது. இதனை செய்தது முஸ்லிம் லீக்.
பல்வேறு அமைப்புகள் பாபர் மஸ்ஜிதை மீட்க போராட்டங்களை அறி வித்தன. ஆனால் யாராலும் அதனை மீட்க முடிய வில்லை. ஆனால், முஸ்லிம் லீக் கேரள மாநில தலை வர் ஷிஹாப் தங்ஙள் அவர் கள் கேரள முஸ்லிம்களை அமைதிப்படுத்தியதோடு ஒரு பள்ளிக்கு பதிலாக இதுவரை 100 பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளார். இதுவே முஸ்லிம் லீகின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
சென்னையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் முதல்வர் கலைஞர் உட்பட பல தலைவர்களை அழைத்து அமைதி கூட் டத்தை நடத்தினார்.
மேலும் தமிழகத்திலும் பதற்றமான சூழ்நிலையில் திருச்சியில் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் காவல்துறை வாகனத்தில் அமர்ந்துகொண்டு மக் களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி நட வடிக்கைகளை முஸ்லிம் லீக் மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் நாங்கள் பாபர் மஸ்ஜிதை மீட்கிறோம் என்று சொல்லி இதுவரை ஆயி ரக்கணக்கான போராட் டங்களை நடத்தி விட்டன. பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மக்களிடம் வசூல் செய்தும் விட்டன. அவர்கள் இதுவரை செலவழித்த தொகையைக் கொண்டு புதிதாக பத்து பள்ளிகளை கட்டியிருக் கலாம்.
ஆனால், முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆக்கப்ப+ர்வ பணிகளை செய்து வருகி றது. முஸ்லிம் லீகின் உறுப் பினர்கள் கேரள சட்ட மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து பாபர் மஸ்ஜித் விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர் மானம் கொண்டு வந்தனர்.
இதனை உச்சநீதி மன்றமே பிரதமரிடம் வலியுறுத்தியது. இது போன்று தொடர்ந்து சட்ட அவைகளில் குரல் எழுப்பி வருவது முஸ்லிம் லீக் மட்டுமே.
மேலும், டிசம்பர் 6 அன்று மற்ற அமைப்புகள் போராட்டங்களுக்கு முஸ்லிம்களை அழைக் கின்றனர் பிற சமூக மக்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் முஸ்லிம் லீக் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று சமூக நல்லிணக்க கூட்டங்களை நடத்தி அனைத்து மதத்த வர்களையும் அழைத்து பாபர் மஸ்ஜிதிற்காக குரல் எழுப்பி வருகிறது.
கலாச்சார தனித்தன்மை
முஸ்லிம் லீகின் முக்கிய கொள்கையான சிறு பான்மை முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன் மையை காக்க தொடர்ந்து போராடி வருகிறது. தனி காலாச்சாரம் என்பது முஸ்லிம்கள் தொப்பி அணிவது, தாடி வைப்பது, இறந்தவர்களை அடக்கும் முறை, தனி சொத்துரிமை சட்டங்கள் உள்ளிட்ட ஷரீஅத் சட்டங்களாகும். இதனை காக்க முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஒரு சமயம் முஸ்லிம் களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சட்டம் முன்வரைவு விவாதத்திற்கு வந்தபோது அதனை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து போராடிஷரீஅத் சட்டத்தை காத்தது.
1955ல் ஷரீஅத் இயக் கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அதன் மூலம் முஸ்லிம்களின் ஷரீ அத் பாதுகாப்பு சட்டம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இதேபோல் ஒலிப் பெருக்கியில் பாங்கு சொல் வதும் விவாதத்திற்கு வந் தது. இதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் கொடுத்து ஒலிபெருக்கி யின் மூலம் பாங்கு சொல் வதை உறுதிப்படுத்தியது.
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக்
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காயிதெ மில்லத் அவர் களின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல முஸ்லிம் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன.
உதாரணமாக, சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, சதக் கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகள் ஏற் படுத்தப்பட்டன. இதேபோல் கேரளாவி லும் பல கல்லூரிகள் முஸ் லிம் லீகினால் ஏற்படுத்தப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
காயிதெ மில்லத்தை தொடர்ந்து சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் புதுக் கல்லூரி தலை வர் மியாசி ஓமியத் போன்ற முஸ்லிம்களின் கல்வி ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி களையும், இன்றைய தலை வர் பேராசிரியர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி யில் ஏழை மாணவர் களுக்கு விடுதி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கல்விக்காக செய்த வரலாற்று செய்தி களாகும்.
இட ஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு களத்தில் முஸ்லிம் லீகின் பணி மிக முக்கியமானது.
முஸ்லிம்களில் பல் வேறு பிரிவினர்களாக இருந்த தக்னி, லெப்பை, மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகளை ஒரே பிற்படுத் தப்பட்ட இனத்தில் சேர்த்து இடஒதுக்கீடு சிக்கலை தீர்த்துவைத்தது.
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் உர்தூ, தெலுங்கு மொழி சிறுபான்மையினர் பாதிக் கப்படுவதாக கருத்து எழுந் துள்ளது. அதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் எழுப்பி வருகிறது.
மேலும், பேராசிரியர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்றி னைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி அறிய ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமரி டம் வலியுறுத்தினார். அதன் அடிப்படையி லேயே சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிட்டி கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், 62 வருட சுதந் திர இந்தியாவில் இப் போதுதான் சிறுபான்மை நல அமைச்சகம் முஸ்லிம் லீகின் முயற்சியால் ஏற் படுத்தப்பட்டது.
2010-11 வருடத்திற்கான சிறுபான்மை மாணவர் களுக்கான கல்வி ஒதுக்கீடு 2,600 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. இதுவும் முஸ்லிம் லீகின் சாதனையாகும்.
மேற்கூறிய தகவல் அனைத்தும் சட்டமன்ற பாராளுமன்ற கஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒரு தெளிவற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின் றன. காயல்பட்டினத்தில் தி.மு.க., வுக்கு ஆதரவும், சென்னை துறைமுகத்தில் எதிர்ப்பும் காட்டி தெளி வற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின்றன.
த.மு.மு.க. என்ற அமைப்பு இப்போது பல பிரிவுகளாக பிரிந்து ம.ம.க. என்று அரசியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பும் புதிதாக தோன்றியுள்ளது. இது மனித நீதி பாசறை என்றும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்றும் இப் போது எஸ்.டி.பி.ஐ., என்று அடிக்கடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்புகளில் முஸ் லிம் என்ற பெயர் இல்லை. புதிய சட்ப்படி யாரும் சாதி சமயங்களின் பெயரை வைக்க முடியாது. துவங் கிய காலம் முதல் முஸ்லிம் என்ற பெயரிலும் இச்ச முதாயத்திற்கு நாம் பாடு பவது இறைவன் நமக்கு கொடுத்த நஃமத்-அருட் கொடை. பெயரையே தேர்வு செய்ய முடியாத அமைப்புகள் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?.
மேலும் டி.என்.டிஜே. 15 லட்சம் முஸ்லிம்களை தீவுத்திடலிலே கூட்டுவதாக அறிவித்தது. தீவுத்திடலில் சில ஆயிரம் மக்களுக்கு மேல் அமர முடியாது.
தமுமுக பணபிரச்சினை யின் காரணமாகவே டி. என்.டி.ஜே அமைப்பு உரு வானது. எங்கேயாவது பணத்திற்காக முஸ்லிம் லீக் பிரச்சினை செய்வதை காட்டமுடியுமா?
மேலும் ம.ம.க. போயஸ் கார்டனும் கோபலாபுர மும் எங்களை தேடி வர வேண்டும் என்று கூறினர். பிறகு, அவர்களால் நடிகர் சரத்குமாரைத்தான் வழிய சென்று பார்க்க முடிந்தது.. மேலும் பாராளுமன்ற தேர் தலில் படுதோல்வியையும் சந்தித்தனர்.
ஆனால், முஸ்லிம் லீக் இதுவரை தெளிவான அர சியல் முடிவுகளை எடுத்து வருகிறது. தனது முடிவை அடிக்கடி மாற்றும் பழக் கம் முஸ்லிம் லீகிற்கு இல்லை.
தீவுத்திடலிலே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு நடந்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தி-மு.கவிற்கு இணையான கூட்டம் இது என்று புகழாரம் சூட்டி னார். எனவே, மாற்று கட்சியனரும் புகழும் இயக்கமாகவே முஸ்லிம் லீக் இருந்து வருகிறது.
எனவே, பல்வேறு அமைப்பினரும் அரசியல் ரீதியாக ஒரே தலைமையின் கீழ் இணைந்து முஸ்லிம் லீகை பலப்படுத்தவேண் டும் என்று கேட்டுக் கௌ;கிறேன். மேலும், ஜமாஅத்தார் கள் மத்திய மாநில அரசுகளின் சலுகை களை அறிந்து அதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் உரையாற்றினார்.

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு இர‌ண்டு கேள்விக‌ள் என்று உலாவி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌லுக்கு எம்.அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. அவ‌ர்க‌ள் அளித்துள்ள‌ ப‌தில் இதோ

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு இர‌ண்டு கேள்விக‌ள் என்று உலாவி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌லுக்கு எம்.அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. அவ‌ர்க‌ள் அளித்துள்ள‌ ப‌தில் இதோ



அன்புச் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

எந்த‌க் கேள்வியாக‌ இருந்தாலும் அது ச‌முதாய‌த்திற்குப் ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் இருப்பின் அது வர‌வேற்க‌த்த‌க்க‌தே. அது உண்மையில் அத‌ன் நோக்க‌த்தை தெளிவுப‌டுத்தும். ஆனால் இங்கு ச‌கோத‌ர‌ர் கேட்டுள்ள‌ கேள்வி பாராளும‌ன்ற‌த்தில் என‌து இருக்கை என்ன‌வென்று. இது ச‌முதாய‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்க‌க் கூடிய‌ கேள்வியா ? இல்லை யாருக்கும் தெரியாத‌ ஒன்றா ? இக்கேள்வி கேட்டு கிண்ட‌ல் செய்வ‌த‌ன் மூல‌ம் ச‌கோத‌ர‌ர் த‌ன‌து த‌குதியை வெளிப்ப‌டுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்க‌ முடிகிற‌து. இதுபோன்ற‌ கேள்வி கேட்டு அவ‌ர் ம‌கிழ்ச்சி பெற‌க்கூடிய‌வ‌ரென்றால் என‌து ப‌தில் இதோ :

எந்த‌ வ‌ழியான‌ பிரதிநிதித்துவ‌ம் என்ப‌தை விட‌ ந‌ம‌து ச‌முதாய‌த்தின் ப‌ங்களிப்பு பாராளும‌ன்ற‌த்தில் இருந்திட‌ வேண்டும் என்ப‌து தான் எந்த‌ ஒரு சாமான்ய‌ முஸ்லிமின் உண‌ர்வாக‌ இருக்க‌ முடியும். என‌து போட்டி ச‌முதாய‌ ந‌ல‌ன் க‌ருதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கினால் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று. ஒரு குறிப்பிட்ட‌ சின்ன‌த்தில் நின்று வெற்றி பெற்ற‌தால் திமுக‌ வின் உறுப்பின‌ர் என்று கூற‌ விரும்புகிறீர்க‌ள். இதுபோன்ற‌ கேள்விக‌ளை ச‌கோத‌ர‌ர்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்ப‌தை விட்டு விட்டு ச‌முதாய‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் ஆரோக்ய‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன்வைத்தால் வ‌ர‌வேற்கிறேன். அறிவு‌பூர்வ‌மான‌ ஆலோச‌னைக‌ளை வ‌ர‌வேற்கிறேன்.

மேலும் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌மாக‌ என‌து பாராளும‌ன்ற‌ உரைக‌ளை கேட்டிருப்பீர்க‌ளேயானால் என‌து பாராளும‌ன்ற‌ ப‌ங்க‌ளிப்பின் மூல‌ம் ச‌முதாய‌த்தின் குர‌லாக‌ எந்த‌வ‌கையில் எல்லாம் குர‌ல் எழுப்ப‌ இய‌லுமோ அவ்வாறெல்லாம் எழுப்பியுள்ளேன். இத‌ற்கு யாருடைய‌ இடையூரும் எந்த‌வித‌த்திலும் கிடையாது. மென்மேலும் ந‌ல்ல் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌டைபெற‌ துஆச் செய்திட‌வும். நீங்க‌ள் ஒரு ந‌ல்ல முஸ்லிம் ச‌கோத‌ரராக‌ இருந்தால் ஆரோக்ய‌மான‌ க‌ருத்துக்க‌ளையும், அறிவுரைக‌ளையும் கொண்டு வாருங்க‌ள். இதுபோன்ற‌ ச‌முதாய‌த்திற்குப் ப‌ல‌னில்லாத‌ க‌ருத்துக்க‌ளைத் த‌விர்த்துக்கொள்ளுங்க‌ள்.

மேலும் என‌து மூன் டிவி க‌ல‌ந்துரையாட‌ல் சாதி வாரி ம‌க்க‌ள் தொகைக் க‌ண‌க்கெடுப்பு குறித்த‌தே. இட‌ஒதுக்கீடு குறித்த‌த‌ல்ல‌. ச‌கோத‌ர‌ர் கேட்ட‌ கேள்விக்கான‌ பதில் இதோ :

நீதிய‌ர‌ச‌ர் ரெங்க‌நாத் மிஸ்ரா க‌மிஷ‌ன் முஸ்லிம்க‌ளுக்கு ப‌ரிந்துரைத்துள்ள‌ ப‌த்து ச‌த‌வீத‌ இட‌ ஒதுக்கீட்டிற்கு சென்னையில் ந‌டைபெற்ற‌ க‌மிஷ‌னின்ல் க‌ல‌ந்துரையாட‌லில் முஸ்லிம் லீக்கின் எழுத்துப்பூர்வ‌ வேண்டுகோளும் ஒரு பிர‌தான‌ கார‌ண‌ம் என்ப‌த‌னை இங்கு குறிப்பிட‌ விரும்புகிறேன். பார்லிமெண்டிற்கு உள்ளும், வெளியும் என‌து க‌ருத்துக்க‌ளை கேட்டிருப்பீர்க‌ளேயானால் இட‌ ஒதுக்கீடு குறித்து என‌து ப‌ங்க‌ளிப்பு தெரிய‌வ‌ரும். பாராளும‌ன்ற‌ தொட‌ரில் இக்க‌மிஷ‌னின் ப‌ரிந்துரை விவாவ‌த‌த்திற்கு வ‌ரும் போது என‌து உரையினைக் காண‌ காத்திருங்க‌ள் இன்ஷா அல்லாஹ்.

எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.
புதுதில்லியிருந்து............


2010/7/29 abdul rahman

Assalamu Alaikum

Reply to those two questions:


1) If the question is not known to any one and there is a curiosity on the basis of community welfare, such question can be welcome. It will serve the real purpose. But here our brother has asked to redicule my placement in parliament which shows the nature of his quality. If he wants to enjoy by asking such question, please note that this is my reply:

As even an ordinary muslim realises that our ways of placement in Parliament is so important than any other creteria to represent us, my contest has been wisefully determined by Muslim League irrespective of symbol concerned matter. As per symbol, your intention of rediculing can be achieved to say as DMK, but try to come forward with healthy comments and advices which will be beneficial to the society.

In addition, try to encourage by referring to my speeches and involvements in favour of our community during the past one year service after I became MP which clearly proved that my placement in parliament alone is our significant creteria without having anyone's pressure in exercising our mission. Please do Dua for further more good events to happen. If you are a good muslim, please try to come up with far-sighted vision and healthy mission by avoiding such rediculous comment.

2) My interview in Moon TV was on the title of 'Caste based Census' and not on 'Reservation'. As the question was asked, this is my reply:

Please note that Renganath Misra Commission Report's recommendation of providing 10% reservation to Muslim community itself was Muslim League's specific written request to Commission's consideration during its interaction event in Chennai. Focussing my part on this issue, please refer to all my speeches in and outside the parliament. In addition, please wait for my participation in the debate when it comes in parliament.

Thanks.

Abdul Rahman


---------- Forwarded message ----------
From: iq bal
Date: 2010/7/28
Subject: Fw: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்
To: muduvai idayath





.SheiqB


----- Forwarded Message ----
From: AbuFaaiz

To: tamilmuslimbrothers ; tmmkgulf ; Tmmk
Sent: Wed, 28 July, 2010 3:06:55 PM

Subject: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்

Assalamu Alaikkum

சென்ற வெள்ளிக் கிழமை சகோ.அப்துல் ரஹ்மான் (பாராளு மன்ற உறுப்பினர்) அவர்கள் மூன் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு பற்றிய ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. நேயர்களும் கேள்வி கேட்கலாம் என்று ஒரு தொலைபேசி நம்பர் இருந்தது. நாம் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு 2 கேள்விகள் கேட்டோம். ஆனால் அந்த மாதிரி கேள்விகள் கேட்கப் படாது என்று கூறிவிட்டார்கள். அதே கேள்வியை வைக்கின்றோம்.

1. நீங்கள் தற்போது திமுக எம்.பியா? முஸ்லிம் லீக் எம்.பியா?

2. தற்போதுள்ள நிலையில் (அந்த நிலையை அவர் தான் சொல்லியிருப்பார்) முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கிடைக்க என்ன செய்துள்ளீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்?

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் நகரில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்,பொதுச் செயலாள‌ர் கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில்,மாவட்டத் தலைவராக லால்பேட்டை அல்ஹாஜ் கே.ஏ.அமானுல்லாஹ்,செயலாள‌ராக விருதாச்சலம் ஏ.சுக்கூர்,பொருளாள‌ராக பி.முட்லூர் அப்துல் கப்பார் உள்ளிட்ட மாவட்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் பங்கேற்க்க தாயகம் சென்றுள்ளஅமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச் செயலாள‌ர் ஏ.முஹம்மது தாஹா
கடலூர் மாவட்டத் தலைவர் அமானுல்லாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ம‌ற்றும் அபுதாபி மண்டலச் செயலாள‌ர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tuesday, July 20, 2010

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்| : முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு கோரிக்கை

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்| : முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு கோரிக்கை

காஞ்சிபுரத்தில் 17-07-2010 அன்று மாநிலத் தலை வரும், தேசியப் பொதுச் செயலாளருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அவசர பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு-
1. உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டினை உலக வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் வகை யில் நடத்திய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்க ளுக்கும் இப் பொதுக்குழு நன் றியையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்க ளால் அமையப் பெற வுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம் மொழிச் சங்கத்தில் அரபுத் தமிழ் குறித்த ஆய்வு அமர்வும் ஏற்படுத்திட தமிழக அரசை இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
3. புனித ரமளான் மாதத்தில் வழக்கம்போல நோன்புக்கஞ்சி காய்ச்சு வதற்கு மானிய விலையில் பச்சரிசி வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக அரசை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இதுபோல நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு வீட்டு உபயோகத்திற்கு தரப்படுவ தைப் போல ஒரு மாதத் திற்கு மட்டும் மானிய விலையில் எரிவாயு கியாஸ் இணைப்பு வழங்க வேண் டும் எனவும் தமிழக அரசை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதோடு தமிழக முதல்வரும், தமிழக துணை முதல்வரும் சிறப்பு கவனம் செலுத்திட இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. தமிழகம் முழுவதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு 10 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் போல் துணை நிற்கும் என்பதை தெரி வித்துக் கொள்வதோடு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் பிரைமரிகளை அமைக்க இப் பொதுக்குழு உறுதி கொள்கிறது.

Thursday, July 15, 2010

சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|

சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|
மொழியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர் முதல்வர் கலைஞர்


சென்னை, ஜூலை 9-

மொழிகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் கலைஞர். மொழியின் முக்கியத்து வத்தை உணர்ந்ததன் காரணமாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள் ளார். திராவிட முன்னேற் றக் கழக அரசு எப்பொழு துமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசா கவே திகழ்ந்து வருகிறது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் எந்த செயல்பாடும் அமை யாது என்று நம்புகிறேன் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய இணை யமைச்சருமான இ.அஹமது தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (10-07-2010) சென்னை எழும்பூரில் உள்ள ஹோட் டல் மெரீனா டவரில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசியச் செய லாளர் குர்ரம் அனீஸ், தமிழ்நாடு மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வி.எம். செய்யது அஹ மது முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் வரவேற் புரையாற்றினார்.

நூலினை டாக்டர் ஹக்கீம் செய்யது கலீபத் துல்லாஹ் வெளியிட வாணியம்பாடி நிஸார் அஹமது, எஸ்.பீடி அதிபர் அஷ்ரப், பைஸ் மஹால் இயக்குநர் ருமானுதீன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர்.
இந் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடந்த 62 ஆண்டுகால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளையெல் லாம் தொகுத்து கூறும் வகையில் ஒரு சிறந்த வரலாற்று நூலினை உர்தூ மொழியில் ஆக்கித் தந் துள்ள திருச்சி ஹனீப் அவர்களின் சேவை போற் றப்படக் கூடிய - பாராட் டப்படக்கூடிய செயலா கும். இந்த நூலினை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உரு வான சென்னையிலேயே வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 62 ஆண்டு காலமாக இந்திய நாட்டிற்கும், சிறுபான்மை சமுதாய மக்கள் முன்னேற் றத்திற்கும் ஆக்கப்ப+ர்வ மான வகையில் செய்துள்ள சேவைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், நாட்டில் உள்ள பிரதான கட்சிகளெல்லாம் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதன் அடையா ளம்தான் நான் மத்திய அமைச்சராக உங்கள் முன் நிற்பதற்கு காரணமாகும்.

2004-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் சேவைகளை அங்கீ கரிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் நமக்கு இடமளித்தார்கள்.

இந்த அங்கீகாரமானது சாதாரண ஒன்றல்ல. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொடர்ந்து 2.வது முறையாகவும் ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசின் மத்திய அமைச் சரவையில் நமக்கு இடம் கிடைத்துள்ளது. இதற் கெல்லாம் அடிப்படை காரணம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயரிய கொள்கைகளும், செயல் பாடுகளுமே ஆகும்.

இஸ்லாமிய நெறிமுறை களுக்குட்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கொள்கைகள் அமையும் வகையில் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு தெளிவான திட்டங் களை வகுத்துத் தந்து அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டதற்கான அங்கீ காரம்தான் இதுவாகும்.
தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறு பான்மையினரின் கலாச் சாரத் தனித்தன்மை பாது காப்பு என்ற மூன்று உயரிய லட்சியங்களின் அடிப் படையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு பிரச்சினையும் இந்த தத்துவங்களின் அடிப் படையில்தான் முஸ்லிம் லீக் அணுகி வந்திருக்கிறது. இன்று நாடு முழுவதும் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை குறித்தும், ரங்க நாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படு கிறது. இந்த அறிக்கைகள் இந்திய முஸ்லிம்களின் யதார்த்த நிலையை, உண்மை நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த அறிக்கைகள் வெளிவரு வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பதுதான் காரணமாக அமைந்துள் ளதை எவரும் மறுக்க முடியாது.

சிறுபான்மை சமுதாய மக்களின் முன்னேற்றத்திற் காக நாம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்ததன் அடிப் படையில் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது கூட இந்த திட்டங்களை விரிவான அளவில் செயல்படுத்துவது குறித்து
வலியுறுத்தினேன்.

பிரதமரின் திட்டங் களில் ஒன்றாக உர்தூ மொழி மேம்பாடும் அமைந்துள்ளது. ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த சில வரிகளே உர்தூ மொழியின் சிறப் பையும், அதன் தேசிய உணர்வையும் எளிதாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த வரிகளை உச்சரிக்கும்போது ஒருவித பெருமித உணர்ச்சியை பெற முடிகிறது.

தமிழகத்தில் செயல் படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தால் உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படும் என்ற அச்சம் உரு வாகியுள்ளதாக அறிந்தேன். ஆனால், நிச்சயம் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாது. மொழிகளை யும், அதன் முக்கியத்துவத் தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் முதல்வர் கலைஞர் ஆவார். மொழி யின் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணமா கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதுமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசாகவே திகழ்ந்து வருகிறது.

முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று வழிநடத்தும் தமிழக அரசு சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் எத்தகைய ஒரு நிலை யையும் ஏற்படுத்தாது என் பதை நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் தமிழக அரசு நல்ல முடி வினை அறிவிக்கும் என்ப தில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இத்தகைய சிறப் பான நூலை வெளியிட் டதை பாராட்டுகிறேன். இன்னும் பல நூல்கள் இது போன்று வெளிவர வேண்டும் என வாழ்த்து கிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ.அஹமது பேசினார்.

அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு

சென்னை, ஜுலை 11-

அனைத்து மொழிகளை சேர்ந்தவர்களுக்கும் அவர வருக்குரிய மதிப்பளித்து செயல்படக்கூடிய இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், உர்தூ மொழியினை வளர்க் கும் வகையில் அதனை கற்றுக் கொள்ளவும், பரப்பவும் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித் தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற உர்தூ நூல் வெளியீட்டு விழாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரையாற்றும் போது குறிப்பிட்டதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு என்பது மிகப் பெருமைக் குரியதும், பாராம்பரிய சிறப்புக்குரிய ஒன்றாகும். இதனை அழகிய முறையில் ஒரு பெருநூலாக தமிழி லும், அதன் சுருக்கமாக ஒருசிறிய நூலை உர்தூ மொழியிலும் அண்ணன் திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் சிறப்பான முறையில் உருவாக்கித் தந்து அதன் வெளியீட்டு விழாவில் நாமெல்லாம் இங்கே குழுமியிருக்கி றோம்.

உர்தூ மொழி இனிமை யான மொழி. பழமையான மொழி ஒரு கருத்தை உர்தூ அறிந்தவர் அந்த மொழியி லேயே சொல்லும் போது அதிலும் கவிதையாக சொல்லும் போது கேட்ப வர்களின் உள்ளத்தில் கிளர்ச்சி ஏற்பட்டு ஆன்மா வுக்கு சுகமளிக்கின்ற அமுத மொழியாக உர்தூ மொழி விளங்குவதை உணரலாம்.
எனது மூதாதையர்கள் கூட குறிப்பாக, தாய்வழி பாட்டியார் உர்தூ மொழியை சார்ந்த வரேயாவார். அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் அந்த மொழியை பேசவும், எழுதவும் மறந்த காரணத் தால் இன்று நான் தமிழினை அறிந்துள்ள அளவுக்கு உர்தூவை அறிந்திருக்கவில்லை என்பதை பலரும் சொல்ல கேட்டுள்ளேன்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் உர்தூ மொழியில்தான் இஸ்லா மிய இலக்கியங்கள் வர லாற்று நூல்கள் ஏராள மாக உள்ளன. அந்த மொழியை கற்றுக் கொள் வதும், சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி பெற வேண்டியதும் நமது கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நூலினை வெளியிட்ட நமது டாக்டர் கலீபத்துல் லாஹ் சாஹிப் அவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவர்களில் ஒருவ ராவார்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளோடும், அவரைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத், சம்சுரே மில்லத் போன்ற தலைவர் பெரு மக்களோடு எல்லாம் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். அவர் இன்று இந்த விழாவில் நம்மோடு பங்கேற்று இந்த நூலினை வெளியிட்டிருப் பது நமக்கு பெருமை அளிக்கக் கூடிய ஒன்றா கும்.

தமிழகத்தின் மிக சிறந்த நூல்களையெல்லாம் உர்தூ மொழியில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியினை உர்தூ அறிஞர் பெருமக்கள் மேற்கொண் டுள்ளனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி மறைந்த அஸ்ரப் சொகர வர்த்தி திருக்குறளை உர்தூ மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்குரி யவர் ஆவார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரையில் எல்லா மொழிக ளையும் மதிக்கிற இயக்க மாகவே அதன் தொடக்க நாள் முதல் செயல்பட்டு வருகிறது. அதன் செயல் பாடுகள் மொழிவேறுபாடு களுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகின்றன. முஸ்லிம் லீகில் தமிழ் முஸ்லிம், உர்தூ முஸ்லிம் என்பது போன்ற பிரி வினைகளை ஏற்படுத்தி குழப்பங்களை நிகழ்த்த லாம் என்றெல்லாம் எவரா வது நினைத்தால் அவர்க ளின் எண்ணம் நிறை வேறாது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மொழி கடந்த இயக்கமாக - அனைத்து மொழிகளை யும் அவரவருக்கு உரிய மரியாதையுடன் நடத்து கின்ற இயக்கமாக இருந்து வருகிறது.

தமிழக அரசு செயல் படுத்தும் சமச்சீர் கல்வித் திட்டமானது உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படுத்தக் கூடியது என கூறி சிலர் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற் றில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் லீகை பொறுத் தவரை அமைதியான முறையில் ஆக்கப்ப+ர்வ மான வழியில் செயல்படக் கூடிய இயக்கம். வீதியில் இறங்கி போராட்டம் நடத் துவதில் முஸ்லிம் லீகிற்கு உடன்பாடு இல்லை. சமுதாய கோரிக் கைகளை உரியவர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து தீர்வு காண்பதுதான் முஸ்லிம் லீகின் பாணி. அதன் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத் தால் உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிக ளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் நம்மிடம் அச்சம் தெரிவித்த உட னேயே நாம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவரிடம் நமது கருத்துக்களை தெரிவித்தோம். முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்றோம். அப் போதே அவர்கள் நமது கருத்துக்கு மதிப்பளித்து திருப்திகரமான பதிலை தெரிவித்து விட்டனர்.

அதுதொடர்பான அரசு அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற சூழ் நிலையில் சிலர் வேண்டு மென்றே முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகை யில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என செயல் படுவது நல்ல அணுகு முறையாக இருக்காது.

முஸ்லிம் லீகின் வரலாற்றை நல்ல சிறப்பான முறையில் உர்தூ மொழியில் நூலாக வெளி யிட்டுள்ள முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இன்னும் பல நூல்கள் உர்தூ மொழியில் வெளியாகும். அதற்கான பணிகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.

எழுத்தரசு ஹனீபுக்கு பாராட்டு

நிகழ்ச்சியில் நூலாசிரி யர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்களுக்கு தேசியத் தலைவர் இ. அஹமது பொன்னாடை அணிவித்து பாராட்டி னார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது, கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம் மது பஷீர் எம்.பி., காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் அப்துர் ரஹ்மான் எம்.பி., சட்டமன்ற உறுப் பினர் எச். அப்துல் பாசித் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.

பதிப்பக அறக்கட் டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ் மாயில் நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர், மாநில சொத்துப் பாது காப்புக்குழு உறுப்பினர் எஸ்.எம். கனி சிஷ்தி, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் எஸ்.ஏ. சத்தார், வழக்கறி ஞர் அணி அமைப்பார் வெ. ஜீவகிரிதரன், இளை ஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், எஸ்.டி. யு. அமைப்பாளர் அப்சல், இலக்கிய அணி ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் எஸ்.கே. அமீன்.
வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். முஹம் மது இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட செய லாளர் பூவை முஸ்தபா, காஞ்சி மாவட்ட தலைவர் ஆலந்தூர் அப்துல் வஹாப், கவிஞர் சேக் மதார், ரப்பானி அப்துல் குத்தூஸ், மாணவர் அணி யைச் சார்ந்த ஷாநவாஸ், பாம்புக்கோயில் வி.ஏ. செய்யது பட்டாணி, வி.ஏ. செய்யது அபுதாஹிர், ராய புரம் ஏ.ஆர். இக்பால், உஸ்மான், மணிச்சுடர் ஹமீது, ஷெரீப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி அவசியம் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி அவசியம் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

வேலூர் பாகியாத் சாலையில் உள்ள வாசி வெல்பேர் டிரஸ்டின் 11-ம் ஆண்டின், தையல் கம்ப் ய+ட்டர், தட்டச்சு, கைவி னைப் பொருட்கள் பிரிவில் பயிற்சி முடித்த மாணவியர் களுக்கு வேலூர் பாராளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவியர்களுக்கு சான் றிதழ் வழங்கி பேசினார்.
வாசி| என்றால் இறை வனின் பெயராகும். இதற்கு மற்றொரு தமிழ் விளக்கம் படி| என்பதாகும். முன்பு சமுதாயத்தில் வயது வந்த பெண்கள் என்றால் அந்த பெண்ணை மற்றவர்கள் பார்க்கக் கூடாது, வீணாக பேசக்கூடாது. அவருடைய காட்சியை மற்றவர்கள் கண்ணுக்கு தெரியக் கூடாது என்று அடக்கப் பட்டு, அடைக்கப்பட்டார் கள். ஏனென்றால் பெற்ற வ.ர்களுக்கு தன் மகள் தங்களுடைய நேரிடை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எண்ணி னார்கள். இல்லையென் றால் மகள் தவறான பாதை யில் சென்றுவிடுவாளோ என்று பயந்தார்கள்
இதற்கு காரணம் கல்வி அறிவு இல்லாதது.. ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை. பெண்கள் கல்வி பயில, பயிற்சி பெற, வேலைக்கு செல்ல எந்தத் தடையும் இல்லை. அதற்கு காரணம் கல்வியில் பெண் கள் முன்னேற்றம் பெற் றுள்ளது. இதை சமுதா யமும் உற்சாகப்படுத்து கிறது. தற்போது நாட்டின் முதல்குடி மகனாகிய ஜனாதிபதி ஸ்தானத்திற்கே ஒரு பெண் தான் . அவர் ராஜ்ய சபா மற்றும் லோக் சபா இரண் டிலுமே கூட்டு மன்றத்தில் உரை நிகழ்த் துகின்றார்.
இரு சபையை சேர்ந் தவர்களும் ஜனாதிபதி வருகைக்காக காத்திருக் கின்றார்கள். இப்பொழுது சபாநாயகரும் ஒரு பெண். இந்த நாட்டின் ஆளும் கட்சியின் ஆளுமை பொறுப்பில் இருக்கும் சோனியாகாந்தியும் ஒரு பெண். எதிர்க்கட்சித் தலை வராக இருக்கும் சுஷ்மா சுவராஜும் ஒரு பெண். இப்படி உயர்நிலை, உச்ச நிலை பதவிகளில் ஆண் களை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பெண்கள் நாட்டையே ஆளும் சக்தியாக மாறியுள்ளனர். இவர்களின் திறமை வெளியே கொண்டு வரப் பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கல்வி.
இந்தப் பயிற்சிக் கூடத் தில் பயின்ற மாணவிகள் தாங்கள் பெற்ற பயிற்சியை, தங்கள் குடும்பத்தினர் அனைவரும் பயன்படும் வகையில் செயல்பட வேண்டும். தற்போது மக்களை கெடுப்பது தொலைக்காட்சி சேனல்கள், செல்போன். இவற்நை நாம் முன்னேற்ற வழியில் நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் எந்த தவறு செய்தாலும், அது மூடி மறைக்கப்பட்டு விடு கின்றது. அந்த தவறை பெண்கள் செய்தால் அது தோற்றத்தில் சிறியதாக இருந்தாலும், பிரம்மாண் டப்படுத்தி காட்டப்படு கின்றது.
ஆகவே, பெண்கள் ஒழுக்கமாகவும், மிக கவனமுடனும் செயல்பட வேண்டும். ஒரு பெண் ணுக்கு பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் கல்விதான் காரணமாக இருக்க முடியும். எனவே, பெண் கள் அனைவரும் கற்வி கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.

அனைத்து மாவட்ட தலைவர் - செயலாளர்கள் கவனத்திற்கு

அனைத்து மாவட்ட தலைவர் - செயலாளர்கள் கவனத்திற்கு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)
இந்திய முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டியதன் அவசியம் இன்று என்றும் இல்லாத அளவிற்கு உணரப்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அணி அணியாய் இணைந்து வருகின்றனர். இதற்கு நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு அறிக்கையும், நாம் மேற் கொண்ட தெளிவான தேர்தல் முடிவுகளும், மற்ற முஸ்லிம் அமைப்புகளின் சந்தர்ப்பவாத அரசியலுமே முக்கிய காரணங்களாகும்.
இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், அமைப்பு ரீதியான விதி முறைகளையும் - செயல்பாடுகளையும் முறைப்படுத்த வேண்டும். தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவர்களோடு இளைஞர்களையும், பல்வேறு இயக்கங்களிலிருந்து வருபவர்களுக்கும் பதவிகளை பகிர்ந்தளித்திட வேண்டும் என்பது நமது இன்றைய தேவை. இதற்காக பெங்களுரு தேசிய மாநாடு திட்டங்களும் திருச்சி மாநில பொதுக்குழு தீர்மானங்களும் நமக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இருக்கின்றன.
இயக்க பணிகளை தொய்வின்றி செயலாற்றிட சேவையுடன் கூடிய ஐந்து சேவை திட்டங்களை அறிவித்து, அதன்படி நிறுவன நாள் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும், கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்( ரஹ்..) பிறந்த நாள் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை கரூர் மாவட்டம் பள்ளபட்டியிலும் எழுச்சியோடு நடத்தி இருக்கின்றோம். பயனுள்ள சேவைகளையும் , அறிவுப்ப+ர்வமான பல தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
இயக்கத்தின் விதிமுறை - கட்டமைப்பை நிலை நிறுத்திட இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின், தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் சாகிப் அனைத்து மாநில நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டும் தேசிய தலைவர் மாண்புமிகு இ. அஹமது அவர்களுடனும் தொடர்ந்து விவாதித்தும் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்கள்.
அனைத்து ஊர்களிலும் முறையாக உறுப்பினர்களை சேர்த்து கிளை தேர்தல் நடத்தி, மாநில தலைமைக்கு செலுத்த வேண்டிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் என அறிவித்திருந்தோம் . இதன் அடிப்படையில் இதுவரை காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை புறநகர், கரூர், விருது நகர், திருப்ப+ர் மாநகர், பெரம்பலூர், தேனீ ஆகிய ஒன்பது மாவட்ட தேர்தல் முடிவடைந்திருக்கிறது.
எதிர் வரும் 18-07-2010 அன்று காலை நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட தேர்தல் மயிலாடுதுறையிலும், அன்று மாலை தஞ்சை மாவட்ட தேர்தல் அதிராம்பட்டினத்திலும், 25-07-2010 காலை திருவாரூர், மாலை கடலூர் மாவட்ட தேர்தல் சிதம்பரத்திலும், 29-07-2010 மாலை கன்னியாகுமரி, 30-07-2010 மாலை மதுரை மாநகர் மாவட்டம், 31-07-2010 காலை இராமநாதபுரம், மாலை சிவகங்கை மாவட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திருப்ப+ர் புறநகர், ஈரோடு மாநகர், திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகள் பட்டியல் மற்றும் மாநில ஈவுத் தொகை வழங்கப்பட்டிருக்கின்றன. இம்மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதையே குறிக்கோளாக கொண்டு தியாக மனப்பான்மையுடன் சேவையாற்றிவரும் தாய்ச்சபையின் செயல் வீரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - புதிய நிர்வாகிகளுக்கு தலைமை நிலையத்தின் சார்பில் வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் புனித ரமலானை எதிர் நோக்க இருக்கின்றோம். மாவட்ட தேர்தல்களை விரைவாக முடித்து மாநில தேர்தலையும் நடத்த வேண்டும். அக்டோபர் 4ம் நாள் சிராஜுல் மில்லத் பிறந்த நாள் விழாவையும், அதன் பின் மாநில மாநாட்டையும் நடத்த வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலை வலிமையுடன் சந்தித்து வெற்றி பெற்றிட பணிகளை விரைவு படுத்திட வேண்டும்.
இதுவரை உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகள் பட்டியல், அதற்குறிய மாநில
வரலாற்று பேரியக்கத்திற்கு வலிமை சேர்த்திட ஒத்துழைப்பு தாரீர்!
வெற்றி பல கண்டு சாதித்திடுவோம் வாரீர் !!
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

Tuesday, July 13, 2010

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மத்திய அரசு சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு தந்தி அனுப்பியுள்ளார்.தந்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப் படிவங்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்துள்ளன.

எனவே, விண்ணப்ப படிவங்களை அனுப்பும் தேதியை 2010 ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க வேண்டுகிறேன். இவ்வாறு தந்தியில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, July 7, 2010

ஒவ்வொரு பிரைமரியும் கட்டாயமாக கல்வி, சமுதாய பணியாற்ற வேண்டும்

ஒவ்வொரு பிரைமரியும் கட்டாயமாக கல்வி, சமுதாய பணியாற்ற வேண்டும்
மதுரை புறநகர் மாவட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் தீர்மானம்
மதுரை, ஜூலை 6-
மதுரை மாவட்டம் புறநகர் 76 பிரைமரிகளின் பொதுகுழு நிர்வாகிகள் கூட்டம் கடந்த 26.06.2010 தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் மதுரை கோரிபாளையம் பேட்டை பள்ளிவாசல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் 70 பிரைமரிகளின் நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகக் குழுவினரும் 250 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் டாக் டர் ஏ.கே.முகைதீன் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர் எஸ். ஜாகீர் உசேன், மாவட்ட பொரு ளாளர் தேங்காய்க்கடை ஹாஜி எம்.சலீம் சேட், மாவட் டத் துணைத் தலைவர்கள் டாக்டார் எம். நவீன் தாரிக், மவ்லவி ஐ. ராஜா உசேன், எம்.ஜபருல் லாகான், துணைச் செய லாளர்கள் வி.எஸ். முகம்மது காசிம் பாகவி , ஓ.ஷாஜகான் மேலூர், எம்.சிக்கந்தர்கனி தும்பை பட்டி, ராஜா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
செயலாளர் எஸ். ஜாகீர் உசேன் வரவேற்புரையாற்றி னார். நிர்வாகிகள் ஒருவரை யொருவர் அறிமுகம் செய் தனர். மாவட்டத்தலைவர் டாக்டர் ஏ.கே. முகைதீன் நமது நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி பிரைமரி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்கள் கருந்திற்கிணங்க பலவித மான நடைமுறைகளையும் நிர்வாக முறைகளையும், நிர்வாக அமைப்புமுறை களையும் செயல்படுத்த பொதுக்குழு ஏகமனதாக மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்கியது. அதன் அடிப்படையில் மாவட்ட துணை செயலா ளர். வி.எஸ்.முகம்மது காசிம், மாவட்ட அமைப்பு செயலாளராகவும் மாவட்ட துணை செய லாளர் எஸ்.ராஜா முகம் மது மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள்.
திருமங்கலம் ஒன்றிய செயலாளராக கள்ளிக்குடி சுலைமான், எம்.கல்லுப் பட்டி ஒன்றிய செயலாள ராக டாக்டர் ஹனிபா, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர்களாக ஐ.அப் துல் காதர், எம்.மீர்ஸ் உசேன், நல்லூர், மேலூர். ஒன்றிய செயலாளராக கே.அயாஸ்கான், கொட் டப்பட்டி ஒன்றிய செய லாளராக பி.எஸ்.சதக்க துல்லா, சென்னகரம்பட்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய செயலாளராக. வி.எஸ். தாஹீருல் உசேன் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட் டார்கள். மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளராக ஐ.கே.சுனிதா பேகம் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
மற்ற குழுக்கள், நக ராட்சி வார்டு செயலாளர் கள் போன்ற மற்ற பதவி கள் தலைவரே நியமித்துக் கொள்ளலாம் என்று தீர் மானிக்கப்பட்டது. கண் ணியத்திற்குரிய காயிதே மிலாத் அவர்களின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு இஸ்லாமிய சமுதாயத்தின் இடையே கல்வி விழிப் புணர்ச்சி ஏற்பட வேண்டு மென்றும் ஒவ்வொரும் பிரைமரி நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் கல்வி சேவை புரிய வேண்டுமென் றும் தலைவர் கேட்டுக் கொண்டார்.
ராஜா உசேன், கல்விக் காக அரசு அளிக்கும் கடன்கள் கல்வி உதவித் தொகைகள் இலவச மனைப்பட்டா பெறும் வீதம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர் மாதிரி படிவங்களை வழங்கினார்.
மற்ற நிர்வாகிகள் கட்சியை மேற்கொண்டு வளர்க்கவேண்டுமென்றும் மேலும் புதிய பிரைமரிகள் அமைக்கவேண்டுமென்றும் ஆர்வத்துடன் பேசினர்கள்.
டாக்டர் எம். நவீன் தாரிக் நன்றி உரை கூறினார்.
தீர்மானங்கள்
1) வக்ஃபு வாரியத் தின் சார்பாக பெண்க ளுக்கு என்று தனியாக ஒரு கலை அறிவியல் கல்லூ ரியை மதுரையில் துவங்க மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களின் நிர்வாகி களின் உதவியுடன் பரிந் துரைப்பது.
மிக குறைந்த மதிப் பெண் எடுத்த முஸ்லிம் மாணவர்களுக்கும் கல் லூரியில் இடம் அளிக்க பரிந்துரைப்பது.

வக்ஃபு வாரிய கல்லூரி யின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக் நிர்வாகிகளை நியமித் திடவும்,
2.ஒவ்வொரு பிரைமரி களிலும் பச்சிளம் பிறைக் கொடியை ஏற்றுவது. ஒவ்வொரு பிரைமரிகளின் நிர்வாகிகளின் பெயர்ப் பலகை வைப்பது.
3. ஒவ்வொரு பிரைமரி நிர்வாகிகள் கல்வி மற்றும் சமுதாய பணிகள் ஆற்று வது.
மேற்கண்டவாறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

காயல்பட்டினம், ஜூலை 7‍

காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் மேம்பாட் டுப் பணிகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணியர் தங்கும் அறை, கழிப்பறை, நடைமேடை உயர்த்தல், மேற்கூரையமைப்பு, ஒளி வெள்ள விளக்குகள் நிறுவுதல், பயணச்சீட்டு முன்பதிவு கணணிமய மாக்கல் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டு மென்று கோரி, காயல் பட்டினம் நகர பொதுமக் கள் சார்பாக காயல்பட் டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொது நல அமைப்புகள், சம்பந் தப்பட்ட துறை அமைச்சர் களுக்கும், அதிகாரிகளுக் கும் தொடராக கோரிக்கை வைத்தவண்ணம் இருந் தனர்.

இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால், ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்ட விழாவில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மத் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, மேற்படி அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப் படும் என்று அந்த மேடை யிலேயே உத்தரவிடுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இருளடைந்திருந்த ரயில் நிலையப் பாதையில் துவக்கமாக 3 ஒளிவிளக் குகள் மட்டும் பொருத்தப் பட்டன. அதன் பின், எந்த வொரு மேல்நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படாத நிலையில், சில மாதங் களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கணணிமயமாக் கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மதை, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.அபூபக்கரும் தொடர்ச் சியாக தொடர்பு கொண்டு, நிறைவேற்றப்பட வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தனர்.

அத்தோடு, மதுரை கோட்ட ரயில்வே துறை முக்கிய அதிகாரி களிடமும் தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்த தன் பலனாக, தற்சமயம் இருளடைந்திருந்த இருப் புப்பாதை நடைமேடை யின் அனைத்துப் பகுதி களிலும் ஓரளவுக்கு குழல் விளக்குகளும், இரண்டு ஒளிவெள்ள விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. பய ணியர் அமருவதற்காக, ஆங்காங்கே கல் இருக்கை கள் நிறுவப்பட்டு வரு கிறது.

கழிப்பறை விரைவில் நவீனப்படுத்தப்படும் என் றும், பயணியர் தங்கும் அறை முழுமையாக தரை மட்டமாக்கப்பட்டு தற்கா லத் தேவைக்கேற்ப புதிதா கக் கட்டப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற் குள் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) மற்றும் பயணச்சீட்டு முன்பதிவாளர் (டிக்கட் புக்கிங் க்ளெர்க்) என இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், நடைமேடை உயர்மட்ட நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக மாற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய் திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முன்பு மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்த ஜாஃபர் ஷரீஃப் 21.10.1993 அன்று காயல் பட்டினம் வந்த இடத்தில், உயர்மட்ட நடைமேடை (ஹை லெவல் ப்ளாட் ஃபார்ம்) உருவாக்கத்திற் கான கட்டுமானப் பணி யைத் துவக்கி வைத்த தாகவும், 02.05.1994 அன்று காயல்பட்டினம் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட நடைமேடை யைத் துவக்கி வைத்த தாகவும், ரயில் நிலைய பயணியர் தங்கும் அறை சுவற்றிலிருந்த அடுத்தடுத்த இரண்டு கல்வெட்டுகளில் வாசகங்கள் காணப்படு கின்றன.
இதுபற்றி விசாரிக்கை யில், இதற்கு முன்பிருந்த மீட்டர் கேஜ் இருப்புப் பாதைக்கு ஏற்ப, அந்த உயர்மட்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது புதிதாக நிறு வப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகளை, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் இயக்கி, செயல் பாட்டைத் துவக்கி வைத் தார். நிலைய அதிகாரி முஹம்மத் யூசுப் உட னிருந்தார்

செந்தூர் விரைவு ரயில் விரைவில் மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கபட வுள்ளதாகவும், இதனால் தற்போதைய பயண நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரி விக்கின்றன.

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

தென்சென்னை மாவட்டம் 94-வது வட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் மாணவ - மாணவியருக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் விழா

காலம் : 08-07-2010 வியாழக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : பி.எம். தர்கா முதல்தெரு,
இலாயிட்ஸ் சாலை, சென்னை - 5
தலைமை : எஸ்.ஒய். முஹம்மது தமீம்
(தென் சென்னை மாவட்டப் பிரதிநிதி)
வரவேற்புரை: என். நிஸார் அலி (மாவட்டப் பிரதிநிதி)
முன்னிலை : கே.பி. இஸ்மத் பாட்சா
(தலைவர், தென்சென்னை மாவட்டம்) பூவை எம்.எஸ். முஸ்தபா
(செயலாளர், தென்சென்னை மாவட்டம்)
சிறப்புரை : கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர்
(மாநில பொதுச் செயலாளர், இ.யூ முஸ்லிம் லீக்)
காயல் மகபூப்,
(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்)
கே.டி கிஸர் முஹம்மது
(மாநில பொதுக்குழு உறுப்பினர்)
நன்றியுரை : வி.ஏ. அமானுல்லா (மாவட்டப் பிரதிநிதி)
நிகழ்ச்சி ஏற்பாடு: 94-வது வட்ட இ.யூ. முஸ்லிம் லீக்
என். ஜாபர் உசேன் (தலைவர்), கே.யூ. இதாயத்துல்லா (செயலாளர்), ஜே. தமீமுன் அன்சாரி (பொருளாளர்),

துணைத் தலைவர்கள் ஏ. காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி. மொய்தீன் அப்துல் காதர்,
துணைச் செயலாளர்கள் எஸ்.கே. மொகிதீன், கே. நாகூர் கனி, முஹம்மது யூனூஸ் மற்றும் இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

Monday, July 5, 2010

அரசாணை விரைவில் வெளிவரும் அறிவிப்பிற்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி

அரசாணை விரைவில் வெளிவரும் அறிவிப்பிற்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி

சமச்சீர் கல்வியில் சிறுபான்மையினர் மொழிகளின் உரிய பாதுகாப்பிற்கு அரசாணை விரைவில் வெளிவரும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பிற்கு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி

சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழி களுக்கு எத்தகைய பாதிப் பும் ஏற்படாது என்றும், இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழக அர சுக்கு வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்.
வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நேற்று வேலூரில் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்த விவரம் வருமாறு:
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உடனடி நடவடிக்கையால் சமச்சீர் கல்வி திட்டத் தில் சிறுபான்மை மொழி களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் தோன்றிய தும், தமிழக அரசின் கவனத் திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உடனடியாக கொண்டு சென்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் தலைமையிலான குழு தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமச்சீர் கல்வியில் சிறுபான் மையினர் மொழிகளுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாமல் தற்போதுள்ள நிலை தொடர வழி ஏற் படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
வாணியம்பாடி தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித் தமிழக சட்டப் பேரவை யிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
கடந்த மாதம் 9ம் தேதி கரூர் மாவட்டம் பள்ளப் பட்டியில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் இது தொடர் பாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநாட்டில் பேசுகையில், ஹசமச்சீர் கல் வியில் சிறுபான்மையினர் மொழிகள் பாதிக்கப்படா மல் இருக்க கலைஞர் ஒப்பு தலுடன் மழிகத்தக்க முடிவு விரைவில் அறிவிக்கப்படும்| என்று தெரிவித் தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் தங்கம் தென்னரசை நான் சந்தித்துப் பேசினேன்.
உருது மற்றும் சிறுபான் மையினர் மொழிகளை தாய்மொழியாக கொண்டு கல்வி கற்கும் மாணவர் களுக்கு முதல் மொழிக்ககான அந்தஸ்தும் உரிய மதிப் பெண்ணும் வழங்கப் பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினேன்.
சமச்சீர் கல்வியில் சிறு பான்மையினர் மொழி களுக்கான பாதுகாப்பு குறித்து முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடமி ருந்து உரிய அனுமதி கிடைத்து விட்டதாகவும், இது தொடர்பான அர சாணை இந்த வாரம் பிறப் பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென் னரசு உறுதி அளித்தார்.
இதற்காக நான் அவரிடம் நன்றி தெரிவித்தேன்.
கலைஞர் தலைமையி லான அரசுதான் உருது பள்ளிகளில் 51 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியுள்ளது. இன்னும் 37 பணியிடங்களே காலியாக உள்ளன. இந்த காலியிடங்களையும் படிப்படி யாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவிக் கிறேன்.
இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., தெரிவித் தார்.
இப்பேட்டியின் போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல்பாசித் வேலூர் மேற்கு மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிசார் அஹமது, செயலாளர் குடி யாத்தம் ரஹ்மத்துல்லாஹ், கிழக்கு மாவட்டத் தலை வர் முஹம்மது ஹனீப், செயலாளர் சான் பாஷா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Saturday, July 3, 2010

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து
ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான் ( ச‌ம‌ர‌ச‌ம் ஜுலை 16 31 )


http://www.mudukulathur.com/nerkanal.asp?id=8


* உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்...
காயிதே மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் லீக் மீது ஈடுபாடு இருந்தது. சமூக, அரசியல் ரீதியாக சமுதாயத்தை சரியான பாதையில் முஸ்லிம் லீக்கால் மட்டுமே செலுத்த முடியும் என்பது சிறுவயதிலிருந்தே என் எண்ணத்தில் பதிந்த ஆழமான அழுத்தமான நம்பிக்கை. அந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்தாலும் கூட ஆங்காங்கே உள்ள பலவீனங்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சியிலே சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலவீனங்கள் இருக்கின்றன என்பதனால் நாம் ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்தி விட முடியாது.
என்னுடைய படிப்பு என்பது என்னுடைய பாட்டனார் துவக்கி வைத்த ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5 வது வரை படித்தேன். என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. ஒரு காலத்தில் நம்மவர்கள் படிப்பதற்கு என்று தனியாக பள்ளி இல்லாத காலத்தில் மதரஸதுல் முஹம்மதிய்யா என்ற ஆரம்பப் பாடசாலையை மார்க்கக் கல்வி போதனையோடு என்னுடைய பாட்டனார் அரசாங்க அங்கீகாரத்தோடு ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில்தான் நான் 1 முதல் 5 வரை முடித்தேன். இப்பொழுது அந்தப் பள்ளியின் பொருளாளராக நான் இருக்கிறேன். அதன் பிறகு ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியில் 6 முதல் 10 வரை என்னுடைய படிப்பை முடித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில். மாஸ்க் ஹாஸ்டல் என்று சொல்லப்படுகிற ஏழை மாணவர்கள் அதிகமாகத் தங்கிப் படிக்கிற விடுதியில் தங்கிப் படித்தேன். அங்குதான் என்னுடைய பட்டப் படிப்பையும் முதுகலை படிப்பையும் முடித்தேன்.
* நீங்கள் சிறுவயதிலிருந்தே முஸ்லிம் லீக்குடன் இணைந்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம் லீக்கில் இளைஞர்களே இல்லை எனச் சொல்லப்படுகிறது, இது சரியா?
இல்லை; இது தவறான கருத்து. அந்தந்தப் பகுதிகளில் அமைப்பை வழி நடத்தக் கூடியவர்களின் பலவீனங்களால் சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் முஸ்லிம் லீக் நல்ல வலிமையோடு இருக்கும். சில பகுதிகளில் நடுத்தரமாக இருக்கும். சில பகுதிகளில் பலவீனமாக இருக்கும். சில பகுதிகளில் கிளை கூட இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது. உடனே தலைமையைக் குறை சொல்லி விட முடியாது. அந்தந்தப் பகுதிகளில் பொறுப்பாளர்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து அமைப்பின் செயல்பாடுகளின் வலிமை இருக்கும். இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் எல்லாரும் முஸ்லிம் லீகில்தான் இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்ற இயக்கங்களில் இளைஞர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வீரமாகச் செயல்பட வேண்டும், புரட்சியாகச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறி நல்லிணக்கத்தைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இயக்கங்கள் இளைஞர்களை சரியாக வழிநடத்தவில்லை என்பதை உணர்ந்து சமுதாயப் பணி ஆற்ற சரியான களம் முஸ்லிம் லீக்தான் என்பதை உணர்ந்து பல இளைஞர்கள் முஸ்லிம் லீக்கில் இணைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
* வேலூர் தொகுதியின் வேட்பாளராக முதலில் பேராசிரியர் காதர் மொய்தீன் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. பிறகு உங்கள் பெயரை அறிவித்தார்கள். உண்மையில் என்ன நடந்தது?
இதில் ஒன்றும் இரகசியம் இல்லை. செயற்குழு கூட்டத்தில் "கடந்த முறை வேட்பாளராக நின்று 5 ஆண்டுகள் பணி ஆற்றினேன். ஆனால் இந்த முறை என்னால் வேட்பாளராக நிற்க முடியாது. நமது கட்சியின் சார்பாக புதிய வேட்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டும்' என்று பேராசிரியர்தான் முன்மொழிந்தார்.
ஆனால் செயற்குழுவில் வந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் மறுபடியும் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் பேராசிரியர் அவர்கள் மனமின்றி ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு பேராசிரியருக்கு ஏணி சின்னத்தில்தான் அதாவது சொந்தச் சின்னத்தில்தான் நிற்க வேண்டும். வேறு கட்சியின் சின்னத்தில் நிற்பதை மாற்றியாக வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தகைய நிலையில் பேராசிரியர் ஏணி சின்னத்தில் நிற்பார் என்று அறிவித்து இருந்தோம்.
ஆனால் இரண்டு காரணங்களால் இந்த முடிவு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. 1. ஏணி சின்னம் என்பது மக்கள் மனதில் ஒரு சுயேட்சை சின்னம்தான் என்றிருக்குமே தவிர அது முஸ்லிம் லீக்கின் சின்னம் என்று பதிய வைக்க முடியாது. இந்தச் சின்னத்தை பஞ்சாயத்து தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனப் படிப்படியாக கொண்டு வந்து அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாமே தவிர திடீரென பாராளுமன்றத் தேர்தல் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தில் கொண்டு சென்று நிற்பது என்பது சொந்தச் சின்னத்தில் நின்றோம் என மார் தட்டிக் கொள்ளலாமே தவிர நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலையும் பலருக்கு இருந்தது.
இத்தகைய நிலையில் உதயசூரியன் சின்னத்தில் நிற்போம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பேராசிரியர் அவர்கள் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருப்பதனால் அவர் வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாது. இத்தகைய நிலையில் மாநில செயற்குழு மீண்டும் கூடி என்னை வேட்பாளராக்குவது என்றும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
* திமுக சின்னத்தில், திமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நீங்கள் ஒரு முஸ்லிம் லீகராக செயல்பட முடியுமா?
நிச்சயமாக முடியும். முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முழுமையாகச் செயல்படக் கூடிய உரிமையை திமுக தந்திருக்கிறது. திமுகவே வெளியிடுகின்ற அறிக்கைகளில் கூட முஸ்லிம் லீக் வேட்பாளர் என்றுதான் சொல்கின்றார்களே தவிர, திமுக வேட்பாளர் என்று சொல்லவில்லை. அத்தகைய அங்கீகாரத்தை அவர்கள் தருகிறார்கள். நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் ஒலிப்பதற்கு திமுக எத்தகைய இடர்பாடும் செய்வதில்லை. நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடன் பேசும் பொழுதும் கூட சிறுபான்மை சமுதாயத்தின் விஷயங்களை முழுமையாக எடுத்து வைக்கும்படியும் அதில் எந்தத் தயக்கமும் காட்ட வேண்டாம் என்றும் அவர்களே சொல்கிறார்கள். அதனடிப்படையில் சமுதாயத்தின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் என்னுடைய பணி தொடரும்.
* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?
நிச்சயமாக. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் தொடர்ந்து அந்தத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நல்லவர்கள்; ஒழுக்கமானவர்கள்; சராசரி அரசியல்வாதி போல் செயல்பட மாட்டார்கள்; ஆக்கபூர்வமான அரசியல் செய்பவர்கள் என்ற கருத்து தொகுதி மக்களிடையே இருக்கிறது. அதே போன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செய்திருக்கிற சாதனைகள் ஏழை எளிய அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் முன்னால் தேர்தலில் ஒரு சவால் என்று வருகின்ற பொழுது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் மக்களிடம் இருந்துள்ளது. ஆக இந்த இரண்டு காரணங்களாலும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது.
* தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த சமுதாய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. எத்தகைய நிலையிலும் சமுதாயத்தின் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சமுதாயத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமுதாயத்தின் விழுக்காடு 13 முதல் 15 சதவீதம் மட்டுமே. சமூக ரீதியாகத் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. அதனடிப்படையில் நமது உணர்வுகளை மதிக்கக் கூடிய, கூட்டணி தர்மத்தைப் பேணக் கூடிய எந்தத் தலைமை இருக்கின்றதோ அத்தகைய தலைமையோடு ஒத்துப் போய் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நமது பிரதிநிதித்துவத்தை எப்படி அடைய முடியுமோ அப்படி அடைய சிந்தித்துச் செயல்படக் கூடிய தலைவர்களால் மட்டுமே சமுதாயத்தை வழிநடத்த முடியும். அந்த வகையில் முஸ்லிம் லீக் தன்னுடைய பணியைச் சரிவர நிறைவேற்றி இருக்கிறது என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
* வேலூர் தொகுதியின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்கள் தீட்டியுள்ளீர்கள்? எந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழக் கூடிய தொகுதி. இன்னும் பல துறைகள் தன்னிறைவு பெறாத தொகுதி. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதனடிப்படையில் முதலாவதாக குடிநீர்த் திட்டம், அடுத்து சுகாதார வசதி, மருத்துவமனை, அடுத்து சாலை மேம்பாடு, அடுத்து கல்வித்துறை. கல்வி நிலையங்களை ஏற்படுத்துவது, புதிய கல்லூரிகள், கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையுடன் நம் சமுதாயப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயல்பட முடியுமோ அதன்படி இன்ஷா அல்லாஹ் செயல்படுவேன்.
* நீங்களே ஒப்புக் கொண்டீர்கள், வேலூர் தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழும் தொகுதி என்று! கடந்த 60 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மருத்துவம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறுமையிலும் நோயிலும் வாடி வருகிறார்கள். அவர்களின் கல்வி பொருளாதார மறுவாழ்விற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
பீடித் தொழிலாளர்களின் நிலை உடனடியாக மாற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து குலத் தொழிலாகச் செய்து வருபவர்களுக்கு மத்தியில் உடனடி மாற்றம் கொண்டு வருவது இயலாததாகும். பீடித் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அவற்றைக் கொண்டு வர முயற்சி செய்வேன். அவர்களின் நிலை மேம்பாடு அடைய அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்களின் நிலை மேம்பாடு அடையும். பொருளாதாரத் தீர்வு என்பதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், அவரவர் நிலைகளுக்கு ஏற்றாற் போல மாறுபடும். ஆக பொருளாதார முன்னேற்றம் என்பதெல்லாம் ஒரு தற்காலிகத் தீர்வாகுமே தவிர அரசாங்கமே முன்வந்து ஏதேனும் நலத்திட்டங்களை வழங்கி கடனுதவிகள் வழங்கி செயல்பட்டாலும் உடனடியாக அவர்களுடைய வாழ்வில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது. இதற்கு ஒரே தீர்வு பீடித் தொழிலை குலத் தொழிலாகச் செய்து கொண்டு வருகின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேல்படிப்பு கற்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். பீடித் தொழிலாளர்களின் குடும்பங்
களில் கல்வி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்கள் குடும்பங்களில் படித்த பட்டதாரிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆவல். இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய முழு கவனம் செலுத்துவேன். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு வீடாக படித்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் என்னால் ஒவ்வொரு வீடாகச் செல்ல முடியாவிட்டாலும் கூட அந்தந்தப் பகுதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக பீடித் தொழிலாளர்கள் குடும்பங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு படித்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும். அதற்காக நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
* உள்ளூர் வேட்பாளரையே தேர்தலுக்குப் பிறகு பார்ப்பது அரிதாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில் வெளியூர்க்காரரான நீங்கள் உங்கள் தொகுதி மக்களின் மனக்குறையை எப்படிப் போக்குவீர்கள்?
வேலூர் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என்று பார்ப்பதில்லை. நல்ல எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றுகிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். அதனடிப்படையில் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் என்னை நேரடியாகச் சந்திப்பதற்கும் அவர்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் பெறுவதற்கு வேலூரிலே அலுவலகம் அமைத்து, அதிகப்படியான நேரம் தொகுதியிலே இருப்பதற்கும், தொகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தொகுதி மக்களின் மனக்குறையை முழுமையாகப் போக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது; என் தொகுதி மக்களுக்கும் இருக்கிறது.
* வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக கவிக்கோ அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் நல்லவர். சிறந்த மனிதர். சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்படக் கூடியவை. அதனடிப்படையில் வக்ஃபு வாரியத்தின் தலைவராகத் திறம்படச் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடைய பணிகள் சிறப்பாக அமையும்.
* வக்ஃபு வாரியத்தின் பணிகளை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவருடைய பணிகள் பட்டறிவுடனும் சிறப்பாகவும் அமையும்.
* சமுதாயத்தில் ஒற்றுமை மலர என்ன செய்ய வேண்டும்?
சமுதாயத்தில் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின் கீழ், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் பிரதிநிதித்துவமும் முழுமையாகக் கிடைக்கும். நாளுக்கு நாள் சிதறுண்டு போவதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும். சிதறிப் போயிருக்கின்ற சமுதாயத்தின் தலைவர்கள் எல்லாம் ஏதோ தங்களையும் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்டு தாமும் ஏமாந்து சமுதாயத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தின் சக்தி நாளுக்கு நாள் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கிற கவலை சமீப காலமாக எனக்கு அதிகரித்து உள்ளது. ஆகவே, சிதறிப் போய் இருக்கிற சமுதாயத்தை ஒன்றிணைக்க நான் கடுமையான முயற்சி எடுத்து இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் சமுதாயத்தை ஒன்றிணைக்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
* சார்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மாற்று அரசியலுக்கு வழி காண வேண்டும் என ம.ம.க. இந்த தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி கண்டுள்ளது. இது குறித்து...?
இந்தத் தோல்வி குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். தமுமுகவின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், மேலிடப் பிரதிநிதிகள் ஆகியோருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ம.ம.க. அறிவிக்கப்பட்ட உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது. ஆனால் சிறு சிறு விஷயங்களைப் பெரிதாக்கிக் கொள்வதனால் நமது பிரதிநிதித்துவம் என்கிற இலக்கை அடைவதில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதியினைக் கையகப்படுத்தி இருந்தால் முஸ்லிம் சமுதாயத்தின் இன்னும் ஒரு வேட்பாளர் இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்திருப்பார். இனி வருகின்ற காலத்தில் அந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தின் இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
* நீங்கள் பணியாற்றும் இஸ்லாமிய வங்கி குறித்து கூறுங்களேன்?
இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ முஸ்லிம்களுக்கான வங்கி என யாரும் நினைத்து விடக் கூடாது. அப்படி நினைத்தால் அது தவறு. பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், வட்டிக் கொடுமையிலிருந்தும் அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றும் ஒரு சிறந்த, பொருளியல் திட்டம்தான் இஸ்லாமிய வங்கி முறை. இந்த வங்கி முறையே மிகச் சிறந்தது என உணர்ந்து மிகப் பெரிய பொருளாதார வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்டு, முஸ்லிம் நாடுகளையும் தாண்டி இப்பொழுது மேலை நாடுகள் கூட இதனை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த வங்கி முறை இந்தியாவில் வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பொழுது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அரும் பாடுபட்டு வருகிறது.
1987இல் ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக மாநில முதல்வராக இருந்த போது அவருக்கு இஸ்லாமிய வங்கி குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறேன். ரிசர்வ் பேங்க் அதிகாரிகளுக்கும் இது குறித்து விளக்கி இருக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வங்கி முறை வந்து விடக் கூடாதென அதிகாரிகள் சிலர் செயல்பட்டதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கக் கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு இஸ்லாமிய வங்கி முறையை செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என முழுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அப்துர் ரகீப் அவர்களின் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்.
* கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகள் செயல்வடிவம் பெற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
எந்தத் துறை சார்ந்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டாலும் அதில் சமூக ரீதியாக சச்சார் குழு பரிந்துரைகள் செயலாக்கம் பெற தொடர்ந்து பாடுபடுவேன். பல மாநிலங்களிலிருந்து அகில இந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரையும் ஒன்றிணைத்து சச்சார் கமிட்டி பரிந்துரையை அமலாக்குவதற்கான அவசியத்தை அவர்களிடம் விளக்கி அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவேன். இது குறித்து ஏற்கெனவே காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சதீதுத்தீன் உவைசி எம்.பி. இலட்சத்தீவு எம்.பி. ஆகியோரிடம் விவாதித்து இருக்கிறேன். இதனடிப்படையில் அடுத்த 3, 4 மாதங்களுக்குப் பிறகு முஸ்லிம் எம்.பி.க்களின் குழு சமூக நீதியை வலியுறுத்தியும் மதநல்லிணக்கத்திற்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்பதற்கும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இத்தகையக் கருத்தோட்டம் அனைத்து எம்.பி.க்களிடமும் காணப்படுகிறது. செயல்பாடுகளை வருகின்ற காலத்தில் காண்பீர்கள்.
* நீங்கள் வேலூர் தொகுதி எம்.பி. ஆக இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது என்பதை உணருகிறீர்களா?
நான் பெருமையாகக் கருதுகிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் நான் ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினராக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதாக உணருகிறேன். அத்தகையக் கடமையும் உணர்வும் எனக்கு உண்டு. எந்த ஒரு பாகுபாடும் இன்றி இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்களால் மட்டுமே இட்டுச் செல்ல முடியும் என்ற வரலாற்றை உண்மைப்படுத்தும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
* "சமரசம்' 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது...
மிகுந்த மகிழ்ச்சி. 30 ஆண்டுகளாக சமுதாயப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிற சமரசத்திற்கும் சமரசக் குழுவிற்கும் வாழ்த்துகள். நான் சமரசத்தோடு மிகவும் சமரசமானவன். சமரசத்தைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டிய விஷயத்தை யார் மனதும் புண்படாமல் வெளியிடுகிறீர்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸும் பிஜேபியும் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை இன்று இருக்கக் கூடிய முஸ்லிம் வாராந்
திரப் பத்திரிகைகள் ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கும் கேவலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில் சமரசம் ஒரு நல்ல சமூகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது. "சமரசம்' வீட்டிற்கு வந்து விட்டது என்றால் அதை நாம் படிப்பதற்கு முன்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக் கூடிய ஒரு நன்மதிப்பை சமரசம் பெற்றுள்ளது. சமரசப் பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
சந்திப்பு : M. முஹம்மது கவுஸ்


ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் மாத‌மிருமுறை இத‌ழ்
ஜுலை 16 31, 2009
விரைவில் www.samarasam.net

விடியலுக்கு காத்திருப்போம்!

விடியலுக்கு காத்திருப்போம்!


From: jeevagiridharan
Date: Thu, Oct 22, 2009 at 10:42 AM

விடியலுக்கு காத்திருப்போம்!

கடந்த வெள்ளிக்கிழமை விடியலில் சூரியன் உதித்த போது இந்த பூவுலகம் முழுவதுமே அமைதிப் பூங்காவாக மாறிப் போனது கண்டு வியந்து போனது. நாடுக ளிடையே எல்லைக் கோடுகள் அழிந்து போயிருந்தன. ராணுவ டாங்கிகள் பொதி சுமக்கும் கழுதைகள் போல பொருட்களை ஏற்றிச் செல்லும் வண்டிகளாக மாறி விட்டது. துப்பாக்கிகளை உருக்கி எடுத்த இரும்பில் பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகள் மறந்து மக்கள் சகோதரர்களாக ஒருவரை ஒருவர் ஆரத் தழுவியவாறு, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்தன்ர. நதிகளிளெல்லாம் பாலும், தேனும் பெருக்கெடுத்து ஓடின. பசி, பஞ்சம், பட்டினி, வறுமை, ஊழல், அடக்குமுறை, அதிகாரம், ஆக்கிரமிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் எல்லா மொழிகளின் அகராதிகளி லிருந்தும் சட்டென மறைந்து போயிருந்தன.

இந்த பூவுலகம் மாயாலோகமாகிப் போனதன் காரணம் என்ன தெரியுமா? உலக சாவு வியாபாரி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் உலக சமாதானத்திற்காக உழைத்ததற்காக உலகின் மிக உயர்ந்த விருதான `நோபல் சமாதான பரிசு’ - கடந்த வெள்ளிக்கிழம அவருக்கு அறிவிக்கப்பட்டது தான் காரணம். உலக அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபருக்கு தரப்பட்டால், பூவுலகம் மாயாலோகமாக மாறிப் போகும்.

இந்த சாவு வியாபாரிக்கு உலக சமாதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து உலகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள், சந்தேகங்கள், கண்டனங்கள், எதிர்ப்புக் குரல்கள் நாள்தோறும் ஊடகங்களில் காண்கிறோம். பராக் ஒபாமா இவ் விருதுக்கு தகுதியானவரா என பார்ப்பதற்கு முன்னர் இவ் விருதை தருகின்ற `நோபல்’ அமைப்பு பற்றிய சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நோபல் பரிசை தருவது `நோபல் பவுண்டேசன்’ - என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு 1900-வது ஆண்டில் ஆல்பிரட் நோபல் என்பவரின் உயில் சாசனத்தின்படி ஏற்படுத்தப்பட்டது. ஆல்பிரட் நோபல் என்பவர் பல கோடிக்கணக்கான தன் சொத்துக்களை இந்த `நோபல் பவுண்டேஷன்’க்காக எழுதி வைத்துள்ளார். அந்த சொத்துக்களிலிருந்து வருகின்ற வருமானத்தைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கி யம், பொருளாதாரம் மற்றும் சமாதானம் ஆகிய துறைகளில் மிகச் சிறந்த சேவை செய்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்தந்த துறைக்கான `நோபல் பரிசு’ வழங்கப்படும்.

பரிசு வழங்குவது `நோபல் பவுண்டேஷன்’ என்ற அமைப்பாக இருந்தபோதிலும் பரிசுக்குரியவர்களை அது தேர்ந்தெடுப்பதில்லை. ’தி ராயல் ஸ்வீடிஷ் அகாதெமி ஆப் சயின்சஸ்’ - என்ற அமைப்பு இயற்பியல், வேதியி யல் மற்றும் பொருளாதாரத் துறையில் பரிசுக்குரிய வர்களைத் தேர்வு செய்யும். கரோலின்ஸ்கா இன்ஸ்டி டியூட்டில் உள்ள `தி நோபல் அசெம்பிளி’ - என்ற அமைப்பு மருத்துவத் துறையிலும் `தி சுவீடிஷ் அகாதெமி’ - என்ற அமைப்பு இலக்கியத் துறையிலும் பரிசுக்குரியவர் களை தேர்ந்தெடுக்கும். அமைதிக்கான பரிசுக்குரியவரை மட்டும் நார்வே பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டு அமைக்கப்பட்ட ஐவர் குழு முடிவு செய்யும்.

நோபல் பவுண்டேஷனை ஏற்படுத்திய ஆல்பிரட் நோபல் இதற்காக பல கோடிக்கணக்கான சொத்துக் களை தந்துள்ளாரே. அவர் மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவரா? இல்லையெனில் இந்த சொத்துக்களெல்லாம் அவருக்கு எப்படி வந்தது?

ஆல்பிரட் நோபல் 1833-ம் வருடம் சுவீடன் நாட்டி லுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரத்தில் இம்மானுவேல் நோபல் என்பவரின் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த நேரம் அவருடைய தந்தையின் வியாபார நிறுவனம் நொடிந்து திவாலாகிப் போனது. எனவே நோபலின் தந்தை ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் என்ற நகருக்கு சென்று அங்கே ஒரு சிறிய பட்டறையை ஆரம்பித்தார். 1842-ல் தன் குடும்பத்தினரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதன்பின் தன்னுடைய 17-வது வயதில் ஆல்பிரட் நோபல் பாரிஸ் நகரின் ஒரு ஆய்வுக்கூடத்திலே பணிக்கு சேர்ந்தார். பின்னர் தன் தந்தையின் பட்டறை யிலேயே பணிக்கு சேர்ந்தார். இந்தப் பட்டறையில் முக்கியமாக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 1853 லிருந்து 1856 வரை `கிரிமியன் போர்’ - நடைபெற்ற காலத்தில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆயுத சப்ளை செய்த வகையில் நோபல் நிறுவனம் நல்ல வளர்ச்சியடைந்தது. பின்னர் போர் முடிந்து விட்டதால் வியாபாரம் மந்தமாகி மீண்டும் நோபல் கம்பெனி திவாலாகி விட்டது. ஏதேனும் ஒரு வழியில் வியாபாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த நோபல் முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான் அவருடைய இரசாயனத் துறை ஆசிரியர் நிக்கொலா ஜெனின் நோபலுக்கு `நைட்ரோ கிளிசரின்’ என்ற இரசாயனம் பற்றி எடுத்துச் சொன்னார்.

1862-ல் நோபல் நைட்ரோகிளிசரின் மூலமாக வெடி மருந்து தயார் செய்து அதன் மூலம் `டிடோனேட்டர்’ என்ற வெடிகுண்டை கண்டு பிடித்தார். 1863-ல் நைட்ரோகிளிசரின் வெடிமருந்துக்கான காப்புரிமையை பெற்றார். 1865-ல் ஜெர்மனியிலும், 1866-ல் அமெரிக்கா விலும் தன்னுடைய வெடிமருந்து தொழிற்சாலையை ஆரம்பித்தவர் அதே ஆண்டில் `டைனமைட்’ என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டை வடிவமைத்தார். ரஷ்யா, சுவீடன், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலெல்லாம் தன் தொழிற் சாலைகளை ஆரம்பித்து ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் தயாரித்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்தார். 1887-ல் மிகச் சக்தி வாய்ந்த வெடிமருந் தான `பாலிஸ்டைட்’ - என்ற வெடிமருந்தை கண்டு பிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார். 1894-ல் போபர்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். இந்த போபர்ஸ் நிறுவனம் உலகளவிலே மிகப் பெரிய ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும்.

ஆயுதங்கள், வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் என்பவை ராணுவம், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என யார் கையில் இருந்தாலும், யாரால் உபயோகப் படுத்தப்பட்டாலும் அதனால் மடிவது மக்களே. மனித குலத்துக்கு எதிரான, மனிதநேயத்துக்கு எதிரான, மனி மாண்புகளுக்கு எதிரான படுகொலைப் பாதகங்களை செய்வது இந்த ஆயுதங்கள் தான். உலகில் பல கோடி மனித உயிர்களை கொன்று குவித்து, அந்த அழுகிப் போன பிணங்களை தோண்டி எடுத்து பிழிந்து பெற்றது தான் நோபல் நிறுவனத்தின் பல கோடி சொத்தக்கள். இந்த பிண வாடை வீசும் சொத்துக்கள் தான் நோபல் பரிசு தர உபயோகப்படுத்தப்படுகிறது. பிண வாடை வீசும் அந்த கரங்கள், இரத்தக் கறைகள் கொண்ட கரங்கள், பிணக் குவியலின் மீதேறி இன்று தருகின்ற `உலக சமாதானத்துக்கான நோபல் பரிசை’ பெறுவது யார்? அமெரிக்க அதிபர்.
உலகம் முழுவதும் தன் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டுமென்பதற்காக பல்வேறு நவீன ஆயுதங்களை தன்னிடம் குவித்து வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகள் ஒற்றுமையுடன் இருப்பதை விரும்புவதேயில்லை. இரு நாடுகளுக்கிடை யில் பிரச்சினைகளை தானே உருவாக்கிவிட்டு, அவை போரில் இறங்குமளவிற்கு நிலைமையை தீவிரப்படுத்தி விட்டு, பின்னர் இரு நாடுகளுக்கும் ஆயுத சப்ளை செய்வது, அதையும் வியாபார தர்மம் எனக் கூறிக் கொள்வது போன்ற கேடு கெட்ட செயல்களை செய்யும் நாடுதான் அமெரிக்கா. உலகின் எந்த மூலையில் இயற்கை வளங்கள் இருந்தாலும் அதைக் கொள்ளை யடிக்க முயல்வது, பல லட்சம் மக்களை கொன்று குவித்தாவது அந்த செல்வங்களை கொள்ளையடித்து வருவது என்பதுதான் அமெரிக்காவின் கொள்கை. இஸ்ரேல் என்ற வேட்டை நாயை வளர்த்து விட்டு அப்பாவி பலஸ்தீனர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பது இன்றும் தொடர்கிறது. பெட்ரோலிய வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே வளைகுடா நாடுகளுக்கிடையில் படையை உருவாக்கி ஒன்றோ டொன்று மோதிக் கொள்ள வைத்து, இரு தரப்பிற்கும் ஆயுத சப்பையும் செய்கின்ற நாடுதான் அமெரிக்கா. ஈராக்கில் எண்ணெய் கிணறுகளுக்காகவே அந்த நாட்டின் மீது ஒரு ஆக்கிரப்பு போரை நடத்தி பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்றதோடல்லாமல் அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேன் அவர்களையும் அவசரமாக தூக்கிலேற்றி படுகொலை செய்தது அமெரிக்கா.

இரட்டை கோபுரத் தாக்குதலை காரணமாக்கி, `இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற ஒரு புதிய ஆயுதத்தை கையிலெடுத்து உலகின் முஸ்லிம் மக்களெல்லாம் பயங்கரவாதிகள் தானோ என்ற அச்சத்தையும, ஐயப்பாட்டையும் மக்கள் மனதில் திணித்து தான் செய்யும் படுகொலைகளையெல்லாம் `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ - என நாமகரணம் சூட்டி நியாயப்படுத்துகிறது அமெரிக்கா. கியூபாவில் குவெண்டனாமோ என்ற சிறு தீவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை முகாமில் நடைபெற்ற ஈவிரக்கமற்ற, மனிதத் தன்மையற்ற, மிருகத்தனமான சித்ரவதைக் காட்சிகள் வெளியே கசிந்து ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டபோது அதைக் கண்டு உலகமே பதை பதைத்தது. மக்களின் பார்வைக்கு மறைக்கப்பட்ட இதுபோன்ற நூற்றுக்கணக்கான சித்ரவதை முகாம்களில் இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் விசாரணை என்ற பெயரில் கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆப்கனிஸ்தானில் அமெரிக்க படைகளின் அத்துமீறல் களும், அடாவடித்தனங்களும் உலகின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் கூறி அதன் மீது படையெடுக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதல்ல அமெரிக்காவின் கவலை. ஈரானின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதே அதன் நோக்கம். சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா இன்று அப்படிப்பட்ட ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்பதை தவிர்க்க இயலாமல் ஒத்துக் கொண்டுள்ளது. ஆனாலும், பல லட்சம் ஈராக்கியர்களை கொன்றொழித்து விட்டு இன்று அனைத்து பெட்ரோல் கிணறுகளையும் தன் வசமாக்கிக் கொண்டது.

இப்படிப்பட்ட சாவு வியாபாரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்குதான் ’உலக சமாதான நோபல் பரிசு’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா அப்படியென்ன சாதித்து விட்டார்?

இந்த விருதுக்கானவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுத் தலைவர் நோர்ப் குஜார்ன் ஜக்லாண்ட் கூறும் போது, `சர்வதேச அளவிலே மக்களுக்கிடையிலும், அரசுகளுக்கிடையிலும் நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியை ஒபாமா தொடங்கியுள்ளார்’ - என்கிறார். `இது ஒபாமா சாதித்த செயல்களுக்கானதல்ல. அவருடைய முயற்சிகளுக்கு உற்சாகம் கொடுப்பதற்காக தரப்படுகிறது’ - என்கிறது தேர்வுக்குழு.

ஒபாமா அப்படி என்ன முயற்சிகளை செய்துள்ளார்? குவாண்டனாமோ சித்ரவதைக் கூடத்தை இழுத்து மூடப் போவதாக கூறியுள்ளார். இதுவரை அது மூடப்பட வில்லை. மேலும், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சித்திரவதை முகாம்கள் ரகசியமாக இன்றைக்கும் நடத்தப்படுகின்றன.

ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கிருக்கும் அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இன்றுவரை அமெரிக்க துருப்புகள் அங்கேயே நிலை கொண்டுள்ளன. துருப்புகளை வாபஸ் பெறுவது இருக்கட்டும். ஈராக்கின் எண்ணெய் கிணறுகளிலிருந்து வெளியேற அமெரிக்கா தயாரா?

ஈரானுடன் மோதல் போக்கை கைவிட்டு பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறார். மத்தியக் கிழக்கு நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என கெய்ரோவில் எழுச்சிகர மான உரையை படித்தார். ஆப்கனிஸ்தானில் போரை நிறுத்துவதாக அறிவிக்கிறார். இவையெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். ஏன் எனில் அமெரிக்க ராணுவ தலைமை ஆப்கனிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய நூதன முறைகளில் தம்முடைய பலத்தை பிரயோகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி, சமாதானம் பற்றி பேசும் ஒபாமா பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதல் பற்றி வாய் திறப்பதில்லை. சமீபத்திய இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்த ஐ.நா. ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி ரிச்சர்ட் கோல்ட் ஸ்டோர் தன்னுடைய அறிக்கையில் இந்த ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேலின் ராணுவமும, அரசியல் தலைமை யும் பல்வேறு போர்க் குற்றங்களை செய்திருப்பதாக கூறுகிறார். இந்த போர் குற்றவாளிகளை கண்டித்து இதுவரை ஒபாமா எந்த நடவடிக்கையும் எடுக்க துணிய வில்லை. ஒபாமா பதவியேற்ற புதிதில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன் பகுதிகளில் யூதர்களை குடியேற்றம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். ஆனால், இஸ்ரேல் அதை உடனடியாக நிராகரித்தது. ஒபாமா இஸ்ரேல் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் `அமைதி’ காத்தார். அதற்குதான் இந்த `அமைதி பரிசு’ போலும்.

ஈரானுடன் மோதல் போக்கை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்கப் போவதாக ஒபாமா கூறியிருப்பதை நோபல் தேர்வுக் குழு பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை பற்றி ஒபாமா பேசிக் கொண்டிருக்கும் போதே சந்தடியில்லாமல் ஈரான் மீதான மிகப் பெரிய தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலை தொடுக்க தேவையான `பங்கர் பஸ்டர்ஸ்’ எனப்படும் நிலத்தடியி லுள்ள கட்டிடங்களை தகர்க்கும் ஆயுதங்களை குவித்துக் கொள்வதற்கான அனுமதியை அமெரிக்க ராணுவம் அதிபரிடம் பெற்றுள்ளது. `பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன்’ - என்பதுதான் அமெரிக்காவின் தாரக மந்திரம்.

இந்த நேரத்தில் இந்திய நாட்டின் குடிமக்களாகிய நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அமைதி, சமாதானம் என்பது இந்தியாவின் நிரந்தரமான நிலைப்பாடு. இங்குள்ள பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் அதைத்தான் போதிக்கின்றன. உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்தை நாம் அடைந்தது `அகிம்சை’ - என்ற கொள்கையினை பேசிய போதுதான். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்க்க அகிம்சை என்ற தத்துவத்தையே தன் ஆயுதமாக எடுத்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அதனாலேயே அவர் உலக மக்களால் `மகாத்மாகாந்தி’ - என அழைக்கப்பட்டார். 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 ஆகிய வருடங்களில் மகாத்மா காந்திக்கு `உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு’ - வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் அகிம்சைக்கான சின்னமாக கருதப்பட்டவர் மகாத்மா காந்தி. ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு தரப்படவேயில்லை. ஏன்? அப்படியெனில், இந் நோபல் பரிசு வழங்கப்படுவதில் ஏதேனும் உள்நோக்கங்கள் இருக்கிறதா?

நோபல் பரிசுக்கான பரிந்துரைகளை ஏற்க கடைசி நாள் 2009 ஜனவரி 31. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றது 2009 ஜனவரி 20. பதவியேற்ற 12 நாட் களுக்குள் அவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. 250-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளிலிருந்து ஒபாமாவின் பெயர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டைனமைட், ஜெலட்டின், பாலிஸ்டைட் போன்ற பேரழிவு வெடிபொருட்கள், பேரழிவு ஆயுதங்களை தயாரித்து உலகெங்கும் விற்று பணமாக்கி பல ஆயிரம் கோடிகளை குவித்துள்ள நோபல் நிறுவனம் `அமைதி பரிசு’ வழங்க உலக நாடுகளிலெல்லாம் நாடுகளுக் கிடையில் பகைமையை மூட்டி, இரு தரப்புக்கும் ஆயுதங்களை சப்ளை செய்து, அவற்றை தம் ஆதிபத்தியத் தின் கீழ் கொண்டு வருவதும், உலகின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும், எதிர்க்கும் நாடுகளை தன் ஆயுத பலத்தால் நிர்மூலமாக்குவதும், ஆயிரக்கணக் கான அணு ஆயுதங்களை தன்னிடம் குவித்து வைத்துக் கொண்டு, உலக நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது எனவும், `அணு ஆயுதம் அற்ற உலகைப் படைப்போம்’ - என உளறிக் கொண்டு திரிவது மாக உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் `அமைதிப் பரிசை’ - பெற இந்த நாடகம் இனிதே அரங்கேறுகிறது. இந்த ஆயுத வியாபாரியும், உலக பேட்டை ரவுடியும் நடத்தும் இந்த நாடகத்தை மனித நேயம் கொண்ட உலக மக்கள் நம்பத் தயாராக இல்லை. மனித குலத்தின் நிணமும், சதையும் தின்று கொழுத்த இந்த சைவப்புலிகளை - சாத்தான்களை தோலுரிப்போம். இந்த சாவு வியாபாரிகள் இல்லாதொழியும் நாளே உலகம் முழுமைக்கும் அமைதி திரும்பும் நாள். சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவம் மலரும் நாள். அந் நாள் எந்நாளோ?

விடியலுக்கு காத்திருப்போம்.

Thursday, July 1, 2010

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தோப்புத்துறை அ.முஹும்மது நூர்தீன்
அமெரிக்கா (USA)காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு)

இந்த உலகில் எப்படியும் வாழலாம் என்று இஸ்லாம் வழிமுறை சொல்லவில்லை. இப்படி தான் வாழ வேண்டும் என்ற உயாந்த கட்டுபாடுமிக்க மனிட சமுதாயதை உலகிற்கு அறிமுகப்படுத்திய மார்க்கம் தான் இஸ்லாம்.

இந்த புனிதமிக்க மாதமான ரமலானில் எப்போதும் இல்லாத வகையில் அல்லாஹுவின் இறைவசனங்கள் உலகம் முழுவதும் ஒலிக்க கண்டு நம் அனைவர்களும் மெய்சிலிர்த்து போய் இறைமறை தரும் வழியில் வாழ உறுதி எடுக்கும் மனநிலைக்கு வருகிறோம். இந்த உலகில் எத்தனையோ நிகழ்வுகள், வியக்கதக்க சம்பவங்கள், விஞ்ஞான பரிமான வளர்ச்சியின் வெளiபாடுகள் போன்றே எத்தனையோ பல அற்புதங்களை கண்டு வியந்து பரவசமடைந்து இருப்போம் அப்படி இருந்தும் இவைகளை அனைத்தையும் புறம் தள்ளiவிட்டு அதற்கு வழிகாட்டியாக, மனித அறிவிற்கு ஊக்கம் தரும் மருந்தாக சிறப்பான அருட்கொடையாக திகழ்வது எல்லாம் வல்ல அல்லாஹுவின் திருக்குர்ஆன் மட்டுமே.

இறைவனின் வேதம் மற்றும் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையை தன் வாழ்நாட்களiல் ஒவ்வொரு சிறிய, பெரிய காரியம் வரை இணைந்து வலிமைமிக்க சமுதாயமாக வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் இன்று வலிமை குன்றிய நிலைக்கு சென்று தங்களiன் முகவரியை தேடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது பெறும் வேதனை தரும் விசயமாக உள்ளது.

அருள்மறையை நாம் என்றும் ஆராய்ந்து பார்ப்பதில்லை, அதில் இருக்கும் போதனையின்படி அன்றாடம் நாம் நடக்க முயற்சி செய்வதில்லை. இறைவேதத்தில் இருக்கும் அரிய பல விசயங்கள் உணர்வுப்புர்வமாய் ஏற்று நடப்பதில்லை அல்லது அப்படி நடந்து வருவதற்கு முயற்சியும் எடுப்பதில்லை.

இம்மைக்கும், மறுமைக்கும் நல்வழிப்படுத்த நபி(ஸல்) அவர்கள் மூலம் திருமறையை கொடுத்த இறைவன் நம் சமுதாயத்திற்கு ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹுஜ் என்ற ஐம்பெரும் கடமையை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துள்ளான்.

சாந்தியும் சமாதானத்தை உலகம் முழுவதும் பரவ செய்யும் இஸ்லாம், சமுதாயத்தில் ஒற்றுமையை முன்நிறுத்துகிறது. உலகில் உள்ள பல்வேறு கோட்பாடுகளiலிருந்து தனிதன்மையாக இஸ்லாம் இருக்க காரணம் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால் தான்.

இந்த புனித ரமலான மாதத்தில் இறைவனுக்காக நோன்பு நோற்றோம், இறைவனை தொழுது வந்தோம் பிறகு குறிப்பிட்ட காலம் வரும் போது புனித யாத்திரை செல்லுகிறோம் இத்தனை வாழிப்பாடுகளையும் நாம் கூட்டாக ஒற்றுமையை முன்நிறுத்திதான் செயலாற்றுகிறோம், நமக்கு இந்த வாய்ப்புகளை கொடுத்த இறைவன் நன்மைகளை தராள மனதுடன் வாரி வழங்குகிறான். இறைவன் கொடுத்த கடமைகள் அனைத்தும் கூட்டு முயற்சி, உறவு என்ற கலவையில் ஒற்றைமை என்ற அடிப்படையுடன் உள்ளது.


இன்று இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக நம் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளல் குறிப்பாக இளைஞர்கள் அகப்பட்டு அதில் இஸ்லாத்திற்கு விரோதமாக சுழன்று கொண்டுள்ளோர்கள்.

சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போக காரணம் நம்மிடையே பிணக்கு கொள்வது தான் நம் சமுதாயம் பெரிய அளவில் பலவீனமாக போய்விட்டது. இதுவே சமுதாய பின்னடைவிற்கு காரணம்.

பகட்டு வார்த்தைகள நம்பி பல்வேறு இயங்கம், அமைப்பு என்று சிதறிச் சென்று உங்களiன் உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொடுத்து பல இன்னல்களை பரிசாக பெற்ற சமுதாய உடன்பிறப்புகளே இனிவரும் காலத்தில் உங்களை நீங்களே முன்நிறுத்தி பார்த்து அமைதியாக எந்த வித விளம்பர தோரனையில்லாமல் சமுதாய வளர்ச்சியை மட்டுமே கவலை கொண்ட நம் தாய் சபை முஸ்லிம் லீக் என்ற பேரியக்கத்தில் உங்களை இணைத்து கொண்டு சமுதாய பணியாற்றிட வாருங்கள். சமுதாயத்தை சரியான பாதையில் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் வழிநடத்தவில்லையெனில் எதிர்காலத்தில் வரும் இஸ்லாமிய தலைமுறைகள் அடையும் பின்னடைவிற்கு நீங்களே காரணம் என்ற அவபெயர் பெறாதீர்கள், நாளை இறைவனிடம் சமுதாய ஒற்றுமையை பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற எச்சரிகையோடு சமுதாயம் எழுச்சி பெற விரைந்து வாருங்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்து கொள்வதே சரியான தீர்வு -

கடந்த மாதம் இறுதியில் எழுச்சிமிக்க தலைவர் பேராசிரியர் அவர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் சமுதாய நாளதழ் மணிச்சுடர் மூலம் உன்னைத்தான் அழைக்கிறேன் உனக்குக் தான் அறிவிக்கிறேன் என் தலைப்பில் முஸ்லிம் லீக் சேர்ந்து சமுதாய பணியாற்றிட சமுதாய இளைஞர் பட்டளத்திற்கு அழைப்பு மடல் அனுப்பியிருந்தார்கள். இந்த அழைப்பையே ஒவ்வொரு சமுதாய கவலைக் கொண்டவர்களும் தனக்கு வந்த தனிஅழைப்பாக ஏற்று கொண்டு வாருங்கள் முஸ்லிம் லீக் தாயுள்ளத்துடன் அரவனைக்க காத்திருக்கிறது.

இஸ்லாம் பிற சமூகங்களுக்கு என்றைக்குமே முன்மாதிரி தான், அது நம் சமுதாயம் வாழ்ந்து காட்டும் ஒற்றுமை மற்றும் மக்களiடையே நல்லிணக்கமாக இருந்து வரும் நற்பண்புகளுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம் லீக் தாய் சபையில் ஒன்றுப்படுவோம். சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவோம். எழுச்சிமிக் தலைவர் மற்றும் இளைய சமுதாயம் கொண்ட மாநில நிர்வாகம் கீழ் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி வரலாறு படைக்க வாருங்கள்…நமக்கு கிடைக்க வேண்டிய பொது மற்றும் அரசியல் அங்கீகாரத்தை உரிமையுடன் பெறுவோம். (இன்ஷா அல்லாஹு)