அமீரகத் தாய்ச் சபையின் தளபதி..!
லட்சத்தி சொச்சம் வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி பெற்று
கோடிக்கணக்கான
மக்கள் மனதில் நிலைப் பெற்று
நாடாளும் சபையில் இடம் பெற
துணை புரிந்த வல்ல ரஹ்மானுக்கே
எல்லாப் புகழும்..!
வேலூர் நாடாளு மன்ற தொகுதியின்
வெற்றிச் செல்வரைப் பற்றி
சில வரிகள்...சிலருக்காக...!
நெஞ்சம் இருக்கும் வரை
நினைத்துக் கோண்டிருக்கும்
வரலாற்றுக்குச் சொந்தக்காரர்
சந்தனத்மிழ் அறிஞர்
சிராஜுல் மில்லத்தின் அன்புத் தம்பி..!
மணிவிழாவின் முழு நிலா
முனீருல் மில்லத்தின் மாணவராக,
முழு மனதாக வளம் வரும்
அமீரகத் தாய்ச் சபையின் தளபதி..!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்
காயிதே மில்லத் பேரவையின்
அனைத்துலக அமைப்பாளர்..!
ஐக்கிய அரபு அமீரக
காயிதேமில்லத் பேரவையின்
தனிப் பெரும் தலைவர்..!
அறிவுச் சுடர்
இயக்க இளவல்
முஸ்லிம் லீகின்
முத்துப்பேட்டை நகரின்
முதுபெரும் தலைவராகவும்
தப்லீகின் அமீர்களில்
ஒருவராகவும் திகழும்
நெ.மு.ஹாஜியார் பெற்றெடுத்த
பெருமகனாரே..!
தங்களுக்கு வந்த விமர்ச்சனங்கள்
எங்களை நோக்கித்தானே..?
சத்தமில்லாமல் சமுதாயப்பணி
செய்வதை வாழ்த்துவதா..?
விளம்பரத்தின் வெளிச்சமின்றி
வாரி வழங்குவதை வாழ்த்துவதா..?
நான் முஸ்லிம் லீகில் இணைந்தவனல்ல..
அதில் பிறந்தவன் என்று பிரகடனப்படுத்தினீரே
அதை வாழ்த்துவதா..?
இமாலாய வெற்றியடைந்து
இந்தியாவை மதவாத சக்திகள்
ஆள துணை போக நேரிட்டால்...?
என்ற கேள்வியை எதிர் கொண்டதும்
அடுத்த நொடியே தூக்கியெரிவேன்
என சூளுரைத்த-இஹ்லாசான
ஈமானை வாழ்த்துவதா..?
தேர்தலில் நின்று வெற்றி வாகை
சூடியதை வாழ்த்துவதா..?
தாய்ச் சபைத் தலைவர்களின்
லட்சியப் பாதையில் பயணிப்பேன்
என்ற சபதத்தை வாழ்த்துவதா..?
வாழ்த்துக்கள் என்ற பெயரால்
வார்த்தைக்களைச் சொல்லி
முடித்துக் கொள்ள விரும்பவில்லை
தங்கள் தம்பிமார்கள்..!
தங்கள் சாதனைகள்
சமுதாயத்தின் சீதனமாக
மாறப் போவது உண்மை..!
தங்கள் வெற்றிப் பணிக்கு
உரமிட்ட வாக்காளர்களுக்கும்,
உன்னதமான சமுதாயத்தின்
ஒத்துழைப்பிற்க்கும் வாழ்த்துக்கள்..!
தாங்கள் பங்கெடுத்த நிகழ்வுகளில்
பதிய வைக்காமல் இருந்ததில்லை
பசுங் கொடித் தோழன் என்ற பெருமையை..!
தாய்ச்சபைத் தம்பிமார்களின்
தாழ்மையான வேண்டுகோள் தங்களுக்கு
அதை நிறைவேற்றித் தர வேண்டும் எங்களுக்கு..!
பிறை மேடை பிரகாசிக்க
பெரும் காரணமாயிருந்த
பெருமகனே..!
மீண்டும் வேண்டும்
கடல் கடந்த கண்மணிகளும்
காண வேண்டும்..!
ஆம்!பிறை மேடை
தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும்..!
வாய்ப்புக்கு வாழ்த்துக் கூறி
அய்மானுக்கு நன்றி கூறி
விடை பெருகிறேன்...!
குறிப்பு: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் நடைபெற்ற வாழ்த்தரங்கில்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வாசித்த கவிதைத் தொகுப்பு.
ibnuthalabathi@yahoo.co.in