ஜமாஅத்துல் உலமா சபை: திமுகவுக்கு ஆதரவு
ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சபையின் நிர்வாக குழுக் கூட்டத் தலைவர் ஏ. வலியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். அப்துல் சலாம் வரவேற்றார்.
இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ. ரகுமான்கான், கவிஞர் அமீர் அப்பாஸ் ஆகியோர் திமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். எம். முகம்மது ரியாசுதீன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முகம்மது ஜரீத் நன்றி கூறினார்.