Tuesday, May 12, 2009

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே!

அவதூறு யார் மீது பரப்பப்பட்டாலும் அது மிகப் பெரிய அநீதி. வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மை தான் இறைவனை அஞ்சி வாழும் நல்லடியார்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

சிறுமதியாளர்களின் ஈனச்செயல்களால் வேதனக்குள்ளான மரியாதைக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் எனது அனுதாபமும் ஆதரவும்.

அதே வேளையில், காலத்தை சிறிது பின்னோக்கி ஓட்டிப் பார்க்கிறேன். தனது வேலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு ஊரில் ஒரு சாமியாரை சந்தித்துவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கும் போது, தன் கையை தரையில் ஊன்றி எழுந்திருக்கிறார் 70 வயது நிரம்பிய முனீருல்மில்லத் பேராசிரிய்ர் காதர் மொகிதீன் அவர்கள். போட்டோவும் எடுக்கப்படுகிறது.

இது தான் வேளை என்று, அந்த போட்டோவை பயன்படுத்தி அரசியல் பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்த அன்றைய தமுமுக-வாகிய இன்றைய ம்மக-வினர், பேராசியர் காதர் மொகிதீன் அவர்கள் சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று, நா கூசாமல், அவர்களது இணையதளத்தில் 'கப்சா, அடித்து பேரா. காதர் மொகிதீன் அவர்களை பொய்யுரைத்து கேவலப்படுத்தினீர்களே!

அப்போது, நீங்கள் இன்று பேசும் பவ்வியமாகப் பேசும் 'இறையச்சம்', உங்களை விட்டு வாக்கிங்கா போயிருந்தது. தன்னைப் பற்றி தமுமுக/மமக பரப்பிய பொய் செய்தியை படித்து பேரா.காதர் மொகிதீன் எத்தனை மன வேதனை அடைந்திருப்பார். காலம் கடுமையான ஆசிரியன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். எனினும், இரண்டு அவதூறு சம்பவங்களும் மிகுந்த கண்டனத்துக்குறியவை.

மாட்சிமை பொருந்திய அல்லாஹ் தவறிழைக்கும் மனிதர்களாகிய நம் அனைவரயும் மன்னிக்கப் போதுமானவன்

அன்புடன்

அபூ நஜ்மி

குறிப்பு: நான் ததஜ/முஸ்லிம் லீக் தொண்டனல்ல.
abunazmi@gmail.com