ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Saturday, May 16, 2009
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் சுமார் 1,05,393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹம்துலில்லாஹ் )
மொத்த வாக்களார்கள் : 7,23,529
எம். அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற வாக்குகள் 3,60,474
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,53,081
சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ரஹ்மான்.
வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.
தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.
கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.
கடந்த தேர்தல் நிலவரம்
காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.
இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்
1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் முஸ்லிம் லீக்
முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)
இத்தகைய வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
Labels:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தொகுதி,
நாடாளுமன்றம்,
வெற்றி,
வேலூர்