Sunday, May 17, 2009

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்
தனிப்பட்ட அப்துல் ரஹ்மானுக்கு அல்ல@
தாய்ச்சபைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான்

தாய்ச்சபையினருக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிகரமான உரை


சென்னை, மே.17-

வேலூரில் வெற்றி மாலை சூடிய அப்துல் ரஹ்மானுக்கு தாய்ச்சபை யாம் இந்திய ய
+னியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமை அலுவலகமான காயிதெ மில்லத் மன்ஸிலில்
சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் மற்றும்
ஊழியர்களும், தலைமை நிலைய அலுவலர்களும், மணிச்சுடர் நாளிதழ்
செய்திப்பிரிவு - அச்சகப் பிரிவு ஊழியர்களும் பொன்னாடை அணி வித்தும்
கைகுலுக்கியும் தங்களது வரவேற்பையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக்
கொண்டனர்.

வரவேற்பையும், வாழ்த் தையும் ஏற்றுக் கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம். அப்துல் ரஹ்மான் தனது வெற்றிக் காக பாடுபட்ட தாய்ச்சபை
யினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து உணர்ச்சிகர மான
உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறிய தாவது-

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டு அதன்
வேட்பாள ராக போட்டியிடும் வாய்ப் பினை வழங்கிய இறைவ னுக்கு முதலில் என்
நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எனது இளமைக்காலத் திலிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஊழியனா கவே
பணியாற்றி பழக்கப் பட்டவன். முஸ்லிம் லீக் காரனாகவே வாழ்க்கையை நடத்திச்
செல்லும் அளவுக்கு தாய்ச்சபை தலைவர்கள் என்னை பக்கு
வப்படுத்தியுள்ளார்கள் - வழிகாட்டிக் கொண்டிருக் கிறார்கள்.

தாய்ச்சபை தலைவர்கள் வழியிலிருந்து சிறிதளவும் பிசகாமல் நடப்பதன்
காரணமாகவே எந்தவித தவறுக்கும் இடமளிக்காத வண்ணம் எனது வாழ்க் கையை
நடத்திச் செல்ல முடிகிறது. பதவியை - பட் டங்களை - அதிகாரங் களை விரும்பி
நான் தாய்ச் சபைக்கு வந்தவன் அல்ல.

நான் பிறவியிலேயே முஸ்லிம் லீக் காரன். பதவி கள் எனக்கு பெரிதல்ல. சமு
தாயத்தின் மானம் - மரி யாதை - கண்ணியம் ஆகி யவைதான் எனக்கு முக்கிய
மானவையாகும்.

தாய்ச்சபை காட்டிய வழியிலிருந்து எந்த நிலை யிலும் நான் தவறி விட
மாட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட் டுள்ளேன்.

இலக்கியங்களிலே சொல்லப்படுவதைப் போல எள் அளவும் எள்ளின் முனை அளவும்,
முனையின் நுனி அளவும், நுனியின் அணு அளவும் தாய்ச்சபையின் கண்ணி யத்தை
குறைக்கும் வகை யில் எனது செயல்பாடுகள் அமைந்து விடாது என் பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் நாடாளு மன்ற தொகுதியின் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டு, அந்த
தொகுதியில் கால் வைத்தது முதல் வெற்றி பெற்று இன்று உங்களை யெல்லாம்
மகிழ்ச்சியுடன் சந்திக்கும் இந்த நொடி வரையிலும் எனது வெற்றிக்காக பலரும்
பல விதங்களில் சிறப்பாக பணி யாற்றியுள்ளார்கள். அவர் களையெல்லாம் நன்றி
பெருக்குடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள் ளேன்.

நான் வேலூர் வேட்பா ளராக நிறுத்தப்பட்டேன் என்றால் தனிப்பட்ட அப்துல்
ரஹ்மான் நிற்கிறார் என்று கருதாமல் தாய்ச்சபையின் ஊழியர் நிற்கிறார்.
சமுதாயத்தின் கண்ணியம் காக்க உரிமை களை வென்றெடுக்க தாய்ச் சபை நிற்கிறது
என்ற உணர்வுடன் ஒவ்வொருவ ரும் தாங்களே வேட்பாள ராக நிற்பது போல் எண்ணி
தங்கள் வெற்றிக்கு எப்படி யெல்லாம் பாடுபடுவோர் களோ, எவ்வாறெல்லாம்
உழைப்பார்களோ அவ்வ ளவு தீவிரமாக களப் பணி யாற்றி வெற்றியை ஈட்டித்
தந்துள்ளீர்கள். தாய்ச்சபை யின் கண்ணியத்தை - மரியாதையை பாதுகாத்
துள்ளீர்கள்.

குறிப்பாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.டி. நிஸார் சாஹிப், ஹனீப், ஜான்
பாஷா, குல்ஸர், அய்ய+ப், வாணியம் பாடி சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்
பாஸித், பாரூக் ஹாஜியார் இன்னும் ஏராளமானோர் பாடுபட்டுள்ளீர்கள்.

தலைமை நிலையச் செயலாளர் அபுபக்கர், இப்ராஹீம் மக்கி, காயல் மஹப+ப், கமுதி
பஷீர், ஹமீதுர் ரஹ்மான், மில்லத் இஸ்மாயில், திருச்சி ஹாஷிம், முஸ்லிம்
லீக் பாடகர் சீனி முஹம்மது உள்ளிட்ட ஏராளமா னோர் வேலூரிலே முகா மிட்டு
எனது வெற்றிக்காக பிரசாரம் செய்துள்ளார் கள். கடமையாக உழைத்
துள்ளார்கள்.

உள் நாட்டில் மட்டும் அல்லாமல் அயல் நாட்டில் நான் பணிபுரிந்த போதும்
தாய்ச்சபையின் பணிகளில் - வளர்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளேன்.
என்னுடன் சர்வதேச காயிதெ மில்லத் பேரவையின் பணிகளில் பங்கேற்று உழைத்த
லியா கத் அலியும் வேலூரில் எனது வெற்றிக்காக உழைத்துள்ளார்கள். அவர் தான்
சட்டமன்றம், நாடாளுமன்றம் உள் ளிட்ட மக்கள் மன்றத்தில் என்னுடைய பணி
அமைய வேண்டும் என பெரிதும் ஆர்வம் கொண்டு ஊக்கப் படுத்தி வந்தார்.

நான் வெற்றி பெற்ற வேலூர் தொகுதி நமது தாய்ச்சபை தலைவர் சிந்தனைச்
செல்வர் சிராஜுல் மில்லத் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. அந்த
தொகுதியில் நானும் ஒருவனாக போட்டியிடும் வாய்ப்பினை பெற்றதும்
பிரசாரத்திற்காக அந்த தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது
சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்த பாராட் டுரைகளையும், சிறப்பான
விமர்சனங்களையும் நினை வ+ட்டல்களையும் பெற முடிந்தது.

அதேபோன்று நம்மை வழிநடத்திக்கொண்டிருக் கும் தாய்ச்சபையின் தற் போதைய
தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. இந்த
தொகுதியில் மீண்டும் தாய்ச்சபை வென் றுள்ளது.

தொகுதி வேட்பாள ராக பிரசாரத்திற்கு நான் சென்ற போது வாணியம் பாடி
தொகுதியின் முக்கிய தொழில் அதிபர்கள், வணி கர்கள், பிரமுகர்கள் எல்
லோரும் ஒரே இடத்தில் கூடி தொகுதிக்கு நான் என்னவெல்லாம் செய்யப்
போகின்றேன் என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு கூட்டத்தை ஏற்பாடு
செய்தார்கள்.

அதில் கலந்து கொண்டு நான் உரையாற்றும் போது ஒன்றை குறிப்பிட்டேன்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிடும் நான் உதய சூரியன்
சின்னத்தில் போட்டியிடுவதை சிலர் விமர்சித்துக் கொண்டிருக் கின்றனர்.
அதுகுறித்து தவறான தகவல்களை - வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவற்றிற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் நான் முஸ்லிம் லீக் காரன்தான்.
எனது அனைத்து செயல் களும் முஸ்லிம் லீகின் கொள்கைகளுக்கும், நடை
முறைக்கும் தக்கபடிதான் அமையும்.

எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம் லீகை மறந்து எனது
செயல்பாடு அமை யாது என்று நான் அழுத் தந் திருத்தமாக அவர்கள் மத்தியில்
தெரிவித்தேன்.

என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடு
வதன் காரணமாக வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்று சமுதாயத்திற்கும்,
தாய்ச்சபைக்கும் மரியாதை யை பெற்றுத் தருவீர்கள் என்பதில் எங்களுக்கு
அசைக்க முடியாத நம் பிக்கையிருக்கிறது.

ஒருவேளை தேர்தலுக்கு பின் பி.ஜே.பி.யுடன் இணைந்து ஆட்சி அமைக் கும்
நிலையை தி.மு.க. மேற் கொண்டால் அப்போது உங்களின் நிலை என்ன வாக
இருக்கும்? என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் அழுத்தந் திருத்தமாக கூறினேன். ஹபதவியோ - பட்டமோ -
அந்தஸ்தோ - இஸ்லாத்திற்கும் - முஸ்லிம் சமுதாயத்திற்கும் சேவை யாற்றும்
வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் தாய்ச்சபையின் கொள்கை. தாய்ச்சபையின்
லட்சியத் திற்கு மாறாக நடக்கும் நிலை ஏற்பட்டால் பதவி களையும், பட்டங்களை
யும் தூக்கி எறிவேனே தவிர தாய்ச்சபையின் கொள்கை களை அல்ல.

சமுதாயத்திற்கு சேவை யாற்றத் தான் - சமுதாயத் தின் குரலை ஒலிக்கத் தான்
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந் தித்து நாடாளுமன்றத் துக்கு
செல்கின்றோமே தவிர சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் விரோத மான
செயல்களை ஆதரிப் பதற்காக அல்ல. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நான்
தாய்ச்சபை தலைவர் கள் காட்டித் தந்த வழியில் முஸ்லிம் லீகின் ஊழிய னாக
இருப்பதைத்தான் விரும்புவேனே தவிர, பதவி - பட்டத்திற்காக மாறி போய் விட
மாட்டேன் என்பதை அவர்கள் மத்தி யில் எடுத்துரைத்தேன்.

அதனையே உங்களுக் கும் கூறிக் கொள்கின்றேன். தாய்ச்சபையின் ஊழியனா கிய
எனது வெற்றி தனிப் பட்ட அப்துல் ரஹ்மா னின் வெற்றி அல்ல. அந்த வெற்றியில்
தாய்ச்சபை ஊழியர் ஒவ்வொருவருக் கும் பங்கு இருக்கிறது.

தாய்ச்சபையின் கொள்கைக்கு உட்பட்டு சமுதாயத்தின் மானம், மரியாதை காக்கும்
வகை யில் எனது செயல்பாடுகள் அமையும் வண்ணம் உங்களது ஆலோசனை களையும்,
கருத்துக்களை யும் தெரிவியுங்கள்.

ஒருவேளை நான் தவ றிழைக்க நேர்ந்தால் ஏதே னும் குற்றம் குறைகள்
காணப்பட்டால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டி என்னை திருத்துங்கள். அந்த
உரிமை உங்கள் ஒவ் வொருவருக்கும் உண்டு.

எனது வெற்றிக்காக பாடுபட்ட தாய்ச்சபையின் அனைத்து ஊழியர்களுக் கும்,
சமுதாய மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியையும், நல்
வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தாய்ச்சபை ஊழியனாக - சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல்
ஒலிக்கும் பணிகள் அமையும் என்ற உறுதி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்.