Thursday, May 7, 2009

உரிமைகளை பெற்று தந்து பெருமை பெற்ற முஸ்லிம் லீக்!!

உரிமைகளை பெற்று தந்து பெருமை பெற்ற முஸ்லிம் லீக்!!

இந்நாட்டில் ஷரீஅத் சட்டம் பின்பற்றப்படக்கூடாது,அனைவரும் ஒரே பொது சிவில் சட்டத்தைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற அபாயக் குரல் எழுந்த போது,முடியாது முடியவேமுடியாது எங்கள் மூச்சுள்ளவரை ஷரீஅத் சட்டத்தை தான் பேணுவோம் என்று பொது சிவில் சட்டத்தை அறுத்தெரிந்த இயக்கம் முஸ்லிம் லீக்!

பள்ளிவாசல்களில் பாங்கோசையை தடை செய்யப்பட்ட போதும் அதை தகர்த்தெரிந்து பள்ளிகளில் சொல்லப்படும் பாங்குக்கு வந்த பங்கத்தையும் போக்கிய பேரியக்கம் முஸ்லிம் லீக்!

ஷஃபானு வழக்கில் விடிய விடிய பாராளுமன்றத்தை நடத்த வைத்து வெற்றி கண்ட இயக்கமும் முஸ்லில் லீக்!

பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சிக்கு அரிசியை மானிய விலையில் பெற்றுத்தந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

ஐம்பது ஆண்டுகாலமாக கோரிவந்த இடஒதுக்கீட்டின் இறுதிக் கட்டமாக 1998ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் பங்கேற்க வந்த அன்றைய,இன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் "கண்டிப்பாக இட ஒதுக்கீடு தருவேன்" என்ற உறுதிமொழியை பெற்று 2008ம் ஆண்டில் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பெருமையை பெற்றுத் தந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

1967ம் ஆண்டு அன்றைய தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் செங்கம் ஜப்பார் அவர்களால் வைக்கப்பட்ட"உலமா நலவாரியம் தேவை" என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி,இதே ஆண்டு பிப்ரவரியில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முஸ்லிம் லீக் நடத்திய ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்களிடம் வலியுறுத்தப் பட்ட போது அதே மேடையில் கண்டிப்பாக உலமா நல வாரியம் அமைத்துத் தருவோம் என்ற உறுதிமொழியை பெற்ற ஒருசில வாரங்களிலேயே உலமாக்களுக்கு தனி நல வாரியம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அடிப்படையில் மட்டுமல்ல,அன்று முதல் இன்று வரை காரணமாக இருந்த இயக்கம் முஸ்லிம் லீக் !

அரபி மதரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்களை (ஸனதுகளை) பல்கலைக்கழகங்களுக்கு நிகரான சான்றாக ஏற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிசெய்யும் வாய்ப்பை உறுவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் முஸ்லிம் லீக்!

தமிழகத்திலிருந்து ஏன் இந்தியா முழுவதிலிமிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் ஹாஜிகள் புனிதக் கடமைகளை நிறைவேற்ற உறுதுணை புரிந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

இப்பொழுது நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் முஸ்லிம் லீக் என்ன செய வில்லை என்று?

அரசியலில் பொது நலபலன்கள் உள்ளன ஒன்று பதவிகளை பயன்படுத்தி சமுதாயத்திற்க்கும்,மக்களுக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுத்தருவது,மற்றொன்று சுயநலப் பயன்கள் உள்ளன தனது குடும்பத்துக்கும்,வாரிசுக்கும் வளமான வாழ்வுக்கு வழி செய்துக் கொள்வது.இதில் முஸ்லிம் லீக் தலைவர்கள் இரண்டில் எதை செய்திருக்கிறார்கள்? என்று ஒவ்வொரு ஈமானிய உணர்வுள்ள முஸ்லிமும் தனது நெஞ்சுக்குள்ளே கேள்வியை எழுப்பி பதிலையும் பெற்றுக் கொள்ளட்டும்.

சமுதாயத்திற்க்கு முஸ்லிம் லீக் என்ன செய்தது என்ற கேள்விகளை சிலர் சவாலாக கேட்கிறார்கள்!முஸ்லிம் லீக் செய்த,செய்துக் கொண்டிருக்கின்ற காரியங்களை பட்டியலிட முடியாது,விளம்பரப் படுத்திக் கொள்ளவும் கூடாது இதேகொள்கையை(விளம்பரமே வேண்டாம் என்ற கொள்கையை) கண்டிப்புடன் கடைபிடித்து வந்ததால் கயவர்களின் கடைக்கண் பார்வை முஸ்லிம் லீக் மீது பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளட்டும் முஸ்லிம் லீக் என்பது ஃபீனிங்ஸ் பறவை போன்றது அமைதியாகத்தான் இருக்கும்,ஏன் சில சமயங்களில் இந்த இயக்கம் இருப்பதாகக் கூடத்தெரியாது.

சமுதாயத்திற்க்குத் தேவையானவற்றை கூடு கட்டிக் கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பது வரலாற்று உண்மை!!!


இப்னு ஷஃபீக்


Abdul rahman