Friday, August 6, 2010

உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை

உர்தூ மொழி எந்தச் சூழ் நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் தலைவர்கள் கோரிக்கை எழுப்பினர்.
இன்று நாடாளுமன்ற த்தில் ஜீரோ அவர்| என்ற நேரமில்லா நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் உர்தூ மொழி பற்றிய பிரச் சினையை எழுப்பினார்.
உர்தூ மொழி பல வழிகளி லும் புறக்கணிக்கப்படுவதாக வும், உர்தூ பத்திரிகைகளில் விளம்பரம் அளிப்பதிலும் கூட பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உர்தூ முஸ்லிம்கள் பேசும் மொழி என்பதால் இந்த புறக்கணிப்பு நடைபெறுவதாகவும் குறிப் பிட்டார்.
உர்தூ ஒரு இனிமையான மொழி அதை புறக்கணித்து விட்டு சரித்திரத்தை எழுத முடி யாது. தொடர்ந்து உர்தூ மொழி புறக்கணிக்கப்பட் டால் போராட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்துர் ரஹ்மான் பேச்சு
இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது- உர்தூ இந் நாட்டின் தேசிய மொழி. இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த மொழி. உர்தூ இந் நாட்டின் கலாச்சார சின்னம். எல்லா வகையிலும் அம் மொழி முக்கியப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு முலாயம்சிங் அவர் கள் உர்தூ மொழி பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். அவரது கூற்று 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உர்தூ மொழிக்கான அனைத்து முக்கியத்துவத்தை யும் இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆஸாத், மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, பாரதீய ஜனதா கட்சியின் சத்ருகன் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட் டோரும் உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரணாப் முகர்ஜி பதில்
அவை முன்னவரும், மத்திய நிதித்துறை அமைச்சருமான பிரணாப் முகர்ஜி இதற்கு பதில் அளித்து பேசுகையில், எந்த நிலையிலும் உர்தூ மொழி புறக்கணிக்க முடியாத ஒன்று. மூத்த மொழிகளில் ஒன்று. அரசின் விளம்பரங்கள் உர்தூ பத்திரிகை களுக்கு வழங்கப்பட வில்லை என்று தெரிய வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்ப தற்குத் தயாராக இருக்கி றோம்.
உர்தூ மொழி மதித்துப் போற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.