ஓய்ந்தது ஆயங்குடியின் சங்கநாதம்
ஆயங்குடியின் முதுபெரும் தலைவரும்,ஆசிரியருமான ஆ.லு.அப்துல் குத்தூஸ் ஆசிரியர் அவர்கள் 28.03.2009 காலை 8.00மணி அளவில் தாருள் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.ஆயங்குடியின் கல்வி,மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பல துறைகளில் ஊரின் முன்னேற்றத்திற்காக தன்னலம் பாராமல் அயராது பாடுபட்ட ஆசிரியர் அவர்கள்,காயிதேமில்லத்,அப்துல் சமத்,அப்துல் லதீப் ஆகிய சமுதாய தலைவர்களோடு இனைந்து சமுதாயபணியாற்றியிருக்கிறார்கள்,ஊர் முத்தவல்லியாகவும்,இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக்,தேசியலீக் ஆகிய கட்சிகளில் மாவட்ட மற்றும் மாநில பொருப்புகளையும் பல முறை வகுத்துள்ளார்கள்.அவர்களின் மறுமை வெற்றிக்காக ஏக இறைவனை பிறார்திப்போம்.