Tuesday, March 24, 2009

மீலாது விழா நடத்திய முஸ்லிம் லீக் மகளிர் அணி

மீலாது விழா நடத்திய முஸ்லிம் லீக் மகளிர் அணி


ஆம்பூர், மார்ச் 23: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி சார்பில் மீலாது விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கட்சியின் வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவி சர்வத் இலியாஸ் தலைமை வகித்தார். நகரமன்ற உறுப்பினர்கள் சாபிரா ஜலால், சிராஜின்னிசா, ஜரினாபேகம், தாரா ஜபீன், நஸ்ரின் கவுசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யாஸ்மின் பேகம், முஹம்மதி பேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், நகரமன்ற உறுப்பினருமான கே. இக்பால் அஹமத், இம்தியாஸ் அஹமத், ரியாஸ் அஹமத், அக்பர் பாஷா, பஹீம் அஹமத், நதீம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.