துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தேரா தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் 13.03.2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி இறைவசனங்களை ஓதினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மண்டல மற்றும் உலமாக்கள், உமராக்கள் மாநாடு, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரித்தார்.
கூட்டத்தில் பொருளாளர் ராஜகிரி அப்துல் கத்தீம், கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ராமநாதபுரம் தயூப் அலி, ராமநாதபுரம் பரக்கத் அலி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.