சிந்தனைக் களஞ்சியம்
ஒன்றும் ஒன்றும் இரண்டு தான். ஆனால் சில சமயங்களில் ஒன்றும்,ஒன்றும் 11 ஆக மாறிவிடுகிறது. அதைப் போல சிறுபான்மையினர் ஒன்றுபடுவது ஒற்றுமையாக செயல்படுவது சில சமயங்களில் பெரும்பான்மையினரின் முடிவை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகக் கூட மாறிவிடுகிறது.இதுபோன்ற சம்பவங்களை இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம் லீக் ஏற்படுத்திவிடுகிறது.
காயிதெ மில்லத் ( ரஹ் )
அமைதி அடைந்த ஆன்மாவைப் பெற்றவன் எந்த சூழ்நிலையிலும் தனிமையை ஒருபோதும் இழந்துவிடுவது இல்லை. தவிர்க்கவொண்ணாத இடைஞ்சல் ஏற்படினும் ஆன்மீக வளர்ச்சியின் அதி உச்சி நிலையை அடைந்தவனுக்கு கவனம் சலனம் இல்லை சபலம் இல்லை சங்கடம் பற்றிய கவலையும் இல்லை. அமைதியாக இருப்படு அவனின் இயற்கையான இயல்பாகி விடுகிறது. இயல்பாகிவிடும் இயற்கை பண்பாகவும் மாறிவிடுகிறது.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி
( தாருல் குர் ஆன் நவம்பர் 1995 )
பிற அமைப்புகளைப் போன்று விளம்பரங்களும், வாய்வீச்சுமாக தன்னை அலங்காரப் படுத்திக் கொள்ளாமல் அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மஹல்லா ஜமாஅத் பிரச்சினைகளை சமுதாயத்தின் ஒரே அரசியல் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்த்து வருகிறது. முஸ்லிம் லீகினுடைய ஒரே நோக்கம் முஸ்லிம் சமுதாயத்திற்கான தேவைகளை சமூக ஒற்றுமைக்கு பாதகம் இல்லாத வகையில் கவனத்துடன் நிறைவேற்றுவதே ஆகும்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான்
( அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் )
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்