Friday, August 22, 2008

நோன்புக்கஞ்சிக்கான அரிசியை, சிக்கலின்றி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!!

நோன்புக்கஞ்சிக்கான அரிசியை, சிக்கலின்றி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!!



ரமளான் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கும்போது அருந்தும் கஞ்சியை தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு மலிவு விலை அரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் இந்த அரிசியை பெற முயற்சிக்கும்போது பள்ளிவாசல் நிர்வாகிகளால் நிரப்ப முடியாத கேள்விகள் அடங்கிய, தணிக்கை படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பல கேள்விகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் நிரப்பப்பட வேண்டியதாகும்.

விண்ணப்பிக்கும் பள்ளிவாசலின் நிர்வாகம் வக்ஃப் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதற்கு ஆதாரம் வழங்கவும் கோரப்படுகிறதாம். இந்த கேள்விகளால் பள்ளிவாசல்களால் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.ம்.காதர் மொகிதீன் எம்.பி., பள்ளிவாசல்களுக்கான நோன்புக் கஞ்சி அரிசியை இம்மாத இறுதிக்குள் வழங்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ரமளான் நோன்பு தொடங்க பத்து தினங்கள் மட்டுமே இருப்பதால், பள்ளிவாசலுக்கான நோன்புக் கஞ்சிக்குரிய மலிவு விலை அரிசி சென்ற ஆண்டைப் போல் சிக்கலின்றி விரைவாக வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேட்டுக்கொள்கிறது.

-இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.