Friday, August 29, 2008

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகபூப் கோரிக்கை

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகப+ப் கோரிக்கை

http://www.muslimleaguetn.com/news.asp


ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள இந்தியா டுடே பத்திரிக்கை மீது மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை தாமதமானால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகப+ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணியின் சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றியபோது அவர் இந்த கோரிக்கை விடுத்தார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். ஆனால் இந்த நிலை ஏற்படும்போது ஒருசாராருக்கு எதிராக செயல்படுகின்ற சட்டமும் காவல்துறை - நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்னொரு சாராரை சீண்டிப் பார்ப்பது இல்லை இதை எப்படி நடுநிலை என்பது?

இந்தியா டுடே என்ற பெயரில் வெளிவரும் பத்திரிக்கை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல மொழிகளில் வெளிவருகிறது. அந்த பத்திரிக்கையின் இம்மாதம் 13ஆம் தேதி இதழில் 'சுரணையற்ற இந்தியா" என்ற அட்டைப்பட தலைப்பிட்டு அந்த இதழ் முழுவதும் விஷமத்தனமாக இந்திய முஸ்லிம் களுக்கு விரோதமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

அந்த பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய தலையங்கமே இந்தியா பொறுத்தது போதும் பொங்கி எழுமா என்று தொடங்கி@ பொங்கி எழாவிட்டால் இந்தியா சுரணையற்ற தேசமாகும் என்பதில் சந்தேகமில்லை என்றுதான் முடிக்கப்பட்டுள்ளது.

பக்கத்துக்கு பக்கம் இஸ்லாமிய பயங்கரவாதம் என எழுதப்பட்டுள்ள விஷமத்தனமான கட்டுரைகள் முஸ்லிம்களுக்கெதிராக இந்துக்களை மட்டும் தூண்டிவிடவில்லை. வளரும் தீவிர மதவாதம் என்ற பெயரில் கட்டுரை எழுதி முஸ்லிம்களுக்குள்ளும் மோதலை உருவாக்கும் அயோக்கியத்தனமும் செய்யப்பட்டுள்ளது.

தேவ்பந்த் மௌலவிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த இதழ் தொழுகைக்கு மட்டுமே முஸ்லிம்களை அழைப்பதோடு, எந்த அரசியல் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத தப்லீகர்களை மத தீவிரவாதிகள் என வர்ணித்து அவர்கள் தோற்றத்தைகூட அடையாளப்படுத்தி காட்டியுள்ளது. பரேலவிகளும் மற்றவர்களும் மோதிக்கொள்ள வேண்டுமென்ற நோக்கம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான ஊடக பயங்கரவாதம் செயல்படுத்தப்பட்டதை அரசுகள் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றன.

கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதினார்கள் என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் அப்பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் அச்சிடுபவர் வினியோகித்தவர் என்று அனைவரையும் சிறையில் அடைத்தனர். இத்தனைக்கும் சில நூறு பிரதிகள் மட்டும்தான் அச்சாகும் பத்திரிக்கை அது. ஆனால் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் இந்தியா டுடே மீது மட்டும் ஏன் இந்த சட்டம் பாயவில்லை?

மத்திய மாநில அரசுகள் இதில் நடவடிக்கை எடுக்க தயங்கினால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாட்டு நலனில் அக்கரை யுள்ள அனைவரின் விருப்பம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லது நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலெல்லம் முஸ்லிம்களுக்கு விரோதமாக விஷமப் பிரச்சாரங்களை தூண்டிவிடுவதும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் விசாரணை என்ற பெயரில் அன்றாடம் செய்திகள் வரவைப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

மீடியாக்களை திறந்தாலே சில நாளிதழ்கள் தலைப்புக்களை எழுதி வைத்துக்கொண்டு செய்திகளை தேடி அலைகின்றன என்பது தெரிகிறது. முஸ்லிம்கள் யாராவது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால்கூட முஸ்லிம் தீவிரவாதிகள் கைது குண்டு வைக்க சதித்திட்டமா என செய்தி போட்டு விடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிலரை கைது செய்கின்ற காவல்துறைகூட அவர்களின் வீடுகளில் சோதனை ஆவணங்கள் கைப்பற்றிப்பட்டன என்றெல்லாம் சொல்லும்போது கைப்பற்றப்பட்டது எவை என்ற பட்டியலை வெளியிட வேண்டாமா? குர்ஆன் விளக்க உரையையும் சில சி.டி.க்களையும் எடுத்து வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிக்கலாமா? இது ஒரு சமுதாயத்திற்கு எதிராக தொடுக்கப்படும் யுத்தம் இல்லையா?

ஒரு சம்பவத்தில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டார்கள் என்றால் அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து வழக்குபதியட்டும். ஆனால் அதற்காக மதச்சாயம் பயங்கரவாதம் என்ற முத்திரைகளுக்கு வழிவகுக்காதீர்கள். வன்முறையை தடுக்கிறோம் என்ற பெயரால் நிரபராதிகளை தண்டிக்காதீர்கள்.

தென்காசி கலவர வழக்கு நிரபராதிகளுக்கு நீதி வேண்டும்
தென்காசியில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் இந்த சம்பவங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இன்னமும் சொல்லப்போனால் சமூக ஒற்றுமைக்கு காலமெல்லாம் பாடுபட்ட இந்து - கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த முஸ்லிம் வணிக பிரமுகர்களான எஸ்.எம். கமால் முகைதீன் வி.டி.எஸ். ரஹ்மான் பாட்சா பொதிகை மெடிக்கல் சம்சுத்தீன் போன்றோர் கைது செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம்? கூட்டுச்சதி என்ற சட்டப்பிரிவு அவர்கள் மீதெல்லாம் போடப்படலாமா?

இப்படிச் சொல்வதால் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை. தென்காசியின் உண்மை நிலவரம் ஆராயப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி. சி.ஐ.டி விசாரணையை இந்த மாவட்ட முஸ்லிம் லீக் கேட்டது. சமீபத்தில் தென் காசி வந்த தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்முகைதீன் எம்.பி அவர்கள் சி.பி. சி.ஐ.டி. விசாரணை தேவையில்லை. இந்த காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றார்கள். அந்த நம்பிக் கையின் அடிப்படையில் கேட்கிறோம் நிரபராதிகளுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்.

இதை ஏன் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டை கிரஸண்ட் நகர் பள்ளி வாசலில் புளியங்குடி அப்துல் ரசீத் கொலை செய்யப்பட் டார். கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவியும் அவரது வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவரை கொலை செய்ததாக அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த அநியாயத்தை எல்லாருமே தட்டிக் கேட்டனர் நாங்கள் எல்லாம் சிறையில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.

அந்த கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று அவரை விடுவித்து விட்டார்கள். ஆனால் இன்னமும் அரசு அறிவித்த உதவி தொகையும் அரசு வேலை வாய்ப்பும் அந்த குடும்பத்திற்கு கிடைக்க வில்லை. எட்டு ஆண்டுகளாக உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

புளியங்குடி அப்துர் ரஷீத் கொலை வழக்கு போன்று தென்காசி கலவர வழக்கும் நிரபராதிகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது. என்பதால்தான் நாங்கள் இதில் அக்கறை காட்டுகிறோம்.

சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்யும் கலைஞர் அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் காவல்துறைக்கு நல்வழிகாட்ட வேண்டுகிறோம்.

-இவ்வாறு காயல் மகப+ப் பேசினார்

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ. அப்துல் வகாப் தலைமையில், மாவட்டச் செயலாளர் கடையநல்லூர் த.அ.செய்யது அகமது மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.செய்யது இபுராஹிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவை எம்.எஸ்.முஹம்மது ரபீக் சங்கரன் கோவில் நகர தலைவர் எம்.எஸ்.திவான் மைதீன், மாவட்ட துணை தலைவர் ஏ.மைதீன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஹைதர் அலி ஆகியோர் உரையாற்றினார்.

எம்.முஹம்மது ய+சுப் பைஜி கிராஅத் ஓதினார். கடைய நல்லூர் நகர தலைவர் பி.எம்.ஏ.உசேன் இளைஞர் அணி தலைவர் டி.என்.ரஹ்மத்துல்லா சங்கரன் கோவில் செயலாளர் முஹம்மது சலீம் புளியங்குடி துணைச் செயலாளர்கள் கலீல் ரஹ்மான், கே.எம். அப்துல் காதர், பி.என்.எம். முஹம்மது உசேன், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட தொழிலாளர் அணி இணைச் செயலாளர் பி.எம்.எம். காதர் முகைதீன் நன்றி கூறினார். ஜப்பான் உதுமான் மற்றும் முன்னணியினர் இக்கூட்டத்திற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.