Thursday, December 25, 2008

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!



ஈரோடு மாநகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகக் கூட்டம் மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.ஏ. உமர் பாரூக் தலைமையில் மாவட்ட தலைமையகத்தில் 21.12.08 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் மாநகர தலைவர் எம். சிக்கந்தர், செயலாளர் ஏ. அக்பர் அலி, துணைத் தலைவர்கள் பி. அப்துல் ரஹ்மான், டி.ஷபியுல் லாஹ், துணைச் செயலாளர்கள் என்.ஷாநவாஸ்தீன், கே. முனாப், பொருளாளர் மௌலவி மூஸா தாவுதி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் என்.இனாயத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகரத் தலைவர் வரவேற்றார் முடிவில் இனாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடைபெறவுள்ள முஸ்லிம் லீக் மாநாடுகளை கருத்தில் கொண்டு தாய் சபை ஊழியர்கள் அதிக அளவில் பங்குபெற செய்கின்ற வகையில் மாவட்ட முஸ்லிம் லீகின் முழு ஒத்து ழைப்போடு ஈரோடு மாநகர பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பிரைமரி கிளைகள் விரைவில் அமைப்பதென்றும் மாநாடு குறித்து விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், சுவரொட்டி, பேனர், நோட்டீஸ் போன்றவற்றை விளம்பரப்படுத்தி, மாநாட்டிற்கு வலிமை சேர்ப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

வார்டு பிரைமரிகளை முறைப்படுத்துவதென்றும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து இயக்க வளர்ச்சிக்கு வலிமை கூட்டுகின்ற நடவடிக் கையை மேற்கொள்ள மாநகர நிர்வாக குழுவின் முழு ஒத்துழைப்போடு மாநகர தலைவர் செயலாளர், செயல்பட இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.

மாநகர முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் அனைத்து சட்ட திட்டங்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்குகட்டுப்பட்டு செயல்படவேண்டும். அப்படி செயல்படாதவர்கள் மாநில, மாவட்ட மாநகர தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் கட்சிக்குள் குழப்பத்தையும் இயக்க வளர்ச்சிக்கு விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பற்றிய தகவல் வருமானால் கட்சியின் நலன் கருதி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் முடிவு செய்கிறது.

புதிய மாவட்ட நிர்வாகம் அமைக்கப்பட்டதற்கு பின் மிகவும் சிறப்பான செயல்பாட்டில் முன்னணியில் உள்ளது என்பதையும் ஒவ்வொரு பிரைமரிகளையும் தூண்டி பணி வாங்குவதிலும் முதன்மை மாவட்டமாக திகழும் ஈரோடு மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கு மாநகர முஸ்லிம் லீக் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஆதரிக்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

ஒரு பிரைமரிக்கு 7 நிர்வாகிகள் 18 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட வார்டு நிர்வாகமே முறையான அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகமாகும். இந்த நிலையில் அமைக்கப்படாத வார்டு நிர்வாகங்கள் தற்காலிக நிர்வாக குழு என்ற அளவிலேயே செயல்படும். அவர்களை முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்தும் வரை அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று முடிவு செய்கிறது.

மாநகர நிர்வாகிகள் மாத சந்தா ரூ 100 செலுத்துவது என்று முடிவு செய்கிறது. மாநகர அளவில் ஒவ்வொரு சார்பு அணியில் 11 பேர் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவு செய்கிறது.

உறுப்பினர் படிவத்தில் மாநகர தலைவர், செயலாளர் கைஒப்பம் இல்லாத படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பல காலமாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது. அதற்கு மாற்றாக பழைய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியிலிருந்து கருங்கல்பாளையம் காவேரி ரோடு இணைப்பு வரை தொலை தூரம் அரை கிலோ மீட்டர் அளவில் வரும் புதிய புறவழிச் சாலையை ஏற்படுத்தித் தர மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் பெரும் பள்ளம், ஓடைபாலம் பணிகளை துரிதப்படுத்தி பொது மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து விட ஆவண செய்யுமாறு மாநாகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மாநகரத்தில் நாய்களின் தொல்லைகள் குறைந்த பாடில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த இக்கூட்டம் வலியுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.