Tuesday, February 23, 2010

தொடங்கும் ஒவ்வொன்றும் வளரும்- வளரக்கூடிய ஒவ்வொன்றும் ஒரு நாள் முடிவடையும்||

தொடங்கும் ஒவ்வொன்றும் வளரும்- வளரக்கூடிய ஒவ்வொன்றும் ஒரு நாள் முடிவடையும்||
இறைவனின் நியதி குறித்து தலைவர் பேராசிரியர் உரை


தொடங்கக் கூடிய ஒவ்வொன்றும் வளரும், வளரக்கூடிய ஒவ்வொன் றும் முடியும். இதுதான் இறைவனின் நியதி. இறைத் தூதர்களின் துவக்கமும் முஹம்மது (ஸல்) அவர் களே இறுதித் தூதர் என்ப தும் இதைத்தான் காட்டுகி றது. என தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தெரிவித்தார்.

வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை சார்பில் சிந்தைக்கினிய சீறாப் புராணம் வரலாறு பாடலும் விளக்கமும் என்ற நிகழ்ச்சியில் கடந்த 19.2.2010 தலைமையுரை யாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

இன்றைய நிகழ்ச்சியில், சகோதரர் லியாகத் அலிகான் சிறப்பான முறை யில் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கக் கூடிய வகையில் இந்து மத அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை யெல்லாம் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

இறைவன் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் முன்னுள்ள வேதங்களைக் குறித்தும், இறைத்தூதர்கள் குறித்தும் விவரித்துள் ளான். வேதக்காரர்கள் என இறைவன் குறிப்பிடுவது கிறிஸ்தவர்களையும், ய+தர் களையும் குறிப்பிடுகிறது. அதேபோன்று சூரியன் சந்திரன் போன்றவற்றை வழிபடக் கூடியவர்களை ஸாபியீன்கள் என்று இறை வன் குறிப்பிடுகின்றான்.

இந்த ஸாபியீன்கள் என்பது நமது இந்திய நாட்டில் உள்ள சூரியன் சந்திரனை வணங்கக் கூடிய வர்களையும், உருவ வழி பாடு செய்யக் கூடியவர் களையும் குறிக்கிறது என விளக்கங்கள் கூறப்படுகின் றன.

அதே சமயம், 1929ம் ஆண்டிலே நமது இந்தியா வில் உலமா பெருமக்க ளெல்லாம் நடத்திய மாநாட்டிலே வேதக்காரர் கள் என இறைவன் குறிப் பிடுவது ய+தர்கள், கிறிஸ்த வர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முஸ்லி மல்லாத மக்களையும் குறிக் கும் என்பதாக தீர்மா னித்து அறிவித்துள்ளனர்.

காரணம், இந்தியாவில் பல வேதங்கள் ரிக், யஜூர், ஷாம அதர்வனம் போன் றவை பன்னெடுங் கால மாக வேதங்களகாக மதித்து போற்றப்பட்டு வரு கின்றன. இவற்றையெல் லாம் ஒப்பிட்டு அவற்றில் கூறப்பட்டுள்ள இறுதி நபி குறித்த தகவல்களை ஆய்வு செய்து அது முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் குறிக்கிறது என்பதாக இந்து மத அறிஞர்களே ஆய்வு செய்து அறிவித் துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலே உலக சமய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து பல சமயங்களில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டிலே முஸ்லிம்களின் சார்பாக உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களை எடுத் துரைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறு தித் தூதர் என்பதையும், திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் விளக் கிக் கூறினேன்.

இதனை செவியேற்ற இந்து சமய அறிஞர் சித் பவானந்தா சுவாமி என்ப வர் என்னிடம் ஒரு வினாவை தொடுத்தார். உங்களது இந்த கருத்து இறைவனின் தன்மையை குறைத்து விடக் கூடியதாக இருக்கிறதே? திருக்குர் ஆன்தான் இறுதி வேதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) தான் இறுதித் தூதர் என்றும் நீங்கள் குறிப்பிடுவ தால் இறைவன் இனி வேதங்களையோ, தூதர் களையோ படைக்கமாட் டான் என அர்த்தமாகிறது.

இறைவனின் படைக் கும் ஆற்றலை குறைவு படுத் துவதாக இது அமைந் துள்ளதே எனக் கேட்டார். அந்த சமயத்தில் எனக்கு தோன்றிய விடையை அவர்கள் மத்தியில் கூறி னேன். இறைவன் உலகில் எதையெல்லாம் படைக் கிறானோ அவையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடும். எது ஒன்றுக்கு துவக் கம் இருக்கிறதோ அது வளரும், வளரக்கூடியது ஒரு நாள் முடிவடையும்.

இறைத்தூது என்பது ஆதி மனிதர் ஆதம் (அலை) மூலமாக இறை வன் துவக்கினான். அது வளர்ந்து , பெருகி இஸ் லாமிய அறிஞர்களின் கருத்துப்படி 1லட்சத்து 24ஆயிரமாக வளர்ந்துள் ளது. அதன் முடிவாக முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக அமைந் துள்ளார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர் ஆனே இறுதி வேதமாகவும் அமைந்துள்ளது. இதுதான் இறைவனின் நியதி என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், நாம் இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும், முஸ்லிம் அல் லாதவர்களுக்கு எடுத் துரைக்கும்போது அவர் கள் இறைவன் குறித்தும், இறைவேதங்கள் குறித்தும், இறைத் தூதர்கள் குறித்தும் எத்தகைய கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றையொட்டி நமது விளக்கங்களை கூறும் போது அவர்கள் சிந்திக்க வும், உண்மையை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற் படும். அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்த இது போன்ற மீலாது நபி விழாக்களை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.