Thursday, January 7, 2010

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

சென்னை, ஜன.7

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-

தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.

21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.