Friday, January 22, 2010

பயங்கரவாத எதிர்ப்பு, சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி குர்ஆன், ஷரீஅத் மாநாடுகள் மாநிலம் தோறும் நடத்த முடிவு

பயங்கரவாத எதிர்ப்பு, சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி குர்ஆன், ஷரீஅத் மாநாடுகள் மாநிலம் தோறும் நடத்த முடிவு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஏழு செயல் திட்டங்கள் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு



பெங்களூரு, ஜன,16-

பெங்களூருவில் நடை பெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 7 செயல் திட்டங்களை வெளியிட் டார்.

அப்போது அவர் கூறிய தாவது:

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்பது இந்திய முஸ்லிம் உலமாக் களின் பரிசளிப்பாகும். தவிர, இந்திய சிறுபான் மையினரின் விவாத மேடையுமாகும்.

இந்திய வரலாற்றில் தேசிய ஒருமைப்பாடு, ஒற் றுமை, சமுதாய நல்லி ணக்கம், முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாப்ப தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியான நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது.

முஸ்லிம்களின் தனிநபர் சொத்துக்களான மஸ்ஜித், மதரஸாக்கள், அடக்கத் தலங்கள், வக்ஃப் சொத்துக் கள் மற்றும் நமது ஷரீஅத் சட்டங்கள் ஆகியவற்றை காப்பாற்றி வருவதுபோல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டிருக்கி றோம்.

ஏனென்றால், தேசிய சிறுபான்மையினரின் ஒரே பிரதிநிதித்துவ அரசியல் அமைப்பு அதுதான்.

தொண்டர்கள் மட்டத் தில் இருந்து இந்த ஸ்தா பனத்தை மேலும் வளர்க்க நமக்கு சரியான வழிகாட் டல் விதிகள் தேவை.

இந்த ஸ்தாபனத்தை வலுப்படுத்த சில செயல் திட்டங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1-பயிற்சி முகாம்

ஒவ்வொரு மாநில தலைநகரத்திலும் முஸ்லிம் லீகின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

35வயதிற்குட்பட்ட இளைஞர்களை பயிற்சிக் குட்படுத்த வேண்டும். நமது தேசியத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் அந்த முகாம்களில் பங்கேற்க வேண்டும்.

முஸ்லிம் லீக் பற்றிய வெளியீடுகள் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும்.

2- நிறுவனர் தினம்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் தினத்தை (அதாவது மார்ச் 10-1948) ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் கோலா கலமாக கொண்டாட வேண்டும். நமது கூட்ட ணிக் கட்சி தலைவர்களை யும் அதில் பங்கேற்கச் செய் யலாம்.

மத்திய மாநில அரசு களால் கவுரவிக்கப்பட்ட அறிஞர்களை வரவ ழைத்து இந்த நிறுவன நாள் விழாவில் பரிசுகள் வழங்க லாம்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் கவுரவிக்க லாம்.

3-காயிதெ மில்லத்

பிறந்த நாள்

ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் ஜுன் 5-ம் தேதியை காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் பிறந்த நாளை அனுசரிக்க வேண்டும்.

கட்சிக்காக உழைத்தவர் கள் தியாகம் செய்தவர் களை இந்த விழாவில் கவுரவிக்க வேண்டும்.

4. சமூக நல்லிணக்கம்

ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் சமூக நல்லிணக்கத்திற்கான கருத்தரங்கு, மாநாடு ஆகியவற்றை நடத்த வேண்டும். இவற்றில் இஸ் லாமிய மார்க்க அறிஞர் கள், பிற மத அறிஞர்களை யும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

5. கமிட்டி அறிக்கைகள்

சச்சார் கமிட்டி அறிக்கை, மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் கமிட்டி அறிக்கை, மத்திய மதரஸா கல்வி வாரிய மசோதா போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவா திக்க ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் கூட்டங் கள் நடத்த வேண்டும். அந்த விஷயங்களில் நிபுணத்து வம் பெற்றவர் களை பங் கேற்கச் செய்ய வேண்டும்

6. குர்ஆன் -ஷரீஅத்

மாநாடுகள்

6. ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் குர்ஆன் மாநில மாநாடு சீரத் மாநாடு, ஷரீஅத் மாநாடு போன்றவற்றை நடத்தி உல மாக்களையும், மஹல்லா ஜமாஅத் முத்தவல்லிகள் மற்றும் ஜமாஅத் பிரமுகர் கள் போன்றவர்களை பங் கேற்கச் செய்ய வேண்டும்.

7. பயங்கரவாத எதிர்ப்பு

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் நடத்த வேண்டும். அதில் சமூக இளைஞர் களை அதிக அளவில் ஈடு படுத்தச் செய்ய வேண்டும்.

இவைகள் தவிர சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கான செயல் திட்டங்களையும் முஸ்லிம் லீகினர் மேற் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.