கடையநல்லூரில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
கடையநல்லூர், ஜன.6-
கடையநல்லூர் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் உதுமானியா சங்க ஹாலில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளரும், நகரச் செயலாளருமான டி.ஏ. செய்யது முஹம்மது தலைமையில் நடை பெற் றது.
மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், மாவட்ட தி.ட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர், எம்.கே. சாகுல் ஹமீது, நகர துணைத்தலைவர்கள் எம்.எஸ். முபாரக் அலி, பி.ஏ. செய்யது இஸ்மாயில், டி.என். ரஹமதுல்லா, கே.எம். லியாகத் அலி, எஸ்.ஏ. அப்துல்லா ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
நகரப் பொருளாளர் கே.என். அப்துல் லத்தீப் அனைவரையும் வரவேற் றார்.
மாநில அமைப்புச் செயலாளர்நெல்லை மஜீத் வாழ்த்துரை வழங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்தார்
கூட்டத்தில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், அணி செயலாளர் பாட் டப்பத்து மசூது, நகர துணைச் செயலாளர்கள் பி.ஏ. செய்யது மசூது, பி.பி. அய்ய+ப்கான், கே.கே. ஷேக், டி.கே. ஹாஜா, எம்.ஏ, இஸ்மாயில், நகராட்சி உறுப்பினர் எஸ்.எம். சாகுல் ஹமீது, எஸ்.கே. ஹபி புல்லா, புளியங்குடி எம். சாகுல் ஹமீது, டி.வி. அப்துல் காதர் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி நன்றி கூறினார்.