Tuesday, January 12, 2010

ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு

ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு


ஈரோடு, ஜன, 11-

சங்கைக்குரிய ஆலிம் பெருமக்களை கண்ணியப் படுத்தும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு ஆபத்தில்லா மல் அதைப் பாதுகாப்பது எங்களின் உயிர் மூச்சான கொள்கை என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டார்.

ஈரோடு தாவ+திய்யா அரபிக் கல்லூரியின் முதல் வரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசக ருமான மௌலானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவ+தி ஹஜ்ரத் அவர்களு டைய இல்லத் திருமணத் தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்துகின்ற அருமையான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.

ஓரு ஆசிரியரின் இல்லத் திருமணத்தில் ஒரு மாண வன் கலந்துகொள்வதைப் போன்ற உணர்வோடுதான் நான் இங்கு கலந்து கொள் கிறேன்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வது ஒரு பெரும் பாக்கியம். கார ணம், இந்த மார்க்கத்தை தாங்கி நிற்கும் தூண்க ளான சங்கைக் குரிய உலமாப் பெருமக்களில் பலர் இந்நிகழ்ச்சியிலே பங்கெடுத்துள்ளார்கள். மௌலானா நாஜிர் ஹஜ் ரத் டி.கே. நயினார் முகம் மது அவர்கள், மாவட்ட காஜி மௌலானா முஃப்தி கிஃபாயத்துல்லா, வேலூர் பாகியாத் சாலிஹாத் பேரா சிரியர் மௌலனா மஹ் மூதுல் ஹசன், மௌலானா சலீம் ரஷாதி உள்ளிட்ட மார்க்க மாமேதைகளெல் லாம் கலந்து கொண்டு வாழ்த்துகின்ற இந்த சங்கைக்குரிய மஜ்லிஸில் கலந்து கொள்வதே ஒரு பெரும் பாக்கியம்தான்.

ஆலிம்கள் கூடியிருக் கும் இந்த அவவையில் எங் களைப் போன்றவர்கள் வந்து பங்கெடுத்திருப்பது அவர்களிடத்திலிருந்து நாங்கள் பலவற்றை தெரிந்து கொள்வதற்காக கத்தான்.

முஸ்லிம் லீகிற்கு

துணை நிற்பவர்

ஈரோட்டைப் பொறுத் தவரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை கட்டிக் காத்து வளர்த்த கே.கே. அப்துல் சமது அவர்களா கட்டும், அதற்குப்பின் ஷாகுல் ஹமீது அவர்களா கட்டும், முத்தவல்லி அலா வுதீன் அவர்களாகட்டும், காதர் சாகிப் அவர்களா கட்டும், அவர்களுக்குப் பின் இன்றைக்கு தலை மையேற்று நடத்துகின்ற கலீபுல்லா அவர்களாகட் டும் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தில் அனைவருடனும் நெருங்கி பழகி அவர்களுக்கெல் லாம் நல்ல ஆலோசனை களை வழங்கி தாய்ச் சபைக்கு வலு சேர்க்கின்ற ஒரு மாபெரும் பணியை உமர் பாரூக் ஹஜ்ரத் அவர் கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அவர்கள் ஒரு சிறந்த ஆலிமாக மட்டுமன்றி, நல்ல சிந்தனைக்குரிய எழுத் தாளராக இருந்து பல் வேறு ஆக்கங்களை எழுதி வெளியிட்டு ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தியிருக்கிறார்கள். ஹஜ்ரத் எழுதிய சட்ட நுணுக்கங்கள், ஷரீஅத் சட்ட பாதுகாப்பு, விளக் கங்களே கிடைக்காமல் இருந்த பல விஷயங் களுக்கு விளக்கம் கிடைக் கின்ற வகையில் அவர்கள் எழுதிய ஆக்கங்கள் மிகப் பெரும் பயனளித்தன.

திருமணம், நபகா, மதாஃ, மஹர் போன்ற விஷ யங்களுக்கு கிடைத்த விளக்கத்தை வைத்துத் தான் இருட்டில் இருந்த நான் வெளிச்சத்திற்கு வந் திருக்கிறேன் என பாராட்டே கிடைத்தது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் ஷரீ அத் சட்ட பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நம்முடைய தேசியத் தலை வர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் ஆணித்தரமாக வாதம் புரிந்தார்கள்.

உலமாக்களின் பணி சமுதாயத்திற்கு தேவை

எனவே, உலமாக்களின் பங்கு இந்த சமுதாயத்திற்கு தேவை. தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்களை கண்ணிப் படுத் தவறியதே இல்லை. மார்க்க விஷங்களில் ஆலிம்கள் தரக்கூடிய விளக்கங்களை ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.

மார்க்க விஷயங்களில் அரசாங்கமோ, நீதிமன்றங் களோ, பாராளுமன்ற, சட்டமன்றங்களோ தினிக்கின்ற கருத்துக்களை யெல்லாம் ஏற்க முடியாது. மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் தரும் விளக்கங் களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். எனவே, உலமாக்களை மதித்துப் போற்றி கண்ணியப்படுத்து வதை முஸ்லிம்கள் தங்கள் கடமையமாக கருத வேண் டும்.

ஆலிம் பெருமக்களுக்கு ஈரோட்டில் தருகின்ற கண் ணியம் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. சமுதாயத்தில், முக்கியப் பிரமுகர்களாக விளங்குகின்றவர்களெல்லாம் இந்த கண்ணியத்தை வழங்கி வருகிறார்கள். பல பெரியவர்கள், பிரமுகர்கள் எந்த வேறுபாடுமில்லாமல் ஆலிம்பெருமக்களுக்கு இங்கே கண்ணியம் அளித்து வருகின்றனர். இதை எல்லோரும் பின் பற்ற வேண்டும்.

மார்க்கக் கல்வியோடு

உலகக் கல்வியும் தேவை

இந்த திருமணத்தில் மணமகனாக வீற்றிருக்கக் கூடிய அஷ்ரப் ஹ{சைன் ஆலிம், ஹாபிழ் பட்டங் களோடு எம்.ஏ., எம்ஃபில்., பட்டங்களையும் பெற் றுள்ளார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய எம். முபீனா அவரும் ஒரு பட்டதாரி என்பது நமக் கெல்லாம் மகழ்ச்சியைத் தருகிறது.

இஸ்லாமிய மார்க்கம் உலகத்திற்கே எடுத்துக்காட் டான ஒன்று, அதை உலகத் திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கல்வி தேவை, ஆங்கிலம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் அறிவு தேவை, மதரஸாக்களில் மார்க்க கல்வியை பெறுவ தோடு மட்டுமன்றி ஆங்கி லம் உள்ளிட்ட பல மொழி களையும் நாம் கற்க வேண்டும்.

மார்க்கத்தை நாம் கற்று நமக்குள்ளேயே இஸ் லாத்தை போதிக்கின்ற காலம் போய், உலகத்தின் மனித சமுதாயத்திற்கு கற் றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் மானுட சமுதாயம் இஸ்லாம் என் றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படு கின்றது, அதைப் பின்பற்ற முன் வருகின்றது. எனவே, மார்க்கத்தோடு உலகக் கல்வி என்பது அவசியமாகி விட்டது.

குர்ஆன் இல்லாமல்

உலகக் கல்வி இல்லை

இஸ்லாமிய அடிப் படை கொள்கைகளை தெரிந்திருக்காத எந்த உலகக் கல்வியும் நிலைத் திருக்காது. குர்ஆனின் அற்புத ஆற்றலை உணராத கல்வி அறிவு அஸ்திவாரம் இல்லாத படிப்பாக மட்டும்தான் இருக்கும்.

சமீபத்தில் நம் நாட்டில் ஒரு சர்வே எடுத்து அந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. பத்து பேரில் ஐந்து பேர் மத பிடிமானம் உள்ளவர்கள் என்பதும், அடுத்த நான்கு பேர் அதிக மான மத நம்பிக்கையா ளர்கள் என்பதம் அந்த சர்வே மூலம் வெளிப் பட்டது.

அதாவது, பத்தில் ஒன்பது பேர் மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதிகமான பிடிமானம் உள்ளவர்களாக இருக் கின்றனர். உண்மை என்ன வென்றால் மதத்தின் பக்கம் மக்கள் சென்றுகொண்டி ருக்கின்றார்கள். இந்த போக்கு நாட்டை மத அடிப்படையில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

அப்படிப்பட்டவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகும்போது அவர்களின் பற்றும் விருப் பமும் அந்த மதத்தை பின் பற்றியதாகவே இருக்கும். எனவேதான், இப்படிப் பட்ட காலக்கட்டத்தில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலை ஏற்று அதைப் பின்பற்றி நடப் பதை நம்முடைய சமுதா யம் கடமையாக கொள் வது அவசியமாகிவிட்டது. இதைத்தான் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் வலியு றுத்தி வருகிறது.

ஷரீஅத்தை பாதுகாப்பதே முஸ்லிம் லீக் லட்சியம்

ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது தாய்ச்சபை யின் உயிர் மூச்சான கொள்கை.

இந்திய விடுதலைக்கு முன்பு ஷரிஅத் சட்டப் பாதுகாப்பு, வக்ஃபு சட்டத் தினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட சமுதாய விஷ யங்களில் அதைக்காப்பாற் றுகின்ற கடமையை அகில இந்திய முஸ்லிம் லீக் சிரமேற்கொண்டு செய்து தந்தது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டில் பல் வேறு சட்டங்கள் அது சமுதாய சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தா லும் ஷரீஅத்திற்கு ஆபத் தில்லாமல் அதைக்காப் பாற்றித் தந்தது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.

நம்முடைய ஷரீஅத் சட்டத்திற்கு எந்த ஒரு ஆபத்தையும் நாம் நேற் றும் ஆதரிக்கவில்லை, இன் றும் ஆதரிக்கவில்லை, நாளைக்கும் ஆதரிக்க மாட்டோம். இதில் நாங் கள் உறுதியாகவும், தெளி வாகவும் இருக் கிறோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு

இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் தேசிய பிரதிநிதி கள் மாநாடு வருகிற 15-16 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. நமது தனித் தன்மையை பாது காக்க எதன் மூலம் இடைஞ்சல் வந்தாலும் நம் தனித் தன்மையை நிலை நிறுத்திக் காட்ட வலிமை யோடு செயல்படுவோம் என்பதை லட்சியமாக கொண்டு, தென்னகத்தைப் போல் வட மாநிலங்களி லும் நம் தாய்ச்சபையை வலுப்படுத்த ஆக்கப்ப+ர்வ மான திட்டங்கள் அம் மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.

எனவே, இந்த தாய்ச் சபையை சமுதாயம் ஆத ரிக்க வேண்டும். சங்ககைக் குரிய உலமா பெருமக்கள் அதற்கு பெரும் ஒத்து ழைப்பை அளிக்க வேண் டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

பங்கேற்றோர்

இத்திருமண விழாவில் மாநில துணைத் தலைவர் திருப்ப+ர் ஹம்சா, ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா, மாவட்டச் செயலாளர் ஹசன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாநகரத் தலைவர் சிக்கந்தர், செயலாளர் அக்பர் அலி மற்றம் மாவட்ட, மாநகர நிர் வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, சுதந்திர தொழிலா ளர் ய+னியன் உள்ளிட்ட சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.