Friday, January 22, 2010

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்


திண்டுக்கல், ஜன.15-

திண்டுக்கல் மாவட்டத் தில் முஸ்லிம் லீக் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முக்கிய நகரங்களில் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக மாவட்டத் தலைவர் கே.கே.சுலைமான் (மன்பஈ) தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. பாருக், மாவட்டப் பொருளாளர் அல்தாப் ஹ{சைன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சர்புதீன் மற்றும் இப்ராம்ஷா, இல்யாஸ் மவ்லானா, தௌபீக் உசேன், எஸ்.கே.பி. ஜெய் லான் உடன் சென்று ஜும்ஆ பயான் செய்த வுடன் உறுப்பினர் சேர்க் கும் பணி நடைபெறுகிறது.

பழனி பெரிய பள்ளி வாசல், பாலசமுத்திரம், நத்தம் மேலத் தெரு பள்ளிவாசல், கன்னிவாடி, தொட்டணம்பட்டி, வேம் பார்பட்டி, கோவிலூர், வேல்வார் கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், சித்த யன்கோட்டை மற்று முள்ள ஊர்களில் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

மானூர், பிரிச்சிபாளை யம், கீரனூர், மேல்கரை பட்டி, கனையம்புத்தூர், பாம்பட்டி ஊர்களில் ஷர்புதீனும், புதுஆயக்குடி, பழைய ஆயக்குடி, ஒட்டன் சத்திரம், ஜவ்வாதுபட்டி ஊர்களில் பாருக்கும் கவ னித்து வருகின்றனர்.