Thursday, January 7, 2010

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்


திருவாரூர், ஜன.7-

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டமும், மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் கூட்டமும், முத் துப் பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மதரஸா கட்டிடத்தில் முத்துப் பேட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒன்றிய செயலாளர் எம். முஹம் மது அலி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே. முகைதீன் அடுமை, திருவாருர் மாவட்ட செயலாளர் எம். எம். ஜலாலுதீன், நகரத் தலைவர் கோல்டன் எம். தம்பி மரைக்காயர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றி அபிவை தாஜுதீன் இயற் றிய முஸ்லிம் லீக் பாடல் கள் உள்ள ஹசி.டி.|யை வெளியிட்டார்.

முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் ஏ.எம். முஹம்மது ராவுத்தர் பெற்றுக் கொண்டார். நகரச் செயலாளர் எஸ். அபூஹனீபா நன்றி கூறி னார்.