Saturday, January 23, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரி, மாவட்ட, மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடத்திட வேண்டுமென பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாடு பிரகடனம் வலியுறுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 2010 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 20-02-2010 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பிரைமரி தேர்தலை நடத்திட மாவட்ட தலைவர், செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிரைமரி தேர்தல் நடைபெற்ற விவரங்களை ப+ர்த்தி செய்ய வேண்டிய படிவம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத் தேர்தலில் பேணப்பட வேண்டிய குறிப்பு பின்வருமாறு...
1. குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பிரைமரியில் தேர்தல் நடத்தலாம். பிரைமரி தேர்தல் பொதுக்குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரம் ஆவார்கள்.
2. பிரைமரி தேர்தல் நடைபெறும் இடம், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையை பிரைமரி தலைவர் பெயரில் விநியோகிக்க வேண்டும். மாவட்டத்தலைவர் ஃ மாவட்டச் செயலாளர் ஃ மாநில தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.
3. தேர்தல் நடைபெறும் தேதியை பத்து நாட்களில் இருந்து ஆறு நாட்ளளுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யவேண்டும்.
4. பிரைமரி தேர்தல் பொதுக்குழு கூடியவுடன் அனைத்து உறுப்பினர்களின் கையெழுத்து மினிட் புத்தகத்தில் பெற வேண்டும். தேர்தல் முடிவுகளை விவரமாகப் பதிவு செய்திட வேண்டும்.
5. தேர்தலில் ஜனநாயக முறைப்படியாக மெஜாரிட்டி வாக்குகள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரு போட்டியாளர்களுக்கு இடையில் சரிசமமாக வாக்குகள் உள்ள நிலையில் பிரைமரி பொதுக்குழுக் கூட்டத் தலைவர் தனது வாக்குடன் தீர்வு வாக்கு ஒன்றும் அளிக்கலாம். முன்னிலை வகிப்பவர் வாக்கு அளிக்க கூடாது.
6. பிரைமரி நிர்வாகிகளாகப் பொதுவாக ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் ஒரு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர். நிர்வாகக் குழுவுக்கு 5 ஃ 7 ஃ 9 ஃ 12 ஃ 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம். அதிக பிரைமரி உறுப்பினர்கள் இருப்பின், துணைத் தலைவர் ஃ துணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
7. பிரைமரி துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் வார்டு அல்லது வட்டத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. பிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொறுப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
8. ஓவ்வொரு பிரைமரியில் இருந்தும் பிரைமரி தலைவர், பிரைமரி செயலாளர் ஆகிய இருவருடன் நூறு உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் மாவட்ட பிரதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9. உறுப்பினர் நான்காண்டு சந்தா ரூ5; ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்) -ல் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில்
10. ஓவ்வொரு பிரைமரியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும், பிரைமரி உறுப்பினர் பதிவு ஏடு ஒன்றில் பதிவு செய்திட வேண்டும். அந்த பதிவேட்டில் உள்ளபடிதான் மாநில முஸ்லிம் லீக் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
11. பிரைமரி தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொறுப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
12. பிரைமரி தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களில்;, அந்தந்த பிரைமரி - தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
13. அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி;களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
14. இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளிர் லீக் அமைப்பாளர்களாக மகளிர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்.
15. 2010 பிப்ரவரி மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
16. மாநில தலைமை நிலையத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும் கணினியில் பதிவு செய்திட பிரத்தியேகமாக புதிதாக பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
17. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம். அல்லாஹ் அருள்வானாக வஸ்ஸலாம்.
- கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)