பெங்களுருவில் ; முஸ்லிம் லீக் தேசிய மாநாடு 20 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் வழிகாட்டும் தொண்டர்கள் வரவேற்பார்கள் என தலைவர் கே.எம்.கே. அறிக்கை
ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்க ளூருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலி ருந்து 2 ஆயிரத்திற்கும் அதிக மான பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக் கிறார்கள். அவர்களை பெங் களுரு ரயில் நிலையங்க ளில் வழிகாட்டும் தொண் டர்கள் வரவேற்று அழைத் துச் செல்வார்கள் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
பெங்களுரு நகரில் டேனரி சாலையில் அமைந் துள்ள விசாலமான சாதாப் மஹால் வளாகத்தில் வருகிற 15, 16 வெள்ளி, சனி ஆகிய தினங்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக் கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள் ளன
மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் உரிய கட்டணத்தை செலுத்தி கலந்து கொள்ளவிருக்கி றார்கள்.
கேரளாவிலும், தமிழ் நாட்டிலுமிருந்து கிட்டத் தட்ட ஆயிரம் பிரதிநிதி களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிற மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
வட மாநிலங்கள்
பஞ்சாப் மாநிலத்திலி ருந்து மக்சூது ஹக் உள் பட 15 பிரதிநிதிகளும், உத்தர காண்ட் மாநிலத்தி லிருந்து ஹபீத் முஹம்மது அஸ்கர் உட்பட 23 பிரதி நிதிகளும், மத்தியப் பிரதே சத்திலிருந்து சாஜித் அலி உட்பட பலரும், ராஜஸ் தானிலிருந்து இஸ்ஹாக் முஹம்மது மன்சூர் உள்பட 9 பிரதிநிதிகளும், ஜம்மு-கஷ்மீரிலிருந்து முதாஸிர் அஹமது பத் உட்பட 3 பேரும், பீகாரி லிருந்து ஹாஜி மசூது ஹசன் ஷாபு உட்பட 47 பிரதிநிதிகளும், கர்நாடக மாநிலத்திலிருந்து மீர் முஹம்மது எஸ். இனாம் தார் உட்பட 30 பிரதிதிக ளும், உத்தரப்பிர தேச மாநிலத்திலிருந்து முஹம் மது ஷபீர் உள்பட 2 பிரதி நிதிகளும், புதுச் சேரியிலி ருந்து சி.வி. சுலைமான் ஹாஜி உட்பட 14 பிரதிதி களும், ஜார்க்கண்ட் மாநி லத்திலிருந்து செய்யது அம்ஜத் அலி உள்பட 31 பிரதிநிதிகளும், மேற்கு வங்கத்திலிருந்து சலீம் மக்கர் உள்பட 14 பிரதி நிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாக இது வரை தகவல் வந்துள்ளது.
வெளிநாடுகள்
ஐக்கிய அரபு அமீரகத் திலிருந்து லியாகத் அலி, முஹம்மது தாஹா, ஹமீத் ரஹ்மான், முத்தலிப் நஜ் முதீன், ஏ.பி. முஹம்மது, யஹ்யா ஆக 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக் கிறார்கள். மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் வரும் பிரதி நிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வதற்கும், அவர்கள் தங்குவவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஓர் அறிக்கையில் கூறியிருப்ப தாவது-
மாநாடு நடைபெறும் சாதாப் மஹால் விஸ்தா ரமான வளாகம் ஆகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இந்த மாநாட்டுக்கு பங்கேற்க வரும் பிரதிநிதிகளின் மேலான வருகையினாலும் எடுக்கப்பட இருக்கும் முடிவுகளாலும் ஒரு வரலாற்று திருப்புமுனை நிகழவிருக்கிறது.
15-ம் தேதி காலை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தேசியத் தலைவர் மாண்புமிகு ஜனாப் இ.அஹமது சாஹிப் தலைமையில் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு தொடங்க இருக் கிறது. நமது தேசிய நிர் வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற் றும் பல்வேறு மாநில மற் றும் ய+னியன் பிரதேச தலைவர்கள் 2 நாட்களும் கலந்து கொண்டு தங்கள் அரிய கருத்துக்களை வெளியிட இருக்கிறார்கள்.
அமர்வுகள்
மாநாட்டு துவக்கத் திற்குப் பிறகு சாதனை அமர்வு, விய+க அமர்வு, 2020 எதிர்நோக்கு நிகழ்வு ஆகியவை முடிந்த பிறகு நிறைவு அமர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகுந்த அக்கறையோ டும், கவனத்தோடும் பிரதி நிதிகளை தங்க வைப்ப தற்கும், உணவு அளிப்பதற் கும் தக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதிநிதிகள் அனைவரும் 15-ம் தேதி காலை மாநாட்டு முகப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். நாட்டின் தென் பகுதியிலிருந்து மாநாட் டுக்கு வரும் பிரதிநிதிகள் பெங்களூரு நகரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கி ருந்து மாநாட்டு வழி காட்டுத் தொண்டர்கள் பிரதிநிதிகளை மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். மாநாட்டுக்கு நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் பிரதிநிதிகள் பெங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண் டும். அவர்களை அங்கே காத்திருக்கும் வரவேற்பு தொண்டர்கள் வரவேற்று மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.
சாதாப் மஹால் அமைவிடம்
மாநாடு நடைபெறும் ஹசாதாப் மஹால்| பெங்க ளூரு கன்டோன்மெட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கன் டோன்ட் மென்ட் ரயில் நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக பிரதிநிதி கள் பயணம் செய்தால் நேராக சதாப் மஹாலை அடைந்து விடலாம். பெங் களுரு சந்திப்பு ரயில் நிலையத்திற்கும், மாநாடு நடக்கும் சாதாப் மஹா லுக்கும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். அங்கே தயா ராக இருக்கும் தொண் டர்கள் பிரதிநிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வர்.
மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகளை வரவேற்க வரவேற்புக் குழு வினர் ஆர்வமுடன் காத்தி ருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் அனைவரும் ஒன்றுபட்டு புதிய வரலாற்றைப் படைக்க அணி வகுப் போமாக.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனார்.
முகவரி
தேசிய மாநாட்டு நிர்வாக அலுவலகம் மற்றும் தொடர்பு தொலைபேசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
28, டேனரி ரோடு, பெங்களுரு - 560 043.
தொடர்பாளர் :
முஹம்மது நயீம், செல் : 08147297795,
இக்பால், செல் : 08147310715