Tuesday, January 12, 2010

பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!

பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!


ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.

ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதனைகளையும் சொல்லத் தயாராகிவிட்டார்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சிய+ட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சிய+ட்டிக் கொண்டிருக்கிறது.

தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர்.

தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் வெற்றிக்கு பணியாற்றி விறுவிறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுகொண்டிருக்கும் செய்தி கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.

தீரர் திப்புவின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹ{ அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்க்கிறது.

1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிறுவனரும் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீகின் முன்னாள் செயலாளருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதெ மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம். அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்களுடன் மஹ்ப+பே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா ப+க்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், அன்றைய மேற்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ@ஜமான் மற்றும் நாடெங்குமிருந்தும் முஸ்லிம் லீகின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெரும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.

அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..

அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைபெற்று தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நன்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைபெற்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!

-தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ