Wednesday, January 6, 2010

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்
செங்கோட்டை பொதுக் கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்


செங்கோட்டை, ஜன.6-

செங்கோட்டை நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக் கூட் டம் காயிதெ மில்லத் திடலில் ஒன்றிய செய லாளர் மு. அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற் றது.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட கல்வி மேம்பாட்டுச் செயலாள எச். அப்துல் ரஹ்மான், நகரத் தலைவர் எம்.எம்.எஸ். ஹமீது, நகரச் செயலாளர் என். மஹப+ப், நகர துணைத் தலைவர் எல். நசீர் அஹமது, நகரப் பொருளாளர் எஸ். எம். அக்பர் பாதுஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப் பாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலூர் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். கமருதீன் ஆலிம் அனைவ ரையும் வரவேற்றார்.

தென்காசி நகரப் பொருளாளர் கே.என்.எம். அப்துல் காதர், மாவட் துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோரும் பேசினர்.

இறுதியாக வேலூர் முஸ்லிம் லீக் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசிய தாவது-

தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சுதந்திரமாக செயல்படு கிறார். தி.மு.க. கூட்டணி யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும்.

திருமணங்களை கட்டா யமாக பதிவு செய்ய வேண் டும் என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள் ளன.

எனவே, சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் ஜமாஅத் தலைவர்கள், பள்ளிவாசல் முத்தவல்லி கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் ஆகியோரை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். அதன் பிறகு இதனை செயல் படுத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

தற்போது மஹல்லா ஜமாஅத்வசம் உள்ள திரு மணப்பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல விசாரணைக்கு பின்னர் தான் பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய் யப்படுவதால் இதனையே அங்கீகரிக்கப்பட்ட பதி வாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் ஆகியோரிடம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பு கிறோம்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் கடையநல் லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், புளியங் குடி நகரச் செயலாளர் எம். அப்துல் ரஹீம், தென்காசி நகரச் செயலாளர் எ. அப்துல் காதர் நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராம், மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ. ஹைதர் அலி, தென் காசி எம். முஹம்மது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எம். முஹம்மது அலி, முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ் லுர் ரஹ்மான், புளியங்குடி எம். சாகுல் ஹமீது ஆகி யோர் கலந்து கொண்டனர்.