Saturday, January 23, 2010

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்



இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மாணவர் அமைப்பான ஹமுஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ்.எஃப்) மாநாடு வரும் ஜனவரி 31ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சென்னை அண்ணாசாலை காயிதெ மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி பின்புறமுள்ள காயிதெ மில்லத் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இத்திஹாதுல் உம்மத் ஹசமுதாய ஒற்றுமை| என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் மாநாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹமது சாஹிப் தொடங்கி வைக்கிறார்.

தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், கேரள மாநில முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில தலைவர் பி.கே. பைரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாயப் பணிகளுக்கு மிகச் சிறப்பான பஙகளிப்பை செய்து வரும் முஸ்லிம் மாணவர் பேரவை, மதிக்கத் தக்க பண்முகத் தன்மை, சமூக நீதியை நிலை நாட்டுதல் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. தொடர்ந்து இப்பணி களில் இது அதிகமான கவனம் செலுத்தும்.
சென்னை மாநகரில் முஸ்லிம் மாணவர் பேர வையின் பணிகளை சிறப்பாக்குவதற்காகவும், விரிவு படுத்துவதற்காகவும் இம் மாநாடு வழி வகுக்கும்.

இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சென்னை எம்.எஸ்.எஃப் தலைவர் டி.கே. ஷாநாவாஸ் (90436 88959) பொதுச் செயலாளர் கே.கே. முஹம்மது நஸீர் (9043797856) பொருளாளார் சி.டி ஃபாரிஸ் (9043844248) உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பேராசிரியர் வேண்டுகோள்

பெங்களளுருவில் ஜனவரி 15,16 தேதிகளில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் அமைப்புப் பணிகளை நாடு முழுவதும் உடனடியாக துவக்கி பணகளை முடிக்கி விட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடை பெறும் முதல் நிகழ்ச்சி யான எம்.எஸ்.எஃப். மாநாட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட் டங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஒவ்வொரு ஊரிலும் எம். எஸ்.எஃப் துவக்குவதற் குண்டான முயற்சிகளை உருவாக்க வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.