பெரியகுளம் நகர் ஸ்டேட் பாங்க் காலனியில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
பெரியகுளம், ஜன.15-
பெரியகுளம் நகர் ஸ்டேட் பாங்க் காலனி பள்ளிவாசலில் 8-1-10 அன்று தேனி மாவட்ட முஸ்லிம் லீகின் ஆலிம்கள் அணி அமைப்பாளர் முஹம்மது சாதிக் ய+சுபி ஜும்ஆ பயான் செய்தார்.
ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் உறுப்பினர் சேர்ப்புப் பணி துவங்கியது. அப்போது நகரச் செயலா ளர் நிஜாத் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலா ளர் அப்துல் நசீர், ஆர்.கே. அப்துல் காதர், ஆர்.எம். டி.சி. அப்துல் காதர், லியாகத் அலி, அசன் முஹம்மது, அப்பாஸ் ஆகிய முஸ்லிம் லீகினர் உறுப்பினர் சேர்ப்புப் பணியை துவக்கினர்.
பள்ளிவாசல் தலைவர் அப்துர் ரஹ்மான் உறு துணையாக இருந்தார். அப்போது ஜமாஅத்தார் கள் இப் பகுதிகளில் உள்ள மதுபானக்கடையை மாற்றம் செய்ய வேண்டும் என்னும கோரிக்கையை முஸ்லிம் லீகினர் ஏற்று மாவட்ட ஆட்சித் தலை வரைச் சந்தித்து ஆவண செய்வதாக உறுதியளித் தார்.