திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க முயற்சி மேற்கொள்வோம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உறுதி
வாரம் 2 நாட்கள் மட் டுமே இயக்கப்படும் சென்னை - திருச்செந்தூர் ரயில் சேவையை தினமும் இயக்கும் வகையில் தேவை யான முயற்சிகளை செய் வேன்என்றும், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை யன்று ஜும்ஆ நேரத்தில் இயக்கப்பட்டு வரும் அந்த ரயிலின் நேரத்தை மாற்ற துரித நடவடிக்கை எடுப் பேன் என்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உறுதியளித்தார்.
திருச்செந்தூர் சட்ட மன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சென்னைவாழ் திருச்செந் தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா ராயபுரம் பாருக் மஹாலில் நேற்று நடை பெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் சேவை களை பாராட்டி பேசினார்.
அப்போது அவர் குறிப் பிட்டதாவது.
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அனிதா ராதா கிருஷ்ணன் அனைத்து சமுதாய மக்களிடமும் நற் பெயரையும், நல்ல மதிப் பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளார். குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுடன் நெருங்கிப் பழகி அவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தேவை களை நிறைவேற்றித் தரக் கூடியவராக திகழ்கிறார்.
இடைத் தேர்தலின் போது திருச்செந்தூர் தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினம், உடன் குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் அவருக்காக நானும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலப் பொதுச்செயலாளர் அப+பக்கர், மாநில செய லாளர் காயல் மஹப+ப் மற்றும் திருப்ப+ர் சத்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டோம். நாங்கள் சென்ற இடங்களிலெல் லாம் அந்த பகுதி வாழ் மக்கள் அனிதா ராதா கிருஷ்ணனை தங்கள் குடும்பத்தின் ஒருவராகவே கருதி அன்பு பாராட்டி யதை நேரடியாக கண்டுணர்ந்தோம்.
தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக காயல்பட்டி னத்திலே மிகப் பிரம்மாண் டமான பிறைக்கொடி பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணி அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை அறிவிக்கும் விதமாக அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாக தெரிந்தாலும் வாக்கு வித்தியாசம் தான் தெரியாமல் இருந்தது. இன்று அதுவும் தெரிந்து இந்த பாராட்டு விழா நடைபெற்று அதில் நானும் பங்கேற்று வாழ்த் துகிறேன்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் தொகுதி பக்கம் சென்று பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்காமலேயே மக்களிடம் வாக்கு சேகரிக் கச் செல்லாமலேயே பல ஆயிரம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றிபெறக்கூடிய தலைவராக கண்ணியத்திற் குரிய காயிதெமில்லத் அவர் கள் திகழ்ந்தார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய தொகுதிக்கு செல்லும் அவர்கள் பிறகு தேர்தல் முடிந்ததும் வெற்றியை தேடித் தந்த தொகுதி மக்களுக்கு நன்றி சொல் லத்தான் தொகுதிக்கு செல் வார்கள். அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு படைத்த காயிதெமில்லத் அவர்களுக்குப் பின்னால் அத்தகையதொரு மக்கள் செல்வாக்கு பெற்ற வேட் பாளராக அனிதா ராதா கிருஷ்ணன் திகழ்வதை காண முடிகிறது.
அவர் அனைத்து சமு தாய மக்களிடமும் நல்ல மதிப்பைப் பெற்றுள் ளார். தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை உடனுக்குடன் நிறைவேற் றித் தருவதில் அக்கறையு டன் காணப்படுகிறார். இங்கு என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். மத்திய ரயில்வே இணைய மைச்சராக இருக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது அவர்களிடம் ஒரு கோரிக்கையை வலியு றுத்தி உடனடியாக நிறைவேற்றித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை . திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் நிச்சயமாக இந்த கோரிக்கையை உரிய முறையில் நிறைவேற்றித் தர என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய் வேன்.
தற்போது வாரம் 2 நாட்கள் இயக்கப்படும் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ நேரத்தில் இயக்கப் படுவதால் முஸ்லிம் பயணி கள் ஜும்ஆ தொழுகையை இழக்க நேரிடுகிறது என்ற ஏக்கம், மனக்கவலை முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்த குறையை போக்க விரைந்து நடவ டிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். என்னைப் பொறுத் தவரையில் நான் துபையில் பணியாற்றிய காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துபையிலிருந்து இந்தியா வுக்கு இயக்கப்படும் ஏர்-இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இயக்கப் பட்டதால் முஸ்லிம்கள் தொழுகையை இழக்கும் சூழல் நிலவியதால் துபையி லுள்ள இந்தியத் தூதரகத் தில் போராடி அந்த நேரத்தை மாற்றித் தந்த அனுபவம் எனக்கு இருப் பதால் இந்த ரயில் நேரத் தையும் மாற்றித் தருவதற் கான முயற்சி யிலும் வெற்றி பெறுவேன் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது.
அதேபோன்று திருச் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கத் தேவை யான முயற்சிகளை செய் வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்செந்தூர் தொகுதி யைப் பொறுத்தவரை உங்களுக்கென ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் என்னையும் உங்களது நாடாளுமன்ற உறுப்பினராகவே கருதி உங்கள் தொகுதிக்கு தேவை யானவற்றை என் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள என்னை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ள லாம். நான் உங்களுக்காக உழைக்க தயாராக இருக் கிறேன் என்பதை தெரிவித் துக் கொள்கிறேன். இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.