இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல்
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=937
பெங்களுரு, ஜன.17-
மதச்சார்பற்ற ஜன நாயக கோட்பாடுகளே நமது லட்சியம். சிறு பான்மையினரின் உரிமை களை பாதுகாப்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றைக்கும் முன்ன ணியில் நிற்கும்|. அடிமட் டத்திலிருந்து இயக்கத்தை உருவாக்கும் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல் விடுத்துள் ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இரண்டு நாள் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டில் ஹஇயக்க வளர்ச் சியும் - எதிர்காலமும்| குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது-
பார்வையும் - பயணமும்
நமது புனிதமான பய ணத்தை உறுதிப்படுத்துவ தற்கும், எதிர்காலத்தில் நமது செயல் திட்டத்தை வகுக்கவும், நமது கட்சியின் தேசிய மாநாட்டிற்காக இங்கே கூடியிருக்கிறோம். நமது முன்னே நமது கட்சியின் 60 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பு உள்ளது. நமது பலமும், பலவீனமும் நமக்கு தெரிந் திருக்கிற நிலையில் தற் போதைய சூழ்நிலையை ஆய்வு செய்வதற்கும், எதிர் காலத்தில் நமது கட்சியை வலுப்படுத்தத் தேவையான உத்திகளை அமைப்பதற் கும் நாம் இங்கே குழுமியி ருக்கிறோம். எனது இந்த அறிக்கை தற்போதைய நிலவரத்தை வழிப்படுத்த பயன்படும். இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் சென்னையில் 1948-ம் ஆண்டு மார்ச் 10-ல் கீழ்க் கண்ட கொள்கை குறிக் கோளுடன் ஸ்தாபிக்கப் பட்டது.
அ) இந்திய விடுதலை இந்தியாவின் கவுரவம் மற்றும் இந்திய மக்களின் வளர்ந்து வரும் பலம், செழிப்பு மற்றும் மகிழ் வுக்கு பாடுபடவும் அவற்றை பேணவும், பாது காக்கவும், பராமரிக்கவும், உதவி செய்வதும்.
ஆ) நாட்டில் முஸ்லிம் கள் மற்றும் இதர சிறு பான்மையினரின் உரிமை கள், நலன்கள் ஆகிய வற்றை அடைவது மற்றும் பாதுகாப்பும்
இ) இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே பரஸ்பர புரிந் துணர்வு, நல்லெண்ணம், சுமூகம், நட்புணர்வு, ஒற் றுமை, ஐக்கியம் ஆகிய வற்றை மேம்படுத்துவது மாகும்.
சோர்வடைந்த நேரங் களிலெல்லாம் இந்த சமு தாயத்தை சரியாக வழி காட்டிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஸ்தபாகர் காலஞ் சென்ற காயிதெ மில்லத் முஹம்மது இஸ் மாயில் சாஹிப் மற்றும் அவரது சகாக்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.
மதச்சார்பற்ற ஜன நாயகம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்ட காலங் களிலிருந்து பாடுபட்டு வரு கிறது. இந்திய முஸ்லிம் களின் கலாச்சாரத் தன் மையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு அவர்களை தேசிய நிர்மா ணத்தில் பங்கு பெறவும், காலமாற்றத்தின்போது ஏற்படும் சவால்களை மதஅர்ப்பணிப்போடு - தேசியப்பார்வையோடு சந்திக்க அவர்களை தயார்ப்படுத்த முஸ்லிம் லீக் லட்சியமாக கொண் டுள்ளது.
1952-லிருந்து இன்று வரை பாராளுமன்றத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பிரதிநித்துவம் கொண் டுள்ளது. கேரளாவில் ஒரு கட்டத்தில் மந்திரி சபையை நடத்திச் செல் லும் மிகச் சிறந்த சரித்திரப் பதிவை கொண்டிருந்தது. 1979-ல் கட்சியின் மிகச் சிறந்த தலைவரான காலஞ் சென்ற சி.எச். முஹம்மது கோயா கேரளாவின் முதல மைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சி களுடன் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கேரளாவில் செய்யது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், கே.எம். சீதி சாஹிப், பானக்காடு பி.எம்.எஸ்.ஏ. ப+க்கோயா தங்ஙள் மற்றும் செய்யது முஹம்மது அலி ஷாஹிப் தங் ஙள் ஆகியோரின் சிறந்த தலைமையின் கீழ் அது ஒரு அரசியல் சக்தியாக விளங்கியதை யாராலும் மறக்க முடி யாது. கேரளா வில் பல் வேறு காலகட் டங்களில் கூட்டணி மந்திரி சபையில் அமைச்சர்கள் பங்கு பெற்று கல்வி, உள்துறை, தொழில்கள், பொதுப் பணி, உள்ளாட்சி, சமூக நலம், மீன்வளம் போன்ற பல்வேறு இலாக் காக் களை நிர்வகித்திருக் கிறார் கள்.
மேற்கு வங்கத்தில் 1970-ம் ஆண்டு ஆரம்ப கட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைச்சர்கள் இருந்திருக் கிறார்கள். அஜாய் முகர்ஜி முதல்வராக இருந்த மந்திரி சபையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஏ.கே.ஏ. ஹஸ னுஸ் ஸமான் அமைச்ச ராக பணியாற்றியிருக்கி றார். கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு அப் பாற்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு தமிழ் நாடு, பாண் டிச்சேரி, மகா ராஷ்டிரா, கர்நாடாக, உ.பி. அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க் கள் இருந்திருக் கிறார்கள்.
டெல்லி மாநகராட்சியி லும் வேறு சில மாநகராட் சியிலும் முஸ்லிம் மேயர் கள் பணியாற்றியிருக்கி றார்கள்.
மதச்சார்பற்ற ஜனநாயக கோட்பாடுகளின் பின்னே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நிற்கிறது. மதச்சார்பற்ற சக்திகள் அமைக்கும் ஜனநாயக அமைப்புகளில்தான் முஸ்லிம்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என் பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உணர்ந்தி ருக்கிறது. மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் முஸ்லிம் களின் அடையாளம், சமூ கத்தின் பாதுகாப்பு ஆகிய வற்றை உறுதிப்படுத்த முடி யும் என்பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது. முற்போக்கு -மதச்சார்பற்ற சக்திகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கூட்டணி வைப்பதானது தேசப்பற்றோடு கூடிய சிறந்த எதிர்காலத் திட்டம் என்பதை காலம் நிரு பித்திருக்கிறது.
சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாப்ப தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கி றது. இந்த தேசத்தின் சட்ட வடிவமைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகள் பிரதிபலிப்ப தற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் காரணமாக இருந்திருக்கிறது. வழி பாட்டுத் தலங்கள் பாது காப்பு சட்டம், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட் டம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சட்டம் ஆகியவை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் செல்வாக்கை அறிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகளாகும்.
தேசிய அரசியல் அரங்கில் இந்த புதிய நூற்றாண்டின் தொடக் கமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தி யுள்ளது. ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தபடி சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஆத ரவை அந்த கூட்ட ணிக்கு திரட்டுவதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெரும் பங்கை அளித்தது. 2004 மற்றும் 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசில் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் பிரதி நிதித்துவம் வகித்தது. தற்போது மக்களவையில் அதற்கு 3 உறுப்பினர்களும், ராஜ்ய சபையில் ஒரு உறுப்பினரும் உள்ளார் கள்.
ஜி.எம். பனாத்வாலா சாஹிப் மறைவுக்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட இ. அஹமது தற்போது ரயில்வே துறையின் இணை யமைச்சராகி யிருக்கிறார். 2004-ல் அவர் வெளியுறவுத் துறை இணையமைச்சராக பணியாற்றியிருக்கிறார். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசத்தின் மதச்சார் பின்மையை பலப்படுத்து வதில் ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நிரூபிக் கும் வகையில் அதற்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது. பொது மக்களின் மென்மையான நடுநிலையுடன் கூடிய பார்வையை இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் பிரதி நிதித்துப்படுத்துகிறது.
தீவிரவாதம் மற்றும் வன்முறையை அது கடுமையாக எதிர்க்கிறது. மதவெறி அமைப்புகள், பிரிவினை சக்திகள் ஆகிய வற்றை அது கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டுமானத்தை வலுப் படுத்த சமுதாயத்தில் அரசின் விருப்பத்தை வலுப்படுத்துவதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு சிறப்பான பணி இருக் கிறது.
சமூக நீதி, கூட்டணி ஆளுமை ஆகியவற்றுக் காகவும் பாடுபடுகிறது. அரசு பணிகளில் முஸ்லிம் களுக்கும் மற்ற நலிந்த பிரி வினர்களுக்கும் அவர் களின் மக்கள் தேவைக் கேற்ப இடங்களை ஒதுக் கீடு செய்ய அது போராடு கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையில் கண்டுள்ள படி மிகப் பரிதாப நிலையி லிருக்கும் முஸ்லிம் சமுதா யத்தினை மேன்மைப் படுத்த தேவையான திட் டங்களை அரசு நிறைவேற் றும் என்று நம்புகிறது. ஏழை மக்களுக்கு அரசின் அதிகாரத்தை அளிப்பதே இன்றைய தேவை என் பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உணர்ந் திருக் கிறது.
இயக்கத்தை வலுப் படுத்த சில வழிமுறைகள்:
1. சமூக அமைப்பை கலைக்க விரும்புகிற மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் மனதில் விஷத்தை தூவுகிற மத வெறி அமைப்புகளின் பேரபாயம். அவர்களின் காலம் கடந்து போன கோஷங்களான இந்தியமய மாக்குதல், கலாச்சார பண்பாடு, இந்துத்துவா போன்றவை பாசிச எண் ணத்தோடு மத சிறுபான்மையினரின் பாது காப்பு மற்றும் அடையா ளத்தை அச்சுறுத்துவ தாகும். நமது தேசத்தின் பன்முக கலாச்சாரத்தை மேலும் சிறப்பாக்கும் வகை யில் சமூக நல்லிணக்கம், உணர்வு ஒற்றுமை, பரஸ் பர இரக்கம், எல்லோர் மீதும் அன்பு காட்டுதல் ஆகியவற்றின் பின்னால் நாம் உறுதியாக இருக்கி றோம்.
2. சில தீவிரவாத குழுக் களின் தீய செயல்பாடுகள் சமூகத்தின் நன்மதிப்பை கெடுக்கின்றன. அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி கள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம் கள்தான் என்ற ஒரு பொய்ப்பிரச்சாரம் முஸ்லிம்களை உலகத்தின் கண்களில் ஐயப்பாட்டு டன் பார்க்கக்கூடிய அபாயகரமான பிரச்சார மாகும். தன்னைத் தானே தீமை மிக்க மதம், காதல் ஜிஹாத் போன்ற திறமை யற்ற சொல் பிரயோகங்கள் ஊடகங்களில் பாகுபாட்டு நிலையைக் காட்டுகின்றன. இது சமுதாயத்தின் பல் வேறு பிரிவுகள் சமாதான சகவாழ்வுக்கு எதிரான தாகும். நமக்கு எதிராக தூண்டி விடப்படும் இந்த அவதூறுகளுக்கு எதிராக இஸ்லாம் காட்டும் அமைதி வழியை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஜனநாயக அரச மைப்பு முறை அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் சென்றடையும் நோக்கத் தையும், வளர்ச்சியை பரவ லாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வு நிகழ்கிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சியும் - தன்மையும் - பரிணாமமும் அதிகரிக்கும். அரசியல் சட்டம் கொடுத்துள்ள அதிகாரத்தின்படி பல் வேறு வளர்ச்சித் திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் பங்கேற்க உரிமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள் ளாட்சி மட்டத்திலும், ஊரக தலைவர்களின் செயல்பாடும் பெரிய அளவில் பங்கு வகிக்கின் றன. இதனால் அடிமட்டத் திலிருந்து திறமையான தலைமை உருவாக அவசியம் ஏற்பட்டுள்ளது.
4. ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவு கோல் அது பெற்றிருக்கும் கல்வித் தகுதியைப் பொருத்தே இருக்கிறது. எனவே, சமுதாய மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள நிலையை மாற்ற கவனம் செலுத்த வேண்டும். மொத்த சமுதாயமும் கல்வி முன்னேற்றத்தை வலி யுறுத்த வேண்டும்.
5. சமூக தீமைகளுக்கு எதிராக தொய்வில்லா போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும். சமூகத்தின் இளைஞர்களும், மாணவர் களும் மத நெறிமுறைகளை கடைப்பிடித்து கவர்ந்தி ழுக்கும் தீமைகளிலிருந்து விலகிக் கொள்ளும் பக்கு வத்தை அடைய வேண்டும். உலமாக்கள், கல்வியாளர் கள், இளைய தலைவர்கள் ஆகியோரின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழைகள், தேவைப்படுவோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் கொடைத் தன்மை வாய்ந்த நடவடிக்கைகளை ஊக்கு விக்க வேண்டும்.
அடிமட்ட தொண்டர் கள் மட்டத்திலிருந்து இயக்கத்தை வலுப்படுத் தும் பணியில் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங் களில் கிடைத்த சிறந்த அனுபவங்களின் அடிப்ப டையில் இதனை நாம் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களில் புதிய கமிட்டிகள் அமைக் கப்பட்டிருப்பது மகிழ்ச்சி யான விஷயமாகும். இயக் கத்துடன் அதிக அளவில் திறமைசாலிகளும், இளை ஞர்களும், கல்வியாளர் களும், சிந்தனையாளர் களும் இணைவது வர வேற்கத்தக்கது.
உண்மையான நிலையை அறிந்து கொள் ளவும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு செய்யக் கூடிய பணிகளை நிர்ணயம் செய்யவும் நாம் பல்வேறு விஷயங்கள் குறித்து விரி வான ஆலோசனை மேற் கொண்டு தகுந்த செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
உண்மையான மக்கள் சேவகர்
மூத்த அரசியல் அனுபவசாலி
ஜோதிபாசு மறைவுக்கு பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்
பொதுவுடமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் வங்கத்துச் சிங்கமெனப் பாராட்டப் பெற்ற ஜோதிபாசு அவர்களின் மறைவு, இந்திய மக்களுக்குப் பொதுவாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாக அமையும்.
கம்ய+னிஸ்டு கொள்கை-தத்துவம்-போக்கு நோக்கு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஜோதிபாசு என்றால் உயர்வாக மதித்துப் போற்றி வந்த ஒரு பாரம் பரியம் இந்திய ஜனநாயகத்துக்கு உரியதாகி விட்டது.
தொழிலாளர் வர்க்கத்தினர் ஏற்றம் பெற எண்ணியும் பலவித காரியங்கள் பண்ணியும் புதிய இடது சாரி சரித்திரத்தை இந்தியாவில் படைத்தவர்களில் ஜோதிபாசு தலையாயவர்.
எல்லாருடைய பிரச்சினைகளையும் தமது பிரச்சினை களாகக் கருதி அவற்றுக்குத் தீர்வு காண்பதில் மிகுந்த ஆர்வமும் தூர நோக்கும் உடையவராக விளங்கியவர். சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கு அவர் துவக்கி வைத்த திட்டங்கள் மேற்குவங்க அரசால் தொடர முடியாமல் போயிருக்கின்றன.
ஜோதிபாசு அவர்கள் இன்றைய அரசியல் அரங்கில் மூத்த அனுபவம் பெற்ற நிதானமான தலைவராக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர்.
அணுமின் சக்திக்கான ஒப்பந்தம் பற்றி மார்க்சீய கம்ய+னிஸ்டு கட்சி எடுத்த முடிவினால் சென்றமுறை மார்க்சீய கம்ய+னிஸ்டு கட்சி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, அது அவசர மான முடிவு என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் ஜோதி பாசு அவர்கள்.
சில காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், இப்பொழுது இறுதி முடிவை எய்திவிட்டிருக்கிறார்.
கம்ய+னிஸ்டு இயக்கத் தோழர்களுக்கும், அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. இந்திய ஜனநாயகம் ஒரு சிறந்த அறிஞரை உண்மையான மக்கள் சேவகரை-மூத்த அரசி யல் அனுபவசாலியை இழந்து நிற்கிறது என்ற உணர்வில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அவரின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு அனைத்து மாநிலப் பிரதிநிதிகள் பெங்களுருவில் குவிந்தனர்
தாரூல் உலூம் சபிலுர் ரஷாதில் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பெங்களுர்,ஜனவரி 15-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு இன்றும் நாளையும் கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் நடை பெறுகிறது. இம்மாநாட் டில் பங்கேற்பதற்காக காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பிரதி நிதிகள் வருகை தந்துள் ளனர்.
மாநாட்டு ஏற்பாடு களை பார்வையிடுவதற்கும் பணிகளை முடிக்கிவிடுவ தற்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பெங்களுர் வருகை தந்துள்ளனர். அவர்களுக்குப் பிரபல மான தாருல் உலூம் சபிலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய மாநாடு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பிரதிநிகள் மாநாடு பெங் களுருவில் ஜனவரி 15,16-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது. இம்மாநாட்டில் அனைத்து மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி அந்தந்த மாநில தலைவர் அல்லது செயலா ளர்கள் அறிக்கை சமர்ப் பிக்கின்றனர். ஆதன்மீது விவாதம் நடைபெறும்.
""""இலக்கு 2020|| என்ற பொதுவான இலட்சனை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எதிர்காலம் திட்டம்பற்றி கருத்தரங்கு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் தேசிய நிர் வாகிகள் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதி நிதிகள் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெங்களுரு வருகை தந்துள்ளனர்.
வரவேற்பு
பெங்களுர் வருகை தந்துள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோருக்கு தாருல் உலூம் சபிலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில் நேற்று முன்தினம் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.
50 ஆண்டு பாரம்பரிய சிறப்புமிக்க இக் கல்லூரி யின் முதல்வர் கர்நாடக அமீரே ஷரிஅத் மவுலானா, முஃப்தி அஷ்ரப் அலி ரஷாதி அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இந்த வர வேற்பில் அக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக் கான மாணவர்களும் ஆசிரியர்களும் அணி வகுத்து நின்று வரவேற் பளித்தனர்.
அமீரே ஷரிஅத்திற்கு தேசிய மாநாட்டில் பங் கேற்று வாழ்த்துரையாற்ற தாய்ச்சபை தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அதனை பெருமிதத் துடன் ஏற்றுக்கொண்ட மௌலானா அஷ்ரப் அலி ஹஜ்ரத் சபிலுர் ரஷாதின் பட்டமளிப்பு விழாவிற்கு தாய்ச்சபை தலைவர்கள் கள் பங்கேற்க வேண்டு மென அழைப்பு விடுத்தார் அதை தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் """"அல்லாஜு அக்பர், முஸ் லிம் லீக் ஜிந்தாபாத்|| என்ற முழக்கத்துடன் அந்த கல்லூரி மாணவர்கள் வழியனுப்பினார்கள்.
இந்த வரவேற்பு நிகழ்ச் சியில் தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹம் ஆகா, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் அரூர் காலக், பொதுச் செயலாளர் கே. ஏ.எம். முஹம்மது அப+ பக்கர், கர்நாடக மாநில நிர்வாகிகள் இனாம் தார், ஜாவிதுல்லாஹ், ஷபியுல் லாஹ், மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட் டனை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ் மாயில், நரி முஹம்மது நயீம், முஸ்தாக் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.
சிறப்பான ஏற்பாடுகள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெரும் சாதாப் ஈத்கா வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. சுhதாப் ஈத்கா மைதானம் பெங்களுரில் பிரதான இடத்தில் அமைந் துள்ளது. 75 ஆண்டுகால வரலாற்று பெருமைமிக்க இந்த வளாகத்தில் ஈத்கா மைதானம் முஸ்லிம் அடக்கஸ்தலம், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வளாகத்திற்குள் மஸ்ஜிதே சாதாப் என்ற பள்ளிவாச லும், மத்ரஸே சாதாப் என்ற அரபிக் கல்லூரியும் உள்ளன. இதில் பெண் களுக்கான தையல் பயிற்சி நிலையம், நடுநிலைப்பள்ளி ஆகியவையும் செயல்படு கின்றன.
பேங்களுரில் உள்ள மஸ்ஜிதே லபாபின், மஸ்ஜிதே பேபாரியானா, மஸ்ஜிதே காஜி மஹல்லா, மஸ்ஜிதே லால் என்ற ஜாமிஆ மஹ்ரூப் ஆகிய நான்கு பள்ளிவாசல்களின் சார்பில் கூட்டாக நிர்வகிக் கப்படும் இந்த வளாகம் ஈதாகாயே ஜதீத் அறக்கட் டளை என்ற பதிவு செய்யப்பட்டு அதன் தலைவராக எச். முஹம்மது இப்ராஹிம் சாஹிப் செயல்படுகிறார். இங்கு 40 ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இந்த அறக்கட் டளை சார்பில் மாணவர் கல்வி உதவித்தொகை ஏழை எளியவருர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அநாதைகளுக்கு ஜனாஸா நல்லடக்கத்திற்காக பல் வேறு உதவிகள் செய்யப் பட்டு வருகின்றன.
இந்த சிறப்பிற்குரிய இடத்தில்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும்.