Thursday, January 7, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணி பேணப்பட வேண்டிய குறிப்புகள் சில....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணி பேணப்பட வேண்டிய குறிப்புகள் சில....

மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முதலில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி பணியை துவங்க வேண்டும்.
மாவட்ட பொதுக்குழுவில் உறுப்பினர் சேர்ப்பு பணி அனைத்து ஊர்களுக்கும் சென்று அடையக் கூடிய வகையில் பொருப்பாளர்கள் நியமனம் செய்து, படிவங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
உறுப்பினர் சேர்ப்புப் பணியை குடும்பத்திலிருந்து துவங்கி நண்பர்கள், மஹல்லா வாசிகள் என அனைவரையும் சேர்க்க வேண்டும்.
உறுப்பினர் சேர்ப்புப் பணியை வெற்றிகரமாக நடத்திடும் வகையில், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களையும் கையொப்பமிடச் செய்து அதிக ஈடுபாடு கொள்ளச் செய்தல், பிற இயக்கங்களில் இருப்பவர்களை தாய்ச்சபையில் இணைய அழைத்தல் மற்றும் இதர சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கும் செய்தியை எத்த வைத்தல் போன்ற காரியங்களின் கவனம் செலுத்திடல் வேண்டும்.
2009 டிசம்பர் முதல் வாரத்தில் மாவட்ட தலைவர்ஃசெயலாளர் அனைத்து ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் சேர்ப்புப் பணியை தீவிரப் படுத்த வேண்டும்.
உறுப்பினர் நாண்கான்டு சந்தா ரூ5ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்)யில் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில் ஈவுத் தொகை பிரித்தளிக்கப்பட வேண்டும்.
2010 ஜனவரி மாதத்தில் பிரைமரி நிர்வாக தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொருப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான ஈவுத் தொகையையும் மாவட்ட தலைவர் ஃ செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி நிர்வாக தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
2010 பிப்ரவரி மாதத்தில் மாவட்ட நிர்வாக தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
-மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கூட்டங்களில் அவசியம் பங்கேற்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். பிரைமரி தலைவர், செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருப்பதால், இவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.
-மாவட்ட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் சட்டமன்ற தொகுதி அல்லது ஒன்றியத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. ழூபிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொருப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
-பிரைமரி மற்றும் மாவட்ட நிர்வாக தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களின், அந்தந்த பிரைமரி - மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி, மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் ( எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளீர் லீக் அமைப்பாளர்களாக மகளீர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்,
தற்போது வழங்கப்படும் உறுப்பினர் விண்ணப்ப வடிவத்தையே, அடையாள அட்டை பெறுவதற்கும் பயன்படுத்தவும். ப+ர்த்தி செய்த படிவத்தின் நகலையும், புகைப்படத்தையும் ரூ.20-வுடன் அனுப்பி தலைமை நிலையத்திலிருந்து உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம்.
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)