Thursday, November 24, 2011

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!!

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!! தற்காலங்களில் அடைமொழியுடன் தற்குறிப்பேற்ற அணியை தன்னகத்தே கொண்டு ஒரு தலைப்பில் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று மின்னஞ்சல் வழியே வலம் வந்து கொண்டிருக்கின்றது. அது என்ன ?? யாரைப் பற்றிய தகவல் அது ?? வலம் வரும் தலைப்பு : அருமையான தலைவர் யாரைப்பற்றிய தலைப்பு அது : முன்னாள் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களைப் பற்றியது. அதாவது குறிப்பிட்ட பத்திரிக்கை ஒன்று புகைப்படங்களுடன் கூடிய செய்திகளை தனக்கே உரித்தான தமிழில் 22.04.2006 அன்று வெளியிட்டிருந்தது. அதில் வேலூர் எம்.பி. காதர் மொகிதீன் அவர்கள் சக்தி அம்மா அவர்களிடம் ஆசி பெற்றார் என்றும் சக்தி அம்மா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்றும் குறிப்பிட்டிருந்த்து. இச்செய்தி குறித்து அறிந்ததும் முன்னாள் வேலூர் எம்.பி. அவர்களால் மறுப்புச் செய்திகளும் அப்போதே தினசரிகள் மற்றும் வாராந்திரிகளில் வெளிவந்திருந்தன. ஆனால் தற்போதும் குறிப்பிட்ட தினசரியின் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் மின்னஞ்சலில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்து கொள்ள மார்க்-குரூப் ( www.mark-group.info ) 28.03.2010 அன்று துபையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் வேலூர் எம்.பி. அவர்களை சந்தித்து சில விடயங்களை கேட்டறிந்தது. அதன் முழு விபரம் வருமாறு : ( Please click the link below ) www.mark-group.info and then click interview with Ex-MP Prof. K.M.K. ( தொடர்ச்சி உள் செய்தி ) காலை உணவு நேரம். உணவைப் பற்றி பொருள் கொள்ளாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு செய்முறை விளக்கத்துடன் எமக்கு விடையம் அளித்தார். முகமன் : அஸ்ஸலாமு அலைக்கும் பதில் : வ அலைக்கும் சலாம் கேள்வி : தாங்கள் சக்தி அம்மாவிடம் 22.04.2006 அன்று ஆசி பெற்றதாக கூறப்படுகிறதே ? அது பற்றி ……….. பதில் : சக்தி அம்மா என்பவர் 30 முதல் 33 வயது அனுமானிக்கத்தக்க இளம் வயது ஹிந்து ஆன்மீகப் பேச்சாளர். தங்கத்தினால் ஆன மஹாலஷ்மி கோவில் ஒன்றை திருமலைக்கோடி என்ற ஊரில் நிர்மாணித்துக் கொண்டிருந்தார். இந்தப் பகுதி நான் பாராளுமன்ற உறுப்பினராக வேலூர் தொகுதிக்குட்பட்டதாகும். கோவில் கட்டுமாணப் பணியை பார்வையிடுவதற்காக வேலூர் எம்.பி. என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். நல்ல முறையில் வரவேற்றார். அவர்கள் முறைப்படி அவருக்கு முகமண் கூறினேன். ( அது தவறுதலாக ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம் ) இருவரும் ஆன்மீக சிந்தனைகளை பறிமாறிக் கொண்டோம். கடவுள் கொள்கை பற்றிய சித்தாந்தங்களை கூறினார். இருவரும் ஓரிறை கொள்கை பற்றிய சித்தாந்தங்களை பரிமாறிக் கொண்டோம். நான் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் எம்.பியாக இருந்ததில்லை. வேலூர் தொகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எம்.பியாக இருந்து வந்தேன். கேள்வி : சக்தி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக குறிப்பிட்ட பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றதே ? அது பற்றி ……… பதில் : படைத்த இறைவனுக்கே புகழனைத்தும். காலில் விழுதல் என்பது கல்லாமையின் வெளிப்பாடு. சிரம் சாய்த்தல், விழுந்து வணங்குதல் என்பது படைத்த இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டியது. மற்ற எவரின் காலில் விழுதல் என்பது ஓரிறை கொள்கைக்கு புறம்பானது. பொதுவாக தரையில் உட்காரும் போது நமது இஸ்லாமிய மக்கள் தொழுகையில் உடகாரும் அத்தஹிய்யாத்து இருப்பில் இருப்பது போன்று உட்காருவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து கொண்டுதான் சக்தி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடன் பேசுவதற்காக மக்கள் கூட்டம் வந்தபடி இருந்தன. இறுதியாக சக்தி அம்மாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன். அதாவது ஏகப்பட்ட செலவில் தங்கத்தினால் ஆன கோவிலை கட்டிதான் கடவுளை வணங்க வேண்டுமா என்று கேட்ட போது ‘கடவுள் இங்கு தான் இருக்கின்றார் என்றில்லை, இது மக்களைக் கவர்வதற்கான ஒரு வழி’. மேலும் சக்தி அம்மா கூறுகையில் ’தங்கத்தினால் ஆன கோவிலை பார்க்க ஏகப்பட்ட மக்கள் வருவார்கள். அப்படியாவது மக்களுக்கு கடவுள் கொள்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமே என்று தான் இக்கோயிலை இவ்வளவு செலவில் கட்டுவதாக அவர் கூறினார். சக்தி அம்மாவின் கருத்தை ‘இது அவருடைய கருத்து’ என்று கூறி நம்மிடம் முன்னள் எம்.பி. அவர்கள் பேட்டியை தொடர்ந்தார். ’காலில் விழுந்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறதே ! அது குறிப்பிட்ட பத்திரிக்கையால் திரிக்கப்பட்ட செய்தி. சக்தி அம்மாவிடம் பேச்சை முடித்துக் கொண்டு, அடுத்த பணிக்குச் செல்ல தயாரான சமயம் அனைவரும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று சக்தி அம்மா கேட்டுக் கொண்டார். நானும் சிரித்துக் கொண்டே…….. அத்தஹிய்யாத்து இருப்பில் இருந்தபடி இரு கால்களில் ஏற்பட்ட வேதனை தாங்காமல் என் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு எழுந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட குறிப்பிட்ட பத்திரிக்கை படம் எடுத்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று செய்தி வெளியிட்டு விட்டது. இது அந்த பத்திரிகைக்கே உரித்தான style. சம்பந்தப்பட்ட பத்திரிகை நிருபரை சக்தி அம்மா அவர்களே கண்டித்து விட்ட்தால் நாம் அப்பத்திரிக்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே மறுப்பு வெளியிட்டுள்ளோம். மீண்டும் இச்செய்தி குறிப்பிட சில அமைப்புகள் மற்றும் சகோதரர்களால் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருவதாக சொல்கின்றீர்கள். இதை அப்படியே விட்டுவிடுங்கள். மக்களில் ஒரு சிலர் இதுபோன்ற அப்பட்டமான செய்திகளை பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். ( சாப்பாடு காத்துக் கொண்டிருந்தது, இருந்தும் எங்களின் கேள்விகளுக்கு முனைப்புடன் பதில் சொல்வதிலேயே முன்னாள் எம்.பி. அவர்கள் இருந்தார்கள் ) வேறு ஏதாவது கேள்வி இருக்கா என முன்னாள் எம்.பி. அவர்கள் வினவினார். இப்போது நீங்கள் சாப்பிட செல்லுங்கள். பிறகு பேட்டியைத் தொடரலாம் என்று மார்க்-குரூப் கூறியது. இல்லை முதலில் பேட்டியை முடித்துக் கொள்வோம் பிறகு சாப்பிடச் செல்கின்றேன் என்று பேட்டியைத் தொடர்ந்தார். கேள்வி : தற்போது பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஒரு சாமியாரிடமிருந்து டிவிடி மற்றும் புத்தகங்கள் வாங்குவது போன்ற காட்சி குறித்து …… பதில் : உண்மை தான். தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் சாமியாரின் பேச்சுக்களை உள்ளடக்கிய டிவிடி மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வேலூர் எம்.பி. என்ற முறையில் என்னை அழைத்திருந்தார்கள். நான் அவ்வாறே சென்று விழாவில் கலந்து அவர்கள் வெளியிட்ட டிவிடி மற்றும் புத்தகங்களை பெற்று வந்தேன். இதில் தவறு ஏதும் இருக்கின்றதா ? இந்திய ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத் தொகுதி வேலூர் மக்கள் அனைவருக்கும் தான் நான் எம்.பியாக இருந்து வந்தேன். நாம் சாப்பாட்டுக்காக காத்திருக்கலாம். ஆனால் நமக்காக சாப்பாடு காத்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில் நாம் பேட்டியை முடித்துக் கொண்டோம். முன்னாள் எம்.பி. அவர்கள் எங்களிடம் நடந்து கொண்ட விதம், பண்பு, எங்களையும் சாப்பிடும்படி செய்த உபசரிப்பு, பேட்டியின் போது இடையிடையே செய்முறை விளக்கத்துடன் கூடிய பேச்சு, அன்பு மற்றும் நடந்து கொள்ளும் விதம் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மக்கள் அவருக்கு தந்திருக்கக்கூடிய ‘அருமையான தலைவர்’ என்ற பட்டம் பொருத்தமான ஒன்று தான். அரசியல் வாழ்க்கையில் பலதுண்டு. அதே நேரத்தில் தமது தனிப்பட்ட கொள்கைகளை விட்டுக் கொடுக்கமுடியாது. கால/நேரம் வாய்க்கும் போது உண்மைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. இப்படிக்கு நிர்வாகம் http://www.mark-group.info/int_km.html http://www.mark-group.info/ www.mark-group.info