3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு
தமிழ் மொழியை - அதன் நெறியை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க் கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை முதல்வர் கலைஞரையே சேரும் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தமிழ றிஞர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள் ளனர் - இன்றும் பாடுபட்டு வருகின்றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்தார். பேராசி ரியரின் பேச்சை முதல்வர் கலைஞர் கைதட்டி ரசித் தார்.
கோவையில் நடை பெற்று வரும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சமயம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் இஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசி ரியர் கே.எ. காதர் மொகி தீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது-
தமிழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர் கள் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத் துவதன் மூலமாக உலக மொழிகள் எல்லாம் சேய் மொழிகள் தமிழ் மொழியே அனைத்துக்கும் தாய் மொழி என்ற சிந் தனை உலகளாவிய அள வில் எடுத்து செல்லப்பட் டுள்ளது.
உலக மொழிகளின் வரலாற்றில் ஒரு மொழிக் கென்று இவ்வளவு பெரிய விழா - அதுவும் செம் மொழித் தமிழுக்கு இப்படி யொரு விழா இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனியும் நடை பெறுவ தற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற் பாடு செய்து நடத்துவதன் மூலமாக, இலங்கைத் தமிழறிஞர் சிவத்தம்பி அய்யா கூறியது போன்று உலகத் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக முதல்வர் கலைஞர் உயர்ந் துள்ளார். அத்தகைய தலைவரின் வழிகாட்டு தலின்படி இந்த மாநாட் டின் ஒரு பகுதியாக சமயம் வளர்த்த தமிழ் என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் ஹஇஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை எனக்கு தந்த மைக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தை பொறுத்த அளவில் இஸ்லாமிய மார்க்கம் கடல் மார்க்க மாகவே வந்துள்ளது, வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வந்த பிறகே இஸ்லாம் பரப்பப்பட்டுள் ளது. ஆனால், தென்னகத் தைப் பொறுத்த அளவில் கடல் மார்க்க மாக நீர் வழியாக இஸ்லாம் அறி முகமானது.
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு பல ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத் தோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அரபிகள் சிலர் தமிழகத்திலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து இஸ்லாமிய பிரச் சாரம் நடைபெற்ற காலத்தி லேயே அரபிய வணிகர்கள் மூலமாக தமிழக கடற் கரையோரங்களில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாம் மார்க் கத்தை ஏற்று முஸ்லிமாக மாறி வாழத் துவங்கி விட் டனர். அவர்கள் அந்த நெறியை தமிழகத்தின் பிற சமூக மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் தமிழை கற்று கொண்டனர். இதன் காரணமாக ஹஅரபுத் தமிழ்| என்ற புதிய மொழி தமிழ கத்திற்கு அறிமுகமானது.
அரபுத் தமிழ் இலக்கியங்கள்
ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட அரபுத் தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் படைத்து அளித்துள்ளனர்.
டாக்டர் அஜ்மல்கான் பேராசிரியர் சாயபு மரைக் காயர், அறிஞர் எம்.ஆர். எம். அப்துல் ரகீம் போன்ற பெருமக்களின் ஆய்வின் மூலமாக மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை தமிழ் முஸ்லிம் புலவர்கள் இயற்றி தந்துள்ளனர்.
புதிய வகை இலக்கியங்கள்
கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, நொண்டி நாடகம் போன்ற புதிய வகை இலக்கியங்கள் பல வற்றையும் தமிழுக்கு முஸ்லிம் பெருமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் வளர்த்த இஸ்லாமும் இஸ்லாம் வளர்த்த தமிழும்
முஸ்லிம் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அதேபோல் தமிழால் இஸ்லாம் வளர்ந்தது என்ற கோணத்தை ஆராயும் போது தமிழ்நெறியே இஸ் லாமிய நெறியாக பரிண மித்துள்ளது.
இஸ்லாமிய நெறி ஏகத் துவ அருவ வழிபாட்டை அடிப்படையாக கொண் டது. இதில் எத்தகைய விட்டு கொடுத்தலையும் ஏற்று கொள்ளாத நெறி யாக நிலை கொண்டுள் ளது.
தமிழக சமய நெறிகளை நாம் ஆராய்கின்ற போது அருவ வழிபாடு - உருவ அருவ வழிபாடு - உருவ வழிபாடு என அமைந்தி ருப்பதை காண முடிகிறது.
இதில் அருவ வழிப் பாட்டை அடிப்படை யாக கொண்டே இஸ்லாம் அமைந்துள்ளது.
இறைவனை உருவமற்ற வனாக வழிபடுவதும், இலைமறை காயாக மறைந் திருக்கும். உண்மையை அருவம் என்றால் மறைந் திருப்பது - மறைந்திருக்கும் உண்மைகளை உளமாற ஏற்று பணிந்து உலகுக்கு அறிவிப்பதும், அதை நிலை நாட்டியதும் இஸ்லாமிய நெறியாகும்.
தமிழக இறை சிந்தனை
தொல்காப்பியம் காலம் முதல் இறை குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்து வருகிறது. இறை வன் தானே சுயமாக உரு வாகி பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் தோன்றி தானே அருவமாகி மறைந்தி ருக்கும் தத்துவம் கடந்த பொருளுக்கு - ஹதந்தள| என்ற வார்த்தைக்கு நச்சி னார்க்கினியர் பொருள்.
இந்த இறைவனை ஆயிரக்கணக்கான பெயர் களில் போற்றுகின்ற பழக்க மும் தமிழகத்தில் இருக் கிறது.
திருவாசகத்துக்கு இஸ்லாமே விளக்கம்
ஒரு நாமம் - ஓருருவம் ஒன்றிலார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தன் நிலை போன்றோரே - என்ற திருவாசகம் பாடுகின்ற பாடலின் உண்மையான பொருள் - இஸ்லாமிய நெறியை கொண்டே விளக்கமளிக்க முடியும். அப்படிப்பட்ட இஸ்லாமிய கோட் பாட்டை தமிழில் - தமிழ் இலக்கியங்களில் கொண்டு சென்று இலக்கியம் படைத்த பெருமை முஸ்லிம் புலவர்களுக்கு உண்டு.
அன்று முதல் இன்று வரை
இயல் தமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சமயத் தமிழ் இன்னும் சொல்லப் போனால் அறிவியல் தமிழ். இன் றுள்ள கணினித் தமிழ் என அனைத்து துறைகளிலும் அன்று முதல் இன்று வரை தமிழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் சேவையாற்றி கொண்டுள்ளனர்.
அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும் போது கவிக்கோ அப்துர் ரஹ்மானை எடுத்துக் கொண் டால் தமிழில் அவர் துறை சார்ந்த கவிஞர்களுக்கு புதுக்கவிதை| என்ற வடிவத்தை உருவாக்கி அதற்கு இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
3 ஆயிரம் இலக்கியங்கள்
அதுபோன்றே கிஸ்ஸா, முனாஜத், நொண்தி நாடகம் போன்ற புதுப் புது இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத் திய பெருமை முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கு உண்டு. இப்படி இஸ்லா மிய நெறியை ஏற்றுக் கொண்ட மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் தமிழின் மூலமாக இஸ்லாமிய நெறியை வளர்த்துள்ளனர்.
தமிழ் நெறியே காரணம்
இத்தகைய சிறப்புக் குரிய தமிழ் மொழி இன்று உலகளாவிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதற்கு காரணம் தமிழ் மொழி யில் உள்ள நெறியே ஆகும்.
தமிழ் நெறியே காரணம் ஆகும்
இந்த மாநாட்டை ஏற் பாடு செய்துள்ள முதல்வர் கலைஞர் அவர்கள், மாநாட்டு மைய நோக்கு பாடலாக எழுதியுள்ள வரிகள் தமிழ் நெறியை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வரிகளாக அமைந்திருக்கின்றன.
அந்த பாடல் வரிகள் தான் தமிழ் நெறியின் உயிர் துடிப்பு. உலகெல்லாம் எடுத்து செல்லும் வாய்ப்பு இந்த மாநாட்டின் வாயி லாக அமைந்திருக்கிறது.
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@
யாதும் ஊரே@ யாவரும் கேளிர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
என்ற அடிப்படையான தத்துவங்கள். அதோடு,
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்ற தத்துவம்,
நல்லார் ஒருவர் உளரேல்,
உண்டலமே இவ்வுலகம் - இதுபோன்ற தத்துவங் களை வாழ்வியல் கோட் பாடுகளை கொண்டது தான் தமிழ் நெறி. அந்த நெறிதான் செந்நெறி.
செந்நெறியில் ஒழுக செய்தல் மன்னன் கடமை
எந் நெறியாயினும் இறைவன் தன் மக்களை செந் நெறியின் மேல் இருந்து செய்ய வேண்டும் - என்ற பழமொழி இலக்கி யத்தின் பாடல். அது வலியுறுத்துகின்ற முறை யில் செந்நெறியாம் தமிழ் நெறியில் மக்களை இருக்க செய்யும் வகையில் நாட் டின் ஆட்சியாளராகிய முதல்வர் கலைஞர் அவர்கள் நாட்டு மக்களை தமிழ் நெறியின்பால் இருக்க செய்யும் வகையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்.
மதம் கடந்த - சாதி கடந்த உலகளாவிய தமிழ் நெறியை - செந்நெறியை - பொன்னெறியை - நன் னெறியை - இந்த ஒரே நெறியை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இந்த மாநாட்டினை நடத் தியமைக்காக அவருக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம்.
தலைவர் வாழ்க@ காலமெல்லாம் வாழ்க@ நாளெல்லாம் வாழ்க@ அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வளரும் நாளாகும் என்பதை தெரி விப்பதோடு,
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு! முரண்பாடுகள் உண்டு! அதேபோல் உடன்பாடு களும் உண்டு, வேறுபாடு களை மறந்து விட்டு முரண் பாடுகளை ஒதுக்கி விட்டு, உடன்பாடுகளையே நெறிப்படுத்துகின்ற மொழி யாக தமிழ் மொழி இருக் கிறது. தமிழ் நெறி இருக் கிறது.
அந்த நெறியை உலகளா விய அளவில் கொண்டு செல்வதன் மூலம் நன்மை கள் விளையும் என்பதை உணர்ந்து கலைஞர் காட்டு கின்ற வழியில் செல்வோம்! வெல்வோம்! என்று கூறி முடிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
முதல்வர் கைதட்டி ரசித்தார்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதும், பேசி முடித்த போதும் பார்வை யாளர்கள் கை தட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் கலைஞரும் மிகவும் ரசித்து கைதட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், மில்லத் இஸ்மாயில், இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் ஹமீது, கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்ற னர்.