திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல், பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் மேலச் செவல்; பத்தமடை பகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த, கடந்த இரு வாரங்களாக திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மாநில மாணவர் பேரவை அமைப்பாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர்கள் கவிஞர் வீரை அப்துர் ரஹ்மான், கானகத்து மீரான். வீரை இமாம் சேக்மீரான்மௌலானா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதா,; மில்லத் காஜா முகைதீன், அம்பை வட்டார முஸ்லிம் லீக் செயலாளர் அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் சிந்தா புகாரி உள்ளிட்ட குழுவினர் பள்ளி வாசல்கள் தோரும் சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலச் செவல் ஊர் ஷாபி ஜூம் ஆ பள்ளி வாசலில் 17.4.10 ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் நடந்த கூட்டத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் பேசியதாவது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் தாயுள்ளம் கொண்டது.ஆகவே தான் தாய்ச்சபை என்றழைக்கப்படுகிறது. இங்கு உறுப்பினர்களாக இருப்பவர்கள்.தம் குடும்பத்தை முன்னேற்றி, சமூகத்தை உயர்த்திட, பாரம்பரியமான வழக்கப்படி உள்ள ஜமாஅத்துக்களுடைய பெருமையையும் நிலை நாட்ட உழைத்துக் கொணடிருக்கும் தன்னலமற்ற திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவார்கள்.
ஜமாஅத்துக்கள் சிறப்பாகச் செயல்படும்;போதுதான் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்ப்புக்களை மிக இயல்பாக வழங்கி, யாவரும் இணக்கத்துடன் வாழ வழிவகைகளை பல நூறு வருடங்களாக தொன்று தொட்டு செய்து வருபவை ஜமாத்துக்கள் தான். மற்ற இயக்கங்களைவிட முஸ்லிம் லீக்,இயக்கம், இந்த வலிமையான ஜமாஅத் அமைப்பு பட்டுப் பொய்விடக்கூடாது என்பதிலே மிகக்கவனமாக இருந்து வருகிறது.
முஹல்லா ஜமாஅத்துக்களின் பெருமையை பாதுகாக்கிற அளவில் ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடத்தும் தகுதியும், அம்மாநாட்டின் வாயிலாக உலமா நல வாரியம் கலைஞர் அரசில் அமைத்துத் தந்த பெருமையும் முஸ்லிம் லீகிற்கு உண்டு என்பதை நாம் யாரும் அறிவோம்.
பள்ளி வாசல்களின் அடக்கவிடங்களை, மைய வாடிகளை ஊருக்கு தூரமாக அப்போதிருந்த அரசுகள் தள்ளிவிட முயன்ற போது, பள்ளி வாசலும் கபருஸ்தானும் அருகருகே தான் அமைய வேண்டும். அதன் மூலமாக எந்தக்கேடும் வந்து விடாது என்று, மைய வாடிகளை காயிதே மில்லத் அவர்கள் காலம் தொட்டு பாது காத்தத் தந்தது முஸ்லிம் லீக் இயக்கம் தான்.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் மகத்தான காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது.1944 ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை மூலமாக பல்லாயிரம் பேர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றிடும் வகையில் அரும் பணியாற்றும் சபைக்கு பக்க பலமாக இருந்து வருகிறது.
பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி உருவாகிட அடியெடுத்துக் கொடுத்ததோடு, ஆரம்பம் செய்யவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதும் முஸ்லிம் லீக் இயக்கம்தான்.
தற்போதும் இரு பெரும் சமுதாய நலக்காரியங்களை கையிலெடுத்துக் கொண்டே இங்கும் வந்துள்ளோம். உங்களுடைய ஊரில் குடும்பப் பொருளாதார நிலையின் காரணமாக, யாராவது ஒரு மாணவர் வேலைக்குச் சென்றுதான் தமது குடும்பத்தைக் காப்பற்ற வேண்டும் என்கிற நிலை இருக்குமானால், அந்த மாணவரை எங்களிடம் தாருங்கள்.
நாங்கள் அத்தைகைய மாணவரை குற்றாலம் சீனா தானா ஹைடெக் டெக்னிகல் டிரைனிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து 5 மாத காலம் எலக்ட்ரீசியன் படிப்பு பற்றிய அடிப்படைகளை புரிய வைக்கிறோம்,அம்மாணவர் தமது டிரைனிங் பீரியடு முடிந்த பின்னர் துபாய் போன்ற நாடுகளிலோ, அல்லது உள் நாட்டிலோ வேலை வாய்ப்பு பெற்றிட தயார் படுத்துகிறோம்.எங்கள் மூலமாக எண்ணற்ற இளைஞர்கள் இன்று துபாய் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புப் பலன் பெற்றுள்ளார்கள்.இன்று அவர்களது குடும்பங்களே முஸ்லிம் லீகை வாழ்த்தி நிற்கிறது.
குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேறியவராகவோ தவறியவராகவோ அல்லது பிளஸ் 2 படித்தவராகவோ இருந்தால் பரவாயில்லை. இதன் மூலமாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிற மகத்தான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மேல்படிப்பு படிக்க ஆசைப்படுபவராக இருந்தால் தயக்கமில்லாமல் சொல்லுங்கள்;. அதற்கும் நாங்கள் எங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்ததாக முஸ்லிம் லீக் சார்பாக நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் துவக்கம் செய்ய இருக்கிறோம்.அதன் மூலமாக நமது சமுதாயத்தில் எழ்மை துரத்தப்படும் என்று நம்புகிறோம்;. இங்குள்ள ஊர் உறவின் முறை ஜமாத்தார்கள் ஒரு நிதியை சேகரம் செய்துவைத்தால் அதற்குப் பக்க பலமாக நாங்களும் உங்களுடன் வந்து வட்டியில்லாக்கடன், மருந்து மாத்திரை வாங்க வழியில்லாமல் அல்லாடுபவர்களுக்காக மாதம் தோரும் நிதியதவி, ஏழைக் குமருகளுக்கு திருமண நிதியதவி போன்ற அல்லாஹ்விற்குப் பிடித்தமான பணிகளை செய்து தர இருக்கிறோம்
.இதற்கெல்லாம் நமது தாய்ச்சபையின் சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற கீழக்கரை அல்ஹாஜ் சீனா தானா செய்யது ஆப்துல் காதர் அவர்களுடைய ஒத்துழைப்ப மிக நன்றிக்குரியது.ஆகவே இளைஞர்களே அணிவகுத்து வாருங்கள். மாணவச் செல்வங்களே இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய ஊருக்கும் எங்களுக்கும் இணைப்பாக, கிராம அளவிலோ அல்லது நகர அளவிலோ முஸ்லிம் லீகின் அடிப்படை அமைப்பாகிய பிரைமரி முஸ்லிம் லீகை ஏற்படுத்துங்கள். அத்தகைய பிரைமரி முஸ்லிம் லீக், சிபாரிசு செய்யும் பிள்ளைகளுக்கு உதவி வழங்கும் போது எங்களுக்கு எவ்விதமான குழப்பங்களும் சிரமமும் வராது. ஜமாத் நிர்வாகிகள், நகர ,கிராம அளவிலான முஸ்லிம் லீக் நிர்வாகிகள் இதற்கான பணிகளில் சிறப்பாகவும் செம்மையாகவும் பணியாற்றிடக் கேட்டுக் கொள்கிறேன்.
கூட்ட முடிவில் த.மு.மு.க. மேலச் செவல் முன்னாள் துணைத் தலைவர் எஸ் நெய்னா முஹம்மது தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகில் தம்மை இணைத்துக் கொண்டார்.