Saturday, December 26, 2009

திருநெல்வேலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருநெல்வேலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு


தமிழ் நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் மாவட்ட முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்அப்போது அவர் கூறியதாவது


வருகிற 19 ஆம் தேதி நடைபெறஇருக்கிற வந்தவாசி மற்றும் திருச் செந்தார் தொகுதிகளில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி வேட்பாளர்களான தம்பிகள் கமலக்கண்ணன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வாக்குகள் கேட்டுவிட்டு இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர் முன் நிற்கிறேன். நாங்கள் பிரச்சாரம் செய்த வகையில் பார்க்கும் போது தி;.மு.கழக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவர்கள் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமல்லாமல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சட்டமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித்,கலீலுர் ரஹ்மான் போன்றவர்களும் முஸ்லிம் லீக் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட இயக்க முன்னோடிகளும் மாவட்ட நிர்வாகிகளும் இதற்காக அரும் பணியாற்றி வருகிறார்கள்.

வாக்காளர்கள் தி;மு;கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியை ஏற்றுக் கொண்டு, கலைஞரின் சாதனைகளைப் புரிந்து கொண்டு தி.மு.க.விற்கே வாக்களிப்பார்கள்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தேர்தலில் நாட்டுமக்கள், சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் கலைஞரை பல்வேறு காரணங்களுக்காக நன்றியுடன் ஆதரிப்பார்கள். அதற்குக் காரணம் தமிழ் நாட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்படுகிற 3.5 சதவீத இடஒதுக்கீடுஅதற்கடுத்து நமது நீண்டநாள் கோரிக்கையான உலமாக்கள் நல வாரியம் அமைத்துக் கொடுத்தது சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது போன்ற பல்வேறு காரியங்களில் அன்றாடம் தம்மை ஈடுபடுத்தி அர்ப்பணிப்பு உயர்வுடன் செயல் பட்டு வருவதாகும்.

தமிழகத்தில் சலுகைகள் வழங்குவது போல் அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுகள் மற்றும் சலுகைகள் கொடுக்கப்படவேண்டும் எனக் குரல் கொடுத்துவருபவர் கலைஞர் தான்.அதுவும் அவர்களது தீர்மான வடிவிலே. பொதுக்குழு செயற்குழு தீர்மான வடிவிலே.

சிறுபான்மை இன மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது மிக அவசியம் என்பதை முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.அதை எங்களைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆதரவு சக்தியாகக் கருதுகிறோம். நடைபெற்று வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலே பாரதப் பிரதமர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடும் நீதியரசர் ரங்க நாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் அவையில் வைக்கப்படும் நிலைமை வருவதற்கு முன் வந்தவராக அறிவிப்புச் செய்திருக்கிறார். எங்களுக்காக சிபாரிசு செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான.;

கல்வி வேலைவாய்ப்பு எங்களுக்கு கிடைக்க .பாராளுமன்றத்திலே தி.மு.க உறுப்பினர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். தேர்தல் அறிக்கையிலே சொன்னார்கள். இதற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம். நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ரங்க நாத் மஸ்ரா கமிஷன் சிபாரிசுகள் கூடிய விரைவில் சட்டமாக்கப்படும் நிலைமை வரவேண்டுமென விரும்புகிறோம். பிரதமரே அதை அறிவிக்கிறார். அதை செய்யத் தூண்டியது கலைஞர் தான்.

இரண்டாவதாக தமிழ்நாட்டிலுள்ள மற்ற சமுக மக்களும் கலைஞரை ஏற்று ஆதரிக்கும் தன்மையிலே வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளார்கள்.;. இதை உயர்வ நவிற்சியாகவோ புகழுக்காகவோ நான் சொல்லவில்லை. தமிழக வரலாற்றில் பெரியார் அண்ணா காமராஜர் வரிசையில் இன்று இருக்கிற ஒரே தலைவர் கலைஞர்; என்று சொல்வது அரசியல் பார்வை. சமூக நல்லிணக்கத்தை பேணக்கூடிய அளவில் கலைஞரைப் அறிவுப்ப+ர்வமாக பார்க்கக்கூடியவர்கள்

தொல்;காப்பியர் திருமூலர் வள்ளலார் திருவள்ளுவர் போன்றவர்கள் வரிசையில் வைத்து வாழ்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கதைகள், கவிதைகள் கட்டுரைகள் அரசியல் நடவடிக்கைகள், ஆட்சி, திட்டங்கள் ஆகிய அனைத்தும் அனைத்தும் அவரிடத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளன.

.மூன்றாவதாக தமிழக அரசியல் அரங்கில் அவருக்கு ஈடாக இணையாக, ஒப்பாக, நிகராக, வேறு அரசியல் தலைவர் யாரும் இல்லை. இது தெளிவான உண்மை. ஆக அறிவில் சிறந்த அனுபவத்தில் முதிர்ந்த அரசில் பகுத்தறிவு சிந்தனையாளர் அவர் நீடு வாழ வேண்டு மென மக்கள் யாவரும் அவரை வாழ்த்துகிறார்கள்.

அண்மையில் மத்திய அரசு ஆந்திர மாநிலத்தைப்பிரிக்கும் அளவிற்கு கொள்கை முடிவொன்றை அறிவித்துள்ளது. இது சரியானதா? இப்படிப்பட்ட மிகப் பெரிய அரசியல் முடிவுகள் எட்டப்படும் போது கூட்டணி கட்சித்தலைவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டதா? என்று கூட அறிவிக்கப்படவில்லை. யாரோ உண்ணாவிரதம் இருக்கிறார்கள் அல்லது இருப்பார்கள் என்று மிரட்டினால் மத்திய அரசு அடங்கிப்போவது எந்த விதத்தில் நியாயம்? இப்படி ஆளாளுக்கு இந்தியாவைக்கூறு போட்டால் நாடு என்னாகும்?

உண்ணாவிரதம் காந்திய பாதை தான்.அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்தவர்கள் காரணத்தால் இருநூற்றுக்கும் அதிகமான பொதுச் சொத்துக்கள் வண்டி வாகனங்கள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டதே, இதுவா காந்திய வழி?

இந்த நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் இது போன்ற மிரட்டல் அரசியல் நாடகங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தப்படக்கூடாது என்று தடுக்கப்படவேண்டும். இல்லையென்றால் நாட்டின் ஸ்திரத்தன்மையே பாதிக்கும் அபாயம் வந்து விடும்.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது சம்பந்தமாக கூட்டணித் தலைவர்களிடம் இதற்கான ஆலோசனை பெறப்பட்டதாகவோ அல்லது குறிப்பாக தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடம் யோசனை கோரப்பட்டதாவோ தெரிய வில்லை.

இதுவெல்லாம் சாதாரணப் பிரச்னையில்லையே.இப்படி ஆளாளுக்கு தனி மாநிலம் கேட்டால் நாடு என்னாவது? வடமாநிலங்களில் கூர்க்காலாந்து கேட்கிறான்,விதர்பா கேட்கிறான்.இப்படி தமிழ் நாட்டை யாரும் கேட்க அனுமதிக்க முடியாது மொழி,நெறி,உணர்வு மனித நேசப்பண்பில் ஒன்றாக இருப்பவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தைப்பிரிக்க வேண்டுமென யாராவது கூறினால் அது அரசியல் கூத்தாகத் தான் இருக்க முடியும். அது தமிழகத்தின் தனித்தன்மையை சிதைப்பதற்கு சமமானது. தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் இதில் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் நாங்கள் கேட்கவில்லை என்று கூறி விட்டது நிம்மதி.தான். அவர்களுக்கு அதைவிட முக்கியபணிகள் உள்ளதாகச் சொல்லி இருப்பது சரி தான்.

மத்திய அரசு ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரீபார்ம்ஸ் கமிஷன் உருவாக்க வேண்டும்.பிரச்னைக்குரிய மாநிலங்களில் புதிய மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகத்தில் திறமை காட்டுவதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இம்மாதம் 25,26,27 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலுள்ள 300 இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.முஸ்லிம் லீக் வரலாறு,இந்திய அரசியல் சட்டம்,மத நல்லிணக்கம்,தீவிர வாத ஒழிப்பு குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம்.

கர்நாடக மாநிலம் பெங்கள+ரில் 2010 ஜனவரி மாதம் 15,16 தேதிகளில் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூரில் கலந்தர் மஸ்தான் தெரு அட்டைக்குளம் தெரு பெரிய தெரு புதுத் தெரு பரசு ராமபுரம் தெரு போன்ற தெருக்களில் ஐநூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளுக்கு கணக்கற்ற முறையில் வீட்டுவரி விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சித்தரப்பில் கேட்டால் சரியான பதில் தருவது இல்லை.இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.

திருமணப்பதிவ சட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அவரவர் மத ஆச்சாரப்படி நடக்கும் திருமணங்களை பதிவாளர்கள் எவ்விதமான திருத்தமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திருநெல்வேலி மாவட்டத் தலைவர் துராப்ஷா, மாநில அமைப்புச் செலாளர் அப்துல் மஜீத் மாவட்டச் செயலாளாரும் மாநில மாணவர் பேரவை அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், மாவட்டச் செயலாளர் செய்யது முஹம்மது,ஷிபா குரூப் நிர்வாக இயக்குநர் டாக்டர் முஹம்மது ஷாபி,தென்காசி முஹிப்பில்லாஷா,பேட்டை திவான் முகைதீன், கடையநல்லூர் ஹபீபுல்லா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ்.முகைதீன் அப்துல் காதர் மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மஅலி, பேட்டை பீர் முகைதீன் மேலப்பாளையம் பீடித் தொழிலாளர் அணித் தலைவர் மில்லத் காஜா முகைதீன்,புளியங்குடி காதர் முகைதீன் ,எம்.ஜி.காஜா முகைதீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.