Tuesday, November 3, 2009

சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!

சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!



இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற பேரமைப்பான காயிதே மில்லத் பேரவை சர்வதேச அளவில் சிறப்பான தன் பணியை துவக்கி இருக்கிறது.

தகுதி மிக்க இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் பொறுப்பேற்ற பின் தன் சீரிய முயற்ச்சியால் பல நாடுகளுக்கு காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.

எஞ்சிய சில நாடுகளில் இந்த இயக்கப்பணி விரிவாகவும்.வேகமாகவும் நடப்பது அறிந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் .இன்ஷா-அல்லாஹ் விரைவில் இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறது அரசியல் ரீதியாக அனைவரையும் தாய்ச்சபை முஸ்லிம் லீகால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்பதற்க்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இத்தகைய அரும் பணிக்காகத் தான் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தன் வாழ்வின் லட்சியமாகக் கருதி செயலாற்றி வருகிறார்கள்.இந்தப் பணி தொய்வின்றி நடைபெற்று வெற்றி பெற அனைவரின் ஒத்துழப்பும் சிறப்பாக இருக்குமென்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.