வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் துபாய் வருகை
http://quaidemillathforumuae.blogspot.com/
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு துபாய் வருகிறார் என அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்.
எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் எமிரேட்ஸ் விமானத்தில் டெல்லியில் இருந்து இரவு 11.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 3ல் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க அமீரக காயிதெமில்லத் பேரவை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்வரவேற்பு நிகழ்வில் அமீரக பெருமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 050 5196433/050 2533712