Tuesday, September 23, 2008

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி
காதர்மொய்தீன் எம்.பி. வழங்கினார்


மேலப்பாளையம், செப்.24-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று காதர் மொய்தீன் எம்.பி. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.

மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "மேலப்பாளையம் பைத்துல் மால்" என்ற இஸ்லாமிய பொது நிதியத்தின் சார்பில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ செலவு, திருமண நிதி உதவி, மாணவ-மாணவிகளுக்கு படிப்புக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இலவச "பித்ரா" அரிசி

அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக "பித்ரா" அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கொட்டிகுளம் பஜாரில் பைத்துல்மால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக பைத்துல்மால் உறுப்பினர்களது பிரதிநிதிகள் உள்பட 500 பேருக்கு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு இருந்தது.

அரிசி வழங்கும் நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எம்.அப்துல் கபூர் வரவேற்று பேசினார். இந்திய ïனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கலந்து கொண்டு 21/2 கிலோ அரிசி பைகளை முதற்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதீன், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.அப்துல் ரகுமான், என்.எம்.எச்.அனீபா, ஓய்வு பெற்ற அரசு நூலகர் ஓ.எம்.சாகுல் அமீது, தொண்டர் அணித்தலைவர் பீமா இல்லியாஸ், பிரசாரக்குழு பொறுப்பாளர்கள் மில்லத் காஜா, எம்.ஜி.காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித்தலைமை ஆசிரியரும், மேலப்பாளையம் பைத்துல்மால் பொருளாளருமான பி.எம்.காஜா நஜிமுத்தீன் நன்றி கூறினார்.