Showing posts with label தலைவர். Show all posts
Showing posts with label தலைவர். Show all posts

Sunday, November 14, 2010

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை



அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.

இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.

"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.

சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.

இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.

தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.

வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.

ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்

மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.

சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�

வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..

ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..

சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�

மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�

சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�

Thursday, July 15, 2010

அனைத்து மாவட்ட தலைவர் - செயலாளர்கள் கவனத்திற்கு

அனைத்து மாவட்ட தலைவர் - செயலாளர்கள் கவனத்திற்கு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்...)
இந்திய முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டியதன் அவசியம் இன்று என்றும் இல்லாத அளவிற்கு உணரப்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அணி அணியாய் இணைந்து வருகின்றனர். இதற்கு நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு அறிக்கையும், நாம் மேற் கொண்ட தெளிவான தேர்தல் முடிவுகளும், மற்ற முஸ்லிம் அமைப்புகளின் சந்தர்ப்பவாத அரசியலுமே முக்கிய காரணங்களாகும்.
இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், அமைப்பு ரீதியான விதி முறைகளையும் - செயல்பாடுகளையும் முறைப்படுத்த வேண்டும். தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவர்களோடு இளைஞர்களையும், பல்வேறு இயக்கங்களிலிருந்து வருபவர்களுக்கும் பதவிகளை பகிர்ந்தளித்திட வேண்டும் என்பது நமது இன்றைய தேவை. இதற்காக பெங்களுரு தேசிய மாநாடு திட்டங்களும் திருச்சி மாநில பொதுக்குழு தீர்மானங்களும் நமக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இருக்கின்றன.
இயக்க பணிகளை தொய்வின்றி செயலாற்றிட சேவையுடன் கூடிய ஐந்து சேவை திட்டங்களை அறிவித்து, அதன்படி நிறுவன நாள் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திலும், கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்( ரஹ்..) பிறந்த நாள் கல்வி விழிப்புணர்வு மாநாட்டை கரூர் மாவட்டம் பள்ளபட்டியிலும் எழுச்சியோடு நடத்தி இருக்கின்றோம். பயனுள்ள சேவைகளையும் , அறிவுப்ப+ர்வமான பல தீர்மானங்களையும் நிறைவேற்றி உள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
இயக்கத்தின் விதிமுறை - கட்டமைப்பை நிலை நிறுத்திட இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின், தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் சாகிப் அனைத்து மாநில நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டும் தேசிய தலைவர் மாண்புமிகு இ. அஹமது அவர்களுடனும் தொடர்ந்து விவாதித்தும் நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றார்கள்.
அனைத்து ஊர்களிலும் முறையாக உறுப்பினர்களை சேர்த்து கிளை தேர்தல் நடத்தி, மாநில தலைமைக்கு செலுத்த வேண்டிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் என அறிவித்திருந்தோம் . இதன் அடிப்படையில் இதுவரை காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை புறநகர், கரூர், விருது நகர், திருப்ப+ர் மாநகர், பெரம்பலூர், தேனீ ஆகிய ஒன்பது மாவட்ட தேர்தல் முடிவடைந்திருக்கிறது.
எதிர் வரும் 18-07-2010 அன்று காலை நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட தேர்தல் மயிலாடுதுறையிலும், அன்று மாலை தஞ்சை மாவட்ட தேர்தல் அதிராம்பட்டினத்திலும், 25-07-2010 காலை திருவாரூர், மாலை கடலூர் மாவட்ட தேர்தல் சிதம்பரத்திலும், 29-07-2010 மாலை கன்னியாகுமரி, 30-07-2010 மாலை மதுரை மாநகர் மாவட்டம், 31-07-2010 காலை இராமநாதபுரம், மாலை சிவகங்கை மாவட்ட தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
திருப்ப+ர் புறநகர், ஈரோடு மாநகர், திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகள் பட்டியல் மற்றும் மாநில ஈவுத் தொகை வழங்கப்பட்டிருக்கின்றன. இம்மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதையே குறிக்கோளாக கொண்டு தியாக மனப்பான்மையுடன் சேவையாற்றிவரும் தாய்ச்சபையின் செயல் வீரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி - புதிய நிர்வாகிகளுக்கு தலைமை நிலையத்தின் சார்பில் வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் புனித ரமலானை எதிர் நோக்க இருக்கின்றோம். மாவட்ட தேர்தல்களை விரைவாக முடித்து மாநில தேர்தலையும் நடத்த வேண்டும். அக்டோபர் 4ம் நாள் சிராஜுல் மில்லத் பிறந்த நாள் விழாவையும், அதன் பின் மாநில மாநாட்டையும் நடத்த வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலை வலிமையுடன் சந்தித்து வெற்றி பெற்றிட பணிகளை விரைவு படுத்திட வேண்டும்.
இதுவரை உறுப்பினர் படிவம், பிரைமரி நிர்வாகிகள் பட்டியல், அதற்குறிய மாநில
வரலாற்று பேரியக்கத்திற்கு வலிமை சேர்த்திட ஒத்துழைப்பு தாரீர்!
வெற்றி பல கண்டு சாதித்திடுவோம் வாரீர் !!
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

Saturday, June 26, 2010

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

"தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லீம் லீக் தான்"

"அரசியல் இலாபத்திற்காக தி.மு.க-வுடன் தோழமையாக இல்லை, தி.மு.க-வுடன் இருப்பது கொள்கை ரீதியிலான உறவு"
மேலும் பல பதில்களுடன்...



இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்கள் MYPNO இணையத்தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: தற்போது.... www.mypno.com

Saturday, May 29, 2010

மாவட்ட தலைவர் - செயலாளர்களுக்கு வேண்டுகோள்

மாவட்ட தலைவர் - செயலாளர்களுக்கு வேண்டுகோள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட் டம் 25-05-2010 செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்கு மாநில தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்
1) கல்வி விழிப்புணர்வு மாநாடு
09-06-2010 அன்று கரூர் மாவட்டம். பள்ளபட்டியில் நடைபெற இருக்கும் காயிதெ மில்லத் 115வது பிறந்த நாள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்கு அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வா கிகள் முழு ஒத்துழைப்பு நல்கி, திரளாக பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டிக் கொள்கின்றது.
2) ஜூலை 31-க்குள் மாநில மாவட்ட தேர்தல்கள்
பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானித்தபடி, வரும் ஜுலை 31க்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழகமெங்குமுள்ள பிரைமரி தேர்தல் மற்றும் மாவட்டத் தேர்தல்களை விரைவாக நடத்திட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஒத்துழைத்து இயக்க அமைப்புப்பணிகளை விரைந்து நிறைவு செய்யு மாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) மக்கள் ஜனத்தொகை கணக்கு
இந்திய மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி 2010 ஜுன் மாதத்தில் துவங்க இருக்கிறது. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி முடிய வீடு வீடாக இப் பணி நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெய ரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற் கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும்.
இந்த அட்டை பெறுவதற்கு மேற்கண்ட ரசீது தேவைப்படும்.
முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.
உயிர் நாடி பிரச்சினையாக இருக்கக்கூடிய இப்பணியில் மஹல்லா ஜமாஅத்துகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என இக் கூட்டம் மாவட்ட, பிரைமரி அமைப்புகளை கேட்டுக் கொள்கிறது.
4) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
2010 ஜுன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி முடிய கோவையில் புதிய வரலாறு படைக்க இருக் கும் உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மன நிறைவான வாழ்த்துக்களையும் முத் தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தமிழக முஸ்லிம்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது. இம் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமுதாய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று எல்லா வகை யான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5) இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டை 2010 அக்டோபர் மாதத்தில் சென்னையில் நடத்தி இம்மாநாட்டிற்கு முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர் களை சிறப்பு விருந்தினராக அழைப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இம்மாநாட்டில் தமிழ கத்தில் நல்லிணக்கம் தழைத்தோங்கவும், அனைத்து சமுதாய மக்களும் சகோதர வாஞ்சை யோடு வாழ்த்திடவும், எல்லோரும் எல்லாமும் பெற்றிட பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில் | நல்லிணக்க நாயகர்| விருது வழங்கி சிறப்பிப்பதென்றும் இக்கூட்டம் தீர்மா னிக்கின்றது.
மாநில நிர்வாகிகள் கூட்டத் தீர்மானவிவரம் தங்களின் மேலான தகவலுக்காகவும், உரிய நடவடிக்கைகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்

Thursday, April 1, 2010

துபை விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபை விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபாய், மார்ச் 29-

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாயகம் திரும்பும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வழியனுப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் அழைப் பினை ஏற்று 23.03.2010 செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற் கொண்ட பேராசிரியர் 28.03.2010 அன்று தாயகம் திரும்பினார்.

விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊட கத்துறை செயலாளர் தஞ்சை பாட்சா கனி, செயலாளர்கள் ஹமீது யாசின், ரியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் தலை வரை வழியனுப்பி வைத் தனர். அமீரக காயிதெ மில்லத் பேரவையின் சிறப் பான ஏற்பாட்டிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பேராசிரியர்.

தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை

அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசலில் தலைவர் பேராசிரியர் ஜும்ஆ தொழுகை

அபுதாபி, மார்ச் 29-

அபுதாபியில் மறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் பெயரால் ஏற்படுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரும் பள்ளி வாசல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷேக் ஸையித் பள்ளிவாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் 26.03.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை நிறைவேற்றினார்.

அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, துணைத்தலைவர் களமருதூர் ஷம்சுதீன் ஹாஜியார், பொதுச்செயலாளர் காயல்பட்டணம் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமையிலான குழுவினர் பேராசிரியரையும், அவருடன் சென்ற அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத்தலி, பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்ட குழுவினரையும் வரவேற்றனர்

அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு

அபுதாபி இந்திய இஸ்லாமிய மையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு


அபுதாபி, மார்ச் 29-

அபுதாபி இந்திய இஸ்லாமிக் செண்டரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர் களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 26.03.2010 அன்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்திய இஸ்லா மிக் செண்டரின் தலைவர் பாவா தலைமை தாங்கி னார். அவர் தனது தலைமையுரையில், அபு தாபி இந்திய இஸ்லாமிக் செண்டரின் புதிய கட்டி டம் கட்டி விரைவில் திறப்பு விழா காணும் தருவாயில் உள்ளது. இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தந்த சமுதாயத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொள் வதாகத் தெரிவித்தார்.

அபுதாபி கேரள முஸ்லிம் கலாச்சார மையத் தலைவர் அப்துல் கரீம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஏற்புரை நிகழ்த்திய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் நிர்வாகி களைப் பாராட் டினார். அபுதாபி வரும் நேர மெல்லாம் இஸ்லாமிய மையத்திற்கு வருகை புரிவதை நினைவு கூர்ந்தார். இஸ்லாத்தின் போதனை களுக்கேற்ப பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அமைப்பினரைப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அபு தாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, பொதுச்செய லாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது மற்றும் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல் : முஸ்லிம் நிய+ஸ் ஏஜென்ஸி (எம்.என்.ஏ)

துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாயகம் திரும்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்பிற்கு 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் அழைப்பினை ஏற்று 23.03.2010 செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேராசிரியர் 28.03.2010 அன்று தாயகம் திரும்பினார்.
விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் தஞ்சை பாட்சா கனி, செயலாளர்கள் ஹமீது யாசின், ரியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் சிறப்பான ஏற்பாட்டிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பேராசிரியர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Tuesday, March 23, 2010

~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து

~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து

பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.

- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு

Thursday, March 18, 2010

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.

Tuesday, February 23, 2010

தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்

தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்

பிப்.21 - கள்ளிக்கோட்டை

- முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய மாநாடு

பிப்.22 - நீலகிரி மாவட்டம் - கூடலூர்

காலை 11.மணி தேவாலா

பகல் 12.30 - அத்திக்குன்னு, 2.00 மணி - பந்தலூர் மாலை 4.00 மணி சேரம்பாடி, 5 மணி - எருமாடு, 7.00 மணி பாட்டவயல், 8.00 மணி - பிதர்க்காடு

பிப்.23 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

மாலை 4.00 மணி பாடந்துறை,

5.00 மணி - நிலாக்கோட்டை,

7.00 மணி - தேவர்சோலை

பிப்.24 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

மாலை 4.00 மணி - கூடலூர் காந்தி திடலில்

முஸ்லிம் லீக் கூட்டம்

பிப்.25 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

பிப்.26 - சென்னை

பிப்.27, 28

மார்ச் 1, 2 - இலங்கை - மீலாது விழாக்கள்

மார்ச் 3, 4, 5 - சென்னை

மார்ச் 6 - இராமநாதபுரம் - எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் இல்லத் திருமண வரவேற்பு

மார்ச் 7 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்

பி.ஏ. சிக்கந்தர் பாட்சா இல்லத் திருமண நிகழ்ச்சி

மார்ச் 8, 9 - சென்னை

மார்ச் 10 - மேலப்பாளையம்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

62-வது நிறுவன தின மாநாடு

தலைவர் பேராசிரியருடன் தேசியச் செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் கேரள சுற்றுப் பயணத்திலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில விவசாய அணி அமைப்பாளர் கோவை நாசர் எம்.சி., நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திலும் பங்கேற்கின

Friday, February 5, 2010

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு


தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் பற்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் போக்க அச்சமுதாயத்தின் தலைவர்களுடன் ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஹமணிச்சுடர்| நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2009-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி சென்னை பிரசிடென்ட் ஓட்டலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டத்தை நடத்தி, கட்டாய திருமணப் பதிவு சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தி விடுமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற விவாதம்
அதன் பின்னர், தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா 2009 ஜுலை 21-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகிய இருவரும் சந்தேகங் கள் தெரிவித்து வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையி லும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டம் தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் தனது பதிலுரையில் உறுதியளித்தார்.
இதனால் வெட்டுத் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவாதத்தில் உரையாற்றிய எச். அப்துல் பாசித் எம். எல்.ஏ., முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம் பெரு மக்கள் தரக் கூடிய பரிந்து ரைகளை ஏற்று உரியத் திருத்தங்களை இந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச் சட்டம் நடை முறைக்கு வந்ததற்கு பிறகு சார்பாதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு ஆவணங்கள் கேட்கப்ப டுவது உள்ளிட்ட பிரச்சி னைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்பட்டு விடும். ஜமா அத் கட்டுப்பாடுகள் சீர் குலைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் கூடி தமிழ் நாடு அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மற்றும் முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள், பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் லீகின் தீர்மானம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு பதிவுத் துறை தலைவரி டமிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடு களை முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லி, பள்ளி வாசல்களில் காலம் காலமாக பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என கோருவோம் என குறிப்பிட்டிருந் தார். இந்த செய்தி பிரபல நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
இன்று முதல்வர் கலைஞர் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ~மணிச்சுடர்| நாளிதழின் செய்தியாளர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
~தமிழக அரசின் கட்டாய திருமணம் பதிவு சட்டம் சிறுபான்மையின மக்களின் தனியார் சட்டத் திற்கு குறிப்பாக முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தள்ளன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?| என கேட்டபோது,
~தமிழக அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் சிறுபான்மையினருக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியதா? என் பதை குறித்து ஆராய சிறு பான்மை சமூக தலைவர்களுடன் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும்.| என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைத் துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை முதல்வர் கலைஞர் விரைவில் சந்திப்பார். அதன் மூலம் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Friday, January 1, 2010

பாங்காக் காயல் நல மன்றம் கட்டிக்கொடுத்துள்ள காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் புதிய பிரசவ வார்டு தேசிய தலைவர் இ.அஹ்மத் திறந்து வைத்தார்!

பாங்காக் காயல் நல மன்றம் கட்டிக்கொடுத்துள்ள காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் புதிய பிரசவ வார்டு தேசிய தலைவர் இ.அஹ்மத் திறந்து வைத்தார்!

காயல்பட்டணம் மருத்துவ அறக்கட்டளை – கே.எம்.டி. மருத்துவமனையில் பாங்காக் காயல் நல மன்றம் சார்பில் ரூ.18 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிரசவ வார்டு திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமை தாங்கினார்.

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், பாங்காக் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் அமீர் சுல்தான் கிராஅத் ஓதினார். கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்றுப் பேசினார். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து, மத்திய இரயில்வே துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான இ.அஹ்மத் ஸாஹிப் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

காயல்பட்டினம் பெருநகரில் சிறப்பிற்குரிய மருத்துவமனையில் இந்த பிரசவ வார்டு திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நமது லட்சியம். இன்று இருக்கக் கூடிய டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாகட்டும்... தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் தலைமையிலான மாநில அரசாகட்டும... சிறுபான்மை முஸ்லிம்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நம் சமுதாயத்தினர் இத்திட்டங்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கக்கூடிய அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது வெற்றிக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், முஸ்லிம் லீக் தொண்டர்கள் அயராது உழைத்திருப்பதையறிந்து நான் மெத்த மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் காதர் மொகிதீனை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததையும் நான் அறிவேன்.

நான் இன்று காலையில் காயல்பட்டினத்திற்கு வந்தபோது சகோதரர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். நான் அவரை நேரில் காண்பது இதுவே முதல்முறை என்றாலும், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவரைப்பற்றி தொடராக வந்துகொண்டிருந்த செய்திகள் மூலம், நிச்சயம் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று அப்போதே நான் எண்ணினேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. தொகுதிக்கு நன்மைகள் செய்வதில் தனியார்வம் கொண்டுள்ள இவரைப் போன்றவர்கள்தான் இன்றைய அரசியலுக்கு மிகவும் தேவையானவர்கள். அவரது பணி தொடர எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று காலையில் காயல்பட்டினம் இரயில்வே நிலையத்திற்குத் தேவையான பல கோரிக்கைகள் என் முன் வைக்கப்பட்டது. அவற்றில் பலவற்றை நான் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக இப்போது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தூர் விரைவு வண்டியை தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். துறை நிர்வாகிகளிடம் கலந்தாலோசனை செய்து, இக்கோரிக்கையை நிறைவேற்ற நான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இவ்விழாவின் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மத் ஸாஹிப் பேசினார்.

கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் நன்றி கூறினார். ஹாஜி எம்.ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ ஆலிம் ஃபாஸீயின் துஆவுடன் திறப்பு விழா நிறைவுற்றது.

Wednesday, December 30, 2009

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மது ஸாஹிப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹ் மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலை வருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று (29.12.09) காயல் பட்டினம் வருகை தந்தனர்.

காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பா ளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத் தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம் பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக ஊர்வல மாக அழைத்துச்செல்லப் பட்டனர்.


பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமா அத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டி னம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிர முகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், எம்.ஏ.செய்யித் முஹம் மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன், மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப் பினர் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசு கையில் குறிப்பிட்டதா வது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்ற மைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயி தெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையி லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண் டன் என்ற முறையிலும் தான் எனக்கு இந்த வர வேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத் தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டியது. மலபார் பகுதிக்கும் காயல் பட்டினத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என் பதை இது நிரூபித்து விட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றார்கள். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற் றார். இப்படிப்பட்ட சர் வதேச தொடர்புள்ளவர் களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகபூப் ஆகி யோருக்கு எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற் பின் மூலமாக, கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற் படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்ன மும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டு மல்லாது நாடாளுமன்றத் திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறி னார்கள். அதைத்தான் நாங் களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதை யில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ் வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டு மின்றி, நாடு தழுவிய அள வில் முஸ்லிம்களுக்கு அதி கமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவ தற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக் களுக்கு தவறான வழி காட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் நாங் களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லா மியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கி றோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந் தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் -மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டி லேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறை களையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக் கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றித்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட் டித்தந்த வழியில் உறுதியு டன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்தி லும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப் பும், மத்திய அமைச்சரவை யில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக் குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற கார ணத்தினால்தான், முஸ்லிம் களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியு றுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா தலை மையிலான கமிஷன் பரிந் துரைகள் அமுல்படுத்தப் பட வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத் தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக் கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங் கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற் காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக் கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மது பேசினார்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு


திருநெல்வேலி, டிச.29-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும் மத்திய ரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது காயல்பட்டி னம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (29.12.09) காலை 7.40மணியளவில் திருநெல் வேலி வருகை தந்தார்.

ரயில் நிலையத்தில் தலைவர் இ.அஹமதுவை தேசிய பொதுச் செயலாள ரும் தமிழ் மாநிலத் தலை வருமான பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், மாநில பொதுச்செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் அகர்வால் சிங், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், நெல்லை மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப் ஷா, நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மாவட்ட செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் மைதீன், டி.ஏ. செய்யது முகம்மது, பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டபத்து எம். முகம் மது அலி, கானகத்தி மீரான், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எல்.டி. சம்சுல் ஆலம், வி.ஏ. செய்யது பட்டாணி, வீ.மா. திவான் மைதீன், மேலப்பா ளையம் ஜெ. சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகரச் செயலாளர் அமானுல்லா, கடையநல்லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், தென்காசி முஹிப்புல்லா ஷா, பத்த மடை சிராஜுதீன், மாவட்ட மணிச்சுடர் செய்தித் தொடர்பாளர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, அப்துல் காதர், பட்டதாரி அணி செயலா ளர் பாட்ட பத்து மசூது, அப்துர் ரஹ்மான், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இ.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், பாம்பு கோவில் நகர தலைவர் முகைதீன் பட்டாணி, காயல்பட்டினம் எஸ்.டி. கமால், கவிஞர் அபுசாலி, அப்துல் வாஹித், பாளை மஹபூப் அலி, நெல்லை எம்.ஏ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், யு.எம். ரஹ்மத் துல்லா உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம் லீக் தொண்டர்கள் தக்பீர் முழக்கத்துடன் தேசியத் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்

Friday, October 16, 2009

லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள்

லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கும் லால்பேட்டைக்கு தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் அவர்களின் வருகையில் கல்வித்துறை கட்டாயம் இடம் பெற்றிருந்தது என்பது உலகறிந்த உண்மை!

ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.

ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.

பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.
வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.

மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .

சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.

அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.

ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.

மாறா அன்புடன்,

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.

Saturday, May 16, 2009

முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி

முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் காலம் காலமாக கட்டி காப்பாற்றிய கொள்கை களை - லட்சியங் களை நான் பின்பற்றுவேன். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மாணவன் நான் என்பதை பெருமை யடைகிறேன் என வேலூரில் போட்டியிடும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தி யாளர்களிடம் உறுதியுடன் குறிப்பிட்டார்.

வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் பிரசார நிறைவு நாளான நேற்று 6 சட்ட மன்ற தொகுதிகளுக் கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்.

தனக்கு ஆதரவாக பணி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள், புரட்சி பாரதம் மற்றும் தோழமை அமைப்புகளின் ஊழியர்களை சந்தித்தும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனைகளுக்கு விஜயம் செய்தும் உற்சாகப் படுத்தி னார்.

பின்னர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித் தார்.

அப்போது அவர் கூறிய தாவது-

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் நான் போட்டி யிடுகின்ற வாய்ப்பை பெற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம் லீக் தலைவர்களின்முன்மாதிரி...

அண்மையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச் சரும், தி.மு.க. பொருளா ளருமான தளபதி மு.க. ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் எனக்காக தேர்தல் பிரசா ரம் செய்தார். அவர் முன்னி லையில் அப்போது நான் ஒன்றை குறிப்பிட்டேன்.

ஹநான் முஸ்லிம் லீகில் சேர்ந்தவனல்ல. அதில் பிறந்தவன்| முஸ்லிம் லீகின் தலைவர்கள் சமய நல்லி ணக்கம், தேசிய ஒருமைப் பாடு, சகோதரத்துவ ஒற் றுமை, மனிதநேயம் ஆகிய வற்றை காலம் காலமாக கட்டி காப்பாற்றி வந்துள் ளனர். அவர்களின் வழி காட்டுதலில் வளர்க்கப் பட்ட நான் அதனை பின் பற்றி இந்த தொகுதியில் அந்த உயர்ந்த லட்சியங் களையெல்லாம் நிறை வேற்றக்கூடியவனாக வலம் வருவேன் என உறுதி கூறினேன். அதைத்தான் செய்தியாளர்களாகிய உங்கள் முன்னிலையிலும் மீண்டும் உறுதியாக தெரி விக்க விரும்புகிறேன்.

நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர் களுடைய மாணவன் என்ப தில் நான் பெருமையடை கின்றவன். என்னை வேட் பாளராக தேர்ந்தெடுத்த வுடன் பேராசிரியர் கலைஞரிடத்தில் அழைத்து சென்றார்.

கஞைர் - தளபதிவாழ்த்து

கலைஞருடைய வாழ்த் துக்களை பெற்று அவர் களுடைய அன்பு புதல் வரும், இளைய தலை முறையினரின் நம்பிக்கை நட்சத்திரமுமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களு டைய ஆதரவோடு நம்மு டைய பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்பு மிகு துரைமுருகன் அவர் களுடைய ஒத்துழைப் போடு நான் இங்கே போட்டியிடுகிறேன்.

தொகுதி முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து தரப்பு மக்க ளும் மிகவும் மகிழ்ச்சியாக கலைஞரின் நலத்திட்டங் களை - சலுகைகளை அவைகள் மிகச் சரியாக போய் சேர்ந்த காரணத்தி னால் அவைகளை அனுப வித்து அவர்களே ஜன நாயக முற்போக்கு கூட்ட ணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்கின்ற உறுதி மேற்கொண்டுள்ள காட்சியை என்னால் காண முடிந்தது.

பெரும்பான்மை வாக்கு கள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் மக்கள் எனக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்ற நம் பிக்கை எனக்கு உண்டு.

தொகுதிக்கு நலப்பணிகள்

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்த தொகுதி யிலேயே தங்கியிருந்த மக்களுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்று வதற்கு பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.

இந்த தொகுதியின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். நல்ல சுகாதார வசதி, கலைஅறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி கள் நிறுவப்பட வேண்டும்.

நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள் மேம் பாட்டு நலனுக்கு பாடுபடு வோம்.

தோல் பதனிடும் தொழில் நடத்துவோரும், அதில்
இப் பகுதியின் பிரதான பிரச்சனையான மருத்து மனை, குடிநீர் வசதிகள், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குதல், சாலை மற்றும் சுகாதார வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு, சி.எம்.சி. முதல் பை-பாஸ் வரை உள்ள பாலம் போன்ற அத்தியாவசிய மான பணிகள் விரைவாக நிறைவேறுவதற்கு உறு துணை புரிவேன்.

உழைத்தவர்களுக்கு நன்றி

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் மனித நேய மதச்சார்பற்ற நல்லரசு அமைவதற்கு தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் களை வெற்றிபெறச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக இரவு -பகலாக பாடு படுகின்ற தி.மு.க.., காங்கி ரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பார தம் உள்ளிட்ட கட்சி களின் ஊழியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

கொங்கு வேளாளர் சமு தாயம் ஒட்டுமொத்தமாக என்னை ஆதரிக்க முடிவு செய்து அதனுடைய தலைவர் கொங்குசாமி நாயுடு எனக்காக பிரச்சா ரம் செய்தார்.

அதேபோன்று பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பிரமுகர் களும் எனக்காக உழைத் தார்கள். அவர்களுக்கெல் லாம் நன்றி. என்னை பற்றிய உண்மையான விஷயங் களை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொன்ன பத்திரி கையாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதோடு எதிர் காலத்திலும் நான் நல்ல பணிகள் செய்வதற்கு நல்ல ஆலோசகர்களாக - நண்பர் களாக நீங்கள் விளங்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் வெளிப்படுத் துகிறேன்.

இவ்வாறு வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Saturday, May 9, 2009

திமுக அணிக்கு தேசிய லீக் தலைவர் வாக்கு சேகரிப்பு

திமுக அணிக்கு தேசிய லீக் தலைவர் வாக்கு சேகரிப்பு


குடியாத்தம், மே 8: வேலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் எம்.அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அஹமத் குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

ஜோதி மடம், பீரான் நகர், தரணம்பேட்டை, சித்தூர்கேட், தாழையாத்தம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் திமுக நகரச் செயலர் மா.விவேகானந்தன், மாணவர் அணி அமைப்பாளர் ம. மனோஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சிவ.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.

Saturday, September 13, 2008

இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!

இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!

http://www.muslimleaguetn.com/news.asp

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு புதுடெல்லியிலுள்ள ரபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பனாத்வாலாவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் இ.அகமது வரவேற்றுப் பேசுகிறார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யதலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்காலமானதற்குப் பின் முதன் முறையாகக் கூடும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பனாத்வாலாசாகிப் மறைவிற்கும்கேரள மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் செய்யது உமர் பாபக்கி தங்ஙள் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மறுவுலக நல்வாழ்விற்கு துஆ செய்யப்படுகிறது.

தலைவர் தேர்வு:
பனாத்வாலா சாகிப் மறைவிற்குப் பின் காலியாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு விரிவுபடுத்திட அமைப்பு பணிகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

ஆலோசனை:
தேசிய அளவில் தலையாய பிரச்சணைகளாக உள்ள விஷயங்கள் குறித்து தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து பரிசிலிப்பதற்கான ஆலோ சனைக் கூட்டம் பொதுச் செயலாளர் இ.அஹமது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் நயீம் அக்தார், தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் எம்.லியாகத்அலி, பீகார் மாநில பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், டெல்லி பிரதேச இளைஞர் அணி தலைவர் குர்ரம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைவர்கள் வருகை:
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கேரள மாநில தலைவர் செய்யதலி ஷிஹாப், தங்ஙள் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி, செயலாளர்கள் இ.டி. பஷீர், டாக்டர் முனீர்கோயா, அகமது கபீர், கேரள முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அரவககுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத்பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.லியாகத் அலி, ராஜஸ்தான் மாநில தலைவர் அகமதுபக்ஷ், அஸ்ஸாம் மாநில தலைவர் முகம்மது திலீர்கான், மேற்கு வங்க தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், கர்நாடக செயலாளர் இப்ராகீம் ஷம்ஷீர், அகில இந்திய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, தேசிய செயலாளர் நயீம் அக்தர், பீகார் பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், ஜார்கண்ட் மாநில தலைவர் அம்ஜத்அலி, பொதுச் செயலாளர் ஹபீஸ் அகமது, புதுச்சேரி மாநில தலைவர் சி.வி.சுலைமான் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் நாளை காலை டெல்லி வருகின்றனர்.

இஃப்தார்:
டெல்லி வருகைதரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமது நாளை இஃப்தார் விருந்தளிக்கிறார்.

தேசியசெயற்குழு கூட்ட ஏற்பாடுகளை டெல்லி பிரதேச தலைவர் மர்கூப் ஹ_சைன் இளைஞர் அணிதலைவர் குர்ரம் உமர், சந்திரிகா செய்தியாளர் முகம்மது குட்டி, பேராசிரியரின் டெல்லி உதவியாளர் நூர்ஷம்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Friday, August 22, 2008

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் பேட்டி

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
http://www.muslimleaguetn.com/news.asp?id=178

போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சக வாழ்வையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாதத்ததை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும் அதற்காக தியாகம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என்று பேராசிரியர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துக்ளக் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விபரம் பின்வருமாறு:-

கேள்வி:
இந்திய முஸ்லிம் லீக், முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் வலுவாகவும், செல்வாக்கான கட்சியாகவும் இருந்தது. இப்போது வேறு கட்சிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

பதில்:
தமிழகத்தில் முஸ்லிம் லீக் முன்பை விட, தற்போது பலம் கூடியதாகவே உள்ளது. தற்போது முஸ்லிம்கள் மத்தியில் 58 இயக்கங்கள் உள்ளன. அவற்றுள் பல லெட்டர் பேட் அமைப்புகள்தான்.

60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இப்போதுதான் முதன்முறையாக முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர், மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராவதற்கான (இ.அஹமது) வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெரும்பாலான முஸ்லிம் மக்கள், எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள்.

எங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாக வரலாம்... போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், ஒரு நிய+ஸென்ஸ் கேஸில் கூட சம்பந்தப்படக்கூடாது என்று காயிதெமில்லத் சொன்னார். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகின் மணி விழாவை ஒட்டிய மாநில மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றார்கள். நாங்கள் சரியான பாதையில் செயல்படுகிறோம்.

கேள்வி:
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளின் பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் போவதற்கு என்ன காரணம்?

பதில்:
எதையுமே தீவிரமாகப் பேசக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் ஒரு சாரார் இருக்கிறார்கள் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினர், சமுதாயத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறிய குழுதான்.

அடுத்ததாக, இஸ்லாமியக் கொள்கைகளை, மதக்கோட்பாடுகளை தாங்களும் தவறாக புரிந்து கொண்டு, இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகள். உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் - ஜனநாயகம், தேசியம் . இதெல்லாம் தேவையில்லை என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி இவர்கள் இயங்குகிறார்கள்.

மூன்றாவது பிரிவு, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். இஸ்லாம் - ஒரு உயர்ந்த மார்க்கம். அதைப் பின்பற்றும் மக்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ வேண்டும். ஜனநாயகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. சொல்லப் போனால் நபிகள் நாயகத்தின் போதனைகள், ஜனநாயக மரபுகளை ஒட்டியவைதான். தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதற்கான தியாகம் செய்வதும் எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

முஸ்லிம்களின் வேதமான குர்ஆன், நபிகளுடைய வாக்கு மற்றும் வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஹதீஸ் மற்றும் 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் வலியுறுத்திய கருத்துக்கள்தான் - இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறைக்கு வழி காட்டியாக இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஜனநாயகத்தின்பாற்பட்ட கருத்துக்கள்தானே தவிர, வேறு வழிமுறைகளை மார்க்கம் போதிக்கவில்லை.

ஆகவே, நாங்கள் தேசியத்தை நம்புகிறோம். 95 சதவிகித இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். தேசியப் பண்புகளை வளர்ப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தனது கடமையாகக் கொண்டுள்ளது.

பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்களை மார்க்கரீதியாக இணைக்கின்ற வகையில், தமிழகத்தில் 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள் இயங்கி வருகின்றன. நபிகள் நாயகம் கூறிய போதனைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் இவை. தற்போது இதற்கு எதிராகப் போட்டி பள்ளிவாசல்களை த.மு.மு.க., தவ்ஹீத் அமைப்புகள் ஆங்காங்கு உருவாக்கியுள்ளன. அப்படி சுமார் 50 பள்ளிவாசல்கள் இருக்கும். பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் சிலவற்றை இந்த அமைப்பினர் கடைப்பிடிப்பதில்லை.

உதாரணமாக, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக போகும்போது தொப்பி அணிய மாட்டார்கள். ஜெயிலுக்குப் போகும்போது மட்டும் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு, கையை ஆட்டுகிறார்கள். இது என்ன பெருமையான செயலா? இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்பப்படக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

கேள்வி:
குண்டு வெடிப்புச் சம்பவங்கள், சதிகள் தொடர்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது என்று செய்தி வெளியாகும்போது, அதைக் கண்டிக்கிறீர்கள். ஆனால், மதத்தின் பெயரால் இப்படி தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதை எதிர்த்து ஒரு தொடர் இயக்கமோ, பிரச்சாரமோ நீங்கள் செய்வதில்லையே?

பதில்:
கடந்த 3 மாதங்களில் நான் சுமார் 200 கூட்டங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். விளம்பரப்படுத்தி, அறிவித்துவிட்டு யாத்திரை மாதிரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், எல்லா பள்ளிவாசல்களிலும், வன்முறையை மார்க்கம் ஏற்கவில்லை என்று எடுத்துச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டு, அவர்களும் (இமாம்கள், ஆலிம்கள்) தொழுகை முடிந்தவுடன், குத்பா பிரச்சாரத்தின்போது, இதுபற்றிப் பேசுகிறார்கள். அமைதியையும், பிற மனிதர்களுடன் ஒற்றுமையையும்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, தீவிரவாதத்தை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கவில்லை.

அதேசமயம் எல்லா வன்முறைச் சம்பவங்களையும் முஸ்லிம் கண்ணோட்டத்துடனேயே போலீசும், மீடியாவும் அணுகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்... என பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

கேள்வி:
மதம் வன்முறையைப் போதிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், தீவிரவாதிகள் ஜிஹாத் என்றும், இறைவனின் கட்டளை என்றும் பேசுகிறார்கள்.

பதில்:
மதத்தின் போதனையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான காரியத்தில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு இழுக்குத் தேடித்தரு கிறார்கள்.

கேள்வி:
சிமி மீதான தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும்? பல பெயர்களில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பற்றி, புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஆராய்ந்து, விரிவான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம், என்னென்னமோ சொல்கிறார்கள். இறைவன் ஒருவனே என்ற பெயரில் ஒரு இயக்கமாம். நான் மட்டும் என்ன, இறைவன் என்பது இரண்டு, மூன்று பேர் என்றா சொல்கிறேன்? அடுத்து இஸ்லாமியப் பாதுகாப்பு இயக்கம் என்றொரு அமைப்பு. நானும் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு சிலரால், மார்க்கத்துக்கே கெட்ட பெயர் வரக் கூடாது. ஆகவே, எந்தெந்த, அமைப்பு எப்படிப்பட்டது என்று தமிழக அரசு ஆராய்ந்து அறிவித்தால் நான் வரவேற்பேன். வன்முறையைத் தூண்டுபவர்கள், மதத்தின் பெயரால் துவேஷத்தைப் பரப்புகிறவர்கள், எந்த மதத்தவராயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணமாக அமர்நாத் பிரச்சினை - அந்த மாநிலத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இங்கே சிலர் ஆர்ப்பாட்டம் என்று ஏன் நடத்த வேண்டும்? இங்கே கும்பகோணம் மகாமகத்தின்போது, முஸ்லிகள் தண்ணீர்ப்பந்தல் வைப்பதுண்டு. பிரகதீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் 2 ஆம்புலன்சுகளை அனுப்பி, சுமார் 250 பேர் காப்பாற்றப்பட உதவினோம். இந்தப் பரஸ்பர நல்லுறவு நீடிக்க வேண்டும். அரசியலுக்காக மத உணர்ச்சிகளைத் தூண்டி விடுபவர்களால் அமைதி குலையும். எந்தத் தரப்பினர் இதைச் செய்தாலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக இல்லை என்று உங்கள் சமூகத்திலேயே ஒரு சாரார் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
பயனே இல்லை என்று சொல்லி விட முடியாது. இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 147 பிரிவுகளோடு முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அது கடலில் கரைந்த பெருங்காயம் மாதிரி. இப்போது முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகிதம் எனும்போது, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பது ஒரு பலன்தானே? முதலில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு இடம் என்றிருந்தது போய், பிற கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம் வந்துள்ளது. இதனால் பாதிப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குத்தான். இந்த ஒதுக்கீடு போதும் என்று சொல்வி விட முடியாது. ஆனால் பயன் அளிப்பதுதான்.

கேள்வி:
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறினால், அவருடைய ஜாதி இழிவு நீங்கி விடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களிலும் பின் தங்கியவர்கள் என்று சொல்லிச் சலுகை கோரப்படுகிறது. இது முரண்பாடு இல்லையா?

பதில்:
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்ற அமைப்பு இல்லை. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்குள் ஜாதி அமைப்பு உள்ளது. தமிழகத்தில் இல்லை. ராவுத்தர், தக்னி, மரைக்காயர், லப்பை போன்ற பல பெயர்களில் முஸ்லிம்கள் இருப்பதாக, பெயர்க்காரணங்கள் உண்டு. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள்., மரக்கலங்களைச் செலுத்தி கரையோரம் வசித்தவர்கள், மரக்காயர்கள் - இப்படி பெயர்கள் வந்தன. இதை ஜாதியாக்கியது அரசியலும், இடஒதுக்கீடும்தான்.

பள்ளிவாசல்களில் வேலை செய்பவர்கள் லெவை எனப்படுவோர். ஆரம்பத்தில் அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருந்தது. பிறகு லப்பைகளுக்கும், மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:
முஸ்லிம்கள் நடத்துகிற ரமளான் நிகழ்ச்சியில், இந்துக்கள் விரதம் இருப்பதை முதல்வர் கலைஞர் கேலி பேசுகிறார். இந்து கடவுள்களை விமர்சிக்கிறார். இத்தகைய பேச்சுக்களை உங்களைப் போன்றோர், கண்டனம் செய்தால், மத நல்லிணக்கத்திற்கு உதவும் அல்லவா?

பதில்:
நாங்கள் ரமளான் நோன்பு திறப்பு நடத்தவில்லை. எங்களது எந்த நிகழ்ச்சியிலும் அவர் இந்து மதத்தைக் கிண்டல் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பேசும்போது, ராமரைப் பற்றி சில கருத்துக்கள் கூறினார். ஆனால், எங்களைப் பொருத்த வரை, பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. ராமரைப் பற்றி, முஹம்மது இக்பால் என்ற கவிஞர், இமாம் ஏ ஹிந்த் . அதாவது ~இந்தியாவின் ஆன்மீக குரு என்று புகழ்ந்து பாடி இருக்கிறார். இதை நான், பேராசிரியர் அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்துக் கூறிப் பேசினேன்.

கேள்வி:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மாயாவதியும், இன்னும் சிலரும் பிரச்சாரம் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு அரசு, இன்னொரு நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை, மதத்துடன் தொடர்பு படுத்திக் கொச்சைப் படுத்தக் கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்த எங்களது சில ஐயங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திருப்தி அளிக்கும் வகையில் விளக்கங்கள் தந்தார். இந்த ஒப்பந்தத்தால், நமது அணு ஆயுத சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

அமெரிக்க ஆதிக்கம் என்கிறார்கள். அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. சீனா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற பல நாடுகள் வலுவடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்தி விடுவோம் என்று ஜெர்மானிய பத்திரிகை ஒன்று கணிக்கிறது. ஆகவே, அமெரிக்காவின் ஆதிக்கம் என்பதே அர்த்தமற்றது.

கேள்வி:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் இடதுசாரிகள் நீடிப்பது சந்தேகமாகி விட்டது. இடதுசாரிகளுடன் முஸ்லிம் லீகிற்கு நல்லுறவு உண்டு. முஸ்லிம் லீக் தி.மு.க. அணியில் தொடருமா? மூன்றாவது அணி பற்றிப் பரிசீலிக்குமா?

பதில்:
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணியிலும் - இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும். மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே எங்கள் கருத்து.

-இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி: எஸ்.ரமேஷ்
நன்றி: துக்ளக்